|
Home > Temples of India > pADal peRRa sthalam
திருச்சத்திமுற்றம் (சத்திமுத்தம்)
இறைவர் திருப்பெயர் : சிவக்கொழுந்தீசர்.
இறைவியார் திருப்பெயர் : பெரியநாயகி.
தல மரம் :
தீர்த்தம் : சூல தீர்த்தம்.
வழிபட்டோர் : உமை.
தேவாரப் பாடல்கள் : அப்பர்.
தல வரலாறு
சிறப்புக்கள்
- மூலவர் பக்கத்தில் தலவரலாற்றுச் சிறப்புடைய - இறைவி சிவலிங்கத்தைக் கட்டித் தழுவி முத்தமிட்ட திருக்கோல உருவத்தைக் கண்டுத் தரிசிக்கலாம்.
- மூல வாயிலின் முன்னால் ஒருபுறத்தில், சத்தி முத்தம் தரும் தல ஐதீக மூர்த்தி உள்ளார்.
- சம்பந்தர் இத்தலத்திலிருந்து இறைவன் அருளிய முத்துப்பந்தர் நிழலில் திருப்பட்டீச்சுரம் சென்று வணங்கிப் பதிகம் பாடினார்.
- கல்வெட்டில் இறைவன் "திருச்சத்தி முற்றம் உடையர், திருச்சத்திவனப் பெருமாள்" எனக் குறிக்கப்படுகிறார்.
- அக்காலத்தில் கோயில் நிலங்களில் வரிகளை வசூலிக்கும் விதிமுறைகளைப் பற்றியும், விளக்கெரிக்க காசும், ஆடும் அளித்ததையும் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.
- ( 'நாரைவிடு தூது ' பாடிய சத்திமுற்றுப்புலவர் இவ்வூரினரே.)
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
கும்பகோணம் - ஆவூர் நகரப் பேருந்துகளில் எளிதில் இத்தலத்திற்கு செல்லலாம்.
|