சக்கரப்பள்ளி (ஐயம்பேட்டை)

இறைவர் திருப்பெயர்		: சக்கரவாகேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்		: தேவநாயகி
தல மரம்			: 
தீர்த்தம்				: 
வழிபட்டோர்			: திருமால், சயந்தன், தேவர்கள். (சக்கரவாகப் பறவையும் வழிபட்டது என்பார்.)
தேவாரப் பாடல்கள்		: சம்பந்தர்.

தல வரலாறு

  • மக்கள் வழக்கில் இவ்வூர் ஐயம்பேட்டை என்று வழங்குகிறது. (இப்பெயரில் பல ஊர்கள் இருப்பதால் வழக்கில் இதை தஞ்சாவூர் ஐயம்பேட்டை என்று கூறுகின்றனர்)

  • திருமால் வழிபட்டுச் சக்கராயுதம் பெற்ற தலம். (சக்கரவாகப் பறவை வழிபட்டத் தலம் என்பாருமுளர்.)

சிறப்புக்கள்

  • கருவறை கீழ்ப்புறம் கருங்கல்லாலும் மேற்புறம், விமானம் சுதையாலும் ஆக்கப்பட்டவை.
  • கல்வெட்டுக்களில் இவ்வூர், "குலோத்துங்க சோழவள நாட்டு, விளநாட்டு, இராசேந்திர சோழ சதுர்வேதிமங்கலம்" என்று குறிக்கப்பட்டுள்ளது.
  • (மூன்றாம் குலோத்துங்க சோழனின் 12-ஆவது ஆண்டுக் கல்வெட்டு, இவ்வூர்ச்சபைக்குரிய சில விதிகளைக் கூறுகின்றது. நாற்பது வயதுக்கும் மேற்பட்டவரே ஊர்ச்சபை உறுப்பினராகலாம் என்றும், அவர்களும் பத்து ஆண்டுகளுள் உறுப்பினர்க்கு நிற்காதவராக இருக்க வேண்டும் என்றும் ஊர்ச்சபை விதிகள் கூறப்பட்டுள்ளன.)

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
கும்பகோணம் - தஞ்சாவூர் சாலையில் ஐயம்பேட்டை உள்ளது. கும்பகோணம் - தஞ்சாவூர் புகைவண்டி மார்க்கத்தில் ஐயம்பேட்டை புகைவண்டி நிலையம் உள்ளது. ஊர்ப் பெயர் ஐயம்பேட்டை; கோயில் இருப்பது சக்கரப்பள்ளி என்றபகுதியில்.

< PREV <
காவிரி தென்கரை 16வது தலம்
திருப்புள்ளமங்கை
Table of Contents > NEXT >
காவிரி தென்கரை 18வது தலம்
திருக்கருக்காவூர்