|
Home > Temples of India > pADal peRRa sthalam
ஆவூர்ப்பசுபதீச்சுரம் (ஆவூர்)
இறைவர் திருப்பெயர் : பசுபதீஸ்வரர், அஸ்வத்தநாதர், ஆவூருடையார்
இறைவியார் திருப்பெயர் : மங்களாம்பிகை, பங்கஜவல்லி.
தல மரம் : அரசு
தீர்த்தம் : பிரமதீர்த்தம், காமதேனுதீர்த்தம் முதலியன.
வழிபட்டோர் : காமதேனு, பிரமன், சப்தரிஷிகள், தேவர்கள், இந்திரன், சூரியன், நவக்கிரகங்கள்,
வசிட்டர் ஆகியோர்.
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர்.
தல வரலாறு
சிறப்புக்கள்
- கோச்செங்கட் சோழன் திருப்பணி - மாடக் கோயில்.
- மணிகூடம், அசுவத்தவனம் என்பன இத்தலத்தின் வேறு பெயர்கள்.
- சங்கப்புலவர்கள் ஆவூர் கிழார், ஆவூர் மூலங்கிழார் முதலிய சார்றோர்களைத் தந்த ஊர்.
- கி. பி. 2-ஆம் நூற்றாண்டில் இவ்வூர் சோழ மன்னர்களின் கோட்டையாக விளங்கியது.
- கல்வெட்டுச் செய்தியில் "நித்தவிநோத வளநாட்டைச் சேர்ந்த ஆவூர்க் கூற்றத்தைச் சேர்ந்த பசுபதீஸ்வரமுடையார் " என்று இறைவன் குறிக்கப்படுகிறார்.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
கும்பகோணம் - மன்னார்குடி சாலையில் வலங்கைமான் வந்து அங்கிருந்து கோவந்தகுடி வழியாக இத்தலத்தை அடையலாம். கும்பகோணத்திலிருந்து பேருந்துகள் உள்ளன.
|