|
Home > Temples of India > pADal peRRa sthalam
அன்பிலாலந்துறை (கீழ்அன்பில், அன்பில், அம்பில்)
இறைவர் திருப்பெயர் : சத்தியவாகீஸ்வரர், பிரமபுரீஸ்வரர், ஆலந்துறையார்.
இறைவியார் திருப்பெயர் : சௌந்தரநாயகி.
தல மரம் : ஆலமரம்.
தீர்த்தம் : சந்திர தீர்த்தம்.
வழிபட்டோர் : வாகீசமுனிவர், பிரமன் முதலியோர்.
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர், அப்பர்.
தல வரலாறு
- ஊர்ப் பெயர் - அன்பில்; கோயிலின் பெயர் - ஆலந்துறை.
- இங்குள்ள விநாயகர் 'செவிசாய்த்த விநாயகர் ' என்றழைக்கப்படுகிறார். கொள்ளிடத் தென்கரையில் நின்று பாடிய சம்பந்தரின் பாடல்களைச் செவிசாய்த்து
கேட்டமையின், இவ்விநாயகர் இப்பெயர் பெற்றார்.
- இத்தலத்தில் பராந்தகசோழன் குறியேற்றிய நூற்றெட்டு அக்னிஹோத்திரிகளின், ஜைமினி சாமவேத பாராணயத்தை(சம்பந்தர் பாடலைக் கேட்கும்) முன்னரே கேட்டருளிய இத்தல விநாயகர்,
'சாமகானம் கேட்ட விநாயகர் ' என்றும் வழங்கப்படுகிறார்.
சிறப்புக்கள்
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
திருச்சிக்குப் பக்கத்தில் உள்ள தலம். திருச்சியிலிருந்தும் லால்குடியிலிருந்தும் பேருந்தில் செல்லலாம்.
|