திருஆடானை (திருவாடானை) திருக்கோயில் தலவரலாறு

இறைவர் திருப்பெயர்	: ஆதிரத்தினேசுவரர், ஆடானைநாதர்,
இறைவியார் திருப்பெயர்	: அம்பாயிரவல்லி. 
தல மரம்		: வில்வம்
தீர்த்தம்			: சூரிய தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம், 
			  அகத்திய தீர்த்தம், வருண தீர்த்தம்.
வழிபட்டோர்		: பிருகு முனிவர், சூரியன்.
தேவாரப் பாடல்கள்	: சம்பந்தர் - மாதோர் கூறுகந் (2-112).
thiruadanai temple

தலவரலாறு

  • ஆட்டுத் தலையும் யானை உடலுமாகச் சபிக்கப்பெற்ற வருணன் மகன் வாருணி, சாபம் நீங்கப் பெற்ற பதி.

  • நீலமணியை லிங்கமாக ஸ்தாபித்து, சூரியன் பேறு பெற்றான்.

  • பிற பெயர்கள்: பாரிசாத வனம், வன்னிவனம், ஆதிரத்னேஸ்வரம், மார்க்கண்டேயபுரம், கோமுத்தீச்சரம் முதலான பன்னிரண்டு.

சிறப்புகள்

  • திரிபுவனச் சக்கரவர்த்தி கல்வெட்டு ஒன்று, சுந்தர பாண்டியனின் இரு கல்வெட்டும், மேலும் ஒன்றும் ஆக நான்கு உள்ளது.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
தேவகோட்டை சாலை இரயில் நிலையத்திலிருந்து 35-கி. மீ. தூரம். காளையார் கோவில், தேவகோட்டை ஆகிய இடங்களிலிருந்து பஸ் வசதி உள்ளது.

தொடர்பு :

  • 04561-254533

< PREV <
பாண்டி நாடு 8வது
தலம் இராமேச்சுரம்
Table of Contents > NEXT >
பாண்டி நாடு 10வது தலம்
திருக்கானப்பேர் (காளையார்கோவில்)