logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

ஸ்ரீ ஆனந்த நடராஜ த்யானம் - தமிழ் உரை

சிவமயம்

(தமிழ் உரையுடன்)

 சுத்தசிதா காயமதாம் எந்த வஸ்து
    சுதந்திரமாய் தனது பரசக்தியோடே
பக்தரெல்லாம் உய்யும் வண்ணம் கருணையாலே
    பரதத்வ வடிவாக திரண்டெழுந்தே            
அத்துவிதானந்தம் உணரனுபவத்தின்
    அதிசயமிங்கு எல்லோரும் அறியும்வண்ணம்
நித்தமுமே ஆனந்தநடனம் செய்யும்
    நிதம் அந்த வஸ்துவினை நினைவில் வைப்பாம்.      (1)

எவ்வடிவின் இடப்பாகம் இலங்கா நின்ற
    இவ்வுலகம் அனைத்துக்கும் மாதாவாகும்
எவ்வடிவின் வலப்பாகம் இலங்கா நின்ற
    இவ்வுலகம் அனைத்துக்கும் பிதாவுமாகும்
எவ்வடிவின் பதத்திலுள்ள சிலம்பின் ஓசை
    எவ்விதமாம் நூலுக்கும் ஏதுவாகும்
எவ்வடிவின் விழிமூன்றால் இலங்கும் யாவும்
    இணையற்ற அவ்வடிவே எம்மைக் காக்க.         (2)

ஸப்தார்ணவ பரிக்ஷிப்தாம் த்வீபை: ஸப்தபிரன்விதாம் |
பஞ்சாஸத்கோடி விஸ்தீர்ணாம் த்யாயேத்ஸர்வாம் ஸபாம் மஹீம் ||1 ||

ஸப்தார்ணவ - ஏழுகடல்களால், பரிக்ஷிப்தாம்- சூழப்பட்டும், ஸப்தபிர் - ஏழு, 
த்வீபை : - தீவுகளுடன், அன்விதாம்- கூடியதாயும், பஞ்சாஸத்கோடி- ஐம்பதுகோடி (யோஜனை)    
விஸ்தீர்ணாம்- பரந்து விரிந்ததாகவும், இருக்கின்ற இந்த நிலவுலகம், ஸர்வாம்- முழுவதையும் ,
எல்லாம் வல்ல இறைவன் ஸ்ரீ ஆனந்த நடராஜ ராஜனின் , மஹீம்- உன்னதமான (ஒப்புயர்வற்ற),    
ஸபாம்- திருச்சபையாக , த்யாயேத்- தியானிக்கவேண்டும். 

தஸ்யாஸ்ச ஹ்ருதயாம்போஜே  மாத்ருகாக்ஷர கேஸரம் |
த்யாயேதஷ்தலம் தீமான் மஹா ஹ்ருதயமத்ர ச ||2||

ச- மேலும், தஸ்யா: - அந்தப் பூமண்டலத்தினுடைய , ஹ்ருதாயாம்போஜே - இருதய            
கமலமாய் விளங்கும் சிதம்பரத்தில், மாத்ருகாக்ஷர - தேவியினுடைய ஐம்பத்தொரு 
அக்ஷரங்களாகிய , கேஸரம்- மலர் சிலம்புகளையுடையதும், அஷ்டதலம்- எட்டு 
இதழ்களையுடையதுமான , மஹாஹ்ருதயம்- பேரிதயத்தை,                    
அத்ர ச - இங்கு, தீமான்- நல்லறிவு படைத்தவன் , த்யாயேத்- தியானிக்க வேண்டும்.

தஸ்ய மத்யே த்ரிகோணே து தருணேந்து ஸிகாமணிம் |
சாரு சூட ஜடாபாஸம் சலத்போகீந்த்ர குண்டலம் ||3||

தஸ்ய- அந்த சிதம்பரத்தின், மத்யே- மத்தியில் அமைந்த , த்ரிகோணே- திரிகோணத்தில், 
தருணேந்து - இளமையான இரண்டாம் பிறைச் சந்திரனை, ஸிகாமணிம்- சிரசில்                 
அணியாகவுடையவராகவும், சாரு- அழகிய, சூடஜடாபாஸம்- சடைக் கற்றைகளை உடையவராகவும்,
சலத்- அசைகின்ற ( அசைந்தாடுகின்ற) , போகீந்த்ர - சிறந்த ஸர்ப்பங்களையே , 
குண்டலம்- காதணிகலனாக  உடையவராகவும், எம்பெருமானைத் தியானிக்க வேண்டும்.         

(பத்தாவது ஸ்லோகத்தில் உள்ள 'த்யாயேத்' என்ற சொல் 3 முதல் 9 வரை உள்ள அனைத்து 
ஸ்லோகங்களிலும் இணைக்கப்படவேண்டும் . )                             


குறிப்பு:  ஸ்ரீ  சக்கரமும் மேருவும் சிவசக்திகளின் ஐக்கிய ரூபமாகும். சிவ சக்கரங்கள் நான்கு;
அவை பிந்து, அஷ்டதளகமலம், பதினாறு தளகமலம், பூபுரம் என்பன.  சக்தி சக்கரங்கள் ஐந்து, 
அவை மத்திய முக்கோணம், அஷ்டகோணம், உள்பத்து ஆரங்கள், வெளிபத்து ஆரங்கள், 
பதினான்கு கோணம் என்பவையாகும். 

இவற்றில் முக்கோணத்தை பிந்துவோடும், அஷ்டகோணத்தை அஷ்டதள கமலத்தோடும், உள், வெளி 
என்னும் இரண்டு பத்து கோணங்களைப் பதினாறு தள கமலத்தோடும், பதினான்கு கோணத்தைப் 
பூபுரத்தோடும் ஐக்கியப் படுத்தி, சிவ சக்திகளின் ஐக்கியத்தை உணர்தல் வேண்டும்  என்பது 
ஸம்பிரதாயமாகும்.

சக்தியை சிவத்தோடு ஐக்கியம் செய்வது தான் ஜீவ பிரஹ்ம ஐக்கியம் எனப்படும். இங்கு 
திரிகோணத்தில் என்பது திரிகோணத்தின் நடுவே பிந்து உள்ளதால் என்க. (அ)  அருணாசல
ஹ்ருதயனான தக்ஷிணாமூர்த்தி சாந்தமாய் இருப்பதால் (சத்) சிவ பிரதானம்.  நடராஜ ராஜனோ 
ஆனந்தக் கூத்து  ஆடுவதால் (சித்) சக்தி பிரதானம் . அதைக் குறிக்கவே திரிகோணம் என்க (அ)     
 
அபேதத்தை ஐக்கியத்தை உணர்த்தவே திரிகோணம் கூறப்பட்டது என்க.
(சிவன் பிரகாச (பொருள்- அர்த்த) ரூபம் , சக்தி விமர்ச (சொல்- வாக்) ரூபம்.
இதுவே அர்த்த நாரீஸ்வர தத்துவம். மஹாகவி காளிதாசனின் ரகுவம்ச மங்கள  ஸ்லோகத்தை        
நினைவு கூர்க) 

த்ரிபுண்ட்ர விலஸத்பாலம் சந்த்ரார்காநல லோசனம் |
வாமபாகஸ்திதாம் தேவீம் வீக்ஷயந்தம பாங்கத: ||4 ||

த்ரிபுண்ட்ர - திருநீற்றால் இடப்பட்ட மூன்று கோடுகளுடன் , விலஸத்பாலம்- நன்கு             
விளங்கும் நெற்றியை உடையவராகவும் , சந்த்ர - அர்க- அநல- சந்திரன், சூரியன், அக்னி 
ஆகியவற்றை , லோசனம்- கண்களாக உடையவராகவும், வாமபாக ஸ்திதாம்- இடது 
புறத்தில் வீற்றிருக்கும், தேவீம்- தேவியை (சிவகாம வல்லியை) , அபாங்கத: கடைக்கண்ணால்,
வீக்ஷயந்தம்- பார்த்தருள்கின்றவராகவும் எம்பெருமானைத் தியானிக்கவேண்டும் .             

அதரோல்லங்கநாகார  ஸஞ்ஜிஹான ஸ்மிதாங்குரம் |
கஸ்தூரிகாஸிதோத்தாம  காலகூடலஸத் கலம் ||5||

அதர- கீழ் உதட்டையும், உல்லங்கனாகார- மீறித் தோற்றமளித்து, ஸஞ்ஜிஹான- சிறந்து        
விளங்குகின்ற , ஸ்மித- புன்சிரிப்பின், அங்குரம்- முளை (பற்களை) உடையவராகவும்,
கஸ்தூரிகா - கஸ்தூரியின் , அஸித- கருமை நிறத்தையும், 
உத்தாம- வெல்லும் படியான , கால கூட - காலகூட விஷத்தினால், லஸத்- விளங்கும்,
கலம்- கழுத்தையுடையவராகவும்  எம்பெருமானைத் தியானிக்கவேண்டும்.             

மஹாடமரு வாத்யூர்த்வ தக்ஷபாணி  ஸரோருஹம்  |
த்வதங்க்ரிகர பத்மாந்த ஜ்வலதுத்தித பாவகம் ||6||

மஹாடமரு- சிறந்த பெரிய உடுக்கையை, வாத்யூர்த்வ - மேல்நோக்கிப் பிடித்த,
தக்ஷ- தூய்மையான (மேல்) வலது, பாணிஸரோருஹம்-  கரகமலத்தையுடையவராகவும்,
த்வத்- தனது மற்றொரு , அங்க்ரிபத்ம- கரகமலத்தின் , அந்த - உள்ளங்கையில்,
ஜ்வலதுத்தித- கொழுந்துவிட்டு மேல் நோக்கி எரிகின்ற , பாவகம்- தீயை உடையவராகவும் 
எம்பெருமான் தியானிக்கப்படவேண்டும். 

தக்ஷாத: கரபத்மேன  ஹரந்தம் ப்ராணினாம் பயம் |
விக்ஷிப்தாந்யகரம் திர்யக் குஞ்சிதேனாங்க்ரிணாதமம் ||7||

அத: - கீழான, தக்ஷ- வலது , கரபத்மேன- கரகமலத்தால், ப்ராணினாம்- ஜீவர்களின்,
பயம்- பயத்தை, ஹரந்தம்- நீக்குபவராகவும் (அபய முத்திரை), திர்யக்- குறுக்கே,
குஞ்சிதேன- வளைந்துள்ள, அங்க்ரிணா- பாதத்தோடு (இணையாக), அதமம்- கீழ்,
விக்ஷிப்த- நோக்கியதாக வைத்த, அன்யகரம்- மற்றொரு கரகமலத்தை 
உடையவராகவும் எம்பெருமானைத் தியானிக்கவேண்டும்.                     

வாமேதர ப்ரகோஷ்டாந்த ந்ருத்யத் பணதரேஸ்வரம் |
கல்பப்ரஹ்ம கபாலானாம் மாலயா லம்பமானயா ||8||

வாமேதர- வலது கையின் ,      ப்ரகோஷ்டாந்த- மணிக்கட்டில், ந்ருத்யத்- நடனம் செய்கின்ற ,
பணதரேஸ்வரம்- நாகராஜனை உடையவராகவும், கல்பப்ரஹ்ம- கல்பந்தோறும் அழியும் 
பிரம்மதேவர்களின், கபாலானாம்- மண்டையோடுகளின், மாலயா- மாலையை,
லம்பமானயா- அணிந்தவராகவும் என்பெருமானைத் தியானிக்கவேண்டும் .             

ஸ்வதந்த்ரமாத் மனோ ரூபம் ஆசக்ஷாணம் ஸ்வபாவத: |
வ்யாக்ர சர்மாம் பரதரம் கடிஸூத்ரித பன்னகம் |
தக்ஷபாதாப்ஜவின்யாஸாத்  அத: க்ருத தமோகுணம் ||9||

ஸ்வதந்த்ரம்- சுதந்திரமான, ஆத்மன: - தனது , ஸ்வபாவத:   யதார்த்தமான, ரூபம்- வடிவத்தை,
ஆசக்ஷாணம்- உள்ளபடியே உணர்த்துகின்றவராகவும், வ்யாக்ரசர்ம- புலியின் தோலையே ,
அம்பர தரம்- ஆடையாக அணிந்தவராகவும், கடி- இடுப்பில், பன்னகம்- நாகங்களையே,
ஸூத்ரிதம்- அரைஞாணாகக் கட்டியவராகவும்,  அப்ஜ-(தனது) தாமரை போன்ற         
தக்ஷபாத - வலது திருவடியால், தமோகுண- தமோகுண வடிவான முயலகனை,
விந்யாஸாத்- அமிழ்த்தி , அத: க்ருதம்- வென்றவராகவும்  எம்பெருமானைத்         
தியானிக்கவேண்டும்.

பஸ்மோத்தூலித ஸர்வாங்கம் பரமானந்த தாண்டவம் |
ஏவம் த்யாயேத் பரேஸானம் புண்டரீக புரேஸ்வரம் ||10||

பஸ்ம- திருநீற்றினால் , உத்தூலித- பூசப்பட்ட, ஸர்வாங்கம்- முழுமேனியை
உடையவராகவும் (மேனி முழுதும் திருநீற்றால் பூசப்பட்டவராகவும் ) 
பரமானந்த - பேரின்பத்தை அளிக்கக்கூடிய , தாண்டவம் - தாண்டவத்தைச்         
செய்பவராகவும், புண்டரீகபுர- சிதம்பரத்தின் , ஈஸ்வரம்- நாயகனாகவும், 
பரேஸானம்- மஹாதேவனாகவும், ஏவம்- மேற்கூறியவாறு, த்யாயேத்- எம்பெருமான்
நடராஜ ராஜனைத் தியானிக்கவேண்டும்.                         


நம:ஸிவாய ஸிவாயை நம: 
நம:ஸிவாய ஸிவாயை நம: 
நம:ஸிவாய ஸிவாயை நம: 

மங்கள வடிவினனுக்கு நமஸ்காரம்,  மங்கள வடிவினளுக்கு நமஸ்காரம்.
மங்கள வடிவினனுக்கு நமஸ்காரம், மங்கள வடிவினளுக்கு நமஸ்காரம்.
மங்கள வடிவினனுக்கு நமஸ்காரம், மங்கள வடிவினளுக்கு நமஸ்காரம்.

 

Related Content

Sundaramurthy Swamigal - Thevaram - Thiruchchorruththurai

Sundaramurthy Swamigal - Thevaram - Thirukkazumalam

श्री दशिणामूर्ति स्तोत्रम - Shri daxinamurti stotram

ਸ਼੍ਰਿਇ ਕਾਲਭੈਰਵਾਸ਼੍ਹ੍ਟਕਂ - Kaalabhairavaashtakam

आर्तिहर स्तोत्रम - Artihara stotram