logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

பரப்ரம்ம தச சுலோகீ

ஸ்ரீ ஹரதத்தர் மழுபீடத்திலமர்ந்து, பரப்ரம்மமான பரமேச்வரனை ஸ்தோத்ரம் செய்த

 

பரப்ரம்ம தச சுலோகீ (PDF file)  


(1) ஸாம்போ ந: குலதைவதம் பசுபதே! ஸாம்ப! த்வதீயா வயம் ஸாம்பம் ஸ்தெளமி, ஸுரா ஸுரோரக கணா: ஸாம்பேன ஸந்தாரிதா: | ஸாம்பாயாஸ்து நமோ மயா விரசிதம் ஸாம்பாத் பரம் நோ பஜே ஸாம்பஸ்ய அனுசரோஸ் ம்யஹம் மம ரதி: ஸாம்பே பரப்ரம்மணி ||

பார்வதியுடன் கூடிய பரமேச்வரன் தான் எங்கள் குலதெய்வம். ஹே பசுபதியே, ஸாம்ப! ஸாம்ப பரமேச்வரனை வணங்குகிறேன், தேவர்கள், அஸுரர்கள், ஸகல ஜீரவராசிகளும் பரமேச்வரனால் ஸம்ஸார ஸாகரத்திலிருந்து கரையேற்றப்படுகிறார்கள். என்னால் செய்யப்படும் நமஸ்காரங்கள் – பரமேச்வரனுக்கே ஆகட்டும். பரமேச்வரனைக் காட்டிலும் உயர்ந்த தெய்வம் இல்லை. ஆகவே பரமேச்வரனை விட்டு இதர தேவதையை வணங்கமாட்டேன். நான் பரமேச்வரனுடை கிங்கரன், அடியவன்; என்னுடைய மனம் பரப்ரம்மாகிய பரமேச்வர த்யானத்திலே எப்பொழுதும் இன்புற்று இருக்க வேண்டு,

இந்த வணக்க சுலோகத்தில் ஸாம்ப என்ற பதம் எட்டு வேற்றுமைகளுலும் திகழ்வதைக் காண்க. (1) ஸாம்ப (2) ஸாம்பம் (3) ஸாம்பனே (4) ஸாம்பாய )5) ஸாம்பாத் (6) ஸாம்பஸ்ய (7) ஸாம்பே (8) ஸாம்ப.


(2)

விஷ்ண்வாத்யா: ச புரத்ரயம் ஸுரகணா: ஜேதும் ந சக்தா: ஸ்வயம்

யம் சம்பும் ப்ரணதா வயம்து பசவ: அஸ்மாகம் த்வமே வேச்வர: |

தேனாஸ்மின் சரணாகதான் பசுபதே பாஹீத்யவோசம் த்ருதம்

தஸ்மின் மே ஹ்ருதயம் ஸுகேன ரமதாம் ஸாம்பே பரப்ரம்மணி ||

விஷ்ணுவாதி தேவதைக் கூட்டங்கள் ஸ்வயம் தாங்களாக த்ரிபுரஸம் ஹாரம் செய்யச் சக்தியிலராக, எந்த பரமேச்வரனைச் சரணமடைந்து போற்றி “நாங்கள் கேவலம் பசுக்கள்; தாங்கள் தாம் எங்களுக்கெல்லாம் ஈச்வரர், பசுபதி, உங்களைச் சரணமடைந்த பசுக்களான எங்களைப் பசுபதியான தாங்கள் சீக்கிரம் ரக்ஷிக்கவேண்டு “மென்ற வேண்ட, எந்த பரமேச்வரன் ஒர் க்ஷணத்தில் ஸங்கல்ப்பத்தினால், த்ரிபுர ஸம்ஹாரம் செய்து விஷ்ணு ப்ரம்மாதிகளைக் காப்பாற்றினாரோ, அந்த பரப்ரம்மமாகிய பரமேச்வரனிடத்தில் (அவர் திருவடிகளில்) என் மனம் லயித்து சிவனாந்த வெள்ளத்தில் திளைத்து இருக்கட்டும்.


(3)

யஸ்யேஷு கமலேக்ஷண: பசுபதே: அப்ஜோத்பவஸ் ஸாரதி:

யஸ்ய ஜ்யாபணினா மினோ ரதபதே யஸ்யேந்து ஸூர்யாவுபெள |

மேரூர் யஸ்ய சராஸனம் ரதவரோ பூமிஸ்து யஸ்யா பவத்

தஸ்மின் மே ஹ்ருதயம் …..ஸாம்பே பரப்ரம்மணி ||

விஷ்ணு ப்ரமாதிகள் பரமேச்வரனைத் த்ரிபுர ஸம்ஹாரம் செய்து தங்களைக் காப்பாற்றும்படி வேண்டியபோது, தாங்களும் தங்களாலான உதவியைச் செய்வதாக நினைத்து பூமி ரதமாகவும், சூர்ய சந்திரர்கள், பிரம்மா ஸாரதியாகவும் வேதங்கள் குதிரைகளாகவும், மேரு வில்லாகவும், ஆதிசேஷன் நாணாகவும், விஷ்ணு பாணமாகவும்-அமைந்து, ஈச்வரனை ரதத்தில் ஆரோஹணம் செய்து த்ரிபுர ஸம்ஹாரம் செய்யும்படி வேண்டினார்கள். ஈச்வரன் அவர்களுடைய அக்ஞானத்தைப் போக்கத் திருவுளம் கொண்டு, ரதத்தில் ஆரோஹணிப்பவர் போல, ஒரு காலைவைத்தார் ரதம் தவிடுபொடி ஆயிற்று. தேவதைகளின் அஞ்ஞானம் ஒருவாறு (அந்தஸமயம்) நீங்கிற்று. பிறகு ஈச்வரன் சங்கல்ப்பத்தால் நினைத்தமாத்திரத்தில் த்ரிபுரங்கள் எரிந்தன. அப்பேர்ப்பட்ட, பரப்ரம்மமாகிய ஸாம்ப பரமேச்வரன் திருவடிகளில், என் மனம் லயித்து இன்புற்று இருக்கட்டும்.


(4)

யத்பக்தோ ப்ருகுரிந்திராபதிமஹோ சாபஸ்ய லக்ஷ்யம் ப்ருசம்

க்ருத்வா ஸ்வாம் தயிதாம் ம்ருதாம் ஸ்வமனுபி:

                                      சைவைரயுங்க்தாஸுபி: |

யம் தாராகிய சூடமாகம சிரோ விச்வாதிகம் காயதே

தஸ்மின் மே ஹ்ருதயம்……ஸாம்பே பரப்ரம்மணி ||

ஒரு ஸமயம் ப்ருகுமுனிவர் வெளியில் போயிருந்தபோது விஷ்ணு தன் சக்ராயுதத்தை ஏவி அவர் பத்னியின் சிரஸை அறுத்துத் தள்ளினார். தத்ஸமயம் ஆச்ரமம் திரும்பின பிருகு மகர்ஷி எந்த பரமேச்வரனை வேண்டி சபதம் செய்து, விஷ்ணுவை சபித்தாரோ, சந்திர சேகரான எந்தப் பெருமானை வேதங்களும் ஆகமங்களும் விச்வாதிகராகப் போற்றுகின்றனவோ அந்த ஸாம்ப பரமேச்வரனிடத்தில் என் மனம் ரமித்து இன்பமடையட்டும்.

விச்வாதிகோ ருத்ரோ மகர்சி: என்பது வேதம். பிருகு வாக்கு “பரமேச்வரனைக் காட்டிலும் நான் வேறு தெய்வத்தை வணங்கினதில்லை என்பது ஸத்யமானால், அந்த ஸத்ய பலத்தால் நான் உன்னை சபிக்கிறேன். வெறுக்கத்தக்க ஜன்மங்கள் எடுப்பாயாக.” (பவிஷ்யோத்தர புராணம்)

பிருகு பரமேச்வரனைப் போற்றி பஞ்சாக்ஷரம் ஜபித்து இறந்த தன் மனைவியை எழுப்பி விட்டார்.

ப்ருகு முனியின் சாபம் உத்தர ராமாயணத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது.


(5)

கோவிந்தாதிகம் ந தைவதமிதி ப்ரோச்சார்ய ஹஸ்தாவுபெள

உத்ருத்யாத சிவஸ்ய ஸந்நிதி கதோ வ்யாஸோ முனீனாம் புர: |

யஸ்ய ஸ்தம்பித பாணி ரானதிக்ருதா நந்தீச்வரேணோ பவத்

தஸ்மின் மே ஹ்ருதயம் … ஸாம்பே பரப்ரம்மணி ||

காசிவிச்வேசர் ஸந்நிதியில், பலமுனிவர்களுக்கு எதிரில் இருகைகளையும் உயரத்தூக்கி, வ்யாஸர் (விஷ்ணுவை ஸ்மரித்த வண்ணம்) கோவிந்தனைக்காட்டிலும் மேலான தெய்வம், இல்லை என்று அறைகூவ ஆரம்பித்த ஸமயம், நந்திகேசர் கடும்கோபங்கொண்டு, ஒரு ஹுங்காரம் செய்த மாத்திரத்தில், வ்யாஸரின் கைகளும் (நாக்கும்) ஸ்தம்பித்துப்போயின, எந்தப் பரமேச்வரனுடைய அருளால், நந்திசேகர் வ்யாஸரை தண்டித்தாரோ, அந்த ஸாம்ப பரமேச்வரனிடத்தில் என்மனம் இன்புற்று இருக்கட்டும்.

பிறகு விஷ்ணுவே அந்தவிடத்தில் தோன்றி-வ்யாஸருக்குப் புத்திசொல்ல, வ்யாஸரும் நந்திகேசரைப் பலவாறு துதித்து விடுதலையடைந்தார்.

ஜனங்களுக்கு நல்ல புத்திவரவேண்டுமென்று நந்திகேசர் ஒரு சாபம் கொடுக்கிறார். வ்யாஸர் எந்த இடத்தில் நின்று அபத்தம் பேசத்துணிந்தாரோ அந்த இடத்தில் ப்ராணவ்யோகமாகும் ஜீவர்கள் மறுஜன்மத்தில் கழுதையாகப் பிறக்கக்கடவர் என்பதாக.


(6)

விஷ்ணுஸ்தாவர ஜங்கமாத்மக ஜகத்ஸ்வாமீ விரிஞ் சாதிகோ

யத்பக்தேனஸஹ ஸுரேச்வரரிபுர் யுத்தம் ததீசேனஸஹ |

க்ருத்வா சீக்ரம்ஹோ த்விஜாத் அபஜயம் தஸ்மாத்கதோ பூத் ப்ருசம்

தஸ்மின் மே ஹ்ருதயம் … ஸாம்பே பர ப்ரம்மணி ||

ததீசி மகரிஷி மகாசிவபக்தர்: பரமேச்வரன் அனுக்ரஹத்தால் வஜ்ர சரீரம் பெற்றவர், ஒரு ஸமயம் விஷ்ணு அவருடன் யுத்தம் செய்து, தன் சக்ராயுதத்தை ப்ரயோகம் பண்ணுகிறார். சக்ராயுதம் மகரிஷியை ஒன்றும் செய்யமுடியவில்லை. தன் சக்தியையும் இழந்தது. விஷ்ணு தன் மாயையால் மற்றுமொரு விஷ்ணுவை உண்டாக்கினார். ததீசி மகரிஷி தன் கால்விரலை ஆட்டி 1000 விஷ்ணுக்களை உண்டாக்கினார், இவ்விதம் விஷ்ணு அபஜயப்பட்டு, கடைசியாக அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். ஆக, எந்த பரமேச்வரனுடைய அனுக்ரகபலத்தைக் கொண்ட ததீசி மகரிஷியுடன் யுத்தம் செய்து விஷ்ணுவானவர் அபஜயமடைந்தாரோ, அந்த ஸாம்ப பரமேச்வரனுடைய திருவடிகளில் என் மனது நிலைத்து இன்புற்று இருக்கட்டும்.


(7)

காதீனாம் ச பயங்கர: ஸ்வமஹாஸாக்ரூரை: ச க்ருத்யைர் ப்ருசம்

கோபாந்தோ ஜிததானவோ நரஹரி: யஸ்யாம் ச பூதேன ஸ: |

லோகேச: சரபேண சிக்ஷிதமதோபூத் லீலயா அர்த்தக்ஷணாத்

தஸ்மின் மே …ஸாம்பே பரப்ரம்மணி ||

எந்த பரமேச்வரன் சரபரூபமெடுத்து, மகாவிஷ்ணுவின் ந்ருஸிம்ஹரூபத்தை தண்டித்து, அடக்கி ஒடுக்கினாரோ, அந்த ஸாம்ப பரமேச்வரன் திருவடிகளில் என்மனம் லயித்து நித்யானந்தத்தை யனுபவிக்கட்டும்.


(8)

விஷ்வக்ஸேன மபீந்திராபதி ஸமம் தம் ரக்தபிக்ஷாச் சலாத்

ஸம்ஹ்ருத்யாத ஸபைரவ: சசிதரோ யஸ்யாம் ச பூதோஜடீ |

ப்ரம்மாத்யாமர சிக்ஷகஸ்ய பலினோ விஷ்ணோர் மதஞ்சாஹரந்

தஸ்மின் மே ஹ்ருதயம் ..ஸாம்பே பரப்ரம்மணி ||

பைரவர் ரக்தபிக்ஷை வாங்கி வரும்போது வைகுண்டத்தின் முதல் வாயிலில் காவலிருந்த விஷ்வக்ஸேனன், பைரவரைத்தடுக்க, பைரவர் அவனுடைய மார்பைத் த்ரிசூலத்தினால் பிளந்து, ரத்தத்தைத் தன் கையிலிருந்த பிரம்ம கபாலத்தில் ஏந்தினார். (பிறகு உள்ளே சென்று விஷ்ணுவிடமும் ரத்தபிக்ஷை வாங்கினார்). அந்த பரமேச்வரனிடத்தில் என்மனம் லயித்து ஆனந்தம் அனுபவிக்கட்டும்.


(9)

யேன பாதிதமங்கஜாங்கபஸிதம் திவ்யாங்காரகைஸ்ஸமம்

யேனஸ்வீக்ருதமப்ஜஸம்பவ சிரஸ்ஸெளவர்ண பாத்ரைஸ்ஸமம் |

யேனாங்கீக்ருத மச்யுதஸ்ய நயனம் பூஜாரவிந்தைஸ் ஸமம்

தஸ்மின் மே ஹ்ருதயம் … ஸாம்பே பரப்ரம்மணி ||

விஷ்ணுவின் புத்ரனான மன்மதனை நெற்றிக்கண் ஒரு பொறியால் க்ஷணத்தில் எரித்து சாம்பராக்கினவரும், பிரம்மாவின் ஐந்தில் ஒரு தலையை புஷ்பம் கொய்வதுபோல் கிள்ளி அந்த தலையோட்டையே, பிக்ஷாபாத்திரமாகக் கொண்டவரும், விஷ்ணுவின் கண்மலர் ஒன்றைக் தாமரைமலராக ஏற்று அருளியவருமான, அந்த ஸாம்பபரமேச்வரனிடத்தில் என் மனது லயித்து இன்பம் அனுபவிக்கட்டும்.


(10)

விஷ்ணுப்ரம்ம ஸுராதிபப்ரப்ருதய: ஸர்வேபி தேவாப்ருசம்

ஸம்பூதாத்ஜலதே: விஷாத் பரிபவம் ப்ராப்தாய மேத்யேச்வரம் |

ஸ்வஸ்ஸ்தான நியோஜிதா: கதசுச: ஸ்வஸ்தா பபூவுர்தருடா:

தஸ்மின் மே ஹ்ருதயம் … ஸாம்பே பரப்ரம்மணி ||

அமிர்தம் கடைந்த காலத்து முதலில் வந்த ஹாலாஹல விஷத்தை எவர் ஏற்று, விஷ்ணு ப்ரம்மாதிகளையும் ஸகல ஜீவராசிகளையும் ரக்ஷித்து அவரவர் ஸ்தானத்தில் ஸ்வஸ்தமாக இருக்கும்படி அனுக்ரஹித்தாரோ - அந்த ஸாம்பரமேச்வரன் திருவடிகளில், என் மனம் நிலைத்து நித்யானந்தத்தை யனுபவிக்கட்டும்.


(11)

ஸ்ருஷ்ட்வா ய: த்ரிகுணான் விதாத்ரு மதுபிச்சூலாயுதேபய: சிவோ

தத்வை தானததான் க்ருஹீதும் அனயோ: சக்த்யா புனர்ஹீனயோ: |

தாப்யாம் ஸாகமஹோ குணத்ரய ப்ருதே ருத்ராய ஸாம்யம் ததெள

தஸ்மின் மே ஹ்ருதயம் ஸுகேன ரமதாம் ஸாம்பே பரப்ரம்மணி ||

பரமேச்வரன் (உலகபரிபாலனார்த்தம்) ஸாத்விகம், ராஜஸம், தாமதம், என்று மூன்று குணங்களை ஸ்ருஷ்டித்து, விஷ்ணு, ப்ரம்மா, ருத்ரன் மூன்று மூர்த்திகளுக்கும் முறையே கொடுக்க, விஷ்ணுவும், ப்ரம்மாவும் ஸத்வகுணத்தையும் ராஜஸ குணத்தையும் வகிக்கச் சக்தியில்லாராக விருந்தார்கள். ருத்ர மூர்த்தியோ, தாப்யாம் ஸாகம் – அந்த இரண்டு குணங்களுடன் கூடத் தாமத குணத்தையும் ஆக மூன்று குணங்களையும் வகித்தார்.

[தாப்யாம் ஸாகம் குணத்ரயம்-நேத்ரேண ஸாகம் தசசத கமலை: - என்றவாறு-அந்வயம் அர்த்தம்-]

ஈச்வரன் ருத்ர மூர்த்திக்குத் தன் ஸாம்யத்தைக் கொடுத்து அருளினார். அந்த ஸாம்ப பரமேசவ்ரனுடைய திருவடிகளில் என் மனம் லயித்து இன்பம் அனுபவிக்கட்டும்.

பின்னர் ஈச்வரன் உலக பரிபாலனார்த்தம் விஷ்ணுவிற்கு ஸத்வ குணத்தையும், ப்ரம்மாவிற்கு ராஜஸ குணத்தையும் வகிக்கும் சக்தி யனுக்ரஹித்தார்

This file was last revised on 05 May 2007

Related Content

அரிகரதாரதம்மியம் - தமிழ்ப் பாடல் உருவில்

சுருதி ஸூக்தி மாலா - பகுதி-1

சுருதி ஸூக்தி மாலா - பகுதி-2

சுருதி ஸூக்தி மாலா - பகுதி-3

சுருதி ஸூக்தி மாலா 1-50