logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

அரிகரதாரதம்மியம் - தமிழ்ப் பாடல் உருவில்

ஒம்.
சிவமயம்.

ஹரதத்த சிவாச்சாரியார் அருளிய

(தமிழ் மொழி பெயர்ப்பு: திருஞானசம்பந்தப்பிள்ளை - கி.பி.1895)

பரசிவவணக்கம்

உலகின துருவ மாயு முலகினிற் கப்பா லாயும்

உலகினின் மறைந்த தாயு முலகினிற் கேது வாயும்

இலகுறு பரசி வத்தை யெணுமிட்ட சித்தி யெய்த

அலகிலா வருளாற் சேவை செய்குது மகில மீதே.

நூல்

1)     ஒருவனுய ருலகஞ்ச வருகாள கூடமதை யருளா லுண்டான்,

ஒருவனிழி பூதனையின் தனத்தினுறு மற்பவிட முண்டா னீண்டிவ்,

இருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மையிசைத் திடுகமாசு,

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்துவழி படுவா மன்றே.

2)     ஒருவனிரா வணற்பங்கம் புரிந்தனனா லொருசரண நகாக்கி ரத்தாற்,

பொருகளத்தி னொருவனனி வருத்தமுறீஇ மற்றவற்பங் கம்புரிந்தான்,

இருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மையிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்தவழி படுவா மன்றே.

3)     விரிவையுறு சமுத்திரத்தி னாலிலைபள் ளியாக்கொண்டா னொருவன் வேகத்,

திரிபுரத்தை யெரிக்குங்கா லொருவனலை  கடல் சாதி யாகச் செய்தான்,

இருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மையிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்து வழி படுவா மன்றே.

4)     அரவுதனி னொருவனனி துயிலாநின் றானொன்று மருளான் மற்றை,

ஒருவனர வதனைக்கங் கணமாக வணிந்துநட முஞற்றா நின்றான்,

இருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மையிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்துவழி படுவா மன்றே.

5)     ஒருவனுயர் திரிபுரத்தைச் சிரிப்பினா லெரித்தனன்மற் றொருவன் றென்பால்,

மருவுறுமோ ரிலங்கையினை யெரித்தனன்மா ருதிகொடிந்த மாண்பி னாலிவ்,

இருவர்தமி லெவனதிக லெனவூகித் துண்மையிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்துவழி படுவா மன்றே.

6)     தரணிதலத் தொருவனவ நீதகண்டந் தரித்தனனன் னியன் வியோமம்,

வருநிகரில் சுதையமாஞ் சந்திரகண் டந்தரித்து வயங்கி னானிவ்,

விருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மையிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்துவழி படுவா மன்றே.

7)     ஒருவனிழி வுறுமிடையர் மந்திரங்க ளிற்களித்தா னொருவ னோங்கத்,

திரிகளினின் றுயர்மேரு சிகரத்துக் கந்தரங்க ளிற்களித்தான்,

இருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மையிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்துவழி படுவா மன்றே.

8)     உருவிலியைப் புத்திரனாப் பெற்றனனிங் கொருவனன் னியனன் முத்தி,

தரவலவச் சத்திதரற் புத்திரனாப் பெற்றனனிச் சகத்தின் மீதிவ்,

விருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மையிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்துவழி படுவா மன்றே.

9)     ஒருவனிச்சை யொடுமகடூஉ வடிவமெடுத் தனன்முன்னா ளுவமை யில்லாப்,

புரூடனொரு வன்றனது கிரீடார்த்த மவ்வடிவைப் பொருந்த லுற்றான்,

இருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மையிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்தவழி படுவா மன்றே.

10)    திருடினனா லொருவனிடைச் சியாகத்து வெண்ணெயினை யொருவன் தெய்வப்,

பொருவிலாப் புலவர்களுக் கருளினான் புரையிலமு துணற்பொ ருட்டாங்,

கிருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மையிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்துவழி படுவா மன்றே.

11)    ஒருவனவன் சகாமனெனப் பிரசித்தி பெறுமற்றை யொருவன் சாலப்,

பெருமைபெறு விகதகா மன்னெனவே பிரசித்தி பெறுமா லிந்த,

இருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மையிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்துவழி படுவா மன்றே.

12)    ஒருவனயி லாசுகத்தின் கதியையடைந் தான்கரத்தி னுற்றான் மூன்று,

புரமதனை வேறற்க ணவனையே வாத்தரித்தா னொருவன் போர்க்கண்,

இருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மையிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்துவழி படுவா மன்றே.

13)    இரவிசசி யென்னுமிரு நேத்திரத்த னொருவனன் னியன்றா னியார்க்கும்

இருளகற்று மிரவிசசி சிகியெனுமுந் நேத்திரத்தோ டியைந்தா னிந்த,

இருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மையிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்துவழி படுவா மன்றே.

14)    ஒருவனனு தினமுமும்ப ருறுமிரவி மண்டலத்து ளுறைவனந்த,

இரவியது தசனமதை யுகுத்தொருவன் விசயத்தை யெய்தினானில்,

விருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மையிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்துவழி படுவா மன்றே.

15)    ஒருவனவன் றீனகச மதையளித்தற் கண்மதியை யுற்றானொன்னார்,

வெருவரச்செய் மத்தகச மதையழித்தற் கண்மதிவேறொருவ னுற்றான்,

இருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மையிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்துவழி படுவா மன்றே.

16)    ஒருவனுயர் நாபியினிற் சரோருகத்துப் பிரமனவ னுதிக்கச் செய்தான்,

மருவுமவன் சிரத்தைநக நுதிகொடொரு வன்கொய்து வயங்கினானிவ்,

விருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மையிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்துவழி படுவா மன்றே.

17)    ஒருவனோ ரிடத்திலிந்த விசுவத்தின் வசித்தலினா லுவகை யுற்றான்,

கருதுமற்றை யவன்விச்ய்வே சுரனெனவே யவனியினிற் கழறப் பெற்றான்,

இருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மையிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்துவழி படுவா மன்றே.

18)    ஒருவனுல கதனிற்கே சவனெனுநா மத்தையுற்றா னொருவனார்ந்து,

விரிசகத்து வியோமகே சன்னெனுநா மம்பெற்று விளங்கினானால்,

இருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மையிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்துவழி படுவா மன்றே.

19)    ஒருவன்விழி மலராலர்ச் சனைபுரிந்தா னொருவனவற் குவந்து தன்கை,

விரவுறுபே ராற்றலமர் சக்கரத்தை வெற்றிபெற வழங்கி னான்மே,

இருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மையிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்துவழி படுவா மன்றே.

20)    பாவையுறு சலமதனின் மூழ்கினனா லொருவனன் னியபார் மேவும்,

வரமுறுநற் கைலாச வரையினுயர் சிகரத்து வதிந்தான் மன்னோ,

இருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மையிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்துவழி படுவா மன்றே.

21)    ஒருவனர னமர்கைலா சத்தினுயர் தவமதனை யுஞற்றி னானச்,

சிரமமதைத் தேர்ந்தவொரு வன்சாம்ப னெனுஞ் சிறுவற் சிறக்க வீய்ந்தான்,

இருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மையிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்துவழி படுவா மன்றே.

22)    ஒருவனடைந் தனனீல நிறத்தைவிடந் தாக்குதலா னுடல முற்றும்,

கரியவிட முண்டவனைக் காத்தலினன் னியன்களமாத் திரங்க றுத்தான்

இருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மையிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்துவழி படுவா மன்றே.

23)    ஒருவனவன் றேனுவதஞ் செய்துபிர சித்திபெற்றா னொருவனோங்கு,

வரிபெறுமவ் வியாக்கிரத்தை வதஞ்செய்து பிரசித்தி வயங்கப் பெற்றான்,

இருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மையிசைத் திடுக மாசு,

மருவுதலி வறீவுடையீ ரியாமவனை யடைந்துவழி படுவா மன்றே.

24)    ஒருவனிழி வுறுமட்ட விலக்குமியை யுறுவனனு மதிநற்சூரன்,

பிருதிவிநீ ரம்முதலா மட்டமூர்த் தங்களுறும் பிறங்கொ ருத்தன்,

இருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மையிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்துவழி படுவா மன்றே.

25)    ஒருவனுந்தி யுறுமுநா நதியதனின் மூழ்கினனிங் கொருவன் வாய்ந்த,

திரிபதகை யென்றுபெயர் பெற்றுயர்ந்த கங்கைநதி சிரந்தரித்தான்,

இருவர்தமி லெவனதிக துண்மையிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்துவழி படுவா மன்றே.

26)    ஒருவனணிந் தனன்கடியிற் சுவணவச னத்தினைமற் றொருவன் மேனாட்,

கரமுறவே தரித்தனனற் றுரோணமெனக் கனகமால் வரையைக் காரார்,

இருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மையிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்தவழி படுவா மன்றே.

27)    உரமதனிற் கெளத்துபமா மரதனத்தைத் தரித்தனனாங் கொருவன் மற்றை,

வரமுடைய வாயிரமாப் பணத்திலுறு மணீந் திரமா லையைத் தரித்தான்,

இருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மையிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்துவழி படுவா மன்றே.

28)    ஒருவனுறா நின்றனனிந் திரனநுச னாந்தன்மை யொருவன் விண்ணிற்,

புரமுறுமிந் திரனாதி வானவர்போற் றுறுந்தன்மை பொலியப் பெற்றான்,

இருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மையிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்துவழி படுவா மன்றே.

29)    மருமமதி லொருவனிலக் குமியைவகித் துந்தனத்தை வாஞ்சிப் பான்றாழ்,

சிரமதனி லிரந்துமொரு வன்பிறர்க்குப் பாக்கியத்தைச் சிறக்க வீவன்,

இருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மையிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்துவழி படுவா மன்றே.

30)    தரணிதனி லொருவன்மா தவனெனவே பிரசித்தன் சகத்தின் மற்றை,

ஒருவனுமா தவனெனவே பிரசித்தி பெறுவனிந்த வுண்மை யானே,

இருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மையிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்துவழி படுவா மன்றே.

31)    ஒருவனுறு கோக்களொடு மியைந்து பிருந் தாவனத்தி லுழன்றா னற்பூ,

தரநிகர்பூ தங்களொடு மியைந்துபிதிர் வனத்திலொருவன்ச ரித்தான்,

இருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்டையிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்துவழி படுவா மன்றே.

32)    ஒருவனொரு போதுமது வணுவையப கரித்தனன்மற் றொருவ னாழ்ந்த,

பாவையினி லெழுவிடத்தை யபகரித்தா னயன்முதலோர் பரவ வீண்டிவ்,

விருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மையிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்துவழி படுவா மன்றே.

33)    ஒருவனவன் கைடபனை வதம்புரிதற் கண்ணிபுண னொருவனான்ற,

வரமுறுசீ ரந்தகனை வதைத்தற்கண் ணிபுணனா வயங்கா நின்றான்,

இருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மையிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்துவழி படுவா மன்றே.

34)    ஒருவனிடை யர்கடெருவின் வேணுநா தஞ்செய்தா னுலக முற்றும்,

மருவிலய மாகுங்கா லொருவனட்ட காசத்தை மயங்கச் செய்தான்,

இருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மையிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்துவழி படுவா மன்றே.

35)    தரணிதனி லொருவனியோ னிசனெனவே பிரசித்தன் சகத்து மற்றை,

ஒருவனயோ னிசனெனவே பிரசித்தி பெறுவனிந்த வண்மை யானில்,

விருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மையிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்துவழி படுவா மன்றே.

36)    தரணிதனி லொருவனனித் தியனெனவே பிரசித்தன் சகத்து மற்றை,

ஒருவனித்தி யன்னெனவே பிரசித்தி பெறுவனிந்த வுண்மை யானிவ்,

விருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மையிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்துவழி படுவா மன்றே.

37)    ஒருவனுர லொடுதுவக்குண் டானொருவ னுயிர்களைமாழ் குறத்து வக்கிக்,

கருவுறுத்து மாணவத்தாற் றுவர்க்குண்டா னல்லனெனக் கழறு மித்தால்,

இருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மையிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்தவழி படுவா மன்றே.

38)    ஒருவனருச் சுனனிரதப் பரிக்குபசா ரஞ்செய்தா னொருவ னந்தப்.

பிருதைசுத னாற்சமா முகத்துத்தோத் திரஞ்செய்யப் பெற்றானீங்கிவ்,

விருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மையிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்தவழி படுவா மன்றே.

39)    ஒருவனவன் வியாபகத்தால் விட்டுணுவென் றொருநாம முற்றான் மூன்று,

பெரியவுல கத்தொருவன் விட்டுணுவல் லபனென்று பேசப் பெற்றான்,

இருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மையிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்துவழி படுவா மன்றே.

40)    தரணியினிற் சனார்த்தனனென் றொருபெயர்பெற் றுளனொருவன் சகத்து மற்றை,

ஒருவனுயர் சங்கரனென் றோங்குபெயர் பெற்றுளனா லுரைத்த விந்த,

இருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மையிசைத் திடுக மாசு

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்தவழி படுவா மன்றே.

41)    சுரர்களனை வரினுள்ளு மரசனொரு வன்சுரர்க ளனைவ ருள்ளும்,

ஒருவனுயர் வேதியனென் றுவமையிலா வாரணங்க ளுரையா நிற்கும்,

இருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மையிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்துவழி படுவா மன்றே.

42)    ஒருவனையிங் குயர்யசுர்வே தம்பலமெ லாமீயு மெனவுமோரும்,

அரியபலத் தின்கோடி யுறுமெனவுமொருவனைநன் கறையு மாலிவ்,

விருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மையிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்துவழி படுவா மன்றே.

43)    ஒருவனது பத்தனெழு நதிபதியைப் பருகினன்மற்றொருவனோர்சா,

கரமதனி வேகதே சம்பிரயத் தனஞ்செய்து கட்டுவித்தான்,

இருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மையிசைத் திடுக மாசு,

மருவுதவி லறிவுடையீ ரியாமவனை யடைந்துவழி படுவா மன்றே.

44)    ஒருவனோ திமத்துவசற் சுதனாகப் பெற்றனனிங் கொருவனந்தப்,

பிரமனைநற் சூதனாத் திரிபுரத்தை யெரித்தவழிப் பெற்றுக் கொண்டான்,

இருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மையிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்துவழி படுவா மன்றே.

45)    ஒருவனடி யவனிடங்க ருண்டபிள்ளை யதன்வாய்நின் றுயிர்ப் பித்தானின்,

டொருவியுயர் தருமபுரத் தொருவனுறீஇ யழைத் தனனான் டுறுசே யிந்த,

இருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மையிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்தவழி படுவா மன்றே.

46)    ஒருவனுயர் பதியெனவு மந்நியன்பத் தினியெனவு மோங்கு சான்றவ்,

அரிகரபுத் திரனெனவு முலகினனி பிரசித்தி யடைதலானிவ்,

விருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மையிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்துவழி படுவா மன்றே.

47)    ஒருவனையங் குயர்விசுவே சுரனென்று மொருவனைவிச் சுவமே யென்றும்,

பெருமைபெறு வேதாந்த வாக்கியங்கள் பிரித்தினிது பேசா நிற்கும்,

இருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மையிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்தவழி படுவா மன்றே.

48)    ஒருவனிடம் கரையழித்துக் கசேந்திரனை யளித்தானிவ் வுலகைக் கொல்லும்,

பெருமையுறு மந்தகனை யழித்தொருவன் முனிமகனைப் பெரிதளித்தான்,

இருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மையிசைத் திடுக மாழு,

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்துவழி படுவா மன்றே.

49)    கரமதனிற் றரித்தனன்கோ வர்த்தனவத் திரியொருவன் கராக்கி ரத்தில்,

திருணமென வொருவன்வரை களினுயர்ந்த மேருவென்மா திரந்த ரித்தான்,

இருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மையிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்துவழி படுவா மன்றே.

50)    ஒருவனளி யொடுதனது விழிமலரை யீந்ததனா லுவந்தி யார்க்கும்,

அரியதிறற் சக்கரமு மம்புயநேத் திரமுமா னவற்க ளித்தான்,

இருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மையிசைத் திடுக மாசு,

மருவதலி லறிவுடையீர் ரியாமவனை யடைந்து வழி படுவா மன்றே.

51)    ஒருவனனி கீழ்ப்படுத்தி னான்றாச னாம்பலியை யொருவ னல்லா,

தாவையுறீஇக் குபேரனாந் தாசனைமேற் படுத்தினான் தனத்தினாலில்,

விருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மையிசைத் திடுக மாசு,

மருதவுலி லறிவுடையீ ரியாமவனை யடைந்துவழி படுவா மன்றே.

52)    ஒருவனா விலையினனி துயின்றான்றா மதகுணத்தி னொருவன் ஞான,

வரமுறுசத் துவகுணத்தின் வடலிருக்க மூலமதின் வதிந்தான் மற்றிவ்,

விருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மையிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுரையீ ரியாமவனை யடைந்துவழி படுவா மன்றே.

53)    ஒருவனிலா டந்தனின்மண் தரித்தனனாற் றிலகமா வொருவனோங்கு,

சுரருளுயர் வன்னியைநெற் றியிற்றரித்தான் றிலகமென வீண்டுச் சொற்ற,

இருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மையிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்துவழி படுவா மன்றே.

54)    ஒருவனுர மதனில்வன மாலிகையை யணிந்தனனாங் குலகளித்த,

பிரமர்கடஞ் சிரநிரைக ளொருவனணிந் தனனுரத்தித் பிணைய லாவிவ்,

விருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மையிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்துவழி படுவா மன்றே.

55)    ஒருவனது சரிக்கப்பெற் றானிழிகோ பாலரா லொருவன் மேன்மை,

மருவுறுகோ பாலர்களா னனியநுச ரிக்கப்பெற் றானிவ்வையத்,

திருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மையிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்துவழி படுவா மன்றே.

56)    ஒருவனனு தினமுகவ நீதமுவந் துண்டனன்மற் றொருவனாழ்ந்த,

பரவைதனி லெழுந்தமார்ப் பயமுறுத்து கரளமதைப்பருகி னானிவ்,

விருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மையிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்துவழி படுவா மன்றே.

57)    ஒருவனரி ணமதிச்சித் துறாக்கானந் திரிந்தனனோரிடத்துஞ் செல்லா,

தரிணமொரு கரதலத்திற் றரித்தனனா லொருவனுயரமர ரேத்த,

இருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மையிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்துவழி படுவா மன்றே.

58)    ஒருவனிரா வணணாலிங் கபகரிக்கப் பட்டமனை யுற்றான் குற்றம்,

வருதலிலா மனையவளை யொருவனர்த்த சரீரமா மருவப் பெற்றான்,

இருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மையிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்துவழி படுவா மன்றே.

59)    பரவையினை வரைகள்கொடு பந்தனஞ்செய் தானொருவன் பகரு மச்சா,

கரமசுரர் திரிபுரந்தீக் கொளுவவுயர் சரதியா வொருவன் கண்டான்,

இருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மையிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்துவழி படுவா மன்றே.

60)    ஒருவனிழி கிராதனது சரத்தினான் மரித்தனன்மற் றொருவன் பற்றார்,

திரிபுரங்க டமைச்சிரிப்பாற் பொடிபடவே நனி புரிந்து சீரை யுற்றான்,

இருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மையிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்துவழி படுவா மன்றே.

61)    ஒருவனுறு தன்கருமம் புரிவித்தான் வானரத்தா லொருவன் தூய,

சுரபதிக டமைக்கொடுதன் காரியத்தைப் புரிவித்தான் றொல்லை ஞாலத்,

திருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மையிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்துவழி படுவா மன்றே.

62)    சரயுநதி யிடைவீழ்ந்தங் கிறந்தனனா லொருவனன் னியனற் சங்க,

மருவுறுமத் திரிபதகை நதியைவட நிகர்சடையின் மாண வைத்தான்,

இருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மையிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுரையீ ரியாமவனை யடைந்துவழி படுவா மன்றே.

63)    ஒருவனருச் சித்தனன்சே தவிற்சிவனை யந்நியனிவ் வுலகினென்றும்,

வருமரியர் காணவரு ளிராமநா தப்பெயர்கொடவண்வதிந்தான்,

இருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மையிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்துவழி படுவா மன்றே.

64)    பரவைதனி லொருவனனி மற்சவுரு வெடுத்துழன்றான் பகரும் வீரத்,

தொருவனினி துறத்துவச மெனவுயர்த்தா னுததியுலா முயர்ந்த மீன்மற்,

றிருவர்தமி லெவனதிக னெனவூகித் தண்மையிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்தவழி படுவா மன்றே.

65)    ஒருவனுறு கபடிவடு வென்றுரைக்கப் பெற்றனனிங் கோங்கு ஞானம்,

மருவொருவ னுலகினுயர் வித்தியா குருவெனவந் திக்கப் பெற்றான்,

இருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மையிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்துவழி படுவா மன்றே.

66)    ஒருவனர சிங்கவவ தாரமுறீஇ யிரணியன துயிர்செகுத்தான்,

சரபவவ தாரமுறீஇ யொருவனவ னுயிர்செகுத்துத் தாழ்த்தினானிவ்,

விருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மையிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்துவழி படுவா மன்றே.

67)    ஒருவனிழி மகடூவாந் தாடகையை வதம்புரிந்தா னொருவன் சாலும்,

முரணுறுமந் நிசாசரரிந் திரனாகு மந்தகனை முருக்கி னானிவ்,

விருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மையிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்துவழி படுவா மன்றே.

68)    ஒருவனவ னிராவணனைக் கோறற்கட் பேராற்ற லுடையன் பாரிற்,

சருவவுல கமுமிலய மாகும்வழிப் பேராற்ற லொருவன் சாரும்,

இருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மை யிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்துவழி படுவா மன்றே.

69)    ஒருவனுல கினின்வாசு தேவனெனப் பிரசித்த னொருவன் தேவர்,

பரவுமகா தேவனெனப் பிரசித்தி பெறுமுலகிற் பகரா நின்ற,

இருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மை யிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்துவழி படுவா மன்றே.

70)    ஒருவனொரு சரணத்தாற் சகடமதை யுதைத்தனனன் னியனுயர்ந்த,

சரணமெனுஞ் சரோருகத்தி னகநுதியாற் சைலமதை யுதைத்தான் சாற்றும்

இருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மையிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்துவழி படுவா மன்றே.

71)    ஒருவனவ னுலகமூன் றையுமுறுமூன் றடியாக்கி னானொருத்தன்,

மருவுமொரு மூன்றுலகைப் பதத்தினடி யாற்சாடி வருந்தச் செய்தான்,

இருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மையிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்துவழி படுவா மன்றே.

72)    ஒருவனது ரூபந்தா மதத்துவத்தை யடைந்துளதிங் கொருவன் ரூபம்,

பெருமையுள சாத்துவிகத் துவத்தையடைந் துளதெனவே பேசு நூல்கள்,

இருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மையிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்துவழி படுவா மன்றே.

73)    ஒருவனேத் திரவனலாற் றகித்தவுரு வுடையசுத னுடையனேகன்,

சிரமுறுசா சுவதாயு ளுடையசுத னுடையனெனச் செய்யலுற்றான்,

இருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மையிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்துவழி படுவா மன்றே.

74)    தரணியகழ்ந் தனனொருவன் வராகவவ தாரமுறீஇ யொருவன் தாவில்,

திரிபுரத்தை வேறற்குத் தரணியதை யிரதமா கச் செய்தானில்,

இருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மையிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்துவழி படுவா மன்றே.

75)    சிரசினுறு பூடணமாக் கினனொருவன் சிகாவளபிஞ் சத்தைத் தேர்ந்த,

ஒருவனவ, விரவரசை யொருசிரபூ டணமாக்கி யுற்றானீங்கிவ்,

இருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மை யிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்துவழி படுவா மன்றே.

76)    ஒருவனிழி சனனமாஞ் சூகரமாய்ப் பிறந்திறந்திங் குழன்றானோங்கு,

சரபவவ தாரமெடுத் தொருவனுல கிற்சயமே சாரப் பெற்றான்,

இருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மையிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்துவழி படுவா மன்றே.

77)    ஒருவனொரு வதனத்தாற் பொலிந்தனனன் னியனொப்பி லீசா னந்தற்,

புருடமகோ ரம்வாம மாதியைந்து வதனங்க ளாற் பொ லிந்தான்,

இருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மையிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்துவழி படுவா மன்றே.

78)    ஒருவனரன் பாற்பெற்ற திகிரிமுத லைம்படையா னுற்றா னாற்றல்

பரசுமுத லாஞ்சருவ வாயுதங்க ளானொருவன் படைத்தானாற்றல்,

இருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மை யிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்தவழி படுவா மன்றே.

79)    ஒருவனது சரணத்தி னுறுதூளி யாற்சிலையில் கொருபெண்ணாயிற்,

றொருவனது திருவுருவ மொப்பிலா டூஉமகடூஉ வுருவே யாயிற்,

றிருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மை யிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்துவழி படுவா மன்றே.

80)    ஒருவனொரு திகிரியினைப் பெற்றுலகங் களைப்புரந்தா னுவமையில்லா,

வரமுறுசக் கிரவர்த்தி யொருவன்வயத் திகிரியினை மாண்பி னீந்தான்,

இருவர்தமி லெவனதிக னெனவூகித் தண்மையிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்துவழி படுவா மன்றே.

81)    அரனதொரு சராசனத்தை முரித்தனனா லொருவனன் னியன வன்புத்,

திரனெனுமப் பிரமனது சீராருஞ் சிரம்வருந்தச் சேதித் தானிவ்,

விருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மையிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்துவழி படுவா மன்றே.

82)    ஒருவனவன் மூன்றுபத முடைனெனப் பிரசித்த னொருவன் பத்தன்,

சரணமொரு மூன்றுடைய னெனவுலகிற் பிரசித்தி பெறுவன்சாற்றும்,

இருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மையிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்துவழி படுவா மன்றே.

83)    ஒருவனய வதனனெனப் படுவனுய ரன்னீயனோங் கார மான

பெரியவிப வதனனெனப் படுமவற்புத் திரனாகப் பெற்றுக் கொண்டான்,

இருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மையிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்துவழி படுவா மன்றே.

84)    ஒருவனுயர் நான்முகனைப் புத்திரனாப் பெற்றனனிங்கொருவனன்னான்,

வெருவரநீள் சிறையினிட்ட வறுமுகனைப் புத்திரனா வியக்கப் பெற்றான்,

இருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மையிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்துவழி படுவா மன்றே.

85)    ஒருவனுயர் சுருதிகளை யெடுத்துவிதி தன்க்களித்தானொருவனோரும்,

சுருதிகளைப் பரியாக்கி அவ்வலரோன் றனைச்சூத னாகச் செய்தான்,

இருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மையிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்துவழி படுவா மன்றே.

86)    ஒருவனனி நரகனெனு மசுரனைக்கொன் றானுலகி னுயரவீசி,

நிரயமுத லநேகநர கங்களையிங் கொருவனனை நீக்கினானிவ்,

விருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மையிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்துவழி படுவா மன்றே.

87)    ஒருவனியா சகனாகும் பலியினையா சித்தனன்மற் றொருவனொப்பில்,

இருமையுறு செளக்கியத்தை யெளிதினடி யவர்கடமக்கென்று மீவன்,

இருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மையிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்துவழி படுவா மன்றே.

88)    ஒருவனவன் கோக்களைப்பா லனஞ்செய்வோ னாய்விளங்கி னனொருத்தன்,

வரமுறுநல் விடபமதிற் கதிபதியாய் விளங்கினான் வயங்கா நின்ற,

இருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மையிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுடையீ ரீயாமவனை யடைந்துவழி படுவா மன்றே.

89)    ஒருவனவ னேமியினைத் தரித்துலகங் களைப்புரந்தா னொருவனொப்பில்,

பரசதனைத் தரித்துலகங் களைச்சாலச் சிட்சையது பண்ணி னானிவ்,

இருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மையிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்துவழி படுவா மன்றே.

90)    ஒருவனுயர்ந் தோனருளாற் சிலபோக மீவனிவ ணொருவன் வாய்ந்த,

தெரிவரியே பாகமனைத் தையுமுயர்மோக் கத்தினையும் சிறக்க வீவன்,

இருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மையிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்துவழி படுவா மன்றே.

91)    ஒருவனது தொண்டர்சூ டுண்டகா யத்தினர்மற் றொருவன் தொண்டர்,

பெருமையையு மிருதுவையு முடையலி பூதியைத் தரித்த பேர முள்ளார்.

இருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மை யிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்துவழி படுவா மன்றே.

92)    ஒருவனிழி கோபியரைப் புரந்தனன்கோ வர்த்தனமா மோங்க றாங்கித்,

திரமுறுமற் றொருவனுரை மேருகிரி யைத்தாங்கிச் செகம்பு ரந்தான்,

இருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மை யிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்துவழி படுவா மன்றே.

93)    ஒருவனர விந்தமொரு கரதலத்திற் றரித்தனன்மற் றொருவன் வாய்ந்த,

திருவுறுசித் திரபானு வுயர்கரத்திற் றரித்தனனற் றிறலோற் போற்ற,

இருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மையிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்துவழி படுவா மன்றே.

94)    ஒருவனருச் சுனற்கிரத மோட்டியே சயமளித்தா னொருவனந்தப்,

பெருமையுறு மருச்சுனற்குப் பாணமளித் துப்பெரிது சயம ளித்தான்,

இருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மையிசைத் திடுக மாசு,

மருவதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்துவழி படுவா மன்றே.

95)    ஒருவனொடிப் போதினினோக் காலரியை முருக்கினா னொருவனாய்ந்து,

விரிகரத்த வுகிர்களினாற் சத்துருவை மிகவருந்தி முருக்கினான்வே,

றிருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மையிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்துவழி படுவா மன்றே.

96)    ஒருவனம துடலின்மணி பூரகத்தா னத்துறையு மொருவனோங்கு,

சிரசினுறு சகச்சிரமாந் தளமுடைய கமலத்திற் றிகழுமாலில்,

இருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மையிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்துவழி படுவா மன்றே.

97)    ஒருவனிரு டியர்களிடத் துபதேசம் பெற்றனன்மற் றொருவனந்த,

இருடியர்க ளிடங்குடிகொ ளஞ்ஞான நீக்கியினி துபதே சித்தான்,

இருவர்தமி லெவனதிக னெனவூகித் தண்மையிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்துவழி படுவா மன்றே.

98)    ஒருவனுப மன்னியன்பாற் சிவதீக்கை பெற்றனன்மற் றொருவனான்ற,

வரமுறுமவ் வுபமன்னி யன்பருகப் பாற்கடலை வழங்கினானிவ்,

விருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மையிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்துவழி படுவா மன்றே.

99)    ஒருவனிட பத்தினுரு வெடுத்தொருவற் றாங்கினா னொருவனான்று,

விரிதலைய வவ்விடபத் தேறியூர்ந் தானிந்த விதத்தினானில்,

லிருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மையிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்துவழி படுவா மன்றே.

100)   ஒருவனுயர் தசபுரா ணங்களினாற் றுதிக்கப்பெற் றானொருத்தன்,

கருடமுத லாநான்கு புராணங்க ளாற்சிறிது கழறப்பெற்றான்,

இருவர்தமி லெவனதிக னெனவூகித் தண்மையிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்துவழி படுவா மன்றே.

101)   ஒருவனுயர் விபூதிமா னென்றுரைக்கப் பெற்றனன் மற்றொரு வனாய்ந்து,

பிரமன்முத லவரோடு விபூதியெனச் சேர்த்துரைக்கப் பெற்றானிந்த,

இருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மையிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்துவழி படுவா மன்றே.

102)   ஒருவனுயர் காயத்தி ரிக்கான்மா வெனப்பெற்றா னொருவனந்த,

வரமுறுமான் மாவினுக்கந் தரியாமி யாமென்ன வயங்கி னானிவ்,

விருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மையிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்துவழி படுவா மன்றே.

103)   ஒருவனுல கினிற்பிரம நானேயென் றகந்தையுற்றா னுறுமன் னோற்கங்,

கருளினொடு மொருவனடி யவனகந்தை நீக்கி நனியருள்பு ரிந்தான்,

இருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மையிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்துவழி படுவா மன்றே.

104)   ஒருவனையோங் கியாகாதி பதியென்று மொருவனைநல் லியாகமென்றும்,

பெருமைபெறு வேதவாக் கியங்கணனி பிரித்தினிது பேசா நிற்கும்,

இருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மையிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்துவழி படுவா மன்றே.

105)   ஒருவனசே தனமாகு மாயாசன் னியதேக முறுவன் மோக்க,

மருவவரு ளொருவனுயர் ஞானசரீ ரத்தையுற்று வயங்கு மாலிவ்,

விருவர்தமி லெவவதிக னெனவூகித் துண்மையிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்துவழி படுவா மன்றே.

106)   ஒருவனுறு மிருபத்தைந் தாந்தத்து வத்தின்கீ ழொருவனோங்கு,

பிருதிவியே முதன்முப்பத் தாறுதத்து வத்தின்மேற் பிறங்கா நிற்கும்,

இருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மையிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்துவழி படுவா மன்றே.

107)   ஒருவனது மனுவரன்பே ரோங்கராத் தொடுமியைந்தெட்டெழுத்தா யோங்கும்,

பெருமையுறு மொருவன்மனு வஃதின்றியைந்தெழுத்தாம் பெயர்பெற் றோங்கும்,

இருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மையிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்துவழி படுவா மன்றே.

108)   தெரிவரிய சுருதியொரு வன்றனைநற் பசுவென்றுஞ் சிறப்பதுற்ற,

ஒருவனையொப் பிலாவுலகிற் பசுபதி யென்றுஞ்சாலவுரைக்கு மிந்த,

இருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மையிசைத் திடுக மாசு,

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை யடைந்துவழி படுவா மன்றே.

ஒங்காரப் பொருளாயத் துவிதமாய் நித்தியமா யுலகந் தன்னைப்

பாங்காரு மாயையினின் றுதிப்பித்து நிறுத்தியதன் பாலொடுக்கி

நீங்காது நிறைந்தருளும் பசுபதியை நிருமலனை நிலவா நின்ற

ஆங்கார நீங்கினர்த மகத்திலகு பரசிவத்தை யகத்து வைப்பாம்.

அரிகரதாரதம்மியம் முற்றிற்று

This file was last revised on 16 Sep 2007

Works of/on haradatta shivAchAryar:

  1. ஹரதத்த சிவாச்சாரியார்
  2. ஹரிஹரதாரதம்மியம் (மூலசுலோகங்களுடன் வேதாகமாதி பிரமாணங்களையும் சேர்த்து தமிழில்)
  3. அரிகரதாரதம்மியம் (PDF file)

Related Content

சுருதி ஸூக்தி மாலா - பகுதி-1

சுருதி ஸூக்தி மாலா - பகுதி-2

சுருதி ஸூக்தி மாலா - பகுதி-3

சுருதி ஸூக்தி மாலா 1-50

சுருதி ஸூக்தி மாலா 101-151