logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

ஔவையார் பாடல்கள் - சிவன் பற்றி

 

1. ஆத்திசூடி   

ஆத்தி சூடி அமர்ந்த தேவனை 

ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே. 

 

30. அரனை மறவேல்.

 

 2. கொன்றை வேந்தன்

 

கொன்றை வேந்தன் செல்வன் அடியினை 

என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே

 

2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று. 

10. ஒருவனைப் பற்றி ஒரகத்து இரு. 

35. சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர். 

80. மோனம் என்பது ஞான வரம்பு. 

89. வைகல் தோறும் தெய்வம் தொழு. 

 

 4. நல்வழி

 

 

சிவாய நம என்று சிந்தித் திருப்போர்க்கு 

அபாயம் ஒருநாளும் இல்லை - உபாயம் 

இதுவே(;) மதியாகும் அல்லாத எல்லாம் 

விதியே மதியாய் விடும்.  15 

 

நீறில்லா நெற்றிபாழ்(;) நெய்யில்லா உண்டிபாழ் 

ஆறில்லா ஊருக் (கு) அழகுபாழ் - மாறில் 

உடன்பிறப் பில்லா உடம்புபாழ் (;) பாழே 

மடக்கொடி இல்லா மனை.  24 

 

ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட் டொன்றாகும் 

அன்றி அதுவரினும் வந்தெய்தும் - ஒன்றை 

நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும் 

எனையாளும் ஈசன் செயல்.  27 

 

வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம் 

அனைத்தாய நூலகத்தும் இல்லை - நினைப்பதெனக் 

கண்ணுறுவ தல்லால் கவலைப் படேல் நெஞ்சே 

விண்ணுறுவார்க் கில்லை விதி.  37   

 

(உலகியபில் நின்றோர்க்கு வினை அடுமே அல்லது இறைவன் திருவடி பற்றி விண்ணுறுவார்க்கு இல்லை விதி என்றவாறூ)

 

நன்றென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும் 

அன்றென்றும் ஆமென்றும் ஆகாதே - நின்றநிலை 

தானதாம் தத்துவமாம் சம்பறுத்தார் யாக்கைக்குப் 

போனவா தேடும் பொருள்.  38 

 

தேவர் குறளும் திருநான் மறைமுடிவும் 

மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை 

திருவா சகமும் திருமூலர் சொல்லும் 

ஒருவா சகமென் றுணர்.  40 

 

See Also:
1. சங்க இலக்கியங்களில் சிவவழிபாடு 
1. திருக்குறள் போற்றும் சிவபிரான் 
3. thirumuRai Series with English explanation. 

Send your comments

 

 

Related Content

சங்க இலக்கியங்களில் சிவ வழிபாடு

திருக்குறளில் சைவசித்தாந்தம்

திருக்குறள் - கடவுள் வாழ்த்து