References to kaNNappar mentioned
in thirumuRais

திருஞானசம்பந்தர் தேவாரம்

கானலைக் கும்மவன் கண்ணிடந் தப்பநீள் வானலைக் குந்தவத் தேவுவைத் தானிடந் தானலைத் தெள்ளமூர் தாமரைத் தண்டுறை தேனலைக் கும்வயல் தென்குடித் திட்டையே. 3.35.07 வேயனைய தோளுமையோர் பாகமது வாகவிடை யேறிசடைமேற் தூயமதி சூடிசுடு காடில்நட மாடிமலை தன்னைவினவில் வாய்கலச மாகவழி பாடுசெயும் வேடன்மல ராகுநயனங் காய்கணையி னாலிடந் தீசனடி கூடுகா ளத்திமலையே. 3.69.04 கண்ணனும் நான்முகன் காண்பரியார் வெண்ணாவல் விரும்பு மயேந்திரருங் கண்ணப்பர்க் கருள்செய்த கயிலையெங்கள் அண்ணல்ஆ ரூராதி யானைக்காவே. 3.109.7

திருநாவுக்கரசர் தேவாரம்

காப்பதோர் வில்லும் அம்புங் கையதோர் இறைச்சிப் பாரந் தோற்பெருஞ் செருப்புத் தொட்டுத் தூயவாய்க் கலசம் ஆட்டித் தீப்பெருங் கண்கள் செய்யக் குருதிநீர் ஒழுகத் தன்கண் கோப்பதும் பற்றிக் கொண்டார் குறுக்கைவீ ரட்ட னாரே 4.49.7 குவப்பெருந் தடக்கை வேடன் கொடுஞ்சிலை இறைச்சிப் பாரந் துவர்ப்பெருஞ் செருப்பால் நீக்கித் தூயவாய்க் கலசம் ஆட்ட உவப்பெருங் குருதி சோர ஒருகணை யிடந்தங் கப்பத் தவப்பெருந் தேவு செய்தார் சாய்க்காடு மேவி னாரே. 4.65.8 விண்ணப்ப விச்சா தரர்க ளேத்த விரிகதிரோன் எரிசுடரான் விண்ணு மாகிப் பண்ணப்பன் பத்தர் மனத்து ளேயும் பசுபதி பாசுபதன் தேச மூர்த்தி கண்ணப்பன் கண்ணப்பக் கண்டு கந்தார் கழிப்பாலை மேய கபாலப் பனார் வண்ணப் பிணிமாய யாக்கை நீங்க வழிவைத்தார்க் கவ்வழியே போது நாமே. 6.12.6 ஆலால முண்டுகந்த ஆதி கண்டாய் அடையலர்தம் புரமூன்று மெய்தான் கண்டாய் காலாலக் காலனையுங் காய்ந்தான் கண்டாய் கண்ணப்பர்க் கருள்செய்த காளை கண்டாய் பாலாரும் மொழிமடவாள் பாகன் கண்டாய் பசுவேறிப் பலிதிரியும் பண்பன் கண்டாய் மாலாலு மறிவரிய மைந்தன் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன் றானே 6.39.9 கடிமலிந்த மலர்க்கொன்றைச் சடையான் கண்டாய் கண்ணப்ப விண்ணப்புக் கொடுத்தான் கண்டாய் படிமலிந்த பல்பிறவி யறுப்பான் கண்டாய் பற்றற்றார் பற்றவனாய் நின்றான் கண்டாய் அடிமலிந்த சிலம்பலம்பத் திரிவான் கண்டாய் அமரர்கணந் தொழுதேத்தும் அம்மான் கண்டாய் கொடிமலிந்த மதில்தில்லைக் கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்துறையுங் குழகன் றானே. 6.81.6 ஆமயந்தீர்த் தடியேனை ஆளாக் கொண்டார் அதிகைவீ ரட்டானம் ஆட்சி கொண்டார் தாமரையோன் சிரமரிந்து கையிற் கொண்டார் தலையதனிற் பலிகொண்டார் நிறைவாந் தன்மை வாமனனார் மாகாயத் துதிரங் கொண்டார் மானிடங்கொண் டார்வலங்கை மழுவாள் கொண்டார் காமனையும் உடல்கொண்டார் கண்ணால் நோக்கிக் கண்ணப்பர் பணியுங்கொள் கபாலி யாரே. 6.96.1

சுந்தரர் தேவாரம்

இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தர்க் கடியேன் ஏனாதி நாதன்றன் அடியார்க்கும் அடியேன் கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர்க் கடியேன் கடவூரிற் கலயன்றன் அடியார்க்கும் அடியேன் மலைமலிந்த தோள்வள்ளல் மானக்கஞ் சாறன் எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன் அலைமலிந்த புனல்மங்கை ஆனாயர்க் கடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 7.39.2 இடந்த கண்ணப்பன் கணைகொள் கண்ணப்பன் நற்ற மிழ்வல்ல ஞானசம் பந்தன் நாவினுக் கரையன் நாளைப்போ வானுங் கற்ற சூதன்நற் சாக்கியன் சிலந்தி கண்ணப் பன்கணம் புல்லனென் றிவர்கள் குற்றஞ் செய்யினுங் குணமெனக் கருதுங் கொள்கை கண்டுநின் குரைகழல் அடைந்தேன் பொற்றி ரள்மணிக் கமலங்கள் மலரும் பொய்கை சூழ்திருப் புன்கூர் உளானே. 7.55.4

திருவாசகம்

கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின் என்னப்பன் என்னொப்பில் என்னையும் ஆட்கொண்டருளி வண்ணப் பணித்தென்னை வாவென்ற வான் கருணைச் கண்ணப்பென் நீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 8.218

திருவிசைப்பா

கடியார் கணம்புல்லர் கண்ணப்பர் என்றுன் அடியார் அமருலகம் ஆளநீ ஆளாதே முடியாமுத் தீவேள்வி முவாயி ரவரொடும் குடிவாழ்க்கை கொண்டுநீ குலாவிக் கூத் தாடினையே. 9.பூந்துருத்தி.2

பதினோறாம் திருமுறை

நிலத்தில் திகழ்திருக் காளத்தி யார்திரு நெற்றியின்மேல் நலத்தில் பொழிதரு கண்ணிற் குருதிகண் டுள்நடுங்கி வலத்தில் கடுங்கணை யால்தன் மலர்க்கண் இடந்தப்பினான் குலத்திற் கிராதன்நம் கண்ணப்ப னாம்என்று கூறுவரே. 11.11-நம்பி வாளா பொழுது கழிக்கின்றார் மானுடவர் கேளார்கொல் அந்தோ கிறிபட்டார் - கீளாடை அண்ணற் கணுக்கராய்க் காளத்தி யுள்நின்ற கண்ணப்ப ராவார் கதை. 11.கயிலை பாதி காளத்தி பாதி அந்தாதி கான வேடுவன் கண்பரிந் தப்ப வான நாடு மற்றவற் கருளியும் 11. கோபப் பிரசாதம் நேசத்தால் வாயில்நீர் கொண்டு மகுடத் துமிழ்ந்திறைச்சி ஆயசீர் போனகமா அங்கமைத்து - தூயசீர்க் கண்ணிடந்த கண்ணப்பர் தம்மைமிகக் காதலித்து விண்ணுலகம் ஈந்த விறல்போற்றி 11.போற்றித் திருக்கலிவெண்பா நக்கீர தேவ நாயனார் அருளிய திருக்கண்ணப்ப தேவர் திருமறம் கல்லாட தேவ நாயனார் அருளிய திருக்கண்ணப்ப தேவர் திருமறம் சென்றுசெருப் புக்காலாற் செல்ல மலர்நீக்கிச் சென்று திருமுடிவாய் நீர்வார்த்துச் - சென்றுதன் கண்ணிடந்தன் றப்பும் கருத்தற்குக் காட்டினான் கண்ணிடந்தன் றப்பாமை பார்த்து. 11.பரணர் அருளிய சிவபெருமான் திருவந்தாதி.28 பழித்தக் கவும்இக ழான்தில்லை யான்பண்டு வேட்டுவனும் பழித்திட் டிறைச்சி கலையன் அளித்த விருக்குழங்கன் மொழித்தக்க சீர்அதி பத்தன் படுத்திட்ட மீன்முழுதும் இழித்தக்க என்னா தமிர்துசெய் தான்என் றியம்புவரே. 11. கோ.ப.வி.40 புல்லறி வின்மற்றைத் தேவரும் பூம்புலி யூருள்நின்ற அல்லெறி மாமதிக் கண்ணிய னைப்போல் அருளுவரே கல்லெறிந் தானும்தன் வாய்நீர் கதிர்முடி மேலுகுத்த நல்லறி வாளனும் மீளா வழிசென்று நண்ணினரே. 11.கோ.ப.வி. 68 நிலத்தில் திகழ்திருக் காளத்தி யார்திரு நெற்றியின்மேல் நலத்தில் பொழிதரு கண்ணிற் குருதிகண் டுள்நடுங்கி வலத்தில் கடுங்கணை யால்தன் மலர்க்கண் இடந்தப்பினான் குலத்திற் கிராதன்நம் கண்ணப்ப னாம்என்று கூறுவரே. 11.திருத்தொண்டர் திருவந்தாதி.12

பெரியபுராணம்

Other stotras

பட்டினத்தார்

வாளால் மக அரிந்து ஊட்ட வல்லேன் அல்லேன் மாது சொன்ன சூளால் இளமை துறக்க வல்லேன் அல்லேன் தொண்டு செய்ய நாளாறிற் கண்ணிடந்து அப்ப வல்லேன் அல்லேன் நானினிச் சென்று ஆளாவது எப்படியோ திருக்காளத்தியப்பனுக்கே.

shivAnanda lahari - shankarar

mArgAvartita pAdukA pashupate rangasya kUrcAyate gaNDUShAMbu nicetanam puraripor divyAbhiShekAyate | kincidbhakshita mAMsasheSha kabalaM navyopahArAyate bhaktiH kiM na karotyaho vanacaro bhaktAvataMsAyate || 63 ||

See also:

  1. History of kaNNappa nAyanAr

Back to the list of n^AyanmAr
Back to Shaiva Siddhntha Home Page
Back to Shaiva Home Page