Thirumurais composed in the first millenium refer to many of the music instruments in vogue at that time. Many of them are still in use even today.Here is the list of the instruments.
Instrument | Reference |
துடி | மாசேறிய உடலாரமண் கழுக்கள்ளொடு தேரர் தேசேறிய பாதம்வணங் காமைத்தெரி யானூர் தூசேறிய அல்குல்துடி இடையார்துணை முலையார் வீசேறிய புருவத்தவர் வேணுபுர மதுவே. 1.9.10 துடிக ளோடு முழவம் விம்மவே பொடிகள் பூசிப் புறங்கா டரங்காகப் படிகொள் பாணி பாடல் பயின்றாடும் அடிகள் சோற்றுத் துறைசென் றடைவோமே. 1.28.6 இடியார் குரலே றுடையெந்தை துடியா ரிடையா ளொடுதுன்னுங் கடியார் பொழில்சூழ் தருகாழி அடியார் அறியார் அவலம்மே. 1.34.3 சாகை யாயிர முடையார் சாமமும் ஓதுவ துடையார் ஈகை யார்கடை நோக்கி யிரப்பதும் பலபல வுடையார் தோகை மாமயி லனைய துடியிடை பாகமும் உடையார் வாகை நுண்துளி வீசும் வாழ்கொளி புத்தூ ருளாரே. 2.94.1 அடியவர் தொழுதெழ அமரரேத்தச் செடியவல் வினைபல தீர்ப்பவனே துடியிடை அகலல்குல் தூமொழியைப் பொடியணி மார்புறப் புல்கினனே புண்ணியா புனிதாபுக ரேற்றினை புகலிந்நகர் நண்ணினாய் கழலேத்திட நண்ணகிலா வினையே. 3.3.7 விடையுடைக் கொடிவல னேந்தி வெண்மழுப் படையுடைக் கடவுள்பைஞ் ஞீலி மேவலான் துடியிடைக் கலையல்கு லாளோர் பாகமாச் சடையிடைப் புனல்வைத்த சதுரன் அல்லனே. 3.14.6 முடியசடை பிடியதொரு வடியமழு வுடையர்செடி யுடையதலையில் வெடியவினை கொடியர்கெட விடுசில்பலி நொடியமகிழ் அடிகளிடமாங் கொடியகுர லுடையவிடை கடியதுடி யடியினொடு மிடியினதிரக் கடியகுரல் நெடியமுகில் மடியவத ரடிகொள்கயி லாயமலையே. 3.68.4 கத்திரிகை துத்திரிக றங்குதுடி தக்கையொ டிடக்கைபடகம் எத்தனையு லப்பில்கரு வித்திரள லம்பஇமை யோர்கள்பரச ஒத்தற மிதித்துநட மிட்டவொரு வர்க்கிடம தென்பருலகில் மெய்த்தகைய பத்தரொடு சித்தர்கள் மிடைந்துகளும் வேதவனமே. 3.76.5 துடிபடும் இடையுடை மடவர லுடனொரு பாகமா இடிபடு குரலுடை விடையினர் படமுடை யரவினர் பொடிபடும் உருவினர் புலியுரி பொலிதரும் அரையினர் செடிபடு சடைமுடி யடிகள்தம் வளநகர் சேறையே. 3.86.4 கொடியுடை மும்மதி லூடுருவக் குனிவெஞ் சிலைதாங்கி இடிபட எய்த அமரர்பிரான் அடியார் இசைந்தேத்தத் துடியிடை யாளையோர் பாகமாகத் துதைந்தா ரிடம்போலும் வடிவுடை மேதி வயல்படியும் வலம்புர நன்னகரே. 3.103.1 சுரிகுழல் நல்ல துடியிடை யோடு பொரிபுல்கு காட்டிடை யாடுதிர் பொங்க விரிதரு பைம்பொழில் வெள்ளடை மேவிய எரிமழு வாட்படை எந்தை பிரானே. 3.124.5 கரந்தன கொள்ளி விளக்குங் கறங்கு துடியின் முழக்கும் பரந்த பதினெண் கணமும் பயின்றறி யாதன பாட்டும் அரங்கிடை நூலறி வாளர் அறியப் படாததோர் கூத்தும் நிரந்த கெடிலப் புனலும் உடையா ரொருவர் தமர்நாம் அஞ்சுவ தியாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை. 4.2.6 தொண்டைகொப் பளித்த செவ்வாய்த் துடியிடைப் பரவை யல்குற் கொண்டைகொப் பளித்த கோதைக் கோல்வளை பாக மாக வண்டுகொப் பளித்த தீந்தேன் வரிக்கயல் பருகி மாந்தக் கெண்டைகொப் பளித்த தெண்ணீர்க் கெடிலவீ ரட்ட னாரே. 4.24.10 வரிமுரி பாடி யென்றும் வல்லவா றடைந்து நெஞ்சே கரியுரி மூட வல்ல கடவுளைக் காலத் தாலே சுரிபுரி விரிகு ழலாள் துடியிடைப் பரவை யல்குல் அரிவையோர் பாகர் போலும் அதிகைவீ ரட்ட னாரே. 4.25.6 மடக்கினார் புலியின் தோலை மாமணி நாகங் கச்சா முடக்கினார் முகிழ்வெண் டிங்கள் மொய்சடைக் கற்றை தன்மேல் தொடக்கினார் தொண்டைச் செவ்வாய்த் துடியிடைப் பரவை யல்குல் அடக்கினார் கெடில வேலி அதிகைவீ ரட்ட னாரே. 4.27.1 நெடியமால் பிரம னோடு நீரெனும் பிலயங் கொள்ள அடியொடு முடியுங் காணார் அருச்சுனற் கம்பும் வில்லுந் துடியுடை வேட ராகித் தூயமந் திரங்கள் சொல்லிக் கொடிநெடுந் தேர்கொ டுத்தார் குறுக்கைவீ ரட்ட னாரே. 4.50.1 முடிகொண்ட மத்தமும் முக்கண்ணின் நோக்கும் முறுவலிப்புந் துடிகொண்ட கையுந் துதைந்தவெண் ணீறுஞ் சுரிகுழலாள் படிகொண்ட பாகமும் பாய்புலித் தோலுமென் பாவிநெஞ்சிற் குடிகொண்ட வாதில்லை யம்பலக் கூத்தன் குரைகழலே. 4.81.7 நஞ்சடைந்த கண்டத்தர் வெண்ணீ றாடி நல்ல புலியதள்மேல் நாகங் கட்டிப் பஞ்சடைந்த மெல்விரலாள் பாக மாகப் பராய்த்துறை யேனென்றோர் பவள வண்ணர் துஞ்சிடையே வந்து துடியுங் கொட்டத் துண்ணென் றெழுந்திருந்தேன் சொல்ல மாட்டேன் புன்சடையின் மேலோர் புனலுஞ் சூடிப் புறம்பயம்நம் மூரென்று போயி னாரே. 6.13.6 துடியாந் துடியின் முழக்கந் தானாஞ் சொல்லுவார் சொல்லெல்லாஞ் சோதிப் பானாம் படிதானாம் பாவ மறுப்பா னாகும் பால்நீற்ற னாம்பரஞ் சோதி தானாங் கொடியானாங் கூற்றை யுதைத்தா னாகுங் கூறாத வஞ்சக் குயலர்க் கென்றுங் கடியானாங் காட்சிக் கரியா னாகுங் கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே. 6.15.8 மானேறு கரமுடைய வரதர் போலும் மால்வரைகால் வளைவில்லா வளைத்தார் போலும் கானேறு கரிகதற வுரித்தார் போலுங் கட்டங்கங் கொடிதுடிகைக் கொண்டார் போலுந் தேனேறு திருஇதழித் தாரார் போலுந் திருவீழி மிழலையமர் செல்வர் போலும் ஆனேற தேறும் அழகர் போலும் அடியேனை ஆளுடைய அடிகள் தாமே. 6.53.1 முடியார் சடையின் மதியாய் போற்றி முழுநீறு சண்ணித்த மூர்த்தி போற்றி துடியா ரிடையுமையாள் பங்கா போற்றி சோதித்தார் காணாமை நின்றாய் போற்றி அடியா ரடிமை அறிவாய் போற்றி அமரர் பதியாள வைத்தாய் போற்றி கடியார் புரமூன்று மெய்தாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி. 6.57.8 விடிவதுமே வெண்ணீற்றை மெய்யிற் பூசி வெளுத்தமைந்த கீளொடுகோ வணமுந் தற்றுச் செடியுடைய வல்வினைநோய் தீர்ப்பா யென்றுஞ் செல்கதிக்கு வழிகாட்டுஞ் சிவனே யென்றுந் துடியனைய இடைமடவாள் பங்கா வென்றுஞ் சுடலைதனில் நடமாடுஞ் சோதி யென்றுங் கடிமலர்தூய்த் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே. 6.61.2 முடிகொண்ட வளர்மதியும் மூன்றாய்த் தோன்றும் முளைஞாயி றன்னமலர்க் கண்கள் மூன்றும் அடிகொண்ட சிலம்பொலியும் அருளார் சோதி அணிமுறுவற் செவ்வாயும் அழகாய்த் தோன்றத் துடிகொண்ட இடைமடவாள் பாகங் கொண்டு சுடர்ச்சோதிக் கடிச்செம்பொன் மலைபோ லிந்நாள் குடிகொண்டென் மனத்தகத்தே புகுந்தார் போலுங் குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே. 6.75.6 நக்கன்காண் நக்கரவ மரையி லார்த்த நாதன்காண் பூதகண மாட ஆடுஞ் சொக்கன்காண் கொக்கிறகு சூடி னான்காண் துடியிடையாள் துணைமுலைக்குச் சேர்வ தாகும் பொக்கன்காண் பொக்கணத்த வெண்ணீற் றான்காண் புவனங்கள் மூன்றினுக்கும் பொருளாய் நின்ற திக்கன்காண் செக்கரது திகழு மேனிச் சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே. 6.87.2 முடிகொண்டார் முளையிளவெண் டிங்க ளோடு மூசுமிள நாகமுட னாகக் கொண்டார் அடிகொண்டார் சிலம்பலம்பு கழலு மார்ப்ப அடங்காத முயலகனை அடிக்கீழ்க் கொண்டார் வடிகொண்டார்ந் திலங்குமழு வலங்கைக் கொண்டார் மாலையிடப் பாகத்தே மருவக் கொண்டார் துடிகொண்டார் கங்காளந் தோள்மேற் கொண்டார் சூலைதீர்த் தடியேனை யாட்கொண் டாரே. 6.96.3 நடையுடை நல்லெரு தேறுவர் நல்லார் கடைகடை தோறிடு மின்பலி என்பார் துடியிடை நன்மட வாளடு மார்பில் பொடியணி வார்உறை பூவணம் ஈதோ. 7.11.5 துடிகொள்நே ரிடையாள் சுரிகுழல் மடந்தை துணைமுலைக் கண்கள்தோய் சுவடு பொடிகொள்வான் தழலிற் புள்ளிபோ லிரண்டு பொங்கொளி தங்குமார் பின்னே செடிகொள்வான் பொழிலசூழ் திருப்பெருந்துறையில் செழுமலர்க் குருந்தமே வியசீர் அடிகளே அடியேன் ஆதரித் தழைத்தால் அதெந்துவே என்றரு ளாயே. 8.திருவா.462 துடியேர் இடுகிடைத் தூய்மொழியார் தோள்நசையால் செடியேறு தீமைகள் எத்தனையுஞ் செய்திடினும் முடியேன் பிறவேன் எனைத்தனதாள் முயங்குவித்த அடியேன் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே. 8.திருவா.560 கோம்பிக்(கு) ஒதுங்கிமே யாமஞ்ஞை குஞ்சரம் கோளிழைக்கும் பாம்பைப் பிடித்துப் படங்கிழித்(து) ஆங்(கு)அப் பணைமுலைக்கே தேம்பல் துடியிடை மான்மட நோக்கிதில் லைச் சிவன்தாள் ஆம்பொன் தடமலர் சூடும்என் ஆற்றல் அகற்றியதே. .. 8.கோவை.21 பொருளா எனைப்புகுந்(து) ஆண்டு புரந்தரன் மாலயன்பால் இருளாய் இருக்கும் ஒளிநின்ற சிற்றம் பலமெனலாம் சுருளார் கருங்குழல் வெண்ணகைச் செவ்வாய்த் துடியிடையீர் அருளா(து) ஒழியின் ஒழியா(து) அழியும்என் ஆருயிரே. .. 8.கோவை.73 அருவினில் அம்பரம் அங்கெழு நாதம் பெருகு துடியிடை பேணிய விந்து மருவி யகார சிகார நடுவாய் உருவிட ஊறும் உறுமந் திரமே 10.960 ஆடல் பதினோர் உறுப்பும் அடைவாகக் கூடிய பாதம் சிலம்புகைக் கொள்துடி நீடிய நாதம் பராற்பர நேயத்தே ஆடிய நந்தி புறம்அகந் தானே 10.2781 மருவும் துடியுடன் மன்னிய வீச்சு மருவிய அப்பும் அனலுடன் கையும் கருவின் மிதித்த கமலப் பதமும் உருவில் சிவாய நமவென வோதே 10.2798 அரன்துடி தோற்றம் அமைத்தல் திதியாம் அரன் அங்கி தன்னில் அறையிற் சங் காரம் அரன் உற்று அணைப்பில் அமரும் திரோதாயி அரனடி என்றும் அனுக்கிரகம் என்னே 10.2799 கடுவன் உகளுங் கழைசூழ் பொதும்பிற் கழுகும் பேயுமாய் இடுவெண் டலையும் ஏமப் புகையும் எழுந்த பெருங்காட்டிற் கொடுவெண் மழுவும் பிறையுந் ததும்பக் கொள்ளென் றிசைபாடப் படுவெண் துடியும் பறையுங் கறங்கப் பரமன் ஆடுமே. 11.21 சங்கொடு தாரை காளம் தழங்கொலி முழங்கு பேரி வெங்குரல் பம்பை கண்டை வியன் துடி திமிலை தட்டி பொங்கொலிச் சின்னம் எல்லாம் பொரு படை மிடைந்த பொற்பின் மங்குல் வான் கிளர்ச்சி நாண மருங்கு எழுந்து இயம்பி மல்க 12.581 வெல் படைத் தறுகண் வெஞ்சொல் வேட்டுவர் கூட்டம் தோறும் கொல் எறி குத்து என்று ஆர்த்துக் குழுமிய ஓசை அன்றிச் சில்லரித் துடியும் கொம்பும் சிறு கண் ஆகுளியும் கூடி கல் எனும் ஒலியின் மேலும் கறங்கிசை அருவி எங்கும் 12.0654 கரிப்பரு மருப்பின் முத்தும் கழை விளை செழுநீர் முத்தும் பொருப்பின் மணியும் வேடர் பொழி தரு மழையே அன்றி வரிச் சுரும்பு அலைய வானின் மலர் மழை பொழிந்தது எங்கும் அரிக்குறுந் துடியே அன்றி அமரர் துந்துபியும் ஆர்த்த 12.0663 வேடர் தம் கோமான் நாதன் வென்றி வேள் அருளால் பெற்ற சேடரின் மிக்க செய்கைத் திண்ணன் வில் பிடிக்கின்றான் என்று ஆடியல் துடியும் சாற்றி அறைந்த பேர் ஓசை கேட்டு மாடுயர் மலைகள் ஆளும் மறக் குலத் தலைவர் எல்லாம் 12.0678 தொண்டக முரசும் கொம்பும் துடிகளும் துளை கொள் வேயும் எண்டிசை நிறைந்து விம்ம எழுந்த பேர் ஒலியினோடும் திண்டிறல் மறவர் ஆர்ப்புச் சேண் விசும்பு இடித்துச் செல்லக் கொண்ட சீர் விழவு பொங்கக் குறிச்சியை வலம் கொண்டார்கள் 12.0687 பல்வேறு வாளி புதை பார்த்து உடன் போத ஏவி வில் வேடர் ஆயத் துடி மேவி ஒலிக்கு முன்றில் சொல் வேறு வாழ்த்துத் திசைதோறும் துதைந்து விம்ம வல்லேறு போல்வார் அடல் வாளி தெரிந்து நின்றார் 12.0713 வெய்ய மா எழுப்ப ஏவி வெற்பராயம் ஓடி நேர் எய்யும் வாளி முன் தெரிந்து கொண்டு செல்ல எங்கணும் மொய் குரல் துடிக் குலங்கள் பம்பை முன் சிலைத்து எழக் கை விளித்து அதிர்த்து மா எழுப்பினார்கள் கானெலாம் 12.0726 அடியனேன் அறிவு இலாமை கண்டும் என் அடிமை வேண்டிப் படி மிசைக் கமரில் வந்து இங்கு அமுது செய் பரனே போற்றி துடியிடை பாக மான தூயநற் சோதி போற்றி பொடியணி பவள மேனிப் புரி சடைப் புராண போற்றி 12.0922 பரசும் கருணைப் பெரியோன் அருளப் பறி புன் தலையோர் நெறி பாழ்பட வந்து அரசு இங்கு அருள் பெற்று உலகு உய்ந்தது எனா அடியார் புடை சூழ் அதிகைப் பதி தான் முரசம் பட கந்துடி தண்ணுமை யாழ் முழவம் கிளை துந்துபி கண்டை உடன் நிரை சங்கு ஒலி எங்கும் முழங்குதலால் நெடு மா கடல் என்ன நிறைந்துளதே 12.1341 அடியேன் உய்ந்தேன் எங்கு உற்றார் உரையாய் என்ன அவர் மொழிவார் வடி சேர் சூல கபாலத்தார் வட தேசத்தோம் என்றார் வண் துடிசேர் கரத்துப் பயிரவர் யாம் சொல்ல இங்கும் இராதே போய்க் கடிசேர் திரு ஆத்தியின் நிழல்கீழ் இருந்தார் கணபதீச் சரத்து 12.3702 |
See Also: