logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

thamiizhith-thiram-vailleero

தமிழ்த் திறம் வல்லீரோ?

 

சுந்தரர் அருளிய தேவாரம்
தலம்    :    திருப்பைஞ்ஞீலி
பண்    :    கொல்லி
ஏழாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

செந்தமிழ்த் திறம் வல்லிரோ செங்கண்
    அரவம் முன் கையில் ஆடவே
வந்து நிற்கும் இதென்கொலோ 
    பலிமாற்ற மாட்டோம் இடகிலோம்
பைந்தண் மாமலர் உந்து சோலைகள் 
    கந்தம் நாறு பைஞ்ஞீலியீர்
அந்தி வானமும் மேனியோ சொலும்
    ஆரணிய விடங்கரே.

திருச்சிற்றம்பலம்

sundarar aruLiya thevaram
thalam    :    thiruppaigngneeli - thiruppainynyIli
paN    :     kolli
Seventh thirumuRai

thirucciRRambalam

cen^thamizth thiRam vallIrO ceN^kaN
    aravam mun kaiyil ADavE
van^thu n^iRkum ithenkolO
    palimARRa mATTOm iDakilOm
pain^thaN mAmalar uN^thu cOlaikaL
    kan^tham n^ARu painynyIliyIr
an^thi vAnamum mEniyO colum
    AraNiya viDan^garE.

thirucciRRambalam


Translation of song:


Are You skilled in nice thamiz?
What is this, standing with the red-eyed
snake dancing in the fore-arm?
We would not hand over the alms; will not give.
Oh the Lord of thiruppainynyIli scented
with the fragrance from the gardens that
push the fresh grand flowers.
oh the forest viDangar, tell whether 
the twilight sky is Your body?

Notes:
1. pali - alms; kan^tham - fragrance; n^ARRam - odor.

Related Content

Chennai Lord Shiva Temples Pictures

Cheruvathur - Mahadeva Temple

Hariyardhamurti (Shankara Narayanar)

Lord Shiva Temples of Bangalore Urban Districtn (KA)

சிவார்ச்சனா சந்திரிகை - அக்கினிகாரியஞ் செய்யுமுறை