logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

thakkaar-yenpar-yaar

தக்கார் என்பவர் யார்?

 
 

திருஞானசம்பந்தர் தேவாரம்

   
தலம்    :    திருப்பிரமபுரம் 
பண்    :    சீகாமரம் 
இரண்டாம் திருமுறை 
 
திருச்சிற்றம்பலம் 
 
எரித்த மயிர் வாளரக்கன் வெற்பெடுக்கத் தோளொடுதாள் 
நெரித்தருளுஞ் சிவமூர்த்தி நீறணிந்த மேனியினான் 
உரித்தவரித் தோலுடையான் உறை பிரமபுரந்தன்னை 
தரித்தமனம் எப்போதும் பெறுவார் தாம் தக்காரே. 
 
திருச்சிற்றம்பலம் 


 
thirunyAnacamban^thar thEvAram

   
thalam    :    thiruppiramapuram 
paN    :    cI kAmaram 
Second thirumuRai 
 
thirucciRRambalam 
 
eriththa mayir vALarakkan veRpeDukkath thOLoDuthAL 
n^eriththaruLum civamUrththi n^IRaNin^tha mEniyinAn 
uriththa varith thOluDaiyAn uRai piramapuran^thannai 
thariththa manam eppOthum peRuvAr thAm thakkArE. 
 
thirucciRRambalam 
 
Meaning of Thevaram

  
The harsh demon of burnt hair when lifted the mount, 
the shivamUrthi Who blessed crushing his shoulders and legs; 
One embellished with ash; One with pealed striped skin; 
Those who get the mind of ever holding on to  
thiruppiramapuram, where He resides, they are the apt! 
 
பொருளுரை

   
எரிந்த மயிர்களையுடைய கொடிய அரக்கன், மலையை எடுக்க 
அவனுடைய தோள்களையும் பாதங்களையும் நெரித்தருளும் 
சிவமூர்த்தியும், திருநீறணிந்த மேனியனும், உரிக்கப்பட்ட  
வரித்தோல் உடையவனும் ஆகிய பெருமான் இருக்கின்ற 
திருப்பிரமபுரத்தை எப்பொழுதும் மனத்திலே கொண்டிருப்பவர்களே 
தக்கவர்கள். 
 
Notes

  
1. வாள் - கொடுமை; வெற்பு - மலை. 

 

Related Content

Five Deeds of Lord

திருஞானசம்பந்தர் தேவாரம் - சீர்காழி - நல்லார் தீமேவுந்

திருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பிரமபுரம் - அரனை உள்குவீர்

திருஞானசம்பந்தர் தேவாரம் - சீகாழி - உரவார்கலையின்

திருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பிரமபுரம் - எரியார்மழுவொன்