logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

sambanthar-thamizh-chonnaal-vinnai-aalalaam

சம்பந்தர் தமிழ் சொன்னால் விண்ணை ஆளலாம்

 
 

திருஞானசம்பந்தர் தேவாரம்

 
தலம்    : திருக்கழுமலம்  
பண்    : கொல்லி 
மூன்றாம் திருமுறை 
 
திருச்சிற்றம்பலம் 
 
கருந்தடந் தேன் மல்கு கழுமல வளநகர்ப் 
பெருந்தடங் கொங்கையோடு இருந்த எம் பிரான் தனை 
அருந்தமிழ் ஞானசம்பந்தன செந்தமிழ் 
விரும்புவார் அவர்கள் போய் விண்ணுலகு ஆள்வரே.        3.24.11 
 
திருச்சிற்றம்பலம் 


 
thirunyAnacamban^thar thEvAram

 
thalam    :    thirukkazumalam 
paN    :    kolli 
Third thirumuRai 
 
thirucciRRambalam 
 
karun^thaDam thEn malgu kazumala vaLan^garp 
perun^ thaDaN^ koN^gaiyODu irun^tha empirAn thanai 
arun^thamiz nyAnacamban^thana cen^thamiz 
virumbuvAr avarkaL pOy viNNulaku ALvarE.            3.24.11 
 
thirucciRRambalam 
 
Meaning of Thevaram

 
On our Lord Who resided with the Lady of large breasts 
in the prosperous town of thirukkazumalam, where 
the dark (deep) ponds are filled with honey, 
the perfect thamiz of marvelous thamiz thirunyAnacambanthan, 
those who are fond of, they would go and rule the  
heaven. 
 
பொருளுரை

 
கரிய நீர்நிலைகளில் தேன் நிறைந்த திருக்கழுமலமாகிய 
வளமிக்க நகரில், பெரிய மார்பகங்களையுடைய உமையம்மையோடு 
வீற்றிருந்த எம்பெருமானாம் சிவபெருமானை, 
அருமையான தமிழ் செய்யும் திருஞானசம்பந்தனின் செந்தமிழ்களை 
விரும்புபவர்கள் விண்ணுலகை ஆள்வர். 
 
Notes


1. கருந்தடம் தேன்மல்கு - நிலவளத்தால் சோலைகளில் மிகுந்த 
மலர்கள் மலர, அதனால் தேனடைகள் மிகுந்து அவை சொரிந்து 
குளங்கள் அத்தேனால் நிறைந்தன என வருவிக்க. 
ஒ. மிக்க திறன் மறையவரால் விளங்கு வேள்வி 
     மிகு புகை போய் விளையக் கழனியெல்லாம் 
   கொக்கினிய கனி சிதறித் தேறல் பாயும் - அப்பர். 
2. தடம் - நீர்நிலை. 

Related Content

The Noble with the Lady

Only Thing We Regard Is....

திருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்கழுமலம் - அயிலுறு படையினர்

அயர்வு நீங்கு நெஞ்சமே

ஏன் தளர்கின்றாய்? இதோ உளது இன்ப வாழ்வு!