logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

pukazhay-kollum-thiruvativaingkal

புகழே கொள்ளும் திருவடிவங்கள்

 
 

திருஞானசம்பந்தர் தேவாரம்

 
தலம்    : திருந்து தேவன் குடி 
பண்    : கொல்லி 
மூன்றாம் திருமுறை 
 
திருச்சிற்றம்பலம் 
 
பங்கமென்னப் படர் பழிகளென்னப்படா 
புங்கமென்னப் படர் புகழ்களென்னப்படும் 
திங்கள் தோயும் பொழில் தீண்டு தேவன் குடி 
அங்கமாறும் சொன்ன அடிகள் வேடங்களே.        3.25.6 
 
திருச்சிற்றம்பலம் 


 
thirunyAnacamban^thar thEvAram

 
thalam    :    thirundhu dhEvan kuDi 
paN    :    kolli 
Third thirumuRai 
 
thirucciRRambalam 
 
paN^gamennap paDar pazikaLennappaDa 
puN^gamennap paDar pukazkaL ennappaDum 
thiN^gaL thOyum pozil thINDu dhEvan kuDi 
aN^gamARum conna aDikaL vEDaN^gaLE.        3.25.6 
 
thirucciRRambalam 
 
Meaning of Thevaram


The Forms of the Reverend, Who told the six limbs (of vedas),  
Who is residing at thirundhudhEvankuDi having gardens touched by the moon, 
are not of blames that spread as shortcomings, 
but are of glory that spread as virtue! 
 
பொருளுரை


மதியானது தோயும் உயர்ந்த சோலைகளுடைய  
திருந்துதேவன்குடியில் உறையும், ஆறங்கம் சொன்ன 
அடிகளாராகிய சிவபெருமானின் திருவேடங்கள் 
குறைகள் என்று பெருகும் பழிகள் உடையன அல்ல; 
அவை புண்ணியமாகப் பெருகும் புகழ்களே உடையன! 
 
Notes


1. சிவபெருமான் செய்யும் எச்செயலும் - அது மறக்கருணையாகிலும் 
அறக்கருணையாகிலும் - எவ்வடிவும் - புகழே உடையன, பழிகள் இல்லாதன. 
ஒ. திங்கள் சூடினரேனும் திரிபுரம் எரித்தனரேனும் 
   எங்கும் எங்கள் பெருமான் புகழலது இகழ் பழி இலரே - சம்பந்தர். 
2. அங்கம் ஆறு - வேதங்கங்கள் ஆறு (சி¨க்ஷ, வ்யாகரணம், சந்தஸ்,  
ந்ருத்தம், ஜ்யோதிஷம், கல்பம்) 
3. பங்கம் - குறை; புங்கம் - புண்ணியம். 

Related Content