logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

iraivan-tharum-padhukapai-vittu-vilagalama

இறைவன் தரும் பாதுகாப்பை விட்டு விலகலாமா?

 
 

திருநாவுக்கரசர் தேவாரம்

 
தலம்    : திருவதிகை 
பண்     : கொல்லி 
நான்காம் திருமுறை 
 
திருச்சிற்றம்பலம் 
 
காத்தாள்பவர் காவல் இகழ்ந்தமையால்  
    கரை நின்றவர் கண்டுகொள் என்று சொல்லி 
நீத்தாய கயம் புக நூக்கியிட 
    நிலைக் கொள்ளும் வழித்துறை ஒன்றறியேன் 
வார்த்தை இது ஒப்பது கேட்டறியேன் 
    வயிற்றோடு துடக்கி முடக்கியிட 
ஆர்த்தார் புனலார் அதிகைக் கெடில 
    வீரட்டானத்துறை அம்மானே.        4.1.5 
 
திருச்சிற்றம்பலம் 


 
thirunAvukkaracar thEvAram

 
thalam    :    thiruvadhikai 
paN    :    kolli 
Fourth thirumuRai 
 
thirucciRRambalam 
 
kAththALbavar kAval ikazn^thamaiyAl 
    karai n^inRavar kaNDukoL enRu colli 
n^IththAya kayam puka n^UkkiyiDa 
    n^ilaik koLLum vaziththuRai onRaRiyEn 
vArththai ithu oppathu kETTaRiyEn  
    vayiRRODu thuDakki muDakkiyiDa 
ArththAr punalAr adhikaik keDila 
    vIraTTAnaththu uRai ammAnE        4.1.5 
 
thirucciRRambalam 
 
Meaning of Thevaram


As (I) neglected the security of the those who could  
safeguard, those who were standing on the banks 
pushed me into the deep sea, saying, "Find out (the 
depth)!" I could not find a way to get to shore! 
I have not heard a mantra like this (shiva mantra)! 
Starting from the stomach the illness is paralyzing, 
oh the Mother residing at the thiruvadhikai vIraTTAnam 
on the banks of keDilam where the water roars! 
 
பொருளுரை


காப்பாற்றி வாழவைப்பவர்களின் காவலை விட்டு விலகி 
வந்த காரணத்தால், ஆழமான நீர்நிலையின் கரையில்  
நின்றிருந்தவர்கள், "இதன் ஆழத்தைக் கண்டுகொள்!" 
என்று தள்ளிவிட, உறுதியாகப் பற்றிக் கரைசேரும்  
வழியினை அறியாது கிடந்தேன். (அப்பொழுது) 
இப்பொழுது கேட்ட திருவார்த்தை (சிவ மந்திரம்) 
போன்ற ஒன்றைக் கேட்டறியேன்.  
சூலையானது என் வயிற்றில் தொடங்கி முடங்க வைக்கிறது! 
ஒலி செய்கின்ற நீரோட்டம் உடைய கெடில நதிக்கரையில் 
திருவதிகை வீரட்டானத்தில் இருக்கின்ற என் அன்னையே! 
 
Notes


1. காத்தாள்பவர் காவல் இகழ்ந்தமை -  
தம்மை வழி நடத்தி உய்ய வைக்கக்கூடியவராகிய  
திலகவதியாரின் அரவணைப்பை விடுத்த காரணத்தால் 
சமணத்தால் ஈர்க்கப்பட்டு ஆழ்கடலுள் அழுந்தினேன் 
    என ஒரு பொருளும், 
அடைந்தவருக்குத் தவறாது அருளும் ஆதியாகிய 
சிவபெருமானின் சைவத்தை விடுத்துச் சென்ற காரணத்தால், 
இறைவனாகிய நிலையான் பற்றினைக் கொள்ளாமல்  
தன் முயல்விலேயே முழுச்செம்மை காணமுற்பட்டு 
ஆழ்கடலில் அழுந்துறுவோர் போன்ற புறச்சமயத்தில் 
அழுந்தினேன் 
    என ஒரு பொருளும் கொள்ளலாம். 
2. வார்த்தை இது ஒப்பது கேட்டறியேன் 
புறச்சமயத்தில் இருந்த காலத்தே இப்பொழுது திலகவதியாரால்  
அருளப்பட்ட இறைவனின் திருவைந்தெழுத்தாகிய 
உய்யவைக்கும் இவ்வார்த்தையை போன்ற ஒன்று  
கேட்டறியேன். 
3. நீத்தாய - ஆழமான; கயம் - நீர்நிலை; நூக்குதல்  
- தள்ளுதல். 

Related Content

நலமிகும் பதிகங்கள் - தேவாரம்

The Thief Who Barged In

மண்டோதரிக்கு சிவபெருமான் அருள் புரிந்தது

இறைவன் வலத்தில் நிற்கும் மாறிலாதார்

May the Supremacy of Lord Shiva Stay High! - Prayer from San