logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

choolaiyin-kotumai

சூலையின் கொடுமை

 
 

திருநாவுக்கரசர் தேவாரம்

 
தலம்    : திருவதிகை 
பண்     : கொல்லி 
நான்காம் திருமுறை 
 
திருச்சிற்றம்பலம் 
 
உயர்ந்தேன் மனை வாழ்க்கையும் ஒண்பொருளும் 
    ஒருவர் தலைகாவல் இலாமையினால் 
வயந்தே உமக்கு ஆட்செய்து வாழலுற்றால்  
    வலிக்கின்றது சூலை தவிர்த்தருளீர் 
பயந்தே என் வயிற்றின் அகம்படியே  
    பறித்துப் புரட்டி அறுத்தீர்த்திட நான் 
அயர்ந்தேன் அடியேன் அதிகைக் கெடில 
    வீரட்டானத்துறை அம்மானே.        4.1.7 
 
திருச்சிற்றம்பலம் 


 
thirunAvukkaracar thEvAram

 
thalam    :    thiruvadhikai 
paN    :    kolli 
Fourth thirumuRai 
 
thirucciRRambalam 
 
uyarn^thEn manai vAzkkaiyum oNporuLum 
    oruvar thalai kAval ilAmaiyinAl 
vayan^thE umakku ATceythu vAzaluRRAl 
    valikkinRathu cUlai thavirththaruLIr 
payan^thE en vayiRRin akampaDiyE 
    paRiththup puraTTi aRuththIrththiDa n^An 
ayarn^thEn aDiyEn athikaik keDila  
    vIraTTAnaththu uRai ammAnE.        4.1.7 
 
thirucciRRambalam 
 
Meaning of Thevaram

 
I considered high the household life and glittery wealth, 
as there was nobody to oversee me! 
Getting attracted to You, when I start to live, 
the colic is paining, oh please set me free of it! 
Within my stomach gruesomely wrenching, nauseating, 
tearing and rupturing - I am exhausted, 
oh Mother at the thiruvadhikaik keDila vIraTTAnam! 
 
பொருளுரை


மேலாக ஒருவர் இருந்து வழி நடத்தப் படாமையால் 
மனை வாழ்க்கையையும், ஈர்க்கின்ற பொருள்களையும்  
உயர்வாக எண்ணி இருந்தேன். (இப்பொழுது விளக்கம் பெற்று) 
உமக்கு ஆட்செய்து வாழத்தொடங்கும் பொழுது  
இச்சூலையானது வலிக்கின்றது; இதனை நீக்கி அருள்க! 
கொடூரமானதாக என் வயிற்றினுள்ளே இழுத்துப் 
புரட்டி, அறுத்து, இழுக்க - அடியேன் தாங்காது அயர்ந்தேன், 
திருவதிகைக் கெடில வீரட்டானத்தில் உறையும் அன்னையே! 
 
Notes


1. இப்பாடல் திருநாவுக்கரசர் பெருமானுக்கு இருந்த சூலை  
நோயின் கொடூரத்தை உணரச்செய்கின்றது.  
2. உயர்ந்தேன் மனைவாழ்க்கையும் ஒண்பொருளும் 
 - சமண சமயத்தில் சேரும் முன், சேருவதற்குக் காரணமான 
பற்றும் அதன் துன்பங்களையும் எடுத்துரைக்கின்றார். 
3. ஒண்மை - அழகு/ஈர்ப்பு; வயந்து - வயப்பட்டு. 

Related Content

இறைவனுக்குக் கோபம் வருமா?

இறைவன் தரும் பாதுகாப்பை விட்டு விலகலாமா?

உலகியல் காக்குமா?

அறமும் அருளும் அமைந்த பெருமான்

இறைவன் தண்டிப்பாரா?