logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

azhakezhuthalaaka-arut-chevati

அழகெழுதலாகா அருட் சேவடி

 

திருநாவுக்கரசர் தேவாரம்


தலம்    : திருவதிகை வீரட்டம்
திருத்தாண்டகம்
ஆறாம் திருமுறை

திருவடித் திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

அரும்பித்த செஞ்ஞாயிறேய்க்கும் அடி
    அழகு எழுதலாகா அருட் சேவடி
சுரும்பித்த வண்டினங்கள் சூழ்ந்த அடி
    சோமனையுங் காலனையுங் காய்ந்த அடி
பெரும்பித்தர் கூடிப் பிதற்றும் அடி
    பிழைத்தார் பிழை அறிய வல்ல அடி
திருந்து நீர்த் தென் கெடில நாடன் அடி
    திருவீரட்டானத்து எம் செல்வன் அடி.        6.6.4

திருச்சிற்றம்பலம்


thirunAvukkaracar thEvAram


thalam    :    thiruvadhigai vIraTTam
thiruththANDagam
sixth thirumuRai

thiruvaDith thiruththANDakam

thirucciRRambalam

arumbiththa cenynyAyiREykkum aDi
    azaku ezuthalAkA aruT cEvaDi
curumbiththa vaNDinaN^gaL cUzn^tha aDi
    cOmanaiyum kAlanaiyum kAyn^tha aDi
perumpiththar kUDip pithaRRum aDi
    pizaiththAr pizai aRiya valla aDi
thirun^thu n^Irth then keDila n^ADan aDi
    thiruvIraTTAnaththu em celvan aDi.        6.6.4

thirucciRRambalam

Meaning of Thevaram


The Foot That is superior to the budding red sun;
The Gracious Perfect Foot Whose beauty cannot be written;
The Foot surrounded by the clans of beetles;
The Foot That showed ire on moon and death;
The Foot babbled by the assembly of great mad (devotees);
The Foot capable of knowing the error of the erring;
The Foot of the One having the country of south keDilam of clear water;
The Foot of our Opulent at thiruvIraTTAnam!

பொருளுரை


அரும்பி எழுகின்ற செஞ்ஞாயிற்றினும் சிவந்த திருவடி;
அழகு எழுதலாகாத அருட் சேவடி;
ஆண் பெண் வண்டினங்கள் சூழ்ந்த திருவடி;
சோமனையும் காலனையும் உதைத்த திருவடி;
பெரும்பித்தர்களாகிய அடியவர்கள் கூடிப் பிதற்றும் திருவடி;
தவறு செய்வோர் தவறுகளை எல்லாம் அறியவல்ல திருவடி;
தெளிந்த நீரை உடைய தென் கெடில நாடுடையான் திருவடி;
திருமூலட்டானத்து உறையும் எம் செல்வனுடைய திருவடி!

Notes


1. சோமன் - தக்க யாகத்தில் காய்ந்தது;
காலன் - மார்க்கண்டர்க்காகக் காய்ந்தது;
2. பிழைத்தார் பிழை அறிய வல்ல அடி
  ஒ: கண்காணியாகக் கலந்தெங்கும் நின்றானைக் 
     கண்காணி கண்டார் களவொழிந்தாரே. - திருமந்திரம்

Related Content

Which are ruined days ?

Narration of the Beauty

You are all my feelings !

Honeyful Holy Feet

Recipe for Liberation