logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

adimai-adimaiyalla-enru-kuralama

அடிமை அடிமையல்ல என்று கூறலாமா?

 

சுந்தரர் திருப்பாட்டு


தலம்    : திருவெண்ணெய் நல்லூர்
பண்    : இந்தளம்
ஏழாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

மன்னே மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னைப்
பொன்னே மணிதானே வயிரம்மே பொருது உந்தி
மின்னார் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட் துறையுள்
அன்னே உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனல் ஆமே?        7.1.3

திருச்சிற்றம்பலம்

cundharar thiruppATTu


thalam    :    thiruveNNey nallUr
paN    :    indhaLam
seventh thirumuRai

thirucciRRambalam

mannE maRavAthE n^inaikkinREn manaththu unnaip
ponnE maNithAnE vayirammE poruthu un^dhi
minnAr peNNaith thenpAl veNNey n^allUr aruT thuRaiyuL
annE unakku ALAy ini allEn enal AmE.        7.1.3

thirucciRRambalam

Meaning of Thevaram


Oh Everlasting! I think of You in my mind without forgetting!
On the southern side of the glittering peNNai that thrusts forward
gold, gems and diamond, at the abode of thiruveNNeynallUr aruTthuRai,
oh the Mother! Having been Your slave, how can I say, "I am not!"

பொருளுரை


நிலையான பொருளே! உன்னை மறவாது மனத்தில் நினைக்கின்றேன்!
பொன்னும், மணியும், வயிரமும் அடித்து உந்திக்கொண்டு வரும்
மின் போல் ஒளிரும் பெண்ணை நதியின் தென்பால் திருவெண்ணெய்
நல்லூர் அருட்துறையுள் உள்ள தாயானவனே! 
உனக்கு அடிமையாக இருந்துகொண்டு, "(அடிமை) இல்லை" என்று சொல்ல முடியுமா?

Notes


1. மன் - நிலைபேறு; பொருது - மோது; அன்னே - அன்னையே.

Related Content

Drive Away My Fear

Who Else Can Help ?

My Heart is melting only for You

Speak the Glory, Bring in Joy

Talk Time ?