logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

aariyathotu-chenthamizh-payan

ஆரியத்தொடு செந்தமிழ்ப் பயன்

 
 

திருஞானசம்பந்தர் தேவாரம்

 
தலம்    : திருவாலவாய் 
பண்     : கொல்லி 
மூன்றாம் திருமுறை 
 
திருச்சிற்றம்பலம் 
 
சந்துசேனனும் இந்துசேனனும் தருமசேனனும் கருமைசேர் 
கந்துசேனனும் கனகசேனனும் முதலாகிய பெயர்கொளா 
மந்தி போல் திரிந்து ஆரியத்தொடு செந்தமிழ்ப் பயன் அறிகிலா 
அந்தகர்க்கு எளியேன் அலேன் திருவாலவாய் அரன் நிற்கவே..        3.39.4 
 
திருச்சிற்றம்பலம் 


 
thirunyAnacamban^thar thEvAram

 
thalam    :    thiruvAlavAy 
paN    :    kolli 
Third thirumuRai 
 
thirucciRRambalam 
 
can^thucEnanum in^dhucEnanum dharumacEnanum karumaicEr 
kan^dhucEnanum kanakacEnanum muthalAkiya peyarkoLA 
man^dhi pOl thirin^thu AriyathhtoDu cen^thamizp payan aRikilA 
an^dhakarkku eLiyEn alEn thiruvAlavAy aran n^iRkavE.            3.39.4 
 
thirucciRRambalam 
 
Meaning


Having the titles sandhusenan, indhusenan, dharumasenan, 
the dark kandhusenan, kanakasenan and so on, 
wandering like the monkeys the blind who do not realize the utility of 
the glorious language (saMskRitam) and the perfect thamiz, 
for them I am not gullible, as the hara of thiruvAlavAy stands (with me)! 
 
பொருளுரை


சந்துசேனன், இந்துசேனன், தருமசேனன், இருள் சேர்ந்த கந்துசேனன், 
கனகசேனன் என்பது போன்ற பட்டங்கள் உடையவர்களாகி, 
குரங்கினைப் போல் (நாகரிகம் இன்றித்) திரிந்து,  
ஆரியம் மற்றும் செந்தமிழாகிய இம்மொழிகளின் பயனாக 
விளங்குவதை உணராத (அறிவில்) குருடராய் இருப்பவர்களுக்குச் 
சிறியவன் அல்லன் நான்;  
திருவாலவாயில் விளங்கும் அரனார் என்னோடு நிற்பதாலே! 
 
Notes


1. மங்கையர்க்கரசியார் மற்றும் குலச்சிறையார் அழைக்க மதுரை 
வந்த சம்பந்தப்பெருமானும் சிவனடியார்களும் தங்கியிருந்த 
திருமடத்திற்குச் சமணர்கள் மன்னன் ஒப்புதலுடன் தீ வைத்தனர்.  
அரசன் ஆட்சி செய்யும் முறை பிழன்றது எனப் பிள்ளையார் 
அத்தீயினை அரசனித்து வெப்பு நோயாகச் செல்லுமாறு  
"செய்யனே திருவாலவாய்" என்ற திருப்பதிகத்தை அருளினர். 
வெப்பு நோயால் துடிதுடித்த மன்னன், சமணரால் அது  
தீர்க்கவொட்டாததால் ஞானசம்பந்தப் பெருமானை அழைக்க 
ஒப்பினன். மன்னன் ஆதரவு பெற்ற சமணர்கள் பெருங்கூட்டமாக 
நிற்க, அவர்கள் முன் பச்சிளம் குழந்தையாக ஞானசம்பந்தப்  
பிள்ளையார் நிற்பது கண்டு மங்கையர்க்கரசியார் அவருக்கு 
ஏதும் தீங்கு நேரிட்டு விடுமோ என்று விதிர்விதிர்த்தனர். 
அம்மையாரின் அச்சத்தைப் போக்கும் விதமாகச் சைவம்  
வாழ வந்த பெருந்தகையார், "மானின் நேர்விழி" என்ற 
இத்திருப்பதிகத்தை அருளினர்.  
2. இதில் கூறப்படுவன சமண சமயத்தில் பல பதவிகளின் 
பெயர்கள். (திருநாவுக்கரசு பெருமான் சமணத்தில் இருந்த பொழுது 
தருமசேனன் என்ற பதவி வகித்தது நினைவு கூர்க.) 
3. ஆரியத்தொடு செந்தமிழ்ப் பயன் அறிகிலார் 
சமணர்கள் வடமொழி மற்றும் தமிழ்மொழியில் வல்லவர்கள். 
அவர்கள் தமிழில் பல நூல்கள் இயற்றியுள்ளனர்.  
இவை இரண்டும் செம்மொழிகள். இறைவன் தந்த 
திருநான்மறைகளும், இறைவனே தலைமை நின்று சங்கம் 
நடத்தியமையும் இவற்றின் பெருமை. இத்தகு மொழிகளில் வல்லமை 
இருந்தும் இவற்றைக் கொண்டு பயன்கொள்ளாது - இன்பமே வடிவான 
இறைவனைத் துதித்து இன்புறாது - ஒழிபவர், அமுதம் முன்பிருந்தும் 
பசியாலே இளைப்பவராவர். 
ஒ. அ. வாயிருந் தமிழே கற்றும் ஆளுறா  
      ஆயிரஞ் சமணும் அழிவாக்கினான் - திருநாவுக்கரசர். 
   ஆ. கற்றதனால் ஆய பயன் என்கொல் வாலறிவன் 
       நற்றாள் தொழாஅர் எனின் - திருக்குறள். 
4. ஆரியம் - ஒளியுடையது - சமஸ்கிருதம்; அந்தகன் - குருடன். 

Related Content

வழிபாட்டின் பயன்

Use of the body

Discourse - The Great Vratas - Significance

What is the use of learning sanskrit and thamiz?

உருவ வழிபாட்டால் என்ன பயன்?