காட்சி - 9பரி நரியாகிய படலம் இடம்:- குதிரை லாயம் பின்குரல்ள் பாண்டிய மன்னன் அளித்த வெகுமதிப் பொருட்களைக் கொண்டு சென்ற மாணிக்கவாசகரை அவரது சுற்றத்தினர் சிறந்த முறையில் வரவேற்க, வாதவூரடிகள் சோமசுந்தரக் கடவுளை தியானித்தபடியே இருந்தார். அன்றிரவே இலாயத்தில் இருந்த குதிரைகள் அனைத்தும் திரு ஆலவாய் உறையும் அண்ணல் திருவிளையாடலால் முன் போல் நரிகளாக மாறின. அந்நாகள் மற்ற குதிரைகளையும் கடித்து இலாயத்தை தாண்டி மதுரை மாநகருக்குள் புகுந்து ஊளையிடத் துவங்கின. முத்தமிழ் ஒலியும், மங்கள ஒலிகளும் முழங்கும் மதுரையம்பதியில் நாகளின் ஊளையினால் மக்கள் விழித்தெழுந்து அதிர்ச்சியடைந்தனர். காவலர்-1:- ஏ என்னப்பா இது? எங்கு பார்த்தாலும் நாகளாக இருக்கின்றது. காவலர்-2:- இவை அனைத்தும் சற்று முன்பு வரை பாகளாக இருந்தன, இப்பொழுது நாகளாக மாறி இலாயத்தில் உள்ள குதிரைகளைக் கடித்து அட்டகாசம் செய்கின்றன. நாம் இதை மன்னனிடம் சொல்லவேண்டும். காவலர்-1:- இதனை அறிந்தால் பாண்டிய மன்னர் கடுங்கோபம் கொள்வார் என்ன நடக்கப்போகிறதோ? காட்சி - 10இடம்:- பாண்டிய அரசவை காவலர்-1:- தென்னவனே! தென்னவனே! பெருந்தவறு நடந்துவிட்டது. மன்னர்:- காவலரே! என்ன ஆயிற்று? ஏன் இந்த பதற்றம்? காவலர்-2:- அரசே! தாங்கள் வாங்கிய குதிரைகள் அனைத்தும் நேற்று இரவு நரிகளாகி மாறி இலாயதிலுள்ள மற்ற குதிரைகளையும் கடித்து குதறிவிட்டுக் கா ட்டுக்குள் ஓடிவிட்டன. மன்னர்:- என்ன? பரிகள் நரிகளாகிவிட்டனவா? காவலரே உண்மையைத்தான் சொல்கிறீரா? நம்ப முடியவில்லையே! காவலர்-1:- ஆம் அரசே, உண்மைதான், இந்த மாயச்செயலை எங்கள் கண்களால் நேரில் கண்டோ ம். மன்னர்: சேனாதிபதி, இவர்கள் என்ன கூறூகிறார்கள்? சேனாதிபதி:- உண்மைதான் மன்னா! அந்நரிகள் நகருக்குள் புகுந்து வீடுகளில் உள்ள சேவல்களைப் பிடித்தும், பந்தல்களை அழித்தும், கரும்புகளை முறித்தும் நா சம் செய்திருக்கின்றன. மன்னர்:- என்ன மாயம் இது! அந்த குதிரைச் சேவகன் அக்குதிரைகளின் சிறப்பியல்புகளை பலவாறு கூறினாரே! ஆனால் அவை அனைத்தும் ஊளையிடும் நரி களாக மாறி நம் நாட்டிற்கே தீங்கிழைக்கும் என்று கனவிலும் நினைக்கவில்லை. மிகப்பெரிய தவறு நடந்துவிட்டது. அரசாங்கத்திற்கு துரோகம் இழைத்தவர்களுக்கு த குந்த தண்டணை அளிக்கவேண்டும், வாதவூரர் எங்கே? அமைச்சர்:- அவர் அரசவைக்கு வரக்கூடிய நேரம்தான், இப்பொழுது வந்துவிடுவார். மன்னர்:- வரட்டும், அவர் வந்தபின் பார்த்துக்கொள்ளலாம். (வாதவூரர் அரசவைக்கு வருகிறார்) மன்னன்:- வாதவூரரே என்னுடைய பொருட்களைக் கொண்டு சென்று நல்ல முறையில் குதிரை வாங்கி வந்தீரோ? அரசாங்கத்திற்கு நீர் செய்யும் பணி இதுதானே ? மாணிக்கவாசகர்:- மன்னா! அக்குதிரைகளிடம் ஏதேனும் குற்றம் உள்ளதா? மன்னன்:- குற்றமா, அக்குதிரைகள் யாவும் இரவு நரிகளாகி மற்றக் குதிரைகளையும் கடித்து மக்களையும் அச்சுறுத்தி காட்டுக்குள் ஓடிவிட்டன. எனக்கு கண்ணும் கவசமுமாக முன்னே விளங்கி பின்னர் என் பொருட்களை கவர்ந்து கொள்ளவோ இவ்வாறு செய்தீர்? மாணிக்கவாசகர்:- ஆலவாயா! இதுவும் உன் திருவிளையாடலா? சிவ! சிவ! மன்னன்:- செய்வதையும் செய்துவிட்டுப் பழியை என் சோமசுந்தரக் கடவுள் மீதா இடப்பார்க்கிறீர்?! காவலரே! வாதவூரரை கைது செய்து சிறையில் அடையுங்கள். காவலர்:- உத்தரவு மன்னா! (காவலர்கள் வாதவூர் அடிகளை கைது செய்து சிறைக்கு அழைத்துச் செல்கின்றனர்) பாடல்:- கூறும் நாவே முதலாகக் கூறுங் கரணம் எல்லாம்நீ தேறும் வகைநீ திகைப்புநீ தீமை நன்மை முழுதும்நீ வேறோர் பரிசிங் கொன்றில்லை மெய்ம்மை உன்னை விரித்துரைக்கில் தேறும் வகைஎன் சிவலோகா திகைத்தால் தேற்ற வேண்டாவோ காட்சி - 11இடம்:- வைகை நதிக்கரை பின் குரல்:- பாண்டிய மன்னனின் ஆணையின்படி காவலர்கள் வாதவூரரை சுட்டெரிக்கும் வெயிலில் நிறுத்தி துன்புறுத்துகின்றனர். காவலர்-1:- என்ன வாதவூரரே! கால்கள் ரொம்ப சுடுகின்றதோ? காவலர்-2:- நம் மன்னர் உங்களை எவ்வளவு நம்பினார், கருவூலத்திலிருந்து கொண்டு சென்ற பொருட்களை திரும்ப பெறும்வரை உங்களை இவ்வாறு தண்டிக்க சொல்லி பாண்டிய மன்னன் ஆணையிட்டுள்ளார்கள். மாணிக்கவாசகர்:- சிவ! சிவ! நீங்கள் உங்கள் கடமையைத்தான் செய்கின்றீர்கள், எல்லாம் ஈசன் செயல். கோகழி ஆண்ட குருமணியே! பாண்டிய நாட்டை சிவ லாகம் ஆக்கியவனே! என்னைக் காத்தருள். பின் குரல்:- ஆலவாய் பெருமானுடைய திருவருளினால் வைகை ஆற்றில் வெள்ளம் பெருகி கடல் போல பெருக்கெடுத்து ஓடத் துவங்கியது. நதிக்கரைகள் உந டந்தன, மரங்கள் வேரோடு சாய்ந்தன, மக்கள் வாழ் இடங்களிளும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. காவலர்-1:- ஏ என்னப்பா இது, வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து வருகிறது வா ஓடிவிடலாம். |