logo

|

Home >

video-gallery >

thiruvilaiyadal-drama-transforming-foxes-into-horses

நரியைப் பரியாக்கிய திருவிளையாடல் - திருவிளையாடல் புராண நாடகம் Thiruvilaiyadal Drama - Transforming foxes into horses

aum namaH shivAya

Welcome to the Spiritual Video Gallery from the Shaivam.org.

Drama

 


ஞானநாடகம் (மாணிக்கவாசகர்) - ஆட்கொண்ட பிரான் - பகுதி-4 - நரிகளைப் பரிகள் ஆக்கியது

 

 

காட்சி - 6

இடம்:- பாண்டிய அரசவை

பின் குரல்:- குறித்த நாளில் குதிரைகள் வரவில்லை, பாண்டிய மன்னன் திருவாதவூரரை அழைத்து விசாரித்தபோது, இன்னும் மூன்று தினங்களில் குதிரைகள் வந்துவிடும் என்றும், அவைகளை நிறுத்த பெரியதான லாயங்களும், தண்ணீர் குளங்களும் அமைக்குமாறு கேட்டுக்கொண்டார், மன்னனும் அவ்வாறே செய்தான். மூன்று நாட்கள் கழிந்தன, குதிரைகள் வரவில்லை.

அமைச்சர்:- அரசே! குதிரைகள் வந்துவிடும் என்று திருவாதவூரர் பலமுறை உறுதியளித்தும் இதுவரை ஒன்றும் நடக்கவில்லை.

மன்னர்:- ஆமாம் அமைச்சரே, நாமும் பல நாட்கள் காத்திருந்து பார்த்துவிட்டோ ம், முதலில் ஒலை அனுப்பினார், பின் நேரில் வந்தும் உறுதி அளித்தார், ஒன்றும் நடக்கவில்லை. பின் மூன்று தினங்களில் வந்துவிடும் என்று கூறினார். அவருடைய உறுதிமொழிக்கு இணங்கி பெரிய லாயங்களும், தண்ணீர் குளங்களும் அமைக்க ப்பட்டுவிட்டன, இன்னும் குதிரைகளோ, அதைப்பற்றிய எந்த செய்தியும் வந்தவாறில்லை, என் பொறுமைக்கும் எல்லை உண்டு. காவலரே! திருவாதவூரரை தண்டித்து சிறையில் அடையுங்கள். அமைச்சரே! நம் கருவூலத்திலிருந்து எவ்வளவு பொருட்கள் எடுத்து செல்லப்பட்டன என்று கணக்கிடுங்கள். நாம் அவற்றை திருவாதவூரரிட மிருந்து திரும்ப பெறவேண்டும்.

அமைச்சர்:- உத்தரவு மன்னா!

காட்சி - 7

இடம்:- சிறைச்சாலை

பின் குரல்:- பாண்டிய மன்னன் ஆணைப்படி திருவாதவூரரை சிறையில் அடைத்தனர், சிறையில் திருவாதவூரருக்கு திரு ஆலவாய் கோயிலில் இறைவனாருக்கு வந்தனை செய்து ஏத்தும் ஒலி மற்றும் மங்கல வாத்திய ஒலிகள் கேட்கிறது

மாணிக்கவாசகர்:- எந்தையே! முந்திய முதல் நடு இறுதியும் ஆனவனே! தேவர்களின் தலைவனே! திருப்பெருந்துறை உறைபவனே! சோமசுந்தரக்கடவுளே! சிறியேனுக்கு இரங்கிக் கருணை புரியாயோ! ஊரார் உன்னை நகைத்தலை நினைக்கவில்லையோ! உன் அடிமையின் துயரறிந்தும் வாராயோ! தென் திரு ஆலவாயா! சொக்க நாதா! தண்ணார் தமிழ் அளிக்கும் தன்பாண்டி நாட்டனே! அடியேனை காத்தருள்

பின் குரல்:- மாணிக்கவாசகா஢ன் துயரத்தைப் போக்க திருவுள்ளம் கொண்ட கயிலை நாதன், நந்தி தேவர் முதலான கண நாதர்களை அழைத்து "இன்று ஆவணி மூல நட்சத்திரம், பாண்டிய மன்னன் சினம் கொள்ளும் முன், நாம் அவனுக்கு஡஢ய குதிரைகளை சேர்த்தாக வேண்டும். நீங்கள் காட்டில் உள்ள நா஢களை பா஢களாக்கி முன் செல்லுங்கள், நாம் உங்கள் பின்னே குதிரை வீரனாகத் தோன்றி வருவோம்" என்று அருளினார்.

பாடல்:- நா஢யைக் குதிரைப் பா஢யாக்கி ஞால மெல்லாம் நிகழ்வித்துப்
பொ஢ய தென்னன் மதுரையெல்லாம் பிச்ச தேற்றும் பெருந்துறையாய்
அ஡஢ய பொருளே அவினாசி அப்பா பாண்டி வெள்ளமே
தொ஢ய வா஢ய பரஞ்சோதீ செய்வ தொன்றும் அறியேனே

காட்சி - 8

பின் குரல்:- குதிரைகள் வருகின்ற செய்தி கேட்டு பாண்டிய மன்னன் மகிழ்ந்து திருவாதவூரரை விடுதலை செய்து தகுந்த மரியாதையுடன் அழைத்து வர உத்தரவிடுகிறார்.

இடம்:- அரண்மனை வாயில்

பின் குரல்:- சோமசுந்தர கடவுள் வேதமாகிய குதிரை மீது வர, கண நாதர்கள் வீரர்களாக மற்ற குதிரைகளின் மீது வருகின்றனர்.

மன்னன்:- ஆகா! மிகவும் அழகிய குதிரைகள், உங்களில் தலைமையாக உடையவர் யார்?

கண நாதர்:- இவரே! எங்கள் நாயகர்.

(* பாண்டிய மன்னன் குதிரைச் சேவகனாக வந்த இறைவரை வணங்குகிறான், பின் நாணுகிறான் )

இறைவர்:- பாண்டிய மன்னவா! எங்களுடைய குதிரை ஏற்றத்தை காண்பாயாக.

மன்னன்:- மிகவும் அற்புதம்.

பின் குரல்:- அவையோர் மட்டுமின்றி, தேவர்களும் மயங்கும்படி ஐந்து கதியும்,பதினெட்டு சாரியும் மற்று முதலான வேறுபாடுகளும் தோன்ற தாம் அசையாதவராகி விளங்கி குதிரையை சற்றே அசைத்து காட்டினார். அவ்வாறே மற்ற வீரர்களும் செய்தனர்.

மன்னன்:- மிகவும் அற்புதம்.

அமைச்சர்:- மிகவும் அருமை.

இறைவர்:- பாண்டிய மன்னவா! பாடலம், கோடகம், இவுளி, வன்னி, குதிரை, பரி, கச்ந்துகம், புரவி என்கிற எட்டு வகையான குதிரைகளும் இங்கு உள்ளன. உன்னுடைய பொருட்களைக் கொண்டுவந்து உன் அமைச்சர் என்னிடம் நிரம்ப கொடுத்தமையால், விலை மதிக்க இயலாத இந்த குதிரைகள் உனக்கு கிடைத்தன. ஆயினும் இக்குதிரைகளை இன்று நீர் கயிறு மாற்றி உம்முடையதாக செய்து கொள்க. இதுவே குதிரை விற்கும் விதி.

மன்னர்:- குதிரைச் சேவகரே! தங்களுடைய குதிரை ஏற்றத்தைக் கண்டு மிகவும் வியந்தேன். மிகவும் சிறப்பாக குதிரைகளின் இயல்பையும், சிறப்பையும் எடுத்துக் கூறினீர்கள். இப்பொழுதே கயிறு மாற்றி இக்குதிரைகளை பெற்றுக்கொள்கிறேன். இப்பட்டாடையை தாங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள்.

(இறைவர் அப்பட்டாடையை தன் சிரசில் சூடிக்கொள்கிறார், இறைவரும் கண நாதர்களும் மறைகின்றனர்)

மன்னர்:- திருவாதவூரரே! தங்களை சிறை செய்ததற்கு நான் வருந்துகிறேன். தங்களால்தான் நம் நாட்டிற்கு விலைமதிக்க முடியாத அரிய குதிரைகள் கிடைத்துள்ளன. இந்த வெகுமதிகளை ஏற்றுக்கொள்ளுங்கள். தாங்கள் முன் போல் அரசவைக்கும் வரவேண்டும்.

மாணிக்கவாசகர்:- மன்னா! எல்லாம் சோமசுந்தர கடவுளின் திருவருட் செயல், நான் ஏதும் செய்யவில்லை. எல்லா புகழும் செந்தமிழ் சொக்க நாதருக்கே! சிவ சிவ!!

பாடல்:- சதுரை மறந்தறி மால்கொள்வர் சார்ந்தவர் சாற்றிச் சொன்னோம்
கதிரை மறைத்தன்ன சோதி கழுக்கடை கைப்பிடித்துக்
குதிரையின் மேல்வந்து கூடிடு மேற்குடி கேடுகண்டீர்
மதுரையர் மன்னன் மறுபிறப்போடே மறித்திடுமே 

 

Related Content

திருவிளையாடல் நாடகம் - வாதவூரடிகளுக்கு உபதேசித்த படலம் Thir

பரி நரியாக்கிய திருவிளையாடல் - திருவிளையாடல் புராண நாடகம் T

Hindu Shaiva Devotional Video - Manikkavasagar Drama