logo

|

Home >

video-gallery >

history-of-thirumurai-composers-drama-manickavasagar-drama

History of Thirumurai Composers - Drama-Manickavasagar Drama

aum namaH shivAya

Welcome to the Spiritual Video Gallery from the Shaivam.org.

Drama

 
ஞானநாடகம் (மாணிக்கவாசகர்) - ஆட்கொண்ட பிரான் - பகுதி-1 - பாண்டியன் முதலமைச்சர் தென்னவன் பிரமராயர்

 

திருச்சிற்றம்பலம்

---------------------

"ஞான நாடகம் - 1"

--------------------------------------------------------------------------------------------

பாடல்:- வான நாடரும் அறியொணாத நீ
மறையி லீறுமுன் தொடரொணாத நீ
ஏனை நாடருந் தெரியொணாத நீ
என்னை இன்னிதாய் ஆண்டு கொண்டவா
ஊனை நாடகம் ஆடுவித்தவா
உருகி நான் உனைப் பருக வைத்தவா
ஞான நாடகம் ஆடுவித்தவா
நைய வையகத் துடைய விச்சையே

--------------------------------------------------------------------------------------------

காட்சி-1

இடம்:- அரிமர்த்தன பாண்டிய மன்னன் அரசவை

மகுடம்:- தென் திரு ஆலவாய் ஈசர் அடி போற்றி, திரு நீற்றின் அன்பு நெறி பாதுகாத்து செங்கோல் ஆட்சி புரியும் பாண்டிய மாமன்னர் அரிமர்த்தனபாண்டியர்-வாழ்க! வாழ்க!

மன்னர்:- எல்லாம் வல்ல செந்தமிழ்ச் சொக்கனாத பெருமான் திருவருளினால் நம் நாடு பகைவர் பயம் இன்றியும் நம் மக்கள் அறவழியில் நின்று மகிழ்ச்சியாக இருப்பது எனக்கு மிகுந்த ஆனந்தத்தை அளிக்கிறது.

அமைச்சர்:- மலையத்துவசன் குலத்தோன்றலே! நம் இறைவர் சோமசுந்தர கடவுளே பாண்டிய மன்னனாகவும் உலகம் முழுமையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து ஆட்சி புரிந்த நம் அன்னை அங்கயற்கண்ணியும் வீற்றிருந்து அருளிய இவ்விரத்தின சிம்மாசனத்தில் தாங்கள் வீற்றிருந்து மனு நீதி வழுவாது ஆட்சி புரிந்து நம் பாண்டிய நாட்டை காத்து வருகிறீர்கள். நம் நாடு மற்றும் தங்கள் பெருமை சொல்லற்கரியது.

மன்னர்:- அமைச்சரே நாம் முற்பிறவியில் செய்த மிகப்பெரிய தவத்தின் பலனாகவே இன்று நாம் பாண்டிய நாட்டில் வாழ்கின்றோம். திரு ஆலவாய் உடையாரும், இளையனார் முருகப்பெருமானும், ஆதி மாதவ முனிவர் அகத்தியப்பெருமானும் நம் மதுரையம்பதியில் தமிழ்ச் சங்கத்தை அமைத்து, நம் பாண்டிய நாட்டை இடமாக கொண்டு இவ் உலகிற்கே தமிழ் அளித்தபடியால், நம் பாண்டிய நாட்டின் பெருமை சொல் மற்றும் நூல்களுக்கும் அப்பாற்பட்டு விளங்கும். இன்றும் சேர, சோழ நாட் டை சார்ந்தவர்கள் நம் நாட்டை தமிழ் நாடு என்றே அழைப்பது நம் பெருமையை சாற்றும்.

அமைச்சர்: மாமன்னா! தங்களுக்கு ஓர் நற்செய்தி. நம்முடைய ஆட்சிக்கு உட்பட்ட திருவாதவூரில் அந்தண குலத்தைச் சேர்ந்த சிவபாத்தியர் என்பவர் வேதம் மற்றும் சைவ ஆகமங்களை முழுமையாகக் கற்று 16 வயதிலேயே 64 கலை ஞானங்களையும் உடையவராகத் திகழ்கிறார்.

மன்னர்:- மிக்க மகிழ்ச்சி 16 வயதிலேயே அனைத்து கலை ஞானங்களையும் உடையவராக இருக்கின்றாரா? அவரை நான் உடனே பார்க்கவேண்டும். அமைச்சரே! அவரை தக்க மரியாதையுடன் நம் அரசவைக்கு அழைத்து வாருங்கள்.

அமைச்சர்:- தங்கள் ஆணை மன்னா.

மகுடம்:- பாண்டிய மாமன்னர் அரிமருத்தன பாண்டியர் வாழ்க! வாழ்க!

பின் குரல்:- பாண்டிய மன்னன் திருவாதவூரரை வரவழைத்து மகிழ்ந்து தகுந்த சிறப்புகளைச் செய்தான். திருவாதவூராரின் மனுசாத்திர புலமையும், வேத ஆகம ஞானத்தையும் கண்ட மன்னன் முதலில் அவரை அமைச்சர்களுல் ஒருவராக நியமித்தான். பின்பு யாவர்க்கும் தலையாய் விளங்கும் முதலமைச்சராக ஆக்கினான்.

--------------------------------------------------------------------------------------------

காட்சி - 2

இடம்:- அரிமர்த்தன பாண்டிய மன்னன் அரசவை

மகுடம்:- தென் திரு ஆலவாய் ஈசர் அடி போற்றி, திரு நீற்றின் அன்பு நெறி பாதுகாத்து செங்கோல் ஆட்சி புரியும் பாண்டிய மாமன்னர் அரிமருத்தன பா ண்டியர் வாழ்க! வாழ்க!

மன்னன்:- திருவாதவூரரே! தாங்கள் முதலமைச்சராக பதவி ஏற்றபின் நம் நாடு அனைத்து துறைகளிளும் சிறந்து விளங்குகின்றது. குறு நில மன்னர்கள் தவறாது வரி செலுத்துகின்றனர், நம் ஆட்சிக்குட்பட்ட பரப்பளவு அதிகரித்துள்ளது. நம் நாட்டிற்க்கு கண்ணும் கவசமுமாக தாங்கள் விளங்குகின்றீர்கள். அமைச்சர்கள்:- ஆம் மன்னா மிகவும் சரியாக சொன்னீர்கள். திருவாதவூரர்:- தமிழ் வளர்க்கும் வேந்தே! எல்லாம் வல்ல சோமசுந்தரக்கடவுளின் திருவருளும், தங்களின் ஆணையுமே என்னை வழி நடத்துகிறது.

காவலர்:- பாண்டிய மாமன்னா! தங்களை வணங்குகின்றேன், தங்களைக் காண குதிரைகளைப் பராமரிக்கும் சேவகர் வந்துள்ளார்.

மன்னர்:- அவரை அழைத்து வாருங்கள்.

குதிரைச் சேவகர்:- பாண்டிய பேரரசே! நின் புகழ் வாழ்க! அரசே, நம்முடைய குதிரை லாயத்தில் பல குதிரைகள் இறந்துவிட்டன், எஞ்சியன யாவும் நோய் கொண்டனவாகவும், முதுமை உடையனாகவும் உள்ளன. நம்மிடம் நல்ல குதிரைகள் ஏதும் இல்லை. தாங்கள் இதற்கு ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மன்னர்:- அப்படியா! நம்முடைய படைகளில் குதிரைப்படை முக்கியப் பங்கு வகிக்கின்றது. அதில் எந்த குறையும் வாராது பார்த்துகொள்ளவேண்டியது நம்முடைய தலையாய கடமை. உயர்ந்த ரக குதிரைகளை வாங்கி இதனை ஈடு செய்யவேண்டும்.

முதலமைச்சரே! நம்முடைய கருவூல அறையில் இருந்து தேவையான செல்வங்களை எடுத்துச் சென்று உயர்ந்த ரக குதிரைகளை வாங்கி வா ருங்கள். மிக முக்கியமான இந்த பணியைத் தங்களைத் தவிர வேறு யாராலும் சிறப்பாகச் செய்ய இயலாது.

திருவாதவூரர்:- தங்கள் உத்தரவு மன்னா! இப்பொழுதே சென்று நம் நாட்டிற்க்குத் தேவையான உயர்ந்த ரக குதிரைகளை வாங்கி வருகிறேன்.

மன்னர்:- மிக்க மகிழ்ச்சி சென்று வாருங்கள்.

 

வாருங்கள்.

 
ஞானநாடகம் (மாணிக்கவாசகர்) - ஆட்கொண்ட பிரான் - பகுதி-2 - வாதவூரடிகளுக்கு உபதேசித்தது
 

 

காட்சி - 3

இடம்:- திருப்பெருந்துறை

பின் குரல்:- இறைவர் குரு வடிவினராய் ஒரு குருந்த மரத்தின் நிழலில் எழுந்தருளி இருக்க அவரைச் சுற்றி சிவ கண நாதர்கள் சீடர்களாக விளங்கின÷. அவ்வழி சென்றுகொண்டிருக்கும் திருவாதவூரர் திருவைந்தெழுத்தின் இனிய ஓசை கேட்டு ஈர்க்கப்படுகின்றார்.

திருவாதவூரர்:- குருந்த மர அடியில் அந்தண கோலத்தினராய் கையில் சின்முத்திரையுடன் விளங்கும் இக் குருபரனைக் காணும்போது, அம்பலத்தில் ஆடிய ஆனந்த வடிவமும், கல்லால் மரத்தின் கீழ் சனகாதி முனிவர்களுக்கு உபதேசித்த வடிவமும் எனக்கு எளிதாகத் தோன்றுகின்றது போல் உள்ளதே! சிவ சிவா!

பின் குரல்:- ஞான தேசிக வடிவினராய் இருக்கும் இறைவன் திருவுருவத்தைக் கண்டு திருவாதவூரர் உள்ளும் புறமும் உருக செய்வதறியாது சிரசின் மேல் கைகூப்பி நிற்கிறார். இறைவர் தம் செந்தாமரை போன்ற சேவடியை திருவாதவூரர் தலைமேற்ல் வைத்துத் திருவடி தீக்கை அளிக்கிறார். பின்னர் அவருக்கு சூக்கும பஞ்சாக்கரத்தை உபதேசித்தும் பாசக்கட்டை அறுக்கிறார். திருவாதவூரருக்குப் போக்கும் வரவும் இல்லாத பூரண வடிவமும், மெய்ம்மையான ஆனந்தமும் உண்டாயிற்று

இறைவர்:- அன்பனே! செந்தமிழ்ச் சொற்களாகிய மாணிக்கங்களை பதித்து, அன்பெனும் கயிற்றில் கோர்த்து மாலை சாத்தும் தொண்டனாகிய நீ இன்று முதல் மாணிக்கவாசகன் என்றே அழைக்கப்படுவாய்.

மாணிக்கவாசகர்:- கருவுரும் ஆருயிர் உண்மை இது என்று காட்டவல்ல குருபரனே! கோகழி ஆண்ட குருமணியே! நாயிற்கடையாய் கிடந்த அடியேற்கு தாயிற் சிறந்த தயாவான தத்துவனே, என் செல்வமே, சிவபரம்பொருளே! தேவாணர் உடைய தனிபெருங்கருணைக்கு யான் இலன் ஒர் கைம்மாறு சிவ சிவ! சிவ சிவ!

பாடல்:- தந்ததுன் தன்னைக் கொண்டதென் தன்னைச்
சங்கரா ஆர்கொலோ சதுரர்
அந்தமொன்று இல்லா ஆனந்தம் பெற்றேன்
யாது நீ பெற்றதொன்று என்பால்
சிந்தையே கோயில் கொண்ட எம் பெருமான்
திருப்பெருந் துறையுறை சிவனே
எந்தையே ஈசா உடலிடம் கொண்டாய்
யானிதற் கிலன் ஓர்கைம் மாறே 

 

மாறே 

 
ஞானநாடகம் (மாணிக்கவாசகர்) - ஆட்கொண்ட பிரான் - பகுதி-3 - திருப்பெருந்துறை உறை கோயில் காட்டியது
 

 

 

காட்சி - 4

இடம்:- திருப்பெருந்துறை

மாணிக்கவாசகர்:- சிவபெருமான் எனக்குச் செய்த கருணையை என்னென்பது? யார் பெறுவார் இப்பேரருள்? இக்காயத்தில் அடைப்புண்டு கிடந்த என்னை குருபரனார் திருவருள் வெள்ளத்தால் அந்தமிலாத அகண்டத்தோடு சேர்த்தனர். இத்துனை காலமாக இது என்னுடையது, இது என்னுடையது அல்ல என்றெல்லாம் மாய வலைப்பட்டு அல்லவா கிடந்தேன்! இனி யான் ஆர்? எனது ஆர்? பாசம் ஆர்? ஆர் உற்றார்? ஆர் அயலார்? இறைவன் ஒருவனே எல்லாவற்றிற்கும் உரிமை உடையவன். நம் ஒவ்வொருவரிடம் இருப்பதெல்லாம் அவன் கொடுத்து வைத்திருப்பதே. நம்மிடத்திலே முன்பே இருந்ததும் இல்லை. நிலையாக நம்மிடம் இருக்கப் போவதும் இல்லை. தனு கரண புவன போகங்கள் யாவும் அப்படியே! இவற்றின் மீது ஆசையுற்று பொய் உரிமை கொண்டாடாது, இவற்றை இறைவனை நோக்கிய நம் பயணத்தில் நல்ல கருவிகளாகப் பயன்படுத்திக் கொள்வதே அறிவுடைய செயல்! எம் பெருமானுக்கு அழகிய ஆலயம் அமைக்கவேண்டுமே! குதிரை வாங்குவதற்காக கொண்டு வந்த செல்வம் நிறையவே இருக்கின்றது. இப்பூமி சிவன் உய்யக் கொ ள்கின்றவாறு ஆகையால் இச்செல்வத்தை குருபரனாய் ஆண்டுகொண்டு அருளிய திருப்பெருந்துறை உறை சிவபெருமானுக்கும் அவருடைய வழிபாட்டிற்க்கும் கொ டுத்தலே சாலச் சிறந்தது, எந்தையே! ஈசா!

பின் குரல்:- தன்னிடமிருந்த செல்வத்தைக்கொண்டு குருந்தமர நிழலில் தமக்கு அருள் புரிந்த சிவபெருமானுக்கு நல்லதொரு ஆலயம் எழுப்பினார். இறைவனார் அருளியது போல் செந்தமிழ்ப் பாமாலைகள் திருப்பெருந்துறை உறையும் சிவனாருக்கு பாடல்களைப் பாடிக்கொண்டு தம்மிடம் இருந்த செல்வங்கள் அனைத்தையும் திருப்பணிகளுக்கும் அடியார் பெருமக்களுக்குமே செலவிட்டார்.

மாணிக்கவாசகர்:- இதயப் பாசுரம் பாடுகிறார்.

பாடல்:- இன்றெனக் கருளி இருள்கடிந் துள்ளத்து
எழுகின்ற ஞாயிறே போன்று
நின்ற நின் தன்மை நினைப்பற நினைந்தேன்
நீயலால் பிறிதுமற் றின்மை
சென்றுசென் றணுவாய்த் தேய்ந்துதேய்ந் தொன்றாம்
திருப்பெருந் துறையுறை சிவனே
ஒன்றும் நீ யல்லை அன்றியொன் றில்லை
யாருன்னை அறியகிற் பாரே

சேவகர்:- பெருமானே! பாண்டிய மன்னரிடமிருந்து ஒலை வந்துள்ளது, குதிரை வரும் செய்தியைப் பற்றி உடனடியாகத் தெரிவிக்குமாறு கட்டளையிட்டுள்ளார்,

மாணிக்கவாசகர்:- எம்பெருமானே! ஞான தேசிகராய் விளங்கும் பரம்பொருளே! பாண்டிய மன்னன் கொடுத்த பொருளை தேவாணர் ஆலயத் திருப்பணிக்கும் அடியார் பெருமக்களுக்கும் செலவிடும் சிந்தையை அளித்தீர், இனி பாண்டிய நாட்டிற்கு எவ்வாறு குதிரைகளை கொண்டு செல்வது, மன்னனுக்கு என்ன பதில் கூறுவது, விடையவனே! திருவருள் வகை யாதோ?!

அசரீரி:- மாணிக்கவாசகனே! பாண்டிய மன்னனுக்கு எத்தன்மையிலும் குதிரைகள் வந்து சேரும் என்று தெரிவித்து ஓலை எழுதி அனுப்புக, நாம் பாண்டிய மன்னன் மகிழுமாறு குதிரைகளை பின்னே கொண்டு வருகின்றோம். நீ முன்னே மதுரையை அடைந்து இருக்க.

மாணிக்கவாசகர்:- இறைவா! என்னே உனது தனிப்பெருங்கருணை, வேண்டத்தக்கது அறிவோய் நீ, வேண்ட முழுதும் தருவோய் நீ!

பாடல்:- வேண்டத் தக்க தறிவோய் நீ வேண்ட முழுதுந் தருவோய்நீ
வேண்டும் அயன்மாற் கரியோய்நீ வேண்டி என்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீயா தருள்செய்தாய் யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசொன் றுண்டென்னில் அதுவும் உன்றன் விருப்பன்றே 

 

காட்சி - 5

இடம்:- மதுரை, மாணிக்கவாசகர் இல்லம்.

பின் குரல்:- இறைவர் அருள் ஆணையை ஏற்று மாணிக்கவாசகர் மதுரை வருகிறார். பாண்டிய மன்னனை சந்தித்து குதிரைகள் விரைவில் வந்து சேரும் என்றும், அக்குதிரைகளால் பாண்டியன் துரகபதி என்னும் சிறப்புப் பெயரைப் பெறுவான் என்றும் கூறினார். இதனைக்கேட்ட பாண்டிய மன்னன் திருவாதவூரரைப் பாராட்டி வெகுமதிகள் பல அளித்தான். மாணிக்கவாசகர் தனது திருமனைக்கு எழுந்தருள்கிறார். அவரது உறவினர்கள் அவரை இன்னும் திருவாதவூரராகவே பார்க்கின்றனர்.

உறவினர்-1 (பெரியவர்) :- திருவாதவூரரே! அமைச்சர் பொருப்பினை ஏற்றால் அரசனுக்கு ஏற்றவாறு நடந்துகொள்ளுதல் வேண்டும் என்று அற நூல் வல்லுனர்கள் கூறுவார்கள், அது உமக்கு தெரியாததா?

உறவினர்-2:- அரசியலும், அமைச்சியலும் தெரிந்த நீவீர் நடந்துகொண்ட விதம் பொருத்தம்தானோ? நாங்கள் உமக்கு அறிவுரை கூறத் தக்கது யாது உள்ளது?

உறவினர்-1 (பெரியவர்) :- மறு நாள் குதிரைகள் வருவதாக சொன்னீரே, நாளை குதிரைகள் வரவில்லை என்றால் யாது செய்வீர்?

உறவினர்-2:- உம்மைச் சார்ந்துள்ள உறவினர்கள், நண்பர்கள், நல்லோர்கள் முதலானவர்களைக் காப்பது உமது கருத்து அல்லையோ?

மாணிக்கவாசகர்:- உறவினர்கள், நண்பர்கள், துன்பம், இன்பம், உடற்பற்று, பொருட்பற்று, சினம், பெருமை, சிறுமை, நல்வினை, தீவினை முதலானவை யாவும் திருப்பெருந்துறை உறை ஈசன் அருளால் விட்டொழிந்தேன். இனி எனக்குத் தாய், தந்தை, ஆசான் என யாவும் சிவபெருமானே, சிவனடியாரே உறவினர்கள், உருத்திராக்கமே ஆபரணம், பாண்டியன் என்னைத் தண்டித்தாலும், பரிசு அளித்தாலும் எனக்கு ஒன்றே. நான் சிவபெருமானை என்றும் மறவேன்.

உறவினர்கள்:- இவருக்கு என்ன ஆயிற்று? ஏன் இப்படி பேசுகின்றார்? பாண்டிய மன்னன் என்ன செய்யப் போகின்றார் என்று தெரியவில்லையே?

பாடல்:- உற்றாரை யான்வேண்டேன் ஊர்வேண்டேன் பேர்வேண்டேன்
கற்றாரை யான்வேண்டேன் கற்பனவும் இனியமையும்
குற்றாலத் தமர்ந்துறையும் கூத்தா உன் குரை கழற்கே
கற்றாவின் மனம் போலக் கசிந்துருக வேண்டுவனே

 

வேண்டுவனே

 
ஞானநாடகம் (மாணிக்கவாசகர்) - ஆட்கொண்ட பிரான் - பகுதி-4 - நரிகளைப் பரிகள் ஆக்கியது
 

 

காட்சி - 6

இடம்:- பாண்டிய அரசவை

பின் குரல்:- குறித்த நாளில் குதிரைகள் வரவில்லை, பாண்டிய மன்னன் திருவாதவூரரை அழைத்து விசாரித்தபோது, இன்னும் மூன்று தினங்களில் குதிரைகள் வந்துவிடும் என்றும், அவைகளை நிறுத்த பெரியதான லாயங்களும், தண்ணீர் குளங்களும் அமைக்குமாறு கேட்டுக்கொண்டார், மன்னனும் அவ்வாறே செய்தான். மூன்று நாட்கள் கழிந்தன, குதிரைகள் வரவில்லை.

அமைச்சர்:- அரசே! குதிரைகள் வந்துவிடும் என்று திருவாதவூரர் பலமுறை உறுதியளித்தும் இதுவரை ஒன்றும் நடக்கவில்லை.

மன்னர்:- ஆமாம் அமைச்சரே, நாமும் பல நாட்கள் காத்திருந்து பார்த்துவிட்டோ ம், முதலில் ஒலை அனுப்பினார், பின் நேரில் வந்தும் உறுதி அளித்தார், ஒன்றும் நடக்கவில்லை. பின் மூன்று தினங்களில் வந்துவிடும் என்று கூறினார். அவருடைய உறுதிமொழிக்கு இணங்கி பெரிய லாயங்களும், தண்ணீர் குளங்களும் அமைக்க ப்பட்டுவிட்டன, இன்னும் குதிரைகளோ, அதைப்பற்றிய எந்த செய்தியும் வந்தவாறில்லை, என் பொறுமைக்கும் எல்லை உண்டு. காவலரே! திருவாதவூரரை தண்டித்து சிறையில் அடையுங்கள். அமைச்சரே! நம் கருவூலத்திலிருந்து எவ்வளவு பொருட்கள் எடுத்து செல்லப்பட்டன என்று கணக்கிடுங்கள். நாம் அவற்றை திருவாதவூரரிட மிருந்து திரும்ப பெறவேண்டும்.

அமைச்சர்:- உத்தரவு மன்னா!

காட்சி - 7

இடம்:- சிறைச்சாலை

பின் குரல்:- பாண்டிய மன்னன் ஆணைப்படி திருவாதவூரரை சிறையில் அடைத்தனர், சிறையில் திருவாதவூரருக்கு திரு ஆலவாய் கோயிலில் இறைவனாருக்கு வந்தனை செய்து ஏத்தும் ஒலி மற்றும் மங்கல வாத்திய ஒலிகள் கேட்கிறது

மாணிக்கவாசகர்:- எந்தையே! முந்திய முதல் நடு இறுதியும் ஆனவனே! தேவர்களின் தலைவனே! திருப்பெருந்துறை உறைபவனே! சோமசுந்தரக்கடவுளே! சிறியேனுக்கு இரங்கிக் கருணை புரியாயோ! ஊரார் உன்னை நகைத்தலை நினைக்கவில்லையோ! உன் அடிமையின் துயரறிந்தும் வாராயோ! தென் திரு ஆலவாயா! சொக்க நாதா! தண்ணார் தமிழ் அளிக்கும் தன்பாண்டி நாட்டனே! அடியேனை காத்தருள்

பின் குரல்:- மாணிக்கவாசகா஢ன் துயரத்தைப் போக்க திருவுள்ளம் கொண்ட கயிலை நாதன், நந்தி தேவர் முதலான கண நாதர்களை அழைத்து "இன்று ஆவணி மூல நட்சத்திரம், பாண்டிய மன்னன் சினம் கொள்ளும் முன், நாம் அவனுக்கு஡஢ய குதிரைகளை சேர்த்தாக வேண்டும். நீங்கள் காட்டில் உள்ள நா஢களை பா஢களாக்கி முன் செல்லுங்கள், நாம் உங்கள் பின்னே குதிரை வீரனாகத் தோன்றி வருவோம்" என்று அருளினார்.

பாடல்:- நா஢யைக் குதிரைப் பா஢யாக்கி ஞால மெல்லாம் நிகழ்வித்துப்
பொ஢ய தென்னன் மதுரையெல்லாம் பிச்ச தேற்றும் பெருந்துறையாய்
அ஡஢ய பொருளே அவினாசி அப்பா பாண்டி வெள்ளமே
தொ஢ய வா஢ய பரஞ்சோதீ செய்வ தொன்றும் அறியேனே

காட்சி - 8

பின் குரல்:- குதிரைகள் வருகின்ற செய்தி கேட்டு பாண்டிய மன்னன் மகிழ்ந்து திருவாதவூரரை விடுதலை செய்து தகுந்த மரியாதையுடன் அழைத்து வர உத்தரவிடுகிறார்.

இடம்:- அரண்மனை வாயில்

பின் குரல்:- சோமசுந்தர கடவுள் வேதமாகிய குதிரை மீது வர, கண நாதர்கள் வீரர்களாக மற்ற குதிரைகளின் மீது வருகின்றனர்.

மன்னன்:- ஆகா! மிகவும் அழகிய குதிரைகள், உங்களில் தலைமையாக உடையவர் யார்?

கண நாதர்:- இவரே! எங்கள் நாயகர்.

(* பாண்டிய மன்னன் குதிரைச் சேவகனாக வந்த இறைவரை வணங்குகிறான், பின் நாணுகிறான் )

இறைவர்:- பாண்டிய மன்னவா! எங்களுடைய குதிரை ஏற்றத்தை காண்பாயாக.

மன்னன்:- மிகவும் அற்புதம்.

பின் குரல்:- அவையோர் மட்டுமின்றி, தேவர்களும் மயங்கும்படி ஐந்து கதியும்,பதினெட்டு சாரியும் மற்று முதலான வேறுபாடுகளும் தோன்ற தாம் அசையாதவராகி விளங்கி குதிரையை சற்றே அசைத்து காட்டினார். அவ்வாறே மற்ற வீரர்களும் செய்தனர்.

மன்னன்:- மிகவும் அற்புதம்.

அமைச்சர்:- மிகவும் அருமை.

இறைவர்:- பாண்டிய மன்னவா! பாடலம், கோடகம், இவுளி, வன்னி, குதிரை, பரி, கச்ந்துகம், புரவி என்கிற எட்டு வகையான குதிரைகளும் இங்கு உள்ளன. உன்னுடைய பொருட்களைக் கொண்டுவந்து உன் அமைச்சர் என்னிடம் நிரம்ப கொடுத்தமையால், விலை மதிக்க இயலாத இந்த குதிரைகள் உனக்கு கிடைத்தன. ஆயினும் இக்குதிரைகளை இன்று நீர் கயிறு மாற்றி உம்முடையதாக செய்து கொள்க. இதுவே குதிரை விற்கும் விதி.

மன்னர்:- குதிரைச் சேவகரே! தங்களுடைய குதிரை ஏற்றத்தைக் கண்டு மிகவும் வியந்தேன். மிகவும் சிறப்பாக குதிரைகளின் இயல்பையும், சிறப்பையும் எடுத்துக் கூறினீர்கள். இப்பொழுதே கயிறு மாற்றி இக்குதிரைகளை பெற்றுக்கொள்கிறேன். இப்பட்டாடையை தாங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள்.

(இறைவர் அப்பட்டாடையை தன் சிரசில் சூடிக்கொள்கிறார், இறைவரும் கண நாதர்களும் மறைகின்றனர்)

மன்னர்:- திருவாதவூரரே! தங்களை சிறை செய்ததற்கு நான் வருந்துகிறேன். தங்களால்தான் நம் நாட்டிற்கு விலைமதிக்க முடியாத அரிய குதிரைகள் கிடைத்துள்ளன. இந்த வெகுமதிகளை ஏற்றுக்கொள்ளுங்கள். தாங்கள் முன் போல் அரசவைக்கும் வரவேண்டும்.

மாணிக்கவாசகர்:- மன்னா! எல்லாம் சோமசுந்தர கடவுளின் திருவருட் செயல், நான் ஏதும் செய்யவில்லை. எல்லா புகழும் செந்தமிழ் சொக்க நாதருக்கே! சிவ சிவ!!

பாடல்:- சதுரை மறந்தறி மால்கொள்வர் சார்ந்தவர் சாற்றிச் சொன்னோம்
கதிரை மறைத்தன்ன சோதி கழுக்கடை கைப்பிடித்துக்
குதிரையின் மேல்வந்து கூடிடு மேற்குடி கேடுகண்டீர்
மதுரையர் மன்னன் மறுபிறப்போடே மறித்திடுமே 

 

 

 
ஞானநாடகம் (மாணிக்கவாசகர்) - ஆட்கொண்ட பிரான் - பகுதி-5 - பரிகளை நரிகள் ஆக்கியது
 

 

காட்சி - 9

பரி நரியாகிய படலம்

இடம்:- குதிரை லாயம்

பின்குரல்ள் பாண்டிய மன்னன் அளித்த வெகுமதிப் பொருட்களைக் கொண்டு சென்ற மாணிக்கவாசகரை அவரது சுற்றத்தினர் சிறந்த முறையில் வரவேற்க, வாதவூரடிகள் சோமசுந்தரக் கடவுளை தியானித்தபடியே இருந்தார். அன்றிரவே இலாயத்தில் இருந்த குதிரைகள் அனைத்தும் திரு ஆலவாய் உறையும் அண்ணல் திருவிளையாடலால் முன் போல் நரிகளாக மாறின. அந்நா஢கள் மற்ற குதிரைகளையும் கடித்து இலாயத்தை தாண்டி மதுரை மாநகருக்குள் புகுந்து ஊளையிடத் துவங்கின. முத்தமிழ் ஒலியும், மங்கள ஒலிகளும் முழங்கும் மதுரையம்பதியில் நா஢களின் ஊளையினால் மக்கள் விழித்தெழுந்து அதிர்ச்சியடைந்தனர்.

காவலர்-1:- ஏ என்னப்பா இது? எங்கு பார்த்தாலும் நா஢களாக இருக்கின்றது.

காவலர்-2:- இவை அனைத்தும் சற்று முன்பு வரை பா஢களாக இருந்தன, இப்பொழுது நா஢களாக மாறி இலாயத்தில் உள்ள குதிரைகளைக் கடித்து அட்டகாசம் செய்கின்றன. நாம் இதை மன்னனிடம் சொல்லவேண்டும்.

காவலர்-1:- இதனை அறிந்தால் பாண்டிய மன்னர் கடுங்கோபம் கொள்வார் என்ன நடக்கப்போகிறதோ?

காட்சி - 10

இடம்:- பாண்டிய அரசவை

காவலர்-1:- தென்னவனே! தென்னவனே! பெருந்தவறு நடந்துவிட்டது.

மன்னர்:- காவலரே! என்ன ஆயிற்று? ஏன் இந்த பதற்றம்?

காவலர்-2:- அரசே! தாங்கள் வாங்கிய குதிரைகள் அனைத்தும் நேற்று இரவு நரிகளாகி மாறி இலாயதிலுள்ள மற்ற குதிரைகளையும் கடித்து குதறிவிட்டுக் கா ட்டுக்குள் ஓடிவிட்டன.

மன்னர்:- என்ன? பரிகள் நரிகளாகிவிட்டனவா? காவலரே உண்மையைத்தான் சொல்கிறீரா? நம்ப முடியவில்லையே!

காவலர்-1:- ஆம் அரசே, உண்மைதான், இந்த மாயச்செயலை எங்கள் கண்களால் நேரில் கண்டோ ம்.

மன்னர்: சேனாதிபதி, இவர்கள் என்ன கூறூகிறார்கள்?

சேனாதிபதி:- உண்மைதான் மன்னா! அந்நரிகள் நகருக்குள் புகுந்து வீடுகளில் உள்ள சேவல்களைப் பிடித்தும், பந்தல்களை அழித்தும், கரும்புகளை முறித்தும் நா சம் செய்திருக்கின்றன.

மன்னர்:- என்ன மாயம் இது! அந்த குதிரைச் சேவகன் அக்குதிரைகளின் சிறப்பியல்புகளை பலவாறு கூறினாரே! ஆனால் அவை அனைத்தும் ஊளையிடும் நரி களாக மாறி நம் நாட்டிற்கே தீங்கிழைக்கும் என்று கனவிலும் நினைக்கவில்லை. மிகப்பெரிய தவறு நடந்துவிட்டது. அரசாங்கத்திற்கு துரோகம் இழைத்தவர்களுக்கு த குந்த தண்டணை அளிக்கவேண்டும், வாதவூரர் எங்கே?

அமைச்சர்:- அவர் அரசவைக்கு வரக்கூடிய நேரம்தான், இப்பொழுது வந்துவிடுவார்.

மன்னர்:- வரட்டும், அவர் வந்தபின் பார்த்துக்கொள்ளலாம்.

(வாதவூரர் அரசவைக்கு வருகிறார்)

மன்னன்:- வாதவூரரே என்னுடைய பொருட்களைக் கொண்டு சென்று நல்ல முறையில் குதிரை வாங்கி வந்தீரோ? அரசாங்கத்திற்கு நீர் செய்யும் பணி இதுதானே ஡?

மாணிக்கவாசகர்:- மன்னா! அக்குதிரைகளிடம் ஏதேனும் குற்றம் உள்ளதா?

மன்னன்:- குற்றமா, அக்குதிரைகள் யாவும் இரவு நரிகளாகி மற்றக் குதிரைகளையும் கடித்து மக்களையும் அச்சுறுத்தி காட்டுக்குள் ஓடிவிட்டன. எனக்கு கண்ணும் கவசமுமாக முன்னே விளங்கி பின்னர் என் பொருட்களை கவர்ந்து கொள்ளவோ இவ்வாறு செய்தீர்?

மாணிக்கவாசகர்:- ஆலவாயா! இதுவும் உன் திருவிளையாடலா? சிவ! சிவ!

மன்னன்:- செய்வதையும் செய்துவிட்டுப் பழியை என் சோமசுந்தரக் கடவுள் மீதா இடப்பார்க்கிறீர்?! காவலரே! வாதவூரரை கைது செய்து சிறையில் அடையுங்கள்.

காவலர்:- உத்தரவு மன்னா!

(காவலர்கள் வாதவூர் அடிகளை கைது செய்து சிறைக்கு அழைத்துச் செல்கின்றனர்) பாடல்:- கூறும் நாவே முதலாகக் கூறுங் கரணம் எல்லாம்நீ
தேறும் வகைநீ திகைப்புநீ தீமை நன்மை முழுதும்நீ
வேறோர் பரிசிங் கொன்றில்லை மெய்ம்மை உன்னை விரித்துரைக்கில்
தேறும் வகைஎன் சிவலோகா திகைத்தால் தேற்ற வேண்டாவோ

காட்சி - 11

இடம்:- வைகை நதிக்கரை

பின் குரல்:- பாண்டிய மன்னனின் ஆணையின்படி காவலர்கள் வாதவூரரை சுட்டெரிக்கும் வெயிலில் நிறுத்தி துன்புறுத்துகின்றனர்.

காவலர்-1:- என்ன வாதவூரரே! கால்கள் ரொம்ப சுடுகின்றதோ?

காவலர்-2:- நம் மன்னர் உங்களை எவ்வளவு நம்பினார், கருவூலத்திலிருந்து கொண்டு சென்ற பொருட்களை திரும்ப பெறும்வரை உங்களை இவ்வாறு தண்டிக்க சொல்லி பாண்டிய மன்னன் ஆணையிட்டுள்ளார்கள்.

மாணிக்கவாசகர்:- சிவ! சிவ! நீங்கள் உங்கள் கடமையைத்தான் செய்கின்றீர்கள், எல்லாம் ஈசன் செயல். கோகழி ஆண்ட குருமணியே! பாண்டிய நாட்டை சிவ஧ லாகம் ஆக்கியவனே! என்னைக் காத்தருள்.

பின் குரல்:- ஆலவாய் பெருமானுடைய திருவருளினால் வைகை ஆற்றில் வெள்ளம் பெருகி கடல் போல பெருக்கெடுத்து ஓடத் துவங்கியது. நதிக்கரைகள் உந டந்தன, மரங்கள் வேரோடு சாய்ந்தன, மக்கள் வாழ் இடங்களிளும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

காவலர்-1:- ஏ என்னப்பா இது, வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து வருகிறது வா ஓடிவிடலாம்.

காட்சி - 12

பிட்டுக்கு மண் சுமந்த படலம்

இடம்:- மதுரை மாநகர வீதி

பறை அறிவிப்பவர்:- (பறை தட்டுகிறார்) மதுரை மாநகர மக்களுக்கு ஓர் அறிவிப்பு! வானளாவி பெருகி வரும் வைகை ஆற்று வெள்ளம் நம் மதுரை மாநகருள் புகுந்து வருவதால் பாண்டிய மாமன்னனின் உத்தரவு படி தனித்தனியே குடிமக்களுடைய பெயர்கள் எழுதப்பட்டு ஒவ்வொருவரும் இவ்வளவு கரையை உயர்த்தி கட் டவேண்டும் என்று பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. அனைவரும் தவறாது வந்து தங்கள் கடமையை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது அரசு உத்தரவு.

 

 

உத்தரவு.

 
ஞானநாடகம் (மாணிக்கவாசகர்) - ஆட்கொண்ட பிரான் - பகுதி-6 - வந்தியிடம் பிட்டமுது செய்தது
 

 

 

காட்சி - 13

இடம்:- மதுரை மாநகர வீதி (வந்திப்பாட்டி பிட்டு விற்கும் இடம்)

ஊரார்:- வந்திப்பாட்டி பிட்டு குடுங்க, ரொம்ப பசிக்கிறது.

வந்தியம்மை:- ஏனப்பா, உனக்குத் தொ஢யாதா, நான் முதற்கண் சோமசுந்தரக் கடவுளக்குப் படைத்த பின்புதான் விற்பனையை தொடங்குவேன் என்று, சற்று பொறு. ஆலவாயப்பனே! சொக்கா! திருவமுது செய்தருள், என் குறை பொறுத்து இப்பிட்டினை ஏற்று அருள்! ... இந்தாப்பா சாப்பிடு!

ஊரார்:- (பிட்டை வாங்கி சாப்பிடுகிறார்) ஆகா! மிகவும் அருமை! வந்திப்பாட்டி நீ பாண்டிய மன்னன் உத்தரவுப் படி கரை அடைக்கச் செல்லவில்லையா?

வந்தியம்மை:- இல்லையப்பா, என் முதுமையின் காரணத்தால் என்னால் அப்பணியை செய்ய இயலாது. கூலியாளும் கிடைக்கவில்லை, என்ன செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை. சொக்கன் தான் எனக்குத் துணை.

ஊரார்:- நீ நாள்தோறும் வணங்கும் நம் ஆலவாய் அண்ணல் உனக்கு எப்படியாவது நிச்சயம் கை கொடுப்பார்.

(ஊரார் செல்கின்றார்)

வந்தியம்மை:- ஆம் என் அப்பன் கைதர வல்ல கடவுள் அல்லவா! ஆலவாயா, உன்னைத் தவிர எனக்கு வேறு யார் துணை. எனக்காக பணி செய்ய ஒரு கூலியாளும் இல்லையே நான் என் செய்வேன். அடியார்க்கு எளியனே! என்னைக் காத்தருள்.

பின் குரல்:- வந்தியம்மையின் வருத்தத்தை நீக்கும் பொருட்டு ஆலவாய் அண்ணலே கூலியாள் வேடத்தில் வருகிறார்.

இறைவர்:- கூலிக்காக வேலை கொடுப்பார் உண்டோ ?

வந்தியம்மை:- தம்பி, இங்கு வருகிறாயா, எனக்குப் பதிலாக வைகைக் கரையை மண் கொண்டு அடைப்பாயா?

இறைவர்:- ஓ அடைக்கிறேனே, அதற்கு என்ன கூலி தருவீர்கள்.

வந்தியம்மை:- இப்பிட்டினை கூலியாக ஏற்றுக் கொள்ளப்பா.

இறைவர்:- ஆகா! பிட்டா, எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது கொஞ்சம் பிட்டு கொடுங்கள், அதனை இனிது அருந்தி களைப்பு தீர்ந்தபின் கரையை அடைக்கச் செல்கிறேன். இந்த துணியிலேயே பிட்டைக் கொடு.

(இறைவர் பிட்டினை உண்கிறார்)

அம்மையே இந்தப் பிட்டு மிகவும் சுவையுடையதாய் இருக்கிறது. தாய் தந்தை இன்ச்றி தன்னந்தனியாய் வந்த எனக்கு ஒரு தாயைப் போல் இருந்து என் பசியைப் போக்கினாய். நான் இப்போது வைகைக் கரைக்குச் செல்கிறேன்.

வந்தியம்மை:- மிக்க நன்றி அப்பா. சொக்கநாதா உன் கருணையே கருணை.

 

 

 
ஞானநாடகம் (மாணிக்கவாசகர்) - ஆட்கொண்ட பிரான் - பகுதி-7 - பிட்டுக்கு மண் சுமந்தது
 

 

 

காட்சி - 14

இடம்:- வைகை ஆற்றங்கரை

இறைவர்:- ஐயா! நான் வந்தியம்மையின் கூலியாள், வந்தியம்மையின் பெயரை பதிவு செய்து கொள்ளுங்கள் நான் கரையை அடைக்கச் செல்கிறேன்.

பின்குரல்:- கூலியாளாக வந்த சொக்கநாதப் பெருமான் கூடை நிரம்ப மண்ணை எடுத்துக் கொட்டியும், வெள்ளத்தில் கூடை விழுமாறு செய்தும், பின் அதனை கு தித்து எடுத்தும், மர நிழலில் படுத்து உறங்கியும், பணி செய்பவர்களோடு சேர்ந்து பாடி ஆடியும் காவலர்களைக் கண்டால் பணிவோடு இருப்பது போல் பாவனை செய்தும் திருவிளையாடல் பு஡஢கிறார்.

இறைவர்:- என்னப்பா, எப்போது பார்த்தாலும் வேலை செய்து கொண்டு இருக்கிறீர்கள். இங்கு வாருங்கள் ஆடிப் பாடலாம்.

ஊரார்:- ஏப்பா, சும்மா இரு, காவலர்கள் கண்டால் தண்டிக்கப் போகிறார்கள். எங்களை வேலை செய்ய விடு.

இறைவர்:- ம்... எனக்கு ரொம்ப பசிக்கிறது, வந்தியம்மையிடம் சென்று பிட்டு சாப்பிட்டு வருகிறேன்.

காவலர்:- வந்தியம்மைக்கு கொடுக்கப்பட்ட கரைமட்டும் உயராது அப்படியே இருக்கின்றதே! கூலியாள் எங்கே! அவரை அழைத்து வாருங்கள்.

(இறைவரை அழைத்து வருகின்றனர்)

இறைவர்:- ஏம்பா, பிட்டு சாப்பிட விடமாட்டீர்களா! சாப்பிடாமல் எப்படி வேலை பார்ப்பது.

காவலர்:- ஏன் இன்னும் கரையை அடைக்கவில்லை.

இறைவர்:- என்னைச் சாப்பிட விட்டால்தானே நான் கரையை அடைக்கமுடியும்.

காவலர்:- நீ இன்று காலை முதல் பலமுறை பிட்டு சாப்பிட சென்று விட்டாய், கரையை அடைத்த பாடில்லை. அதுமட்டுமின்றி அடைக்கப்பட்ட கரைகளின் மீது ஏறி மிதித்து விளையாடுகிறாய். நீ யார் சித்தனா? பித்தனா? இல்லை வந்தியம்மையை ஏமாற்றி பிட்டு அருந்த வந்த எத்தனா? அழகிய வடிவம் கொண்ட உன்னைக் கண்டால் கூலியாள் போலவும் தெரியவில்லை. உன்னைப் பற்றி பாண்டிய மன்னனிடம் அறிவிப்போம். மன்னர் வரக்கூடிய நேரம்தான் இது.

(பாண்டிய மன்னர் வருகிறார்)

மகுடம்:- பாண்டிய மாமன்னர் அரிமருத்தன பாண்டியர் வாழ்க! வாழ்க!

மன்னர்:- கரையின் ஒருபகுதி உயரவே இல்லையே என்ன இது? இப்பங்கை அடைப்பவர் எங்கே?

காவலர்:- மன்னா! இவர்தான், இவர் தன் பணியும் செய்யாது, மற்றவரையும் பணிசெய்ய விடாது ஆடிப் பாடியும், குதித்து விளையாடியும் நேரத்தைப் போக்கிக் கொண்டிருந்தார்.

மன்னர்:- என்ன தைரியம், கடமையைச் செய்யாது விளையாடி விட்டு என் முன் எந்த அச்சமும் இன்றி நிற்கின்றாரே?

(மன்னர் தன் கையிலுள்ள பிரம்பால் இறைவர் முதுகில் அடிக்கிறார்)

பின்குரல் :- பாண்டிய மன்னன் தன் கையிலுள்ள பொற்பிரம்பால் கூலியாள் வேடத்திலிருந்த இறைவரை அடிக்க சோதி வடிவான இறைவன் தான் கொண்டு வந்த கூடையிலுள்ள மண்ணை அவ் உடைப்பில் கொட்டி மறைந்தருளினார். அக்கணத்திலேயே அரசன் அடித்த அடி அரசன் முதுகிலும் இவ்வுலகிலுள்ள அனைத்து உயிர் கள் மீதும், தாய் வயிற்றிலுள்ள் குழந்தைகள் மீதும், மால், அயன் முதலான தேவர்கள் முதுகிலும் பட்டது. இறைவர் மண்ணைக் கொட்டிய இடம் மலை போன்று உயர்ந்து விளங்கியது

மன்னன்: என்ன இது அதிசயம்! அவர் மறைந்துவிட்டாரே! அவரை அடித்த அடி என் மீது மட்டுமல்லாது, உங்கள் அனைவர் மீதிலும் விழுந்ததே! வைகைக் கரையும் அடைபட்டுவிட்டதே! வந்தவர் யாரோ சாதாரணமானவர் இல்லை. தவறு செய்துவிட்டேனோ? ஆலவாயண்ணலே! ஒன்றுமே புரியவில்லையே!!

அசரீரி :-அரிமருத்தன பாண்டியனே! உன்னுடைய பொருட்கள் யாவும் தரும நீதியில் வந்தமையால் நமக்கும் நமது அடியவர்க்கும் வாதவூரன் உதவும்படி செய்தான். நரிகளைப் பரிகளாக்கி நாமே கொண்டு வந்து கொடுத்தோம். நம் அருளினாலேயே அவை மீண்டும் நா஢களாக மாறின. வாதவூரரின் துன்பத்தைப் போக்கும்படி வைகை ஆற்றில் வெள்ளத்தை உண்டாக்கினோம். வந்தியம்மைக்காக கூலியாளாக வந்து உன்னிடம் பிரம்படியும் கொண்டோ ம், நாமே மண்ணைக் கொட்டி வைகைக் கரையையும் சரிசெய்தோம். வந்தியம்மையின் துன்பத்தை நீக்கி சிவலோக வாழ்வும் அளித்தோம். அனைத்தையும் நாம் வாதவூரனின் பால் கொண்ட அன்பின் பொருட்டே செய்தோம். இவ்வடியவனின் பெருமையை நீ சிறிதும் தொ஢ந்து கொள்ளவில்லை. வாதவூரன் என்னிடம் மிகவும் அன்பு கொண்டவன். உனக்கு இம்மைப் பயனும் மறுமைப் பயனும் தேடிக்கொடுத்தவன், எம்மைத் தவிர வேறு எதையும் விரும்பாதவன். அவன் விருப்பப்படி செல்லுமாறு விடுத்து சைவ நன்னெறி காத்து நின்று செங்கோல் ஆட்சி புriவாயாக.

மன்னன்:- பரம்பொருளே! தென் திருஆலவாயா! சொக்கநாதா! என்னே உனது கருணை! பேதையேன் செய்பிழை பொறுத்தருளுங்கள். தென் பாண்டி நாட்டானே! அடியேனுடைய குற்றத்தை நீக்கிய கோதிலா அமுதே! குணப்பெருங்கடலே!

வாதவூரர் எங்கே! அவரைக் கண்டு வணங்கி என் பிழையை பொறுத்தருள வேண்டுவேன்.

காவலாளி:- மன்னா! அவர் திருஆலவாய் கோயிலில் உள்ளார்.

மன்னர்:- நாம் உடனே அங்கு செல்வோம்.

 

 

செல்வோம்.

 
ஞானநாடகம் (மாணிக்கவாசகர்) - ஆட்கொண்ட பிரான் - பகுதி-8 - தலயாத்திரை கிளம்பியது
 

 

 

காட்சி - 15

இடம்:- ஆலவாய் திருக்கோயில்

பாடல்:- காலமுண் டாகவே காதல்செய் துய்ம்மின் கருதா஢ய
ஞாலமுண் டானொடு நான்முகன் வானவர் நண்ணா஢ய
ஆலமுண் டான் எங்கள் பாண்டிப் பிரான் தன் அடியவற்கு
மூலபண் டாரம் வழங்குகின் றான்வந்து முந்துமினே

மன்னன்:- திருவாதவூரரே! தங்கள் பெருமை அறியாது, நான் பல தீங்குகளை செய்து விட்டேன். ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதியாகிய ஈசனாரே தங்களுக்காக மண் சுமந்து பிரம்படி கொண்டார். சிவ! சிவ! நான் அறியாது செய்த தவற்றிற்காக மிகவும் வருந்துகிறேன்.

மாணிக்கவாசகர்:- மன்னா! வருத்தப்பட வேண்டாம். உங்கள் குல தெய்வமாக சோமசுந்தர கடவுள் விளங்குவதால், பொய்ம்மை நீங்கி நன்மை பெருகும் ஞானம் தங்களுக்கு கிடைத்துள்ளது. மனுநீதி வழியில் நின்று திருநீற்றின் அன்புநெறி பாதுகாத்து நல்லாட்சி பு஡஢வாயாக! இறைவர் திருவுள்ளப்படி, அடியேன் பல தலங்களுக்கும் சென்று, எம் ஈசர் புகழை பாடுவேன்.

மன்னர்:- திருவாதவூரரே! தங்களால் நம் பாண்டி நாட்டிற்கே அளவிலா புகழும், பெருமையும் கிடைத்தது. சிவ! சிவ!

( மாணிக்கவாசகர் "பண் சுமந்த பாடல்" பாடுகிறார் )

பாடல்:- பண்சுமந்த பாடற் பா஢சு படைத்தருளும்
பெண்சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான்
விண்சுமந்த கீர்த்தி வியன்மண் டலத்தீசன்
கண்சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை
மண்சுமந்து கூலிகொண்டு அக்கோவால் மொத்துண்டு
புண்சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய்.

அம்மானாய்.

 
ஞானநாடகம் (மாணிக்கவாசகர்) - சிவமாக்கி ஆண்ட பிரான் - பகுதி-1 - மெய்யான செல்வம்

 

புல்லறிவில் பல் சமயம் தட்டுளுப்புப் பட்டு நிற்க சித்தம் சிவமானவர்

காட்சி : 1

இடம்: தில்லை

(திருவாதவூரர் பாடிக்கொண்டிருக்கிறார்)

ஓடும் கவந்தியுமே உறவென்றிட்டு உள் கசிந்து
தேடும் பொருளும் சிவன் கழலே எனத் தெளிந்து
கூடும் உயிரும் குமண்டையிடக் குனித்தடியேன்
ஆடும் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே

தந்தை (மகனிடம்):ஆகாகா! என்ன பாடிகொண்டிருகிறார் பார்த்தியா! இவர் யார் தெரியுமா உனக்கு?

மகன்: யாரப்பா இவர்?

தந்தை: இவர் பாண்டியப்பேரரசனின் முதன் மந்திரியாக இருந்தவர்.

மகன்: நம்பவே முடியவில்லையே! இவ்வளவு எளிமையாக இருக்கின்றாரே!

தந்தை: ஆமப்பா! முத்து விளையும் செல்வச் சிறப்பு வாய்ந்த பாண்டிய நாட்டின் முதலமைச்சராக எத்துனை செல்வத்தில் இருந்தவர். இன்று ஓடும் கோவணமுமே உறவு தேடும் பொருள் சிவம் என்று இருக்கிறார் பார்த்தாயா?

மகன்: என்னப்பா இது! எப்படியப்பா அத்தனை செல்வத்தையும் விட்டு இருக்க இவருக்கு மனம் வந்தது?

தந்தை: நல்ல கேள்வி தான் கேட்டாய். மகனே, செல்வம் எதற்கு வேண்டும்?

மகன்: இந்த உலகில் இன்பமான நல்வாழ்வு வாழ செல்வம் வேண்டியுள்ளது தந்தையே!

தந்தை: சரியாகத்தான் சொன்னாய். ஆனால் செல்வம் உடையவர்கள் எல்லாம் இன்பமாக இருக்கின்றார்களா?

ம்ம்ம்.... நம் வீட்டிற்கு எதிர் வீட்டில் இருப்பவர் செல்வமுடையவர் தான். ஆனால் அவருக்குத் தன் செல்வம் தம் காலமெல்லாமும், வாரிசுகளுக்கும் போதுமா என்று கவலை. நமக்கு இடது பக்க வீட்டில் செல்வத்தில் இன்னும் மேல் தான். ஆனால் அவருக்கு இன்னும் நம் வலது பக்கத்து வீட்டு செல்வந்தர் போல் பணம் இல்லையே என்று வயிற்றெரிச்சல்.

நம் வலது பக்கத்து வீட்டில் இருப்பவர் பெரும் செல்வந்தர். ஆனால் அவருக்கோ பணம் ஈட்டி ஈட்டியே உடலெல்லாம் நோய். செல்வம் இருந்தும் அனுபவிக்க இயலவில்லை. ஆ! மறந்துவிட்டேனே! நம் தெருமுனை செல்வந்தர் இருக்கிறாரே, அப்பா! எவ்வளவு செல்வம் அவருக்கு! ஆனால், ..... எப்பொழுது பார்த்தாலும் எவரேனும் செல்வத்தைத் திருடி விடுவார்களோ என்ற அச்சம். யாரைப் பார்த்தலும் அவருக்கு சந்தேகம் தான். தன் மகனே தனக்கு ஊறு செய்து சொத்தை எல்லாம் கைப்பற்றிவிடுவான் என்று பயப்படுகிறார். பாவம், வியப்பாக இருக்கிறது. இந்த மனிதர்கள் எந்த இன்பத்திற்காக செல்வத்தை நாடுகிறார்களோ??

மகன்: ஆனால் அப்பா! நீங்களும் செல்வமுடையவர்கள் தாமே! நீங்கள் இன்பமாக இருக்கிறீர்களே!

தந்தை: அருமை மகனே! உன் உற்று நோக்கும் திறனை என்னென்பது. சிவபிரான் திருவருள். நன்றாகக் கேட்டாயப்பா! செல்வம் என்பது இறைவன் நமக்குத் தந்த ஒரு கருவி அவ்வளவு தான். அதையே வாழ்க்கை என்று எண்ணி வாழ்வினை நாசம் செய்துகொண்டவர்கள் தான் நீ கூறிய எல்லோரும். சிவபெருமானின் பெருங்கருணையாலும், அடியேன் முன் செய்த சிறு தவத்தாலும், “சிவபிரானே மெய்யான செல்வம், அவர் நமக்கு எல்லா வகையிலும் இன்பம் தர ஓயாது நடனம் செய்து கொண்டிருக்கிறார்” என்ற பேருண்மையினை இப்போது பாடினாரே வாதவூரடிகள் அவர் போன்றோர் மூலம் தெளிந்ததனாலும், நாம் செல்வம் உடையவர்கள் என்றாலும் இறைவன் தரும் இன்பத்தில் மகிழ்ந்துள்ளோம். அது சரி மகனே! நீ பார்த்தாயா! வாதவூரடிகள் முகத்தில் இன்பம் தெரிந்ததா, துன்பம் தெரிந்ததா?

மகன்: ஆகா அதை என்ன என்று சொல்லுவேன் தந்தையே! இத்தனை எளிய கோலத்தில் இருந்த அவரிடம் எந்த செல்வந்தரிடமும் இல்லாத இன்பத்தையும் ஒளியையும் கண்டேன். இன்னும் சொல்லப்போனால் தில்லைப் பெருங்கூத்தப் பிரானின் திருமுகத்தின் எதிரொளியை அவர் முகத்தில் கண்டேன். எப்படியப்பா அது?

தந்தை: அது தான் மகனே சிவனடியார்களின் சிறப்பு. உலகத்தவர்கள் பார்வையில் செல்வம், பதவி, சாதி, குலம், இனம், மொழி முதலியவற்றால் வெவ்வேறு நிலையில் காணப்பட்டாலும், உண்மை இன்பப் பொருளாகிய சிவம் சிவனடியார்களிடத்தில் நிறைந்து இருப்பதால் அவர்கள் என்ன குறையும் இல்லாதவர்கள். கேடும் ஆக்கமும் இல்லாத செல்வம் உடையவர்கள். அவர்களே வாழ்வின் பயனை அடைந்து வெற்றி காண்பவர்கள்.

மகன்: தந்தையே, தந்தையே! நானும் நல்ல சிவனடியாராக ஆக வேண்டும் தந்தையே! என்னையும் அவ்வாறே வளருங்கள் தந்தையே!

தந்தை: என் செல்வமே! நிச்சயமாக நீயும் நல்ல சிவனடியாராக ஆவாய்! நம் சிவபெருமான் அன்பினால் வழிபட மிக எளியவர். நாம் சிறிதும் காலத்தை வீணாக்காது நடராசப் பெருமானை வணங்குவோம் வா!

 

 

 

 
ஞானநாடகம் (மாணிக்கவாசகர்) - சிவமாக்கி ஆண்ட பிரான் - பகுதி-2 - மணிவாசகர் சாக்கியரோடு வாது செய்ய ஒப்புதல்
 
 

 

 

 

போகலாம்.

 
ஞானநாடகம் (மாணிக்கவாசகர்) - சிவமாக்கி ஆண்ட பிரான் - பகுதி-3 - மணிவாசகர் சாக்கியரை வாதில் வெல்லுதல்
 

காட்சி: 2

இடம்: புத்தர்கள் கூடம்

(புத்தர்கள் மணியை உர்ட்டுகிறார்கள்)

முனி முனி மகாமுனி சாக்கியமுனி முனி முனி மகாமுனி சாக்கியமுனி முனி முனி மகாமுனி சாக்கியமுனி

பெரிய புத்தன்: ம்ம்ம்ம். நம் இலங்கையில் புத்த மதம் அரசு செய்கிறது. இங்கு இன்னும் சாம்பலாண்டியைக் கும்பிட்டுக் கொண்டுள்ளனர். இவர்களுக்குத் தில்லை தான் பெருந்தலமாம். இத்தில்லை மூவாயிரவருடன் ஏழு நாள் வாதிட்டு வெற்றி பெற நாம் வந்துள்ளோம்.

சின்னப் புத்தன்: ஆறு நாட்கள் ஆகி விட்டன தேரரே! நாம் வெற்றி பெற்றுவிடுவோமா?

பெரிய புத்தன்: ஏன் சந்தேகம்? சடையனின் அடிமைகளா வெல்வார்கள்? “எல்லாம் சூனியம், எல்லாம் சூனியம்” என்ற நம் மாயாவாதம் தான் வெல்லும். நம் சாக்கிய முனியை நினைந்திருப்போம்.

முனி முனி மகாமுனி சாக்கியமுனி முனி முனி மகாமுனி சாக்கியமுனி முனி முனி மகாமுனி சாக்கியமுனி

காட்சி : 3

இடம்: தில்லை வாழந்தணர் உறங்குகிறார்கள்

(கனவில் இறைவர்) தில்லை வாழந்தணர்களே! இலங்கையிலிருந்து வந்துள்ள புத்தர் பெருங்கூட்டத்தைக் கண்டு மருளுதல் வேண்டா! நம் அன்பன் திருவாதவூரனை வாது செய்ய அழையுங்கள்.

தில்லை வாழந்தணர்கள்: திருவருள் இறைவா!!

காட்சி : 4

இடம் : மணிவாசகர் மடம்

தில்லைவாழந்தணர்கள் (வணங்கி): திருவாதவூரரே! இலங்கையிலிருந்து பௌத்தர்கள் பெருங்கூட்டமாக வந்து வாதம் செய்ய வந்துள்ளனர். தாங்கள் தான் வாது செய்து சைவத்தை நிலை நிறுத்தவேண்டும்.

வாதவூரர்: பெருமக்களே! சிவபெருமான் திருவடி நினைவிலேயே மூழ்கியுள்ளேன். என்னால் வாது செய்ய இயலாது. அருள்கூர்ந்து வற்புறுத்தாதீர்கள்.

காட்சி : 5

இடம் : தில்லைத் திருக்கோயில்

தில்லைவாழந்தணர் ஒருவர்: திருவாதவூரர் வாது செய்ய மறுத்துவிட்டாரே. நாம் இப்போது என்ன செய்வது?

தில்லை வாழந்தணர் மற்றொருவர்: நம் ஆடல்வல்லானைச் சரண் அடைந்து அவர் திருவருட் குறிப்பை வேண்டுவோம்!

இறைவர்: தில்லை வாழந்தணரே! முன்பு திருவாதவூரனை திருப்பெருந்துறையில் குருந்தடியில் ஆட்கொண்ட பொழுது, இன்னிசை வண்டமிழை மணி போல் பாடுங் காரணத்தாலும் யாம் அவனுக்குக் கொடுத்த தீட்சா நாமம் மாணிக்க வாசகன் என்பதாகும். இந்த மானிக்க வாசகன் என்ற பெயரைச் சொல்லி அழையுங்கள். வருவான்!

காட்சி : 6

இடம் : மணிவாசகர் மடம்

தில்லை வாழந்தணர்: மாணிக்க வாசகரே! தாங்களே புத்தரோடு வாது செய்து வென்று சைவம் நிலைநாட்டவேண்டும்.

திருவாதவூரர்: மாணிக்க வாசகனா! மாசில் மணியான இறைவன் இச்சிறு நாயேனுக்கு இட்ட பெயரல்லவா, அது! இறைவா! இது உனது கட்டளையாயின், “எது எமைப் பணிகொளும் ஆறு, அது கேட்பேன்!” கண்டிப்பாக வாது செய்கிறேன். மேலான செல்வமாகிய திருநீற்றினை இகழும் தேரர்களைக் காணவும் வேண்டாம். அவர்களைக் காணா வண்ணம் திரைச்சீலையிட்டு வாது செய்யலாம். ஏதிலார் துண்ணென்ன மேல் விளங்கி ஏர் காட்டும் கோதிலா ஏறாம் கொடி உடைய சிவபெருமான் திருவருளே வெல்லும்! வாருங்கள் போகலாம்.

 

காட்சி : 7

இடம் : வாது மண்டபம்

(மணிவாசகர் வந்து அமர்கிறார்)

மணிவாசகர்: சிவசிவ!

பௌத்தரெல்லாம்: (சகிக்க முடியாதவர்களாய்) முனி முனி மகாமுனி சாக்கியமுனி முனி முனி மகாமுனி சாக்கியமுனி முனி முனி மகாமுனி சாக்கியமுனி

பெரிய புத்தன்: சாக்கிய மாமுனி காட்டிய பாதையில் நடக்கும் நாம் உங்கள் சமயத்தை வென்று எங்கள் சமயத்தை நிலை நாட்ட வந்துள்ளோம். இதோ சோழ மன்னர், ஈழ மன்னர், நடுநிலையாளர்கள் முன் வாதம் செய்வோம்.

மணிவாசகர்: சிவ சிவ! அன்பினால் இறைவன் பதத்தை இடையறாது அருச்சித்தலை விடுத்து மெய்யான சைவ நன்னெறிச் செல்லுவாருக்கு இடையூறு செய்ய வந்துள்ளாயே! என்னே துயிலின் பரிசு! சரி, ஆகம அளவை, அனுமான அளவை, காட்சி அளவை என்ற இம்மூன்றால் தத்தம் சமயத்தை நிலைநாட்டலாம்.

புத்தன்: ஆகம அளவையா! அதெல்லாம் ஒத்துக் கொள்ள இயலாது!

மணிவாசகர்: இறைவனும் பெரியோர்களும் வகுத்து நமக்கு எளிதாக வைத்த பாதையின் பெருமை தெரிந்திருந்தால் தானே நீ அதனை ஏற்பாய்! இவ்வுலகம் எல்லாம் படைத்து நம்மை எல்லாம் இன்ப நற்கரை ஏற்ற அருள் நடம் புரிந்திருக்கும் இறைவன் ஆடும் இத்தில்லையிலேயே கடவுள் இல்லை எல்லாம் சூனியம் என்ற மாயாவாதத்தால் மாய்ந்து போகின்றவர்கள் தானே நீங்கள்! சரி, ஆகம அளவை மட்டுமல்ல, அனுமான அளவையும் கூட வேண்டா! காட்சி அளவையாலேயே - அதாவது கண் முன்னே நடக்கும் நிகழ்வுகளாலேயே சமயத்தை நிலை நிறுத்தலாம்.

புத்தன் 1: ம்ம்ம்ம். உங்கள் இறைவன் பேசும் மறை எப்படிப்பட்டது தெரியுமா? உடலெல்லாம் சாம்பல் பூசி, பாம்புகளைச் சுற்றவிட்டுக் கொண்டு சொல்லுவது. அறிவுள்ளவர்கள் அமுதம் உண்பார்கள் உம் பெருமான் நஞ்சினை உண்டானே, அவன் பைத்தியக்காரன் தானே?

புத்தன் 2: இத்தில்லையிலே ஆடுகின்றானே சிற்றம்பலவன், அவன் இடது பாகத்தில் பெண்ணை வைத்திருக்கிறான். அவன் பித்தனல்ல, பெரும் பித்தன். ஏதோ யானை ஏறலாம், குதிரை ஏறலாம், தேரேறி வலம் வரலாம். எங்கிருந்தய்யா பிடித்தார், காளை மாட்டை?

புத்தன் 1: உண்கின்ற உணவிற்காக வீடு வீடாகச் சென்று பிச்சை எடுப்பவனை, எப்படியய்யா இறைவன் என்று சொல்லுகிறீர்கள்? அவனுக்குப் போய் யாரேனும் ஆட்படுவார்களா?

மணிவாசகர்: சிவ சிவ! வாதில் உங்கள் சமயத்தின் பெருமைகளையும் தத்துவங்களையும் கூறி நிலை நாட்டுவதை விடுத்து எவ்விதமான கைம்மாறும் எதிர்பாராமல் நாம் செய்த பிழைத்தனகள் அத்தனையும் தாயிற் சிறந்த தயையால் பொறுத்து அந்தமில்லா ஆனந்தம் அருள ஓய்விலாது ஆடுகின்ற பெருமானையா இவ்வாறெல்லாம் கூறுகின்றீர்கள்? சிவபெருமானை வாழ்த்தாத வாயே வீண்.

கலைமகளே! நிந்தனையும் செய்யும் இவர்கள் வாயிலிருந்து இப்பொழுதே அகன்றிடு! இது நக்கனார் திருவாணை!

(புத்தர்கள் ஊமையாகின்றனர்)

கூடியிருப்போர்: ஆகா! திருவாதவூரடிகள் நம் கண் முன்னே ஆனந்தக் கூத்தனின் பெருமையைக் காண வைத்தாரே! இப்பர சமயத்தவர், வீண் வாதம் செய்வதிலே வல்லவரே தவிர, இவரால் இவ்வுலக வாழ்விற்கும் மறுமைக்கும் எந்தப் பயனும் இல்லை.

மற்றொருவர்: ஒரு தஞ்சமும் இல்லாமல் அந்தரத்தில் தொங்குபவர்கள் இந்தப் புத்தர்கள். இவர்கள் பின் போனால் நம்மையும் அறிவற்ற சடமாக்கி விடுவார்கள்.

ஈழ மன்னர்: திருவாதவூரடிகளே! என்னே நான் காணும் காட்சி! இலங்கையிலிருந்து வந்த புத்தர்கள் எல்லாம் ஊமைகள் ஆனார்கள். இதோ இவள் என் மகள். இவள் பிறவி ஊமை. திருவருள் வலிமையால் இவளைப் பேச வையுங்கள், பெருமானே, பேச வையுங்கள்!

மணிவாசகர்: (இறைவனை வணங்கி) மகளே! இப்புத்தர்கள் இறைவனைக் கடுஞ் சொற்களால் நிந்தித்தனர். இவர்கள் கூறியவற்றிற்கு நீயே விடை கூறுவாய்!

பெண்: சாம்பல் பூசும் பிரான் வேதம் கூறலாமா என்றீர்களே, அறிவிலிகளே! இறைவன் பட்டாடை பூண்டு அறிவின் பகட்டில் திரிபவர்களுக்கு மட்டுமல்ல, எல்லா உயிர்களுக்கும் இயல்பாக இருக்கிறான். அப்படி இருப்பவனே இறைவனாக இருக்க முடியும்.
நஞ்சினை உண்டானே எங்கள் பெருமான், நன்றியற்றவர்களே! அவன் உண்ணவில்லையென்றால் இவ்வுலகமெல்லாம் தேவர்களேல்லாம் வெந்து சாம்பலாகி இருப்பார்கள். 
பெண்ணை பாகத்தில் வைத்த தொன்மைத் தத்துவம் தான் அடைந்து கிடக்கும் உம் அறிவுக்குப் புலப்படுமா? பெண் ஆண் அலியென்ற மூன்றிற்கும் அப்பாலாய் உள்ள பிரான் நம் பொருட்டல்லவோ சிவமும்சத்தியுமாய்த் தோற்றமளிக்கிறான். ஆண்மையும் பெண்மையும் இயைந்து இயங்காவிடில் இவ்வுலகம் தான் ஏது?
நமக்குத் தான் பிறர் மதிக்க வேண்டும், அதற்காக யானையும் தேரும் வேண்டும். வேண்டுதல் வேண்டாமை இலானுக்கு? தன் அருளில் என்றும் அறம் வழுவுவதில்லை என உணர்த்தவே விடை ஊர்தி கொண்டுள்ளான், எம் உயிர்க்கினியான் தன் அடிவணங்குவோர்க்கு எல்லாம் தேவர் முதலிய பதவிகளை அளிக்கும் பிரான் உணவுக்கா பிச்சை எடுப்பான்? நம்மையெல்லாம் உய்விக்கவன்றோ நம் வீடு தோறும் வருகிறான். உம் மூடக் கண்களைத் திறந்து பாருங்கள். மறைகள் எங்கள் பெருமானை எம்பிரான் ஈசா என்று ஏத்தும்; திருமால், பிரமன் முதலாய தேவர் அவர்க்கு அடிமைத் தொண்டு செய்கின்றார்கள். 
சிவ சிவ சிவ சிவ சிவ சிவ!

(பௌத்தர்கள் மணிவாசகர் காலில் விழுகின்றனர்)

அருகிருப்போர்: புத்தர்கள் தம் புல்லறிவின் சமயம் வீணென உணர்ந்து திருந்திவிட்டனர்.

ஈழ மன்னன்: சிவபெருமான் திருவருளே பெரிது! பெரியீர்! நீங்கள் என் கண்மணி போன்ற பெண்ணிற்கு மட்டும் பேச்சளிக்கவில்லை. சிவபெருமான் புகழ் வாழ்த்தாது வாழ் நாளை வீணே கழித்த எனக்கும் அவர்தம் புகழைப் பேசும் உண்மையான வாழ்வு கொடுத்துள்ளீர்கள். பேரருள் வெள்ளமே! தம் ஈன நெறியை அறிந்து திருந்திய இவர்களையும் தாங்கள் நல்வழிப்படுத்த வேண்டும்!

மணிவாசகர்: எல்லாம் தில்லைக் கூத்தப்பிரான் அருள் ஒன்றினாலே ஆகும்! நீங்களெல்லாம் பலர் கூறிய பகட்டு உரையினால் திசை மாறிச் சென்றாலும், இன்று சிவபெருமான் திருவருளை நாடியுள்ளீர்கள். சைவ நன்னெறிக்கு எல்லா உயிர்களும் வந்து அதன் மூலம் அந்தமிலா இன்பப் பெருவாழ்வு தருவது தானே சிவபெருமானின் சித்தம்? அவ்வருளுக்கே அடியேனும் கருவியாக இருக்கிறேன். சைவ நன்னெறி உங்களை உய்விக்கும்.

(பௌத்தர்கள் நீறு பெறுகின்றனர். பூசியபின் பேசவும் வல்லவராகின்றனர்)

எல்லோரும்: ஆகா! சிவபெருமானின் திருவருளை என்னென்பது? திருவாதவூரடிகளின் குருவருளை எப்படிப் போற்றுவது! சிவனார் திருநாமம் உலகெங்கும் ஒலிக்கட்டும்!

 

காட்சி : 8

இடம் : மணிவாசகம் மடம்

(மணிவாசகர் அமர்ந்திருக்கிறார்)

தாரா அருளொன்றின்றியே தந்தாய் என்றுன் தமரெல்லாம்
ஆரா னின்றார் அடியேனும் அயலார் போல அயர்வேனோ
சீரார் அருளாற் சிந்தனையைத் திருத்தி ஆண்ட சிவலோகா
பேரானந்தம் பேராமை வைக்க வேண்டும் பெருமானே!

(முதிய வடிவில் சிவபெருமான் வருகிறார்)

முதியவர்: அப்பா மாணிக்க வாசகம்! நாம் பாண்டிய நாட்டினோம். சிவபெருமான் மேல் நீ பாடிய பாடல்களை எல்லாம் ஏட்டில் எழுதிக் கொள்ள வேண்டும் என்று எமக்கு வேட்கை. எமக்குக் கூறப்பா!

மணிவாசகர்: (வணங்கி) பெரியீர் தங்கள் தோற்றம் மனமுருகச் செய்கிறது. எம்பிரானைப் பாடித் தெருவுதோறும் அலறத்தானே விரும்பினேன். இதோ பாடுகின்றேன்.

உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று 
அங்கப் பழஞ்சொல் புதுக்கும் எம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உமக்கொன்றுரைப்போம் கேள்
எங்கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க
எங்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க 
கங்குல் பகல் எங்கண் மற்றொன்றும் காணற்க
இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழில் என் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்

முதியவர்: அற்புதம்! பாவை பாடிய உன் வாயால் கோவையும் பாடு!

மணிவாசகர்: ஆகா இது பேரருள்! இதுவரை இறைவனை முன்னிலைப் படுத்தித் திருவருள் வழி நின்று பாடினேன். இப்பொழுது ஒரு தலைவனும் தலைவியும் வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் - இன்பத்திலும் துன்பத்திலும் - தில்லைக் கூத்தப் பெருமானின் திருவருளையே முன்னிறுத்தி வாழும் வாழ்க்கையை திருச்சிற்றம்பலக் கோவையாராகப் பாடுகின்றேன். இறை உணர்வோடு எப்பொழுதும் வாழும் உணர்வன்றோ முழுமையான வாழ்க்கை!

காரணி கற்பகம் கற்றவர் நற்றுணை பாணரொக்கல் 
சீரணி சிந்தாமணியணி தில்லைச் சிவனடிக்குத்
தாரணி கொன்றையன் தக்கோர் நற்சங்க நிதி விதி சேர்
ஊரணி உற்றவர்க்கு ஊரன் மற்று யாவர்க்கும் ஊதியமே

முதியவர்: அப்பா! நான் தனிக்கட்டை! தன்னந்தனியே இருக்கும் எனக்கு இது துணையாக இருக்கும்!

(முதியவர் மறைகின்றார்)

 

சிவ சிவ சிவ சிவ

 
ஞானநாடகம் (மாணிக்கவாசகர்) - சிவமாக்கி ஆண்ட பிரான் - பகுதி-4 - பாவையும் கோவையும் பாடுதல்

 

 
ஞானநாடகம் (மாணிக்கவாசகர்) - சிவமாக்கி ஆண்ட பிரான் - பகுதி-5 - சிவமானது
 

 

காட்சி : 9

இடம் : தில்லைச் சிற்றம்பலம்

(திருமுன் திறக்கும் தில்லை வாழந்தணர்கள் திருக்களிற்றுப் படியில் உள்ள ஓலை கண்டு அதிசயிக்கின்றனர்)

ஒருவர்: என்ன ஓலை இது? அடைத்துள்ள திருச்சிற்றம்பலத்தில் எப்படி வந்தது?

மற்றொருவர்: ஓலைச்சுவடியின் மேல் “திருவாதவூரர் திருவாய் மலர்ந்தருள அழகிய திருச்சிற்றம்பலமுடையான் திருக்கையெழுத்து” என்றிருக்கிறதே!

இன்னுமொருவர்: (பிரித்துப் படிக்கிறார்.) ஆகா! அற்புதமான திருப்பாடல்கள்! இவை சாதாரணமான பாடல்கள் அல்ல, புலவர்களால் பொருள் சொல்வதற்கு! இவை கூறும் அனுபூதி ஞானம் நம்மால் அறிந்துகொள்ள இயலுமோ!

ஒருவர்: நம் திருவாதவூரடிகளையே அழைத்து இதன் பொருளை அறிவோம். தில்லைவாணர் திருமுன்பு மணிவாசகப் பெருமானை அழைத்து வருவோம்!

காட்சி : 10

இடம் : தில்லைச் சிற்றம்பலம்

(மணிவாசகரை வேத முழக்கத்துடன் அழைத்து வருகின்றார்கள்)

தில்லை வாழந்தணர்: மாணிக்க வாசகப் பெருந்தகையே! நாங்கள் எரியோம்பி என்றும் அகலாது வாழ்வாக வழுத்தும் தில்லைக் கூத்தப்பிரான் தங்கள் திருமொழியைத் தாமே கைப்பட எழுதி திருச்சிற்றம்பல முன்றில் வைத்துள்ளார் என்றால், உம் திருமொழியின் பெருமை தான் என்னே! பெரியீர், இப்பாடல்களின் உள்ளார்ந்த பொருளினைத் தாங்கள் அருளவேண்டும்!

பெருமான் பேரானந்தத்துப் பிரியாதிருக்கப் பெற்றீர்காள்
அருமாலுற்றுப் பின்னை நீர் அம்மா அழுங்கி அரற்றாதே
திருமாமணி சேர் திருக்கதவம் திறந்த போதே சிவபுரத்துத்
திருமாலறியாத் திருப்புயங்கன் திருத்தாள் சென்று சேர்வோமே

மணிவாசகர்: இவரோடு கலக்கும் இது தான் பொருள்

(இறைவனோடு கலந்து விடுகின்றார்)

தில்லை வாழந்தணர்: ஆஆ! இது என்ன அதிசயம்! மணிவாசகப் பெருமான் கூத்தப்பெருமானோடு கலந்து விட்டாரே! சிவ சிவ சிவ சிவ!

கண்களிரண்டும் அவன் கழல் கண்டு களிப்பன ஆகாதே
காரிகையார்கள் தம் வாழ்வில் என் வாழ்வு கடைப்படும் ஆகாதே
மண்களில் வந்து பிறந்திடுமாறு மறந்திடும் ஆகாதே
மாலறியா மலர்ப் பாதமிரண்டும் வணங்குதும் ஆகாதே
பண் களி கூர்தரு பாடலோடாடல் பயின்றிடும் ஆகாதே
பாண்டி நன்னாடுடையான் படையாட்சிகள் பாடுதும் ஆகாதே
விண் களி கூர்தரு வேதகம் வந்து வெளிப்படும் ஆகாதே
மீன் வலை வீசிய கானவன் வந்து வெளிப்படும் ஆயிடிலே

 

Related Content

திருவிளையாடல் நாடகம் - வாதவூரடிகளுக்கு உபதேசித்த படலம் Thir

நரியைப் பரியாக்கிய திருவிளையாடல் - திருவிளையாடல் புராண நாடகம

பரி நரியாக்கிய திருவிளையாடல் - திருவிளையாடல் புராண நாடகம் T

Hindu Shaiva Devotional Video - Manikkavasagar Drama

The Life History of Saint Manikkavachakar