logo

|

Home >

to-practise >

thenpandi-nattanin-nava-samudra-thalangkal

தென்பாண்டி நாட்டானின் நவ சமுத்திர தலங்கள்


தென்பாண்டி நாட்டில் அதுவும் குறிப்பாக தாமிரபரணி நதிக்கரையின் இரு ஓரங்களிலும் 274 சிவாலயங்கள் சிறப்புற்று விளங்கி இருந்ததாக பல புராணங்கள் கூறுகின்றன. அத்தகைய புராணங்களில், தாமிரபரணி மகாத்மியம், நவசமுத்திர மகாத்மியம், சிவசைல மகாத்மியம், திருப்புடை மருதூர் மகாத்மியம், திருக்குற்றால தலபுராணம், தென்காசி தலபுராணம், கருவை தலபுராணம், திருச்செந்தூர் புராணம் போன்ற நூல்களில் தென்பாண்டி நாட்டில் உள்ள சிவாலயங்கள் திரி (3), பஞ்ச (5), அஷ்ட (8), நவ (9), தச (10) போன்ற எண்ணிக்கையில் பிரித்து நம்முன்னோர்கள் வழிபட்டுள்ளனர்.

 
			நவ சமுத்திர தலங்கள் 
 
	1) அம்பாசமுத்திரம், 		2) ரவணசமுத்திரம்,  
	3) வீராசமுத்திரம், 		4) அரங்கசமுத்திரம்,  
	5) தளபதிசமுத்திரம், 		6) வாலசமுத்திரம்,  
	7) கோபாலசமுத்திரம், 	8) வடமலைசமுத்திரம் (பத்மனேரி),  
	9) ரத்னகாராசமுத்திரம் (திருச்செந்தூர்).  

இது தவிர தென் காளஹஸ்தி என்று போற்றப்படும் கரிசூழ்ந்தமங்கலம் காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயிலை சுற்றி அஷ்டலிங தலங்கள் உள்ளதாக திருநெல்வேலி தல புராணம் கூறுகிறது. துர்வாச முனிவர் வழிபட்ட இந்த கோயில்கள் பற்றி ஆய்வுகள் நடந்து வருகின்றன.

Location:

State : Tamil Nadu 
District : Thirunelveli 

 

 

Related Content

Nine divisions of the jaMbu dvIpa (Asia)

ஆறுமுகநாவலர் - சைவ சமயம்

7. Worried about the sins piled up ? - (Basavanna)

Which is Rk, Sama and Udgitha? - Significance of Om from Cha

Vrishabha vratam