logo

|

Home >

to-practise >

references-to-thirunavukkarasu-nayanar-in-thevaram-other-thirumurais

திருமுறைகளில் திருநாவுக்கரசு சுவாமிகள் பற்றிய குறிப்புகள்

சுந்தரர் தேவாரம்

திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட
    திருநாவுக் கரையன்றன் அடியார்க்கும் அடியேன்
பெருநம்பி குலச்சிறைதன் அடியார்க்கும் அடியேன்
    பெருமிழலைக் குறும்பர்க்கும் பேயார்க்கும் அடியேன்
ஒருநம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்
    ஒலிபுனல்சூழ் சாத்தமங்கை நீலநக்கர்க் கடியேன்
அருநம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன்
    ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.              7.39.4 

 

தூசுடைய அகலல்குல் தூமொழியாள் ஊடல்
    தொலையாத காலத்தோர் சொற்பாடாய் வந்து
தேசுடைய இலங்கையர்கோன் வரையெடுக்க அடர்த்துத்
    திப்பியகீ தம்பாடத் தேரொடுவாள் கொடுத்தீர்
நேசமுடை அடியவர்கள் வருந்தாமை அருந்த
    நிறைமறையோர் உறைவீழி மிழலைதனில் நித்தல்
காசருளிச் செய்தீரின் றெனக்கருள வேண்டும்
    கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே.                 7.46.7 

 

நற்ற மிழ்வல்ல ஞானசம் பந்தன் 
    நாவினுக் கரையன் நாளைப்போ வானுங்
கற்ற சூதன்நற் சாக்கியன் சிலந்தி 
    கண்ணப் பன்கணம் புல்லனென் றிவர்கள்
குற்றஞ் செய்யினுங் குணமெனக் கருதுங் 
    கொள்கை கண்டுநின் குரைகழல் அடைந்தேன்
பொற்றி ரள்மணிக் கமலங்கள் மலரும் 
    பொய்கை சூழ்திருப் புன்கூர் உளானே.            7.55.4 

 

அணிகொள் ஆடையம் பூண்மணி மாலை
    அமுது செய்தமு தம்பெறு சண்டி
இணைகொள் ஏழெழு நூறிரு பனுவல் 
    ஈன்ற வன்றிரு நாவினுக் கரையன்
கணைகொள் கண்ணப்பன் என்றிவர் பெற்ற 
    காத லின்னருள் ஆதரித் தடைந்தேன்
திணைகொள் செந்தமிழ் பைங்கிளி தெரியுஞ் 
    செல்வத் தென்றிரு நின்றியூ ரானே.                 7.65.2 

 

நல்லிசை ஞானசம் பந்தனும் நாவினுக்
    கரையனும் பாடிய நற்றமிழ் மாலை
சொல்லிய வேசொல்லி ஏத்துகப் பானைத்
    தொண்ட னேன்அறி யாமை யறிந்து
கல்லி யல்மனத் தைக்கசி வித்துக்
    கழலடி காட்டிஎன் களைகளை அறுக்கும்
வல்லியல் வானவர் வணங்கநின் றானை
    வலிவ லந்தனில் வந்துகண் டேனே.                7.67.5

 

நாவின்மிசை அரையன்னொடு தமிழ்ஞானசம் பந்தன்
யாவர்சிவன் அடியார்களுக் கடியானடித் தொண்டன்
தேவன்றிருக் கேதாரத்தை ஊரன்னுரை செய்த
பாவின்தமிழ் வல்லார்பர லோகத்திருப் பாரே.             7.78.10 

 

பரந்த பாரிடம் ஊரிடைப் பலி
  பற்றிப் பார்த்துணுஞ் சுற்றமாயினீர்
தெரிந்த நான்மறையோர்க்கிடமாய திருமிழலை
இருந்து நீர் தமிழோடிசை கேட்கும்
  இச்சையால் காசு நித்தல் நல்கினீர்
அருந்தண் வீழிகொண்டீர் அடியேற்கும் அருளிதிரே            7.88.8

 

ஒன்பதாம் திருமுறை

பாடலங் காரப் பரிசிகா சருளிப்
    பழுத்தசெந் தமிழ்மலர் சூடி
நீடலங் காரத் தெம்பெரு மக்கள்
    நெஞ்சினுள் நிறைந்துநின் றானை
வேடலங் காரக் கோலத்தின் னமுதைத்
    திருவீழி மிழலையூர் ஆளும்
கேடிலங் கீர்த்திக் கனககற் பகத்தைக்
    கெழுமுதற் கெவ்விடத் தேனே.                9.5.12

 

அல்லியம் பூம்பழனத்(து) ஆமூர்நா வுக்கரசைச்
செல்ல நெறிவகுத்த சேவகனே ! தென்தில்லைக்
கொல்லை விடையேறி கூத்தா(டு) அரங்காகச்
செல்வம் நிறைந்தசிற் றம்பலமே சேர்ந்தனையே. 3


பதினோறாம் திருமுறை

............ முன்னம்
கற்புணை யாகக் கடல்நீர் நீந்தினர்
எற்பிறர் உளரோ ....                        11.பட்டினத்தார்.திருவிடைமருதூர் மும்மணிக்கோவை

 

நற்றவன் நல்லூர்ச் சிவன்திருப் பாதம்தன் சென்னிவைக்கப்
பெற்றவன் மற்றிப் பிறப்பற வீரட்டர் பெய்கழற்றாள்
உற்றவன் உற்ற விடம்அடை யார்இட ஒள்ளமுதாத்
துற்றவன் ஆமுரில் நாவுக் கரசெனும் தூமணியே.             11.24-நம்பி 

 

மணியினை மாமறைக் காட்டு மருந்தினை வண்மொழியால்
திணியன நீள்கத வந்திறப் பித்தன தெண்கடலிற்
பிணியன கல்மிதப் பித்தன சைவப் பெருநெறிக்கே
அணியன நாவுக் கரையர் பிரான்தன் அருந்தமிழே.             11.25-நம்பி

பெரியபுராணம் - திருநாவுக்கரசு நாயனார் புராணம்

 

மேவுற்றஇவ் வேலையில் நீடியசீர்  வீரட்டம் அமர்ந்த பிரானருளால்

 

 

See Also:

 

திருமுறைகளில் நாயன்மார் பற்றிய குறிப்புகள் - /devotees/references-of-nayanmars-in-thevaram-other-thirumurais

 

Related Content

Is God sectarian ?

Calling out to God

Whom else to think of ?

Never lost wealth

Drive away my fear