logo

|

Home >

to-practise >

kandhapuranam-urpatthi-kandam-thirukkailasappadalam

கந்தபுராணம் - உற்பத்தி காண்டம் - திருக்கைலாசப்படலம்

கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய

கந்த புராணம்


செந்திலாண்டவன் துணை

திருச்சிற்றம்பலம்

 

முதலாவது

 

1. உற்பத்தி காண்டம்

 

* * *

 

1. திருக்கைலாசப்படலம்

 

பாசம் நீக்கித்தன் பாற்படு நல்லருள்

ஈசன் நல்கு மியல்பென வெய்தினோ£

தேசு மாற்றிச் சிறந்ததன் மெய்யொளி

வீசு கின்றது வௌ¢ளியங் குன்றமே.                            1

 

ஆறு சூடிய வாதியம் பண்ணவன்

ஏறு மூரிவௌ¢ ளேறுமக் கண்ணுதல்

நீறு சேர்தரு கோலமும் நித்தனைத்

தேறும் அன்ர்தஞ் சிந்தையும் போன்றதே.                2

 

மோன நன்னிலை முற்றிய பெற்றியர்

ஞான மார்பிழம் பன்ன நலத்ததாய்

ஊனு லாய வுயிர்த்தொகை மாசொரீஇத்

தானெ லாஞ்செறிந் தென்னவுஞ் சான்றதே.                       3

 

கான மார்ந்த கடுக்கைநற் கூவிளைத்

தேன வாம்பொழிற் றிண்சிக ரத்திடை

வான யாறு வருதலின் மாசிலா

ஞான நாயகன் போல நணியதே.                        4

 

தண்ண றுந்துள வாற்புனை தார்முடிப்

பண்ண வன்கண் படுத்திடு பாற்கடல்

கண்ணு தற்குமொர் காமரு பீடமாய்

நண்ணு கின்றது போலும் நலத்ததே.                            5

 

பொதியு மின்னமு தோடு பொருந்துவ

கதிரின் மிக்க கறையறு காட்சிய

மதிய மாயிர கோடி மணந்துதாம்

உதய மானது போன்றதன் வொண்கிரி.                   6

 

நெற்றி மேனிமிர் கண்ணும் நிலாவொளிர்

பொற்ற டம்புய நான்கும் பொருந்துறப்

பெற்றெம் மானரு ளாற்பிரம் பொன்றுகைப்

பற்று நந்தி பரிவொடு காப்பது.                                 7

 

புரந்த ரன்முத லாகிய புங்கவர்

வரம்பின் மாதவர் மாசறு காட்சியர்

நிரந்த பூத கணவர் நிரந்தரம்

பரிந்து போற்றிப் பயில்வதம் மால்வரை.                8

 

மின்ன ரம்பைய ராடலும் விஞ்சையர்

கின்ன ரம்பயில் பாடலுங் கீழ்த்திசை

மன்ன னாதியர் வாழ்த்துமவ் வானவர்

இன்னி யங்களும் எங்கணு மார்ப்பது.                            9

 

  வேறு

 

கீணி லாவுறு முகெலாம் நீங்கியே கீழ்போய்ச்

சேணி லாவுறு பதமெலா முருவிமீச் சென்று

மாணி லாவுறும் அண்டத்தின் அடிமுடி மருவத்

தாணு வாயுல கிறுதியின் நிற்பதச் சயிலம்.                              10

 

மாடு சூழ்தரு மேருவே யாதியாம் வரைகள்

பாடு சேரினு மலகெலா மழியினும் பரந்து

கூடு மண்டங்கள் குலையினுங் கொன்றைவே ணியன்போல்

கேடி லாமலே அமர்வது கயிலையங் கிரியே.                            11

 

நலம்வ ருங்கலை மதியமு மிரவியும் நாகர்

குலம்வ ருந்தனுக் குறையலா மற்றைய கோளும்

அலம ருஞ்சுடர் உடுக்களு மமரரும் பிறரும்

வலம்வ ரும்படி யிருப்பது கயிலைமால் வரையே.                       12

 

ஏற்றம் மேருவே யாதியாம வரைகள்ஏழ் வகையால்

சாற்றும் நேமிகள் ஆழியங் கிரிபெருஞ் சலதி*

நாற்றி சைக்கணும் நொச்சிபோற் சூழ்தர நடுவண்

வீற்றி ருப்பது கயிலையா கியதனி வெற்பு.                              13

 

( * ஏழ்வையால் சாற்றும் நேமிகள் - உவர் நீர்க்டல் முதலிய ஏழுகடல்கள்.                       

ஆழியங்கிரி - சக்கரவாளகிரி.  பெருஞ்சலதி - பெரும்புறக்கடல். )

 

படியெ லாமுண்டும் ஏனமாய்த் தாங்கியும் பண்டோர்

அடியி னாலகப் படுத்தியு மிடந்துமுற் றருளும்

நெடிய மாயனு முலகிறு மெல்லையில் நிமலன்

வடிவ மேயெனக் காணுதற் கரியதவ் வரையே.                   14

 

        வேறு

 

அன்னதோர் கயிலை நாப்பண் அம்பொனின் சுடர்மேல் கொண்ட

நன்னெடுஞ் சிமயத் தொங்கல் நவையொரீஇ நண்ணிற் றென்னக்

கன்னியங் காப்பு மேவிக் கதிர்மணிக் கற்றை சுற்றப்

பொன்னெடுங் கோயி லொன்று பொலிவொடும் பொருந்திற் றன்றே.        15

 

திணிகதிர் ஆரந் தன்னிற் சிறந்தவச் சிரத்திற் செக்கர்

மணிதனில் முழுநீ லத்தின் மற்றைய வெறுக்கை தன்னில்

பணிபட வருளாற் றானே பலித்திடு சிகர மாதி

அணியினுக் கணியாய் மல்கும் ஆலயச் சூழ லெங்கும்.                   16

 

என்றுமீ றென்ப தின்றி யிருந்திடுங் கயிலை வெற்பிற்

பொன்றிகழ் நகரந் தன்னுட் பொருவிலாக் கோளும் நாளுந்

துன்றிய தன்மைத் தென்னத் தூமணிக் கதிர்கள் சூழ

மன்றம ருறையு ளொன்று வனப்பொடு வைகிற் றன்றே.                  17

 

       வேறு

 

சோதி சேருமத் தூமணி மண்டபத்

தாதி யான அரியணை யும்பரிற்

காத லாகுங் கவுரி*யொர் பாங்குற

வேத நாயகன் வீற்றிருந் தானரோ.                                      18

 

( *அருளே சிவசத்தி என்பது தோன்ற, ‘காதலாகுங் கவுரி’ என்றார்.)

 

பீடு கொண்ட பெருந்தவப் பெற்றியோர்

தேடு கின்ற சிறப்புடைத தாம்புகழ்

நாடு தும்புரு நாரதர் விஞ்சையர்

பாடு கின்றனர் பாணியின் பாற்பட.                                     19

 

அதிகன்** வேணியி லார்தரு கங்கையை

விதிவு ரந்தரன் விண்டுல கத்துள

நதிக டாழ்ந்தென நன்னயத் தேவல்செய்

கதியி னோர்கள் கவரிகள் வீசினார்.                                     20

 

( **அதிகன ¢- தன்னிகர் உயர்ச்சி இல்லாத் தலைவன்;

     சிவபெருமான். )

 

சீல வட்ட முடிப்பிறை தேடுவான்

ஞால வட்டத் தெழுதரு நாகர்போல்

ஏல வட்ட முகத்தரு கெங்கணும்

ஆல வட்ட மசைத்தனர் அன்பினோர்.                                   21

 

ஆதி தன்னரு ளெய்தி அவன் றிருப்

பாத தாமரை சூடியப் பண்ணவன்

கோதி லாத திருவுருக் கொண்டுளோர்

பூத ராதியர் போற்றிமுன் ஈண்டினார்.                                   22

 

      ஆகத் திருவிருத்தம் - 374.

        - - -

 

 

2. பா ர் ப் ப தி ப் ப ட ல ம்

 

அன்னுழி உமையவ ளகத்து ளோர்செயல்

உன்னினள் துணுக்கமுற் றொல்லைதா னெழீஇத்

தன்னிக ரில்லவன் தாளி றைஞ்சியே

முன்னுற நின்றிவை மொழிதல் மேயினாள்.                             1

 

கற்பனை முதலிய கடந்த கண்ணுதல்

தற்பர நினையிகழ் தக்கன் தன்னிடைப்

பற்பகல் வளர்ந்தவன் பயந்த மாதெனச்

சொற்படு நாமமுஞ் சுமந்து ளேனியான்.                         2

 

ஆங்கதோர் பெயரையு மவன்க ணெய்தியே

ஓங்கிநான் வளர்ந்தவிவ் வுடலந் தன்னையுந்

தாங்கினன் மேலவை தரித்தற் கஞ்சினேன்

நீங்குவ னவ்வகை பதித்தி நீயென்றாள்.                          3

 

மன்னுயி ராகிய மரபு முற்றவும்

முன்னுற அருளிய முதல்வி யன்பினால்

இன்னண மியம்பலு மிதனைத் தேர்ந்திடாத்

தன்னிக ரில்லதோர் தலைவன் கூறுவான்.                               4

 

பத்திமை யெம்வயிற் பழுத்த பண்பினாற்

சத்தியே நின்னிகர் சகத்தி னில்லைநீ

இத்திறம் முயலுத லெல்லை தீர்ந்தநின்

புத்திரர் வீடுறு பொருட்டுப் போலுமால்.                          5

 

நற்றிற மேலுது நங்கை சிந்தனை

முற்றிய வேண்டுமேல் மொழிதும் மேருவின்

சுற்றம தாகிய இமையத் தொல்வரைக்

கொற்றவன் புரிவனாற் கொடிய மாதவம்.                        6

 

ஏதவன் பெறத்தவ மியற்று மென்றியேன்

மாதுனை மகண்மையா மரபிற் போற்றியே

காதலொ டெமக்கருள் கருத்த தாகுமால்

ஆதலிற் குழவியாய் அவன்க ணெய்துநீ.                         7

 

தளர்ந்துடல் மெலிவுறத் தவஞ்செய் வெற்பினான்

இளஞ்சிறு குழவியா யெய்தி மற்றவன்

உளங்களி கூரவாண் டோரைந் தின்றுணை

வளர்ந்தனை புரிதிமேல் மாசில் மாதவம்.                        8

 

அணங்குநீ நோற்றுழி யகிலத் துள்ளதோர்

கணங்களுந் தலைவருங் கணிப்பில் தேவரும்

இணங்கினர் சூழ்தர வெய்தி நின்னையாம்

மணம்புரிந் தேகொடு வருது மீண்டெனா.                        9

 

கடல்விட முண்டிடு கடவு ளித்திறம்

நடைமுறை யருளலும் நன்றே னாமகிழ்ந்

தடியிணை வணங்கிநின் றன்பிற் போற்றியே

விடையது பெற்றனள் விமலை யேகினாள்.                              10

 

அல்லலு முவகையு மன்பு மெம்பிரான்

எல்லையி லருளுமா யீண்டி முன்செல

மெல்லியல் உமையவள் வௌ¢ளி வெற்பொரீஇ

வல்லையின் இமையமால் வரையிற் போயினாள்.                11

 

வள்ளியன் கடகரி வடிவின் வீழ்தரு

துள்ளியம் பனிமழைச் சோனை சூழ்தலால்

எள்ளருந் தன்மைசேர் இமைய மால்வரை

வௌ¢ளியங் கிரியென விளங்கு கின்றதே.                               12

 

எண்டகு மிமையமு மிமைய மேலுறு

கொண்டலு மொன்றியே குலவு காட்சிய

தெண்டிரை மிசையெழு நஞ்சுந் தீயநஞ்

சுண்டிடு மணிமிடற் றிறையு மொக்குமால்.                              13

 

நீலுறு மழைமுகில் நிலவு மின்னொடு

மேலுற விளங்கிய இமைய வெற்பது

மாலவன் றிருவொடு மருவிக் கண்டுயில்

பாலுறு பன்னகப் பாயல் போன்றதே.                                    14

 

கரும்புய லார்த்துறு காட்சித் தாகியே

இரும்பனி யிடையறா விமையப் பொன்வரை

சுரும்பின மிசையொடு துவன்றிச் சுற்றிட

அரும்பவி ழாதவெண் கமல மன்னதே.                          15

 

நீடிய மண்மகள் நிதியின் குப்பையைப்

பாடுறு தண்ணிலாப் படாம தொன்றினான்

மூடினள் வைத்திடு முறைய தேயெனக்

கோடுயர் பனிகொள்பொற் குன்றம் நின்றதே.                             16

 

பொன்னெடுங் கிரியென வீண்டும் புங்கவர்

துன்னினர் சூழ்வரென் றுன்னித் தொன்மனு

அன்னதை மறைத்தனன் இரதத் தாவியால்

என்னவும் நின்றதால் இமையப் பொன்வரை.                             17

 

குடகடல் குணகடல் கூடு றாவகை

இடையொரு வாலிதாம் ஏன மெய்தியே

தடபுரி சிறப்பென இமையத் தாழ்வரை

நெடுநில வளவையும் நிமிர்ந்து போயதே.                        18

 

விண்ணவர் ததிக்கடல் கடைந்த வெண்ணெயுள்

அண்ணலம் பாற்கட லமுதம் வைத்தெனக்

கண்ணகன் பரும்பனி கவைஇய வெற்பின்மேல்

உண்ணிறை புனற்றட மொன்று வைகிற்றே.                             19

 

அன்னதோர் தடத்திடை அசல மன்னவன்

மன்னிய கௌரிதன் மகண்மை யாகவுந்

தன்னிக ரிலாவரன் றனக்கு நல்கவும்

முன்னுற வருந்தவம் முயன்று வைகினான்.                             20

 

மெய்த்தவ மியற்றிய வெற்பன் காணிய

அத்தட மலருமோ ரரவிந் தத்தின்மேற்

பைத்ததோர் குழவியின் படிவத் துற்றனள்

எத்திறத் துயிரையு மீன்ற தொன்மையாள்.                              21

 

வேறு

 

ஆங்கவட் கண்டு வெற்பன் அடியனேன் பொருட்டா லம்மை       

நீங்கினள் போலும் முக்க ணிருமலன் றன்னை யென்னா

ஏங்கினன் றனது நோன்புக் கிரங்கின னிவைக ளீசன்

ஓங்குபே ரருளே யென்னா வுகையங் கடலுட் பட்டான்.                    22

 

கண்ணுறு கோத வாரி கான்றிட வுரோம ராசி

உண்ணிக ழன்பு மிக்குப் புறந்தனி லொழுகிற் றென்ன

வண்ணன்மெய் பொடிப்பத் துள்ளி அடியனே னுய்ந்தே னென்னாத்

துண்ணெனப் பாடி யாடி யமலையைத் தொழுது நின்றான்.                23

 

பங்கயத் தவிசின் வைகும் பராபரை தனைத்த னாது

செங்கயை னெடுத்து வல்லே சென்னிமேற் றாங்கி யேகித்

துங்கநல் லிமையத் தண்ணல் தொன்முறை யிருக்கை புக்கு

மங்கல மேனை யென்னு மனைவிகைக் கொடுத்தான் மாதோ.             24

 

கொடுத்தலுந் தொழுது வாங்கிக் கொற்றவ இவணின் பாங்கர்

அடுத்ததங் கெவனோ வென்ன அரசனும் நிகழ்ந்த வெல்லாம்.

எடுத்துரை செய்யக் கேளா வீசன தருளோ வென்னா

வடுத்தவிர் கற்பின் மேனை மனமுற மகிழ்ச்சி கொண்டாள்.                      25

 

சுரந்தன கொங்கை பாலுந் துண்ணென வொழுகிற் றெங்கும்

பரந்தன பொடிப்பின் போர்வை பரைதன தருளே யுள்ளம்

நிரந்தன கவலை யாவும் நீங்கின பவமுன் னுள்ள

கரந்தன விமையத் தண்ணல் காதலி தனக்கு மாதோ.                     26

 

பரிபுரந் தண்டை யம்பொற் பாடகம் பாத சாலம்

விரவிய தொடியே சங்கு வியன்மணிச் சுட்டி யாரம்

அரிகெழு மதாணி பொற்றோ டங்கதம் பிறவுஞ் சாத்தி

வரையுறழ் தனப்பா லார்த்தி வரம்பெறு காப்பு நேர்ந்தாள்.                 27

 

வனைதரு பவளங் காலா வயிரமே மருங்கிற் கோலாப்

புனையிரும் பலகை நீலாப் பிரிந்தபொற் றொட்டின் மேலா

அனையவ டன்னை யுய்த்து மங்கையிற் கொண்டுந் தன்கோன்

மனமகிழ் திறனாற் போற்றி மதியென வளர்க்க லுற்றான்.                 28

 

மன்னுயிர் புவன மேனை மற்றுள பொருளுக் கெல்லாம்

அன்னையா யுதவி நாளு மவற்றினை வளர்த்து நிற்பாள்

தன்னையும் வளர்ப்பா ருண்டோ வளர்ந்தது சழக்கே யந்தக்

கன்னிதன் னருளின் நீர்மை காட்டினள் போலு மன்றே.                    29

 

இந்தவா றினையர் பாலா யெம்பெரு மாட்டி வைகி

ஐந்தியாண் டகன்ற பின்றை யயன்முதற் றேவர் யார்க்குந்

தந்தையா ரருளை யுன்னித் தவமினிப் புரிவ னென்னாச்

சிந்தியா விமையத் தோங்கற் செம்மலுக் குரைக்க லுற்றாள்.                      30

 

நாற்பெருந் தடந்தோ ளண்ணல் நலத்தக வரைந்து கொள்வான்

நோற்பனா லினைய வெற்பி னுவலரு மொருசார் வைப்பின்

ஏற்பதோர் கன்னி மாரோ டெனைவிடுத் தருண்மோ வென்னாப்

பார்ப்பதி இயம்ப லோடும் பனிவரை யரசன் சொல்வான்.                  31

 

அன்னைகே ளெம்மின் நீங்கி யருந்தவ மாற்றற் கொத்த

தின்னதோர் பருவ மன்றா லியாண்டுமோ ரைந்தே சென்ற

நின்னுடல் பொறாதா லீண்டிந் நிலைமையைத் தவிர்தி யென்னக்

கன்னிகை நகைத்துக் கேண்மோ இ•தெனக் கழற லுற்றாள்.                32

 

ஈசனே காப்ப னல்லால் யாரையும் பிறராற் றம்மால்

ஆசறப் போற்ற லாகா ததுதுண வாகு மீண்டுப்

பேசிய திறனு மன்னோன் பேரருள் மறாதி யென்ன

நேசமோ டியைந்திட் டன்னை நினைந்தநோன் பியற்று கென்றான்.         33

 

மன்னனு மியைந்து பின்னர் மால்வரை யொருசார் தன்னில்

அன்னமென் னடையி னாளுக் கருந்தவச் சாலை யாற்றித்

தன்னுறு கிளைஞர் தம்பாற் றவத்தினால் வந்த பான்மைக்

கன்னியர் பலரைக் கூவிக் கௌரிபா லாகச் செய்தான்.                    34

 

நீலுறு மணிதோய் மேனி நிமலையங் கிமையத் துச்சி

மேலுறு மரசன் றேவி விடையினால் மடவார் பல்லோர்

பாலுறு பணியிற் சூழப் பரமனை யுன்னி யந்தச்

சாலையை யடைந்து மிக்க தவத்தினை யிழைக்க லுற்றாள்.                      35

 

தங்கிய வைக றோறுந் தாதையுந் தாவில் கற்பின்

மங்கையும் போற்றி யேக மாதுநோற் றிருந்தா ளிப்பால்

அங்கவட் பிரிந்த பின்றை அரும்பெருங் கயிலை மேய

வெங்கடம் பெருமான் செய்த பரிசினை இயம்ப லுற்றேன்.                36

 

ஆகத் திருவிருத்தம் - 410

                         - - -

 

 

3. மே ரு ப் ப ட ல ம்

பன்னருஞ் சிறப்பின் மிக்க பனிவரை யரசன் றன்பாற்

கன்னியம் புதல்வி யாகிக் கௌரிநோற் றிருந்த காலைத்

துன்னிய வவுணர் சூழச் சூரபன் மாவாம் வெய்யோன்

இந்நில வரைப்பின் அண்டத் திறைவனே யாகி யுற்றான்.                  1

 

மற்றது போழ்திற் றொல்லை மறைப்பொருள் வடத்தின் பாங்கர்ப்

பெற்றிடு சனக னாதி முனிவரர் பின்னும் பன்னாள்

அற்றமில் தவஞ்செய் தெந்தை யருளினாற் கயிலை நண்ணி

முற்றுணர் நந்தி போற்று முதலிலை வாயில் புக்கார்.                            2

 

நோன்மையின் முனிவ ரானோர் நுவலருங் காட்சி நந்தி

கான்முறை வணங்கி நிற்ப அனையவன் கருணை தன்னால்

வான்மலி கடவுட் கோயின் மந்திரங் கொண்டு செல்ல

நான்முகன் முதலோர்க் கெய்தா ஞானநா யகனைக் கண்டார்.              3

 

மொழியது தவறல் செல்ல முற்றுடல் பொடிப்புக் கொள்ள

விழிபுனல் பெருகத் தீசேர் பெழுகென வுள்ளம் விள்ள

அழகிய மறைக்கு மெட்டா ஆதிநா யகனை நோக்கித்

தொழுதன ருவகை பூத்துத் துள்ளினர் துளக்க முற்றார்.                   4

 

மண்ணவ ரமரர் யாரை வணங்கினு மவைக ளெல்லாம்

நண்ணிய பரமன் றாளி னாற்பெருந் தவத்தி னோருந்

தண்ணளி நெறியிற் பல்காற் றாழ்ந்தன ரெழுந்து நின்று

பண்ணிசை மறைக டம்மால் துதித்திவை பகர்த லுற்றார்.                 5

 

இருட்பெருங் கடலுள்யாமத் தெறிமருத திடைப்பட் டாங்குப்

பொருட்பெருங் கடலாம் வேதம் புடைதொறு மலைப்ப விந்நாள்

அருட்பெருங் கடலே எய்த்தே மமைந்தில துணர்வி யாங்கண்

மருட்பெருங் கடலின் நீங்கும் வண்ணமொன் றருடி யென்றார்.             6

 

நவையறு தவங்க ளாற்றி நல்லருள் படைத்த தொல்லோர்

இவைபுகன் றிடலு மன்பர்க் கௌ¤வருங் கருணை வள்ளல்

அவர்முகந் தெரிந்து நுங்கள் அறிவமைந் தடங்கு மாறு

தவலருஞ் சிறப்பின் நன்னூல் சற்றுது மிருத்தி ரென்றான்.                 7

 

என்றிவை யருள எந்தை யிணையடி தனாது முன்னர்

நன்றுணர் காட்சி கொள்ளும் நால்வரு மிருந்தார் அங்கட்

சென்றிடு நந்திப் புத்தேள் சிறப்புடை வதன நோக்கிக்

கொன்றையந் தொடையல் வேய்ந்த குழகனொன் றியம்பு கின்றான்.        8

 

பூங்கனைக் கிழவ னன்றிப் புங்கவர் யார்போந் தாலும்

ஈங்குறத் தருதி யல்லை யீதுனக் கடைத்த தென்ன

ஆங்கது புரிவ னென்னா வமலனை யிறைஞ்சி யங்கண்

நீங்கியக் கணத்தின் நந்தி நெறிமுதல்போற்றல் செய்தான்.                 9

 

நந்திமுற் கடையைப் போற்ற ஞானநா யகனா மண்ணல்

முந்துறை சனக னாதி முனிவரர் தொழுது கேட்ப

அந்தமில் ஆக மத்தின் அரும்பதம் மூன்றுங் கூறப்

புந்திய தொடுங்கும் ஞான போதகம் போதி யென்றார்.                     10

 

என்னலும் நகைத்தி யாது மெதிர்மொழி புரிந்தா னல்லன்

பன்னுவ தன்றால் மற்றிப் பரிசினா லிருத்தல் கண்டீர்

அந்நெறி யாகு மென்றே அனையவர்க் குணர்த்து மாற்றால்

உன்னரும் பரத்தின் மேலோ னொருசெயல் புரித லுற்றான்.                11

 

இருவரு முணரா அண்ணல் ஏனவௌ¢ ளெயிறி யாமை

சிரநிரை யநந்த கோடி திளைத்திடும் உரத்திற் சீர்கொள்

கரதல மொன்று சேர்த்தி மோனமுத் திரையைக் காட்டி

ஒருகணஞ் செயலொன் றின்றி யோகுசெய் வாரி னுற்றான்.                       12

 

இனையதோர் தன்மை காட்டி யெம்பிரா னுணர்த்தக் கண்டு

சனகனே முதலா வுள்ளோர் தவலரும் ஞான போதம்

பனுவலின் அளவன் றென்னும் பான்மையைத் தெரிந்து முக்கட்

புனிதன தருளாற் றத்தம் புந்தியி னொடுக்கம் பெற்றார்.                   13

 

தத்தமுள் ளொடுங்கல் பெற்ற தாபத கணத்தர் யாரும்

முத்தொழில் புரியும் மூவா முதல்வனாம் முக்கண் மூர்த்தி

மெய்த்தவ வடிவ முன்னி மேவினர் சூழ்ச்சி மேலோன்

சித்திரம் புணர்த்த பாவை செயலற இருக்கு மாபோல்.                    14

 

தற்பரன் இனைய வாற்றாற் றாபத ருணருந் தன்மை

அற்புத ஞான போத மளித்திடுங் கணம தொன்றின்

முற்படு கமலப் புத்தேள் முதலிய அமரர்க் கெல்லாம்

பற்பல யுகங்கள் சென்ற பிறர்க்கினிப் பகர்வ தென்னோ.                   15

 

இத்திற ஞானபோத மென்றுதொன் முனிவர்க் கெந்தை

கைத்தலங் கொண்டு காட்டுங் கணத்தினில் அமரர்க் கெல்லாம்

மெத்துபல் லுகங்கள் சென்ற விழுமிய காஞ்சி தன்னில்

அத்தன்மெய் குழைத்த நங்கை அவன்விழி புதைத்த நாடபோல்.           16

 

காரண முதல்வன் மோனக் காட்சியால் அமர ரெல்லாஞ்

சூரர மகளிர் தங்க டுணைமுலைப் போக மின்றி

ஆரிடர் நிலைமை தன்னை யடைந்தனர் அளக்கர் சூழ்ந்த

பாரிடை உயிருங் காமப் பற்றுவிட் டிருந்த வன்றே.                              17

 

ஆரணன் றனது மைந்தர்க் கரும்பெறல் ஞான போதம்

ஓரிறை காட்டு முன்னர் உலகெலா மொருப்பா டொன்றி

ஈருடன் முயங்கு மார்வ மின்றியே யிருந்த யார்க்குங்

காரணன் சிவனே யென்கை கழறவும் வேண்டற் பாற்றோ.                 18

 

பிணைவிழைச் சூழ்தந் துய்ப்பப் பெருமறை விதிவ ழாமல்

அணைவிழச் சடங்கிற் கொண்ட அரிவைய ரோடு தேவர்

இணைவிழைச் சியற்கை கூடா திரங்கினர் கவற்சி யெய்திப்

புணைவிழச் சலதி யாழ்ந்து புலம்புகொள் மாக்க ளேபோல்.                19

 

வன்முலை யணங்கி னோரும் வானவர் யாருங் காமத்

தன்மையும் புணர்ப்பு மின்றித் தளர்ந்தனர் வறிஞர் தம்பால்

இன்மைகொண் டோர்கள் செல்ல ஈவது கூடா வெல்லைப்

புன்மையொ டிருவர் தாமும் புலம்புறு தன்மை யேபோல்.                 20

 

பொற்புருக் குறைவின் றுற்றும் புனமேல் மகளிர் மைந்தர்

அற்பொடு கலந்து காமத் தரும்பயன் கோட றேற்றார்

தற்பர வடுக னாணைத் தன்மையால் அலகை யீட்டம்

நற்புன னீழல் பெற்று நணுகருந் தன்மை யேபோல்.                              21

 

மாடக வெழாலை யன்ன பணிமொழி மகளிர் மைந்தர்

கூடின ரிருந்து மின்பங் கொண்டிலர் சிறார்கு ழாமும்

ஆடவர் குழாமும் வாட்கண் அரிவையர் குழாமு மேனைப்

பேடியர் குழாமும் வெவ்வே றுற்றிடு பெற்றி யேபோல்.                          22

 

இருந்திட விரிஞ்சன் மாயோன் இருவரு மீசன் றன்பாற்

பொருந்திடு முணர்ச்சி கொண்டு முத்தியிற் புக்க சேயுந்

திருந்துசீர் வசிட்டன் சொல்லாற் சிலையெனப் பன்னாள் நின்ற

அருந்ததி மாதும் போன்றார் ஆடவர் மகளி ரெல்லாம்.                           23

 

ஏமரு புவன மூன்று மினிதருள் கமலக் கண்ணர்

பூமட மாதர் தம்பாற் புணர்கிலர் பொருவில் வேளுங்

காமரு மகளிர் கூட்டங் கருதலன் இவர்போற் சிந்தை

ஆமையி னொடுங்கல் பெற்றார் ஆசையுள் ளோர்களெல்லாம்.             24

 

மண்ணகத் துயிர்கண் முற்று மாதிரத் துயிர்கண் முற்றும்

விண்ணகத் துயிர்கண் முற்றும் வேற்றகத் துயிர்கண் முற்றும்

பெண்ணகத் தாண்மை கூடுஞ் சிறுநலம் பிழைத்த ஞானக்

கண்ணகத் திறைவற் கண்டு கடைநின்ற காட்சி யார்போல்.                25

 

நாகமார் சடிலத் தண்ணல் நாற்பெருந் தவரு முய்ய

யோகுசேர் நிலைமை காட்டு மொருகணத் துயிரின் பொம்மல்

வாகைவே டானு நிற்க மையலும் புணர்ப்பு மற்ற

ஆகையால் அகில மெல்லா மவனென்கை தெரிந்த தன்றே.                       26

 

சிலையொடு பகழி வாடத் திருமதிக் குடைசீர் குன்ற

வலிதளர் வெய்தத் தென்றல் மறிகடற் சுறவு தூங்க

அலைபுரி யாணை நீங்கி ஆடன்மா மதனு மாதின்

கலவிய தொழிந்தா னென்னிற் பிறர்செயல் கழறற் பாற்றோ.                      27

 

சாலிகள் வளரு மெல்லை தடம்புனல் வறுமைத் தாக

வாலிது குரல்வாங் காது வருத்தொடு மாய்வ தேபோல்

மேல னருளாற் போகம் வெறுத்தலற் கருமல் கின்றி

ஞாலமன் னுயிர்கள் முற்றும் நாடொறுங் குறைந்த வன்றே.                      28

 

முள்ளரை முளரிப் புத்தேள் முதற்புரி துணையே யன்றித்

தள்ளரு முயிர்கள் பின்னுந் தலைத்தலை மல்கா துற்ற

தௌ¢ளிதி னுலக மீன்ற தேவியின் றாகி ஈசன்

வௌ¢ளியங் கயிலை தன்னில் மேவிய மேலை நாட்போல்.                      29

 

இம்முறை நிகழ நாதன் ஈரிரு தவத்தி னோர்க்கும்

மெய்ம்மைகொ ளுணர்ச்சி காட்டி வீற்றிருந் தருளு மெல்லை

தெம்முயல் சூரன் தீங்கு செய்தலால் மகவான் வானோர்

தம்மொடுந் துறக்கம் விட்டுச் சசியொடுந் தரனி புக்கான்.                  30

 

மேகமூர் கடவுள் வௌ¢ளி வெற்பினி லேகி முக்கண்

ஏகநா யகனைக் காணு மெல்லையின் றாக மீண்டு

சோகமோ டம்பொன் மேருத் துன்னியே சூரன் மைந்தன்

மாகநா டழித்துச் சேயைச் சிறைசெய்த வண்ணந் தேர்ந்தான்.              31

 

தமனிய மேரு வெற்பிற் றன்னுள பொருப்பா டெய்த

நிமலனை யுன்னிப் பன்னாள் நெடுந்தவ முழத்த லோடும்

இமில்விடை மிசைக் கொண் டங்கண் எம்பிரா னேகக் காணூஉ

அமரர்கோன் வணங்கிப் போற்ற அனையவ னருளிச் செய்வான்.           32

 

நொந்தனை யளப்பில் கால நோற்றனை யாற்றல் தீர்ந்தாய்

இந்திர நினக்கு வேண்டிற் றென்னைய தியம்பு கென்னா

அந்தமி லறிவின் மேலோன் அறிகிலன் போலக் கேட்ப

வந்தனை புரிந்து போற்றி மகபதி புகல லுற்றான்.                        33

 

பன்னரும் பழிசேர் சூரன் பருவரற் படுத்திப் பின்னர்

என்னொரு புதல்வன் றன்னை இமையவர் பலரை வாட்டித்

தன்னகர்ச் சிறையிட் டெம்மூர் தழல்கொளீஇத் தவறு செய்தான்

அன்னவன் றன்னை யட்டே அளித்தியா லெம்மை யென்ன.                       34

 

மெய்ம்மைய தகன்ற தக்கன் வேள்வியி னிருந்த பாவம்

நும்மிடை யிருந்த தற்றால் நோதக வுழந்தீர் மேனாள்

நம்மிடை யொருசேய் வந்து நணுகிவெஞ் சூரைக் காதி

இம்மென வும்மைக் காப்ப னெனப்புகன் றிறைவன் போனான்.              35

 

மறைந்தனன் இறைவ னேக மகபதி யிரக்க மெய்திக்

குறைந்தனன் உணர்வு துன்பங் கூர்ந்தனன் குமர னங்கட்

பிறந்துமைக் காப்ப னென்றே பிரானருள் புரிந்த பெற்றி

சிறந்ததன் மனத்தி லுன்னித் தேறினன் உவகை செய்தான்.                36

 

மாசறு காட்சி கொண்ட மாதவர்க் கருளி யெங்கோன்

தேசுறு கயிலை யுற்றான் உமையவ ளிமையஞ் சேர்ந்தாள்

ஆசறு குமரன் அன்னார்க் கடைவதெத் தன்மை யென்னா

வாசவ னிருந்து நாடி மனமிசைக் கவலை கூர்ந்தான்.                            37

 

மயர்வொடு துறக்க மன்னன் மனோவதி யென்னு மாண்டை

வியனக ரெய்தி யாங்கண் வீற்றிருந் தருளும் பொன்னின்

இயன்முறை மனைவி தன்பால் இல்லினை யிருத்தல் செய்தாங்

கயனுறு கடிமாண் கோயி லடைந்தனன் அமர ரோடும்.                    38

 

இனையதோர் காலை முக்க ணெம்பிரான் ஞானபோதம்

முனிவரர்க் குணர்த்தி வைகும் முறையினாற் படைப்பின் றாகித்

துனியொடு வேதா வைகுந் தொன்முறை யவையை நண்ணி

அனையவன் கழன்முன் றாழூஉ அளப்பில வழுத்தி நின்றான்.             39

 

நிற்றலும் மகவான் றன்னை நீடருள் புரிந்து நோக்கிப்

பொற்றனிக் கமல மேய புங்கவர் முதல்வன் வானோர்

கொற்றவ வந்த தென்னை கூறுதி யென்ன லோடுஞ்

சொற்றனன் சூர பன்மன் செய்திடுந் துன்ப மெல்லாம்.                    40

 

வெய்யதோர் சூரன் செய்கை விளம்பியே முனிவர்க் கீசன்

ஐயமி லுணர்வு காட்டி யமர்வது முரைத்துத் தான்பின்

செய்யுறு தவங்கண் டன்னான் அருளிய திறனுஞ் செப்பி

உய்வதோர் பரிச தென்னோ உம்பரும் யானு மென்றான்.                  41

 

என்றலும் மலரோன் கேளா எவர்க்குமே லாகு மீசன்

ஒன்றிய வருளி னோனும் உற்றவர்க் குதவு வோனும்

அன்றியும் முறைசெய் வோனு மாதலின் முனிபோல் வௌ¢ளிக்

குன்றிடை யெம்மை யாளுங் குறிப்பின்வீற் றிருந்தா னன்றே.                     42

 

செங்கணமா றானும் நானுந் தேடுதற் கரிதாய் நின்ற

எங்கடம் பிராற்கு மேலா எண்ணவோர் தேவு முண்டோ

அங்கவன் ஞான போதம் அறிவருக் குணர்த்தி வைகல்

நங்குறை முழுது மாற்றும் நல்லரு ளாகு மன்றே.                        43

 

படமர்மதி மிலைச்சுஞ் சென்னிப் பகவனா ருயிர்க் ளெல்லாம்

அடுவதும் வருத்தந் தீர்க்கு மாரரு ளான வாபோல்

கொடியவெஞ் சூரன் றன்னைக் கொண்டேமக் கலக்கண் செய்கை

விடலரும் பவப்பே றார்த்தி வீடருள் கருணை யன்றே.                           44

 

பெற்றிடுங் குரவ ரானோர் பிள்ளைகள் தம்பால் நோயொன்

றுற்றிடிற் பிறரைக் கொண்டும் உறுதுயர் செய்து தீர்ப்பார்

மற்றவர் தம்பா லன்போ வன்கணோ அதுபோல் நம்பாற்

பற்றிய பவங்கள் தீர்ப்பான் பரமனு மிவைகள் செய்தான்.                  45

 

தெருமரு கின்ற நம்பாற் றீங்கெலாம் நீங்கு மெல்லை

ஒருசிறி தணுகிற் றாகு மாதலால் உணர்வின் மேலோன்

பரிவொடு நின்பால் வந்து பரிசிவை யருளிப் போனான்

இருவினைப் பௌவ வேலை ஏறினம் போலு மன்றே.                            46

 

ஆதலின் இறைவ னேமே லருள்செயும் அதற்கி யாமுந்

தீதற முயலு மாறு சிறிதுள திவற்றை மாயோற்

கோதினம் வேண்டுஞ் செய்கை யொல்லையிற் செய்து மென்னா

ஏதமில் கமலப் புத்தேள் இருக்கைவிட் டெழுந்தா னன்றே.                 47

 

வேறு

 

அன்ன காலை யதுநன்று நன்றெனாத்

துன்னு வானவர் சூழலொ டிந்திரன்

பின்ன ராகப் பெயர்ந்துடன் வந்திடச்

சென்னி நான்கினன் செல்லுதல்மேயினான்.                              48

 

ஞாலம் யாவையும் நல்கிய புங்கவன்

வாலி தாந்தன் மனோவதி நீங்குறா

மேலை வைகுந்த மேன்னும் வியனகர்

ஆல யத்தின் அகன்கடை யேகினான்.                            49

 

அங்க வெல்லை யதுகண்டு நேமியுஞ்

சங்கு மேந்திய தானையங் காவலன்

செங்கண் மாயன்முன் சென்றுவிண் ணோருடன்

பங்க யத்தன் படர்ந்தது செப்பினான்.                                    50

 

பணில மேந்திய பண்ணவன் அன்னரைக்

கொணர்தி யாலெனக் கூறி விடுத்துழி

இணையில் காவல னுய்த்திட இந்திரன்

கணமொ டெகினன் காசினி நல்கியோன்.                         51

 

பொருவில் மாமுனி புங்கவர் போற்றுதன்

னுருவு கொண்ட வுலப்பறு கண்ணர்கள்

மரபி னேத்த மணிப்பணிப் பீடமேல்

அரியி ருந்த அவைக்களம் நண்ணினான்.                        52

 

அன்ன மூர்தி அமருல காளுறும்

மன்ன னோடுமவ் வானவர் தம்மொடும்

பன்ன காசனப் பங்கயக் கண்ணவன்

பொன்னின் மாணடி போற்றி வணங்கினான்.                              53

 

தரைய ளந்திடு தாளினன் அவ்வழிக்

கருணை செய்துதன் காதல னாகிய

பிரம னுக்கொரு பீடிகை பெற்றியால்

அருளி யங்கண் அவனை இருத்தினான்.                         54

 

குல்லை மாமுடிக் கொண்டவன் அத்துனை

அல்லி மாம லரண்ணலை நோக்குறீஇ

ஒல்லும் நின்விதி யூறில தாகியே

செல்லு கின்றகொல் என்றலுஞ் செப்புவான்.                             55

 

கனகன் அச்சுறக் கந்திடை வந்தெழும்

அனக இத்திறங் கேட்க அறிவுடைச்

சனகன் முற்படு தாபதர் நால்வரும்

எனக ருத்திடை முற்பக லெய்தினார்.                                   56

 

அறிவின் மிக்க அனையரை நோக்கியான்

பெறுவ தாமிப் பெருந்தொழி லாற்றியீண்

டுறுதி ரென்ன உளத்தது கொண்டிலர்

முறுவல் செய்து மொழிந்தனர் இவ்வுரை.                       57

 

பாச வன்சிறைப் பட்டுப் படைப்பெனப்

பேச லுற்ற பெருந்தளை பூணலம்

ஈசன் மாணடி யெய்துதும் யாமெனா

மாசில் காட்சியர் வல்விரைந் தேகினார்.                         58

 

மாத வத்தினை மைந்தர்க ளாற்றலும்

ஆதி நாயகன் அவ்வுழி வந்துமக்

கேது வேண்டிய தென்றலு மெண்ணிலா

வேத வுண்மை விளம்புதி யாலென்றார்.                         59

 

என்ற லோடும் இறையவன் வௌ¢ளியங்

குன்ற மீதுதென் கோட்டிடை நிற்புறும்

ஒன்றொ ரானிழல் உற்று மறையெலாம்

நன்று ணர்த்திட நால்வருந் தேர்ந்தனர்.                          60

 

முந்தை வேத முழுது முணர்த்தியே

எந்தை யேக இருநிலம் போந்துதஞ்

சிந்தை யொன்றும் திறனரி தாதலின்

நொந்து பின்னரும் நோற்றலை மேயினார்.                              61

 

பின்னும் மைந்தர் பெருந்தவ மாற்றியே

தொன்ன லம்பெறு தூய வுளத்தராய்

என்னை யாளுடை யீச னருளினால்

மன்னும் வௌ¢ளி வரையிடை யேகினார்.                              62

 

ஏகல் பெற்றிடு மக்கட் கினிதுளம்

பாக முற்ற பரிசுணர்ந் தெம்பிரான்

ஆக மத்தின் அரும்பதம் மூன்றையும்

ஓகை பற்றி யுணர்வகை கூறியே.                                      63

 

கூனன் மாமதிக் கோடு மிலைச்சிய

வான நாயகன் மற்றவர் காண்டக

ஞான போதம் நவிலருந் தன்மையால்

மோன மேய முதற்குறி காட்டினான்.                                    64

 

அந்த வெல்லை யரனருள் கண்டுதம்

புந்தி யொன்றியப் புங்கவன் தாள்மலர்

சிந்தை செய்து செயலற்று வைகினார்

முந்தி யாப்புறு முத்தளை மூட்டற.                                     65

 

வேத நாயகன் மெய்த்தவர்க் கோர்கணம்

போத யோகின் பொருண்மையைக் காட்டுழி

ஓத லாகும் உகம்பல சென்றன

சீத வானதி சேர்ந்ததொன் னாளினே.                                    66

 

அன்னை தன்னை அகன்றரன் யோகிபோல்

என்ன துஞ்செய லின்றி யிருத்தலான்

முன்னை ஆண்பெண் முயக்கம தின்மையாய்

மன்னு யிர்த்தொகை மல்கலின் றாயதே.                         67

 

நவிறல் என்னினி ஞாலம் விசும்புளார்

இவறு காமப் புணர்ச்சிய தின்றியே

கவறல் கொண்டு கலங்கஞ ரெய்தினார்

தவறல் கொண்டது நல்குந் தனிச்செயல்.                        68

 

நல்கல் பெற்ற தமியனும் நாமகட்

புல்கல் பெற்ற புணர்ச்சியின் றாகியே

அல்கல் ¦பிறற அருந்தவ யோகரின்

ஒல்கல் பெற்றனன் உண்மையி தாகுமால்.                              69

 

நிற்க இங்கிது நித்தன்வ ரத்தினால்

ஒற்க மில்வள னுண்டிடு வெய்யசூர்

எற்கும் நித்தலு மேவலொன் றிட்டனன்

சொற்க நாட்டில் துயரினை நாட்டினான்.                         70

 

தேசு நீங்குறு தேவரை ஈண்டுள

வாச வன்றனை மாதிரத் தோர்களைப்

பாச னத்தொடு பற்றினன் நித்தலுங்

கூச லின்றிக்குற் றேவல்கொண் டானரோ.                        71

 

நிறைபு ரிந்த நிலவினை வாளரா

மறைபு ரிந்தென வானகத் தோருடன்

இறைபு ரிந்தவிவ் விந்திரன் மைந்தனைச்

சிறைபு ரிந்தனன் தீத்தொழி லாற்றியே.                          72

 

நிரந்த பல்லுயிர் தங்கட்கு நித்தலும்

அரந்தை மல்க அறிகிலன் போலவே

இருந்த னன்சிவன் என்னினிச் செய்வது

விரைந்து கூறுதி யென்று விளம்பினான்.                        73

 

அரிய தத்துவம் ஐயைந்தின் பேதமும்

மரபின் நாடினர் வாலுணர் வெய்திய

திருவி னாயகன் செங்கம லந்திகழ்

பிரமன் மாமுகம் நோக்கினன் பேசுவான்.                        74

 

  வேறு

 

ஆவிக ளனைத்து மாகி அருவமா யுருவ மாகி

மூவகை யியற்கைத் தான மூலகா ரணம் தாகுந்

தேவர்க டேவன் யோகின் செயல்முறை கா மென்னில்

ஏவர்கள் காமங் கன்றித் தொன்மைபோ லிருக்கும் நீரார்.                  75

 

ஊழ்வினை நெறியால் முன்ன மொருபெரு வேள்வி யாற்றித்

தாழ்வினை யடைந்த தக்கன் றன்புடை யிருந்தோர் தம்பாற்

சூழ்வினை யெச்ச முற்றும் அருத்தியே தொலைத்துத் தொல்லை

வாழ்வினை யருள நாதன் மனத்திடை நினைந்தா னன்றே.                76

 

சூரெனு மவுணற் காற்றல் புரிந்ததுஞ் சுரர்கள் யாருஞ்

சார்வருந் திருத்தால் ஈசன் தவத்தருக் குணர்வு காட்டி

ஆருயிர் எவைக்கு மின்ன லாக்கிய வாறுந் தூக்கிற்

பேரருள் முறையே யன்றிப் பிறிதொரு செயலு மன்றால்.                 77

 

முனிவருக் குணர்வு காட்டும் மோனத்தை முதல்வன் நீங்கிப்

பனிவரை அணங்கை மேவில் படைப்பயன முற்றும் அன்னார்க்

கினியொரு குமரன் தோன்றில் சூர்கிளை யெனைத்தும் பொன்றுந்

துனியுறும் உலக மெல்லாந் தொன்மைபோ லுய்யு மாதோ.                       78

 

அத்திற முற்று மாறொன் றறைகுவன் அகிலந் தன்னில்

எத்திறத் தருமால் கொள் வெய்திடுங் காமன் றன்னை

உய்த்திடின் முனிவர் தங்கட் குணர்வுசெய் மோனம் நீங்கிச்

சத்தியை மணந்து சேயைத் தந்திடு மெந்தை யென்றான்.                  79

 

பதுமபீ டிகையோ னன் பரிசுதேர்ந் துவகை யெய்தி

இதுசெயல் முறையே எந்தாய் ஏற்றன புகன்றா யென்ன

அதுபொழு தவனை நோக்கி அச்சுதன் அமலன் றன்பால்

மதனனை விளித்து வேண்டி விடுத்திநீ வல்லை யென்றான்.                      80

 

என்னலும் மலரோ னுள்ளத் திசைவுகொண் டெழுந்து மாயன்

பொன்னடி வணக்கஞ் செய்து விடைகொடு புலவ ரோடும்

மன்னொடு மங்கண் நீங்கி மனோவதி அதன்பாற் சென்று

தன்னக ரடைந்து கஞ்சத் தவிசின்வீற் றிருந்தா னன்றே.                   81

 

ஆகத் திருவிருத்தம் - 491.

- - -

 

 

4. கா ம த க ன ப் ப ட ல ம்

 

இந்திரன் வானவர் ஈட்டமொ டேகி

முந்துறு கஞ்ச முகட்டிடை யுற்றோன்

ஐந்திற னாகிய ஆசுக வில்வேள்

வந்திடு மாறு மனத்தில் நினைந்தான்.                                   1

 

நினைந்திடு கின்றுழி நீனிற மாயோன்

முனந்தரு கின்ற முரண்டகு வில்வேள்

மனந்தனில் உன்னும் மலர்ப்பக வன்முன்

இனந்தரு சூழலொ டிம்மென வந்தான்                           2

 

மாமறை யண்ணல்முன் வந்து பராவித்

தாமரை நேர்தரு தாடொழு தென்னை

நீமன மீது நினைந்ததெ னென்னாக்

காமன் வினாவ அயன்கழ றுற்றான்.                                    3

 

கங்கை மிலைச்சிய கணணுதல் வெற்பின்

மங்கயை மேவநின் வாளிக மூவி

அங்குறை மோனம் அகற்றினை யின்னே

னுங்கள் பொருட்டினில் ஏகுதி யென்றான்.                        4

 

வேதனில் வாறு விளம்பிய கூற்றாங்

தீதுறு பொங்கழல் செய்யவள் சேயோன்

காதிடை யேநெறி யார்ககடி திற்போய்

ஏதமி லுள்ள மெரித்ததை யன்றே.                                      5

 

கிட்டி யரன்செயல் கேடுசெ யென்னுங்

கட்டுரை யேவரு காமனு ளெங்குஞ்

சுட்ட தெனிற்பிறை சூடிய வன்மெய்

அட்டிடு கின்றதும் அற்புத மாமோ.                                      6

 

இத்திற மாமல ரேந்தல் இயம்பக்

கைத்துணை கொண்டிரு கன்னமும் வல்லே

பொத்தியி னைந்து புராந்தகன் நாமஞ்

சித்தச வேளுரை செய்தன னம்மா.                                     7

 

ஈட்டுறு பல்பவ மெய்துவ தோர்சொற்

கேட்டன னென்று கிலேசம தாகி

வாட்டிய மென்மலர் போல்அணி மாழ்கிப்

பூட்டுவில் அண்ணல் புகன்றிடு கின்றான்.                        8

 

வேறு

 

வன்கண் ணருமா சறுகாட் சியர்பால்

நன்கண் ணுறினுய் யுநலம் புகல்வார்

உன்கண் ணுறின் இத் தவறோ தினையால்

என்கண் ணடிகட் கிலையோ அருளே.                            9

 

வன்னப் புலிமங் கையைமா மலர்மேற்

பொன்னைப் பிறரைப் புணர்வுற் றிடுவான்

கன்னற் சிலைபூங் கணைகொண் டமர்செய்

தென்னத் தனைவென் றிசைகொண் டிலனோ.                    10

 

வௌ¢ளைக் கமலத் தியைமெய் யுறவுந்

தௌ¢ளுற் றணிசெய் ததிலோத் தமைபால்

உள்ளப் புணர்வுற் றிடவும் முனையான்

பிள்ளைச் சமர்செய் திசைபெற் றிலனோ.                        11

 

சீர்பெற் றிடுசெந் திருவைத் திருமால்

மார்பிற் குடியா யுறவைத் திலனோ

கார்பெற் றவிழிக் கலைமங் கையையுன்

ஏற்பெற் றிடுநா விலிருத் திலனோ.                                     12

 

தண்ணின் றகுழற் சசியென் றுரைசெய்

பெண்ணின் றலையுற் றிடுபெற் றியலால்

விண்ணின் தலைவற் குளமெய்ம் முழுதும

கண்ணென் றிடுபல் குறிகண் டிலனோ.                           13

 

விசையுற் றிடுசெங் கதிர்மே லவர்கீழ்த்

திசையுற் றவராங் கொருசே யிழைபோல்

இசையற் றிடுபா கனிடைப் புணரா

வசையுற் றிடுபான் மைமயக் கிலனோ.                                 14

 

கதனத் தொடுவந் துகலந் தவர்பால்

இதநட் புறுமா மதியென் கணையால்

மதனத் தொடுதே சிகன்மா தையுறாப்

புதனைத் தருபான் மைபுணர்த் திலனோ.                         15

 

முற்றே தின்மறைத் தொகைமூ தறிவால்

கற்றே துமுணர்ந் திடுகாட் சிபெறு

நற்றே வர்கள்யா ரையுநா ரியர்தங்

குற்றே வல்செயும் படிகூட் டிலனோ.                                   16

 

மறைதே ரும்வசிட் டன்மரீ சிமிகக்

குறிதா முனியத் திரிகோ தமன்நல்

அறிவால் உயர்கா சிபனா தியராந்

துறவோர் தமதாற் றல்தொலைத் திலனோ.                              17

 

மன்னான் மரபுற் றிடுமா னவரைப்

பின்னா கியமும் மைகொள்பே தகரை

மின்னார் கண்மயக் கினில்வீட் டிலனோ

என்னா ணைகடந் தவர்யா ருளரே.                                     18

 

அறைபெற் றிடுமித் திறமா னவெலாம்

முறைபெற் றிடுமென் னின்முடிந் திடுமோ

பிறைபெற் றிடுகின் றபெருஞ் சடையெம்

மிறைபெற் றிடுசத் தியியற் றிடுமே.                                    19

 

மாமே முதலா கியவா னவர்தம்

பாலே அடல்வா கைபடைப் பதலால்

மேலே நதிசூ டியமே லவன்மேற்

கோலே வினன்வென் றிடல்கூ டுமதோ.                         20

 

ஐதா கியசீர் கொடவன் முறைசெய்

நொய்தா னவர்போ லநுவன் றனையால்

வெய்தா மழலா கியமே லவன்மேல்

எய்தா லுமென்வா ளிகளெய் திடுமோ.                                  21

 

கையுந் நகையுங் கதிரார் விழியும்

மெய்யுந் தழலாம் விமலன் றனையான்

எய்யு படிசென் றிடினிவ் வுயிர்கொண்

டுய்யுந் திறமும் உளதோ உரையாய்.                                   22

 

பற்றோ டிகலற் றபரம் பொருளை

எற்றோ மயல்செய் குவதீ சனையும்

மற்றோ ரெனநின் னின்மதித் தனையால்

சற்றோ அவனாற் றல்தவிர்த் திடவே.                                   23

 

சூறா வளிவை கியசூ ழலின்வாய்

ஏறா வொருபூ ளையெதிர்ந் துளதேல்

நீறா டியமெய் யுடைநின் மலன்மேல்

வீறாய் வினையேன் பொரமே வுவனே.                                 24

 

ஆறுற் றிடுசெஞ் சடையண் ணலுடன்

மாறுற் றவருண் டெனின்மற் றவர்தாம்

ஊறுற் றனரல் லதுளத் துயர்கொண்

டீறுற் றனரல் லதிருந் துளர்யார்.                                25

 

இந்நா ரணணா தியர்யா வர்களும்

அந்நா ளமலன் பணியாற் றிடலும்

அன்னா வவர்சிந் தனைமொய்ந் நகையால்

ஒன்னார் புரமட் டதுணர்ந் திலையோ.                                   26

 

எந்தாய் அருளென் றொரிளங் குமரன்

 வந்தா தியையேத் தலும்வை துசினக்

கொந்தா ரழல்போல் வருகூற் றுவனை

அந்தாள் கொடுதைத் ததறிந் திலையோ.                         27

 

முன்னைப் பகல்நீ யுமுகுந் தனுமாய்ப்

பன்னகற் கரிதா யபரம் பொருள்யாம்

என்னச் சினெய் தியிகழந் தவுனைச்

சென்னித் தலைகொண் டதுதேர் கிலையோ.                             28

 

அடன்மே வுசலந் தரனா தியராய்ப

படிமே லுளதோர் ப•றா னவர்தாம்

முடிவார் அரனோ டுமுரண் டிடலுங்

கெடுமா றுபணர்த் ததுகேட் டிலையோ.                          29

 

வீடெய் துறுநின் மகன்வேள் விநிலத்

தூடெய்தினர்யா வருமொப் பில்அரன்

மாடெய் தியவீ ரனின்மா னமொரீஇப்

பாடெய் தியபுன் செயல்பார்த் திலையோ.                        30

 

அண்டா தவகந் தையொடா ழியின்வாய்

விண்டா னவரச் சுறமே வுவிடம்

உண்டான் நிகழ்கங் கையையோ ரணுவிற்

கொண்டான் அவன்வன் மைகுறிக் கிலையோ.                    31

 

தரியா வுளமாற் கொடுதன் னிகழும்

அரியோ டுகைம்மா வையடற் புலியை

உரியா மிசைபோல் வையுடுக் கையெனப்

பரியா அரனுற் றதுபார்த் திலையோ.                                    32

 

ஓரார் தனதுண் மையையுள் ளமிசை

யாரா யினுமாற் றவகந் தைபெறின்

வாரா அவர்தம் வலிமாற் றிடுமால்

தேராய் கொல்பரஞ் சுடர்செய் கையதே.                          33

 

இறுகின் றகடைப் பகலீ றிலதோர்

கறைதுன் றுமிடற் றிறைகண் ணினும்வீழ

பொறியொன் றதனாற் பொடிபட் டிடுநீ

அறிகின் றிலையோ அகிலங் களுமே.                                   34

 

இப்பெற் றியனா கியவீ சனையென்

கைப்பற் றியவிற் கொடுகந் தமலர்

அப்பிற் பொருகின் றிலன்ஆ ருயிர்மேல்

மெய்ப்பற் றிலரிச் செயல்வேண் டுவரே.                         35

 

மேனா ளகிலந் தரமெல் லியலா

ஆனா வருடன் னையளித் தொருபால்

தானா கவிருத் தியதற் பரனை

நானா மயல்செய் வதுநன் றிதுவே.                                     36

 

வேறு

 

என்னா மதவேள் இசையா மறுத்திடலும்

பொன்னார் கமலப் பொகுட்டுத் தலைவந்த

மன்னான வேதா மனக்கவலை கொண்டுசில்போ

துன்னா நெடிதே உயிரா வுரைக்கின்றான்.                        37

 

       

வெண்மை யறிவால் தமைவியக்கும் விண்ணவர்பால்

அண்மை யிலனாகும் அண்ணலியல் கூறினையால்

உண்மை யிதுவாம் உவனைப் பொருவதுவும்

எண்மை யதுவோ எவர்க்கு மரிதன்றோ.                         38

 

அன்ன பரிசே யெனினும் அடைந்தோர்தம்

இன்ன லகற்று மிறையருளால் இக்கருமம்

முன்னின் முடியும் ஒழிந்தோரால் முற்றுவதோ

முன்னின் இதற்கு முதற்கா ரணம்நீகாண்.                        39

 

எல்லார் செயலும் இறைவன் இயற்றுவதே

அல்லா திலையோ ரணுவுமசை யாதெவையும்

நில்லா தருளின்றேல் நீயின் றவன்பாலிற்

செல்லாய் உனது செயலுமவன் செய்கையதே.                    40

 

செம்மாந்து தற்புகழுந் தேவர்குழு வும்மருள

எம்மான் பிறன்போ லிருந்தோர் துரும்புநிறீஇ

அம்மாதன் செய்கை யனைத்துமெனக் காட்டினனே

நம்மாலும் முற்றுஞ் சிலவென்கை நாணன்றோ.                  41

 

பாடு திகழ்பாவை பல்லுயிரு மல்லனவும்

ஆடல்புரி விப்பான் அருவுருவாய் நின்றபரன்

நாடில் அவனையின்றி நம்மாலொன் றாகவற்றோ

ஏட இதனிலைமை இந்நாளு மோர்ந்திலையோ.                   42

 

கையம்பு பூட்டிக் கருப்புச் சிலைகோட்டி

எய்யும் படிவழிக் கொண்டேகாய் இறுதியிலா

ஐயன் றனைநீ யதுவும் அவனருள் காண்

மெய்யங் கதற்கேது மேனாளே கண்டனம்யாம்.                   43

 

ஈங்கிதுவு மன்றி யெவரேனுந் தம்மடங்காத்

தீங்கு பெறினுதவி செய்யென் றிரந்திடலும்

ஆங்கொருவன் செய்யா ததுமருத்துத் தன்னுயிரைத்

தாங்கல் உலக நடைதனக்குத் தக்கதுவோ.                       44

 

என்னானு மோருதவி யாதொருவன் யார்க்கெனினுந்

தன்னால் முடிவதெனில் தானே முடித்தல்தலை

சொன்னால் முடித்த லிடையாகுஞ் சொல்லுகினும்

பன்னாள் மறுத்துப் புரிதல்கடைப் பான்மையதே.                  45

 

ஏவ ரெனினும் இடருற் றனராகி

ஓவில் குறையொன் றுளரே லதுமுடித்தற்

காவி விடினும் அறனே மறுத்துளரேற்

பாவம் அலது பழியும் ஒழியாதே.                                      46

 

உய்கை பொருளா வொருவர்க்கு மோருதவி

செய்கை யிலனேற் சிறியோன் கழித்தபகல்

வைகல் அதுவோ வறிதே அவன்வாழ்க்கை

பொய்கை மலர்ந்தகொட்டி போலும் பொலிந்துளதே.                      47

 

அந்நா ரணனோ டமர்முற் றியமுனியைப்

பொன்£ டருளும் புலவோ ரிறையிரப்ப

வென்னாரு மென்பு விருத்திரனுக் காவுதவித்

தன்னா ருயிர்விட்ட தன்மைதனைக் கேட்டிலையோ.                      48

 

மேலொன் றுளதோ விளம்ப எவரேவர்க்கும்

மூலந் தலைதெரிய முன்னோன் கடலெழுந்த

ஆலந் தனையுண் டமராக் கமுதளித்த

சீலந் தனைநீ சிறிதுந் தௌ¤ந்லையோ.                                 49

 

தேக்குஞ் சலதியிடைத் தீப்போ லெழுந்தவிடந்

தாக்கும் பொழுது தளரே லெனவுரையா

ஊக்கங் கொடுமா லொருகணநின் றேநம்மைக்

காக்கும் படிக்குக் கறுத்தசெயல் கண்டிலையோ.                   50

 

ஆரா யினுமொருவர் அன்பிற் றலைப்பட்டுப்

பேரா தரத்தாற் பிறர்க்குதவி செய்வாரேல்

தீராத வெந்துயரிற் சேர்தலை மாய்தலிவை

பாரார் புகழே பயனென்று கொள்வாரே.                          51

 

சூரந் தனில்வலிசேர் சூரபன்மன் ஏவலின்யாம்

ஆருந் துயர்கொண் டழுங்கினோம் அன்ன தினித்

தீரும் படிக்குச் சிவனொருசே யைத்தருவான்

ஓரைம் படைசெலுத்த உன்மையாம் வேண்டினமே.                       52

 

ஆதலினால் எங்கள் அலக்கணகற் றும்பொருட்டுச்

சாதல் வரினுந் தவறோ புகழ்செய்வார்

ஏது வரினு மெதிர்செல்வார் எம்பணியிற்

போதி யினிமாறு புகலே லெனவுரைத்தான்.                              53

 

வேறு

 

பங்க யப்பொ குட்டி ருந்த பகவன் ஈது புகறலும்

ஐங்க ணைக்க ரத்தி னோன ரந்தை யெய்தி யாதியாம்

புங்க வற்கு மாறு கொண்டு பொருகி லேன்இ தன்றியே

இங்கெ னக்க டுத்த தொன்றி யம்பு செய்வல் என்றனன்.                   54

 

என்னும் வேலை அமர ரோடி ருந்த வேதன் முனிவுறா

நன்ன யந்த ழீஇயு ரைத்த நமது சொன்ம றுத்தியால்

அன்ன பான்மை புரியின் உய்தி அல்ல தேலு னக்கியாம்

துன்னு சாப மிடுதும் யாது துணிவு செலல்லு கென்றனன்.                55

 

வெய்ய சாப மிடுது மென்று வெகுளி யால்மொ ழிந்தகேட்

டைய மேனி மதன வேள் அழுங்கி வெய்து யிர்த்தினிச்

செய்ய லாவ தென்னெ னத்தே ரிந்து சிந்தை தேற்றியே

வைய கம்ப டைத்த அண்ணல் வதன நோக்கி யுரைசெய்வான்.            56

 

கேளி தொன்று ரைப்பல் வேத கேடு சூழும் நினதுவாய்ச்

சூளின் மேலை யியல்ப கன்று துன்பு ழந்து படுதலிற்

காள கண்டன் முன்பு சென்று கடிய வெய்ய கணைகடூஉய்

மாளி னுஞ்சி றந்த தம்ம மற்றும் உய்ய லாகுமே.                       57

 

செற்ற நீர்மை கொள்ளல் ஐய செஞ்ச டைப்பி ரானிடத்

திற்றை வைகல் அமரி யற்ற ஏகு வேனி யானெனக்

கொற்ற வேளு ரைத்த லுங்கு ளிர்ந்த பூவி ருக்கைமேல்

உற்ற போதன் மகிழ்சி றந்து ளங்க ளித்து மொழிகுவான்.                 58

 

பணிந்த சொல்ல னாகி நாம்ப ணித்த வாபு ரிந்திடத்

துணிந்த வாறு நன்று நன்று சூலி பாலி னுனைவிடாத்

தணந்தி டேந்தொ டர்ந்து பின்பு சார்து மஞ்சல் போகெனா

உணர்ந்து கூறி மார வேளை ஓவி லன்பொ டேவினான்.                  59

 

ஏவு காலை மதனை வேள்வி யிறைதெ ரிந்து மைந்தயான்

தேவ ரோடு துயரு ழந்து சிறுமை பெற்ற தறிதியே

ஓவில் வாழ்வு தகுதி யென்னின் உமைம டந்தை தனையரன்

மேவு மாறு புரிகெ னாவி ரைந்து செல்ல நல்கினான்.                            60

 

நல்க லுங்க ரங்கள் கூப்பி நான்மு கத்தன் உலகொரீஇ

அல்கு தன்பு ரத்து நண்ணி அவ்வி யற்கை கூறியே

ஒல்கு தேவி யைத்தெ ளித்தொ ருப்ப படுத்தி நறியதேன்

பில்கு வாளி யிட்ட தூணி பின்னி யாத்தி றுக்கினான்.                            61

 

கயக்க ணின்ற பூவின் மிக்க காம காண்டங் கன்னல்வில்

இயக்க மான பார வில்லெ டுத்து மொய்மபி லேந்தியே

தயக்க முற்று லாய செய்ய தண்ணென் மாவி ளந்தளிர்

வயக்க டுங்கண் வாள மொன்று மாம ருங்கு வைத்தரோ.                 62

 

கோகி லங்க ளான வுங்கு ழாங்கொள் வேலை யானவுங்

காக ளங்கண் முரச மாய்க்க றங்க ஓதம் யாவதுஞ்

சீக ரங்க ளாய சைந்து செல்ல மீன கேதன

மாக வும்ப ருலவ வெண்ம திக்கு டைநி ழற்றவே.                               63

 

பொருவில் கிள்ளை யென்னு மாக்கள் பூண்ட தென்றல் வையமேல்

இரதி யோடு மேறி வேளி ருந்த தொல்லை யுலகினை

அரித கன்று குறிகள் வெய்ய அளவை யின்றி நிகழவே

பரமன் வைகு கயிலை யம்ப ருப்ப தத்தை யணுகினான்.                  64

 

கயிலை கண்டு தொழுது தேரி ழிந்து காம வேள்தனக்

கயலில் வந்த பரிச னத்தை அவண்நி றுத்தி மாதுடன்

பயிலும் வில்லும் வாளி யும்ப £த்து வல்லி யத்தினைத்

துயிலு ணர்த்தும் மான்எ னத்து ணிந்து போதல் மேயினான்.                      65

 

கூறு லாவு மதிமி லைந்த குழகன் வைகு கயிலைமேல்

கூறி யேத னாது கையி ருந்த கார்மு கம்வளைஇ

மாறில் ஏவு பூட்டி யங்கண் வைகு புள்ளும் மாக்களும்

ஊறி லாதி ருந்த காம முன்னு வித்தல் முன்னினான்.                            66

 

பொருலில் காம னின்ன தன்மை புந்தி கொண்டு மற்றவண்

விரவு புள்ளின் மீதி னும்வி லங்கின் மீதி னும்மலர்ச்

சரமெ லாம்வி டுப்ப வாதி தனது மந்தி ரத்துமுன்

அருளி னோடி ருந்த நந்தி யடிகள் அன்ன கண்டரோ.                             67

 

கொம்மெ னச்சி னம்பு ரிந்து கொடிய பூசல் மதனனால்

தம்மி யற்கை யாமி தம்ம சரத மென்று நினைவுறா

உம்மெ னத்தெ ழித்து ரப்ப வொலிகொள் புள்ளி லங்கின்மேல்

வெம்மை யிற்செ லாது மாரன் விசிகம் விண்ணின் நின்றவே.                    68

 

நிற்ற லோடு மவ்வி யற்கை நின்று நோக்கி நெடியவேள்

கொற்ற நீடு சூர லொன்று கொண்டு கோபு ரத்தலைத்

தெற்றி மேலி ருந்த நந்தி தேவர் காப்பும் ஆணையும்

முற்று நோக்கி நெடிது யிர்த்து ளந்து ளங்கி விம்மினான்.                 69

 

விம்மி நந்தி தேவர் முன்வி ரைந்து சென்று தாழ்ந்தெழூஉச்

செம்மை செய்க ருத்த னாய்த்தி கழ்ந்து போற்றெ டுத்தலும்

இம்ம லைக்கண் வந்த தென்னை யெனஅ யன்பு ணர்ப்பெலாம்

மெய்ம்மை யாவு ணர்த்த லும்வி னாவி ஈது ளங்கொள்வான்.                     70

 

வேத னாதி யான தேவர் விழும நோய கன்றிடும்

ஏது வால்வி டுத்து ளார்க ளிவனை யீசன் யோகுறும்

போதில் யாவர் வருகி னும்பு காது செய்தி மதனவேள்

சாத லெய்து வான்வ ரின்த டேலெ னாவி யம்பினான்.                           71

 

புன்மை யாம்ப கூத்த டிந்து புரையில் வேள்வி யாற்றியே

தொன்மை போவெ ழுப்பு மாறு கருதி சோற்ற வாறுபோல்

மன்ம தன்ற னைப்ப டுத்து மாதை வேட்டு மற்றதன்

பின்மு றைக்கண் நல்க எம்பி ரானி னைந்த னன்கொலாம்.                72

 

ஆகை யாலி தருள தேயி வன்வ ரத்தும் ஆணையென்

றோகை யாலு ணர்ந்து வேளை நோக்கி உம்ப ராகுலம்

போகு மாறி யற்றல் செய்த பொருவி லாத கருணைசேர்

ஏக நாய கன்றன் முன்ன ரேகல் வேண்டு மோவென்றான்.                 73

 

நந்தி தேவன் இனைய வாறு நவில வேயு ணர்ந்துவேள்

எந்தை கேட்டி யாலி தொன்றெ னக்கொ ரீறு குறுகினும்

அந்தி வேணி யண்ணல் முன்னம் அணுகு மாற மைந்திவண்

வந்த னன்ன தற்கி யைந்த வகைமை நல்கு வாயென.                    74

 

இகலு மன்பு மிறையு யின்றி யெவ்வு யிர்க்கு முள்ளதோர்

புகுதி நாடி முறையி னைப்பு ரிந்து சேர்ப வர்க்குமேல்

தகுதி செய்து கருணை கூர்ச யம்பு முன்பு சார்தியேல்

மிகுதி கொண்ட மேலை வாய்தல் மேவி யேகு கென்றனன்.                       75

 

என்ற லுங்க ரங்கு வித்தி றைஞ்சி மார னேர்புறீஇ

நன்றி லங்கு வேத்தி ரக்கை நந்தி தேவர் விடைதரச்

சென்று மேலை வாயில் சார்ந்து தேவ தேவன் நீற்றழற்

குன்ற மென்ன மோன மோடி ருந்த வெல்லை குறுகினான்.                76

 

வேறு

 

ஓருதனிச் சிம்புள் வேந்தன் உறைந்தது கண்ட சீயக்

குருளையின் அமலன் றன்னைக் கோலமால் புதல்வன் காணா

வெருவரு முளத்த னாகி வியர்த்துமெய் பனியா வுட்கிப்

பருவர லுழந்து கொண்ட படையொடுங் கடிதில் வீழ்ந்தான்.                       77

 

எழுதரு மதனா மேகம் இறைவனைக் கண்டே யஞ்சி

விழியிருண் மூடக் கோல வில்லிட்டு வியர்ப்பின் வாரி

மழைபட இடியார்ப் பெய்த மார்புமற் றதுவீழ் கின்ற

தொழின்முறை புதரங்க காட்டத் துளங்கிவீழ்ந் திட்ட தன்றே.                      78

 

அஞ்சிவீழ் குற்ற மாரன் அறிவிலா தவச மாகத்

துஞ்சினன் கொல்லோ வென்னாத் துயருழந் தெடுத்துத் தேவி

கஞ்சநேர் கரத்திற் றாங்கிக் கடிவகை யுய்த்துத் தேற்ற

நெஞ்சமே லுணர்ச்சி கூட இனையவை நினைந்து நைவான்.                      79

 

முறுவலின் எயின்மூன் றட்ட முதல்வனைப் பொருதி யென்றே

நறைமலர் அயனு மேனைத் தேவரும் நாகர் கோனும்

உறுதுய ரகல இங்ஙன் உய்த்தனர் வினையேற் கின்னே

இறுதிவந் தணுகிற் றாகும் இதற்றுமோ ரைய முண்டோ.                  80

 

எண்டகு குணத்தின் மேலாம் இறையவன் இருந்த வண்ணங்

கண்டலும் வெருவி யாவி காண்கிலன் அவனை யென்கைக்

கொண்டதோர் கணைகள் வாகை கொள்ளுமோ இனைய பான்மை

அண்டரும் அயனும் யாரு மறிகிலர் போலு மன்றே.                              81

 

தாக்கினாற் வலிபெற் றுள்ள மருத்தின்னமுன் தனித்த தீபம்

போக்கினால் நிற்ப துண்டோ அனையது போலத் தேவர்

வாக்கினால் மனத்தா லெட்டா வள்ளன்மு னுய்த்தா ரன்னான்

நோக்கினால் இனிச்சில் போதின் நுண்பொடி யாவன் போலாம்.             82

 

ஏமுற வுலக மெல்லா மீறுசெய் முதல்வன் றன்னைப்

பூமலர் கொண்டி யானே பொருகின்றேன் நகையீ தன்றே

ஆமிது விதியின் செய்கை யதனையார் கடக்க வல்லார்

தாமரை முதல்வற் கோனுந் தள்ளருந் தகைய தன்றே.                           83

 

ஈங்கிவை யமலன் சூழ்ச்சி யாவதோ முடிவ தோரென்

தூங்கியான் கிடந்த லொல்லா துண்ணென வெழுந்து வில்லும்

வாங்கினன் சரமும் பூட்டி வல்லவா றிழைப்பன் ஐயன்

பாங்குற நின்று மேலே பட்டவா படுக வென்றான்.                        84

 

இனையன பலவு முன்னி யெழுந்துமா மதவே ளிட்ட

தனுவினை யெடுத்து வாங்கித் தண்மலர் விசிகம் பூட்டி

மனைவிதன் னகலாள் செல்ல மதிக்குறை தவழ்ந்த சென்னிப்

புனிதன தொருசார் போகிப் பொருவகை முயன்று நின்றான்.                       85

 

மாரவே ளீண்டு நிற்ப மனோவதி நகரின் மேய

ஆரண முதல்வன் றன்னை அமரர்கோன் தொழுது நோக்கிக்

காருறழ் கண்டன் றன்பாற் காமனை விடுத்தி யன்னான்

போரிய லுணர்வான் அங்கட் போதரல் வேண்டு மென்றான்.                       86

 

சதமகன் இனைய கூறத் தண்மலர்க் கடவு ணேராக்

கதுமென வெழுந்து வானோர் கணத்துட னனையன் போற்றப்

பொதிதரு கயிலை யந்தண் பொருப்பின்மே லொருசார் போகி

மதனியல் தெரிந்து முக்கண் வள்ளலை வழுத்தி நின்றார்.                 87

 

எறிதரு கணிச்சிச் செங்கை யீசன்மே லிலக்க நாடுங்

குறியினர் போல நின்ற கொடுந்தொழில் மாரன் றுஞ்சு

நெறியினர்க் கச்ச முண்டோ நினைத்தது முடிப்ப னென்னா

நறுமலர் வாளி ஐந்து நாதன்மேற் செல்ல விட்டான்.                             88

 

விட்டவெம் பகழி யைந்தும் வியத்தகு விமலன் மீது

பட்டலுஞ சிறிதே வேளைப் பார்த்தனன் பார்த்த லோடுங்

கட்டழல் பொதிந்த நெற்றிக் கண்ணது கடிதே காமற்

கட்டது கயிலை முற்றுஞ் சூழ்புகை பரவிற் றன்றே.                              89

 

ஆலையஞ் சிலைவேள் ஆகம் அழல்படக் கயிலை யின்கண்

ஏலவெம் புகையுந் தீயு மெழுதரு மியற்கை நாடின்

மாலயன் முதலோர் யாரு மதித்துழி விரைந்து பாலின்

வேலையின் நடுவு தீய விடமெழுந் தனைய தம்மா.                             90

 

செறிந்ததீப் புகையின் மாலை செல்லலுங் குணபால் வாய்தல்

உறைந்ததோர் நந்தி தேவன் ஒல்லையி லதனைப் பாரா

இறந்துபா டாயி னான்கொல் ஏகிய மதன னென்னா

அறிந்தரோ உடைந்தார்க்* கோதி யொருசெய லறைய லுற்றான்.           91

 

( பா-ம் - * அ¨நிதார்க் )

 

நுண்ணிய வுணர்வின் மிக்கீர் நுமக்கிது புகல்வன் எங்கோன்

கண்ணுத லுமிழ்ந்த செந்தீக் காமனைப் பொடித்த தன்றால்

அண்ணலை யெய்வ னென்னா அனையவன் றுணிவிற் கூறித்

துண்ணென ஈண்டு வந்த செயற்கையே சுட்ட போலும்.                   92

 

இன்னினி மகிழ்நன் றுஞ்சு மியற்கையை யிரதி நாடி

வன்னிபெய் யலங்கல் போலாய் வயிறலைத் திரங்கி யெங்கோன்

தன்னைவந் திரப்ப வேளைத் தருகுவன் காண்டிர் அந்த

முன்னவன் அணுக்கட் காய முறைபுரி யருளா லென்றான்.                93

 

ஐந்தொகை யாற்றின் மாடே யமலனை நினைந்து நோற்ற

நந்தியந் தேவன் இன்ன நவிறலு மவற்சூழ் கின்ற

அந்தமில் கணத்தோர் கேளா அகிலமுய் பொருட்டா லெங்கோன்

புந்திகொ ளருளின் செய்கை போற்றெடுத் தனரா யுற்றார்.                 94

 

வாவலங் கிள்ளை மான்றேர் மதன்புரி வினையா லன்னான்

வேவரப் புணர்த்து நோக்கி மிகைபடா தவன்சா ரான

தேவியை முடிக்கு மாற்றல் செய்திலன் இகல்பற் றின்றி

மூவரை விடுத்துத் தொன்னான முப்புரம் பொடித்த முன்னோன்.           95

 

கண்ணழல் சுடுத லோடுங் காமவேள் யாக்கை முற்றுஞ்

சுண்ணம தாகி வீழத் துஞ்சினன் போய பின்னை

அண்ணலம் பகவன் தொல்லை யமைதியின் இருந்தா னெல்லாம்

எண்ணிநின் றியற்றும் எங்கோற் கினையதோ அரிது மாதோ.                      96

 

பாடுறு கணவன் செய்கை பார்த்தலு மிரதி யுள்ளங்

கூடின துயரம் வீந்த கொண்டதொல் லுணர்ச்சி கண்ணீர்

ஓடின வியர்த்த மெய்மூக் குயிர்த்தன வொடுங்கிற் றாவி

வீடினள் இவளு மென்ன விரைந்துகீழ்த் தலத்தின் வீழ்ந்தாள்.              97

 

சுரிதரு குடிஞை யாற்றிற் சுழித்தலைப் பட்ட மான்போல்

வருவரல் வாரி நாப்பட் படிந்துபற் றின்றிச் சோரும்

இரதிசில் பொழுகிற் பின்ன ரிறந்ததொல் லுணர்வு தன்பால்

வருதலும் மறித்துச் செங்கை வயிறலைத் திரங்க லுற்றாள்.               98

 

வேறு

 

செம்பதுமை திருக்குமரா தமியேனுக் காருயிரே திருமால் மைந்தா,

ம்பரனுக் கொருபகைவா கன்னல்வரிச் சிலைபிடித்த தடக்கை வீரா,

அம்பவளக் குன்றனைய சிவன்விழயால் வெந்துடல மழிவுற் றாயே,

உம்பர்கடம் விழி யெல்லா முறங்கிற்றோ அயனாரு முவப்புற் றாரோ.      99

 

முன்னானிற் புரமூன்று மட்டவன்மேற் பொரப்போதன் முறையோ வென்று,

சொன்னாலுங் கேட்டிலையே அமரர்பணி புரிவதுவே துணிந்திட் டாயே,

உன்னாகம் பொடியாகிப் போயினதே இதுகண்டும் உய்வா குண்டோ,

என்னவி யாகியநீ யிறந்தபின்னும் யான்றனியே யிருப்ப தேயோ.          100

 

மாறாகப் பரமன்விழி நின்னாற்ற லிலதாக மற்றுன் மெய்யும்,

நீறாக விண்டேல்லாம் நெருப்பாகக் கவலைவிண்ணோர் நெஞ்சத் தாக,

ஆறாத பெருந்துயர மெனக்காக எங்கொளித்தாய் அருவா யேனுங்,

கூறாயோ வறிந்திருந்தாய் என்கணவா யான்செய்த குறையுண் டோதான்.   101

 

உம்பர்கடம் பாலேயோ இந்திரனார் பாலேயோ வுன்னை யுய்த்த,

செம்பதுமத் திசைமுகத்தோன் பாலேயோ அரன்செயலைச் சிதைப்ப னென்னா,

இம்பரிடை வல்விரைந்து வந்திடுநின் பாலேயோ ஈசன் கண்ணால்,

வெம்பாடியாய் நீயிறந்த இப்பழிதான் எவர்பாலின் மேவிற் றையோ.        102

 

வில்லான்முப் புரமெரித்த பரம்பொருள்யோ கந்தவிர்க்க வேண்டில் விண்ணோர்,

எல்லாரு மறந்தனரோ எண்கணவா நீயோதான் இலக்காய் நின்றாய்,

கொல்லாது போலவுனைக் கொன்றனரே என்னுயிர்க்குங் கொலைசூழ்ந் தாரே,

பொல்லாத பேர்க்குநன்றி செய்வது தம்  முயிர்போகும் பொருட்டே யன்றோ.       103

 

என்னபவஞ் செய்தேனோ என்போல்வார் தமககென்ன இடர்செய் தேனோ,

முன்னையுள விதிப்பயனை யறிவேனோ இப்படியே முடிந்த தையோ,

கன்னல்வரிச் சிலைபிடித்த காவலவோ தமியேனைக் காத்தி டாயோ,

வன்னிவிழி யாவுடைய பெருமானை நோவதற்கு வழக்கொன் றுண்டோ.    104

 

பொன்செய்தார் முடிகாணேன் அழகொழுகுந் திருமுகத்துப் பொலிவு காணேன்,

மின்செய்பூ ணணிகுலவும் புயங்காணேன் அகன் மார்பின் மேன்மை காணேன்,

கொன்செய்பூங் கணைகாணேன் சிலைகாணேன் ஆடல்புரி கோலங் காணேன்,

என்செய்வேன் என் கணவா என்னையொழித் தெவ்விடத்தே யிருக்கின் றாயே.  105

 

அந்நாளி லழற்கடவுள் கரியாக வானவரோ டயன்மால் காணப்

பொன்னாரு மங்கலநாண் பூட்டியெனை மணஞ்செய்து புணர்ந்த காலை,

எந்நாளு மினியுன்னைப் பிரியலமென் றேவாய்மை யிசைத்தாய் வேனில்,

மன்னாவோ எனைத்தனியே விடடேகல் வழக்கோ சொல்லாய்.             106

 

போவென்று வரவிட்ட தேரெலாம் பொடியாகிப் போனவுன்னை,

வாவென்று கடிதெழுப்ப மாட்டாரோ நின்றாதை வலியனென்பார்,

ஓவென்று நானிங்கே யாற்றிடவும் வந்திலனால் உறங்கினானோ,

வேவென்று நின்சிரத்தில் விதித்திருந்தால் அவரையெலாம் வெறுக்க லாமோ.  107

 

நேயமொடு மறைபயிலுந் திசைமுகனைப் புரந்தரனை நின்னைத் தந்த,

மாயவனை முனிவர்களை யாவரையும் நின்கணையான் மருட்டி வென்றாய்,

ஆயதுபோல் மதிமுடித்த பரமனையும் நினைந்திவ்வா றழிவுற் றாயே,

தீயழலின் விளக்கத்திற் படுகின்ற பதங்கத்தின் செயலி தன்றோ.            108

 

தண்பனிநீர்ச் சிவிறிகொண்டு விளையாடி மலர்கொய்து தண்கா நண்ணி,

எண்படும்பூம் பள்ளிமிசைச் சிறுதென்றல் கவரிகளா யினிது செல்ல,

வெண்பளித நறுஞ்சாந்தச் சேறாடி இருவருமாய் விழைந்து கூடிக்,

கண்படைகொண் டமர்வாழ்வும் பொய்யாகிக் கனவுகண்ட கதையா யிற்றே.  109

 

மருகென்றே அவமதித்த தக்கனார் வேள்விசெற்ற வள்ள றன்னைப்,

பொருகென்றே தேவரெலாம் விடுத்தாரே அவராலே பொடிபட் டாயே,

எரிகின்றேன் உனைப்போல ஆறாத பெருந்துயரால் யானு மங்கே,

வருகின்றேன் வருகின்றேன் என்னுயிரே யெனப்புலம்பி வருந்து கின்றாள்.   110

 

ஆகத் திருவிருத்தம் - 601

  - - -

 

 

5. மோ ன  நீ ங் கு ப ட ல ம்

 

இரதி இன்னணம் வருந்திடத் தொன்மைபோல் எங்கோமான்

விரத மோனமோ டிருத்தலும் முன்னரே விறற்காமன்

கருது முன்பொடி பட்டது கண்டனர் கலங்குற்றார்

சுருதி நன்றுணர் திசை முகன் முதலிய சுரரெல்லாம்.                            1

 

சிதலை மெய்த்தொகை வன்மிகத் தெழுந்தெனச் செலக்கண்ணீர்

பதலை யொத்தன அல்லல்கூர்ந் தரற்றிடப் பகுவாய்கள்

விதலை பெற்றுமெய் வியர்ப்புற வுளநனி விதிர்ப்பெய்த

மதலை யிற்றுழி நாய்கர்போல் துயர்க்கடல் மறிகின்றார்.                  2

 

மையு லாவரு கறைமிடற் றிறையவன் மருங்காக

எய்யும் மாரனை விடுத்தனம் அவனையு மிறச்செய்தான்

பொய்யி றன்னிலை தவிர்ந்திலன் தொன்மையே போலுற்றான்

ஐய கோவினிச் செய்வதேன் னோவெனா அயர்கின்றார்.                   3

 

பூத்த ருங்கணை மாரனை விழியினாற் பொடிசெய்த

ஆத்த னாற்றலைப் புணர்ப்பினால் நீக்குவ தரிதன்னான்

காத்து நந்துயர் அகற்றிட வேண்டுமேற் கடிதேயாம்

ஏத்தல் செய்வதே கடனென யாவரு மிசைவுற்றார்.                               4

 

எகின மூர்பவன் முதலிய கடவுள ரெல்லோரும்

அகன மர்ந்திவை யிசைந்துதொல் கயிலையி னகநாப்பட்

புகல தாயபொன் னகரிடைக் கோபுரப் புறனேகித்

தொகுதி யோடெம திறைவனை ஒல்லெனத் துதிக்கின்றார்.                5

 

நஞ்ச ருந்தியும் நதியினைச் சூடியும் நடுநெற்றித்

துஞ்சும் வெங்கணல் பரித்தும்வெவ் வலியரைத் தொலைத்திட்டும்

அஞ்ச லென்றுமுற் காத்தனை இன்றெமக் கருளாயேல்

தஞ்ச மாருளர் தாதையே யல்லது* தனயர்க்கே.                          6

 

( பா-ம் * - தாதைய ரல்லது. )

 

கோளில் அன்பர்கள் இழுக்கிய புரியினுங் குணனாக்கொண்

டாளு மெம்பிரான் நின்னடி அரணமென் றடைந்தேங்கண்

நாளும் வெந்திறற் சூரபன் மாவினால் நலிவெய்தி

மாளு கின்றதோ சிறிதுமெம் முறுதுயர் மதியாயோ.                              7

 

தைய லைப்பிரீஇ யோகியல் காட்டிடு தனிச்செய்கை

ஐய நிற்கிதோ ரிறைவரை யாகுமால் அதுகாலை

நையு மெங்களுக் குகம்பல சென்ற நாமெல்லாம்

உய்வ தெப்படி இன்னுநீ புறக்கணித் துறுவாயேல்.                        8

 

நோற்று மாயவன் முதலினோர் யாவரும் நுனதாளைப்

போற்றி யர்ச்சனை புரியவித் திருவெலாம் புரிந்துற்றாய்

தோற்ற மின்றியே ஐந்தொழி லியற்றிய தொல்லோய்நீ

ஆற்று கின்றதோர் தவநிலை எம்பொருட் டளவன்றோ.                   9

 

எய்த்தி டுஞ்சிறி யேங்களைத் தவறுகூ ரிடர்வாளால்

நித்த லுந்துணித் தீருதி செய்வினை நெறிநேடி

அத்த இங்கினிக் காத்தரு ளல்லதேல் அடுவல்லே

சித்த மென்னுனக் கன்னவா றொன்றினைச் செய்வாயே.                   10

 

கங்கை வேணியாய் அம்மையை மணந்தெமைக் கடிகொள்ளத்

திங்கள் வெண்குடை மதனனை விடுத்தனந் தௌ¤வில்லேம்

அங்க வன்புரம் பொடித்தனை முன்புபோ லமர்ந்துற்றாய்

இங்கி யாந்தளர் கின்றதே இனிச்சிறி திரங்காயோ.                         11

 

ஆரழற்சின வயப்புலி முதலிய அடன்மாவின்

பேரு ரித்திறந் தாத்தனை சிறுவிதி பெருவேள்வி

வீர னைக்கொடு தடிந்தனை அ•தென மிகவெய்ய

சூர பன்மனைத் தொலைவுசெய் தெந்துயர் தொலைக்கென்றார்.            12

 

முரற்கொள் வண்டுசூழ் சததளப் பண்ணவன் முதலோர்கள்

உருக்க ரக்கென மெய்தளர்ந் திவ்வகை யுளநொந்தே

அரற்றி யேத்தலும் அவர்பவ முடிவதற் கணித்தாக

இரக்க மாய்அரு ணந்தியை நினைந்தனன் இறையோனே.                  13

 

எந்தை நந்தியை உன்னலு மவனறிந் திறைவன்முன்

வந்து வந்தனை செய்துகை தொழுதலும் மறைமேலோன்

கந்த மாமலர்க கடவுளா தியர்தமைக் கடிதெம்முன்

தந்தி டென்றனன் நன்றென முதற்கடை தனில்வந்தான்.                   14

 

கணங்கள் காப்புறு முதற்கடை குறுகலுங் கண்டேத்தித்

தணங்கொள் பங்கயன் வாசவன் விண்ணவர் தாமெல்லாம்

வணங்க எம்பிரான் உமைத்தரு தென்றனன் வறிதேனும்

அணங்கு கொள்ளலீர் வம்மினோ நீவிரென் றருள்செய்தான்.                       15

 

சீர்த்த நந்திவந் திவ்வகை யுரைத்தசொற் செவிதோறும்

வார்த்த பேரமு தாதலும் உவகையின் மதர்ப்பாகிப்

பேர்த்தொர் மாற்றமு முரைத்திலர் பிரமனே முதற்றேவர்

ஆர்த்து நாதனைப் பாடினர் ஆடினர் அலமந்தார்.                          16

 

பெரிது நோயுழந் தருள்பவர் இன்றியே பெருங்காலம்

நிரய முற்றுளோர் தங்களை எடுத்திடும் நிலைத்தன்றோ

அருளின் நீர்மையா லுமையரன் விளித்தனன் அனைவீரும்

வருதி ரென்றசொற் பங்கயன் முதலிய வானோர்க்கே.                     17

 

செய்ய லாவதொன் றின்றியே மகிழச்சியிற் றிளைத்தொராய்

மைய லாகிய பண்ணவர் தங்களை வல்லேகொண்

டையன் முன்னுற வுய்த்தனன் இருவகை யறத்தொரும்

உய்ய வெஞ்சம னுடைதரப் புவியினி லுதிக்கின்றோன்.                   18

 

   வேறு

 

வண்டுளர் கமலமேல் மதலை வாசவன்

அண்டர்க ளனைவரும் அன்பொ டேகியே

பண்டுயிர் முழுதருள் பரனைக் கண்களாற்

கண்டனர் வழுத்தினர் கரங்கள் கூப்பினார்.                       19

 

விண்மதி படர்சடை வேத கீதனை

அண்மினர் வணங்கினர் அரிமுன் ஆற்றிய

உண்மகிழ் பூசனை யொப்பப் போதநீர்

கண்மல ரதனொடு கழல்கள் சேரவே.                                   20

 

வணங்கிய பண்ணவர் வல்ல வல்லவா

பணங்கிளர் அரவரைப் பரமற் போற்றலும்

உணங்கிய சிந்தையீர் உமது வேண்டலும்

அணங்குறு நிலைமையும் அறைமி னென்னவே.                  21

 

பேருக மளப்பில பெயர்த லின்றியே

சூரன தாணையில் துயர்ப்பட் டாழ்ந்தனங்

காருறழ் கந்தரக் கடவுள் நீயலா

தாருளர் அடியரேம் அலக்கண் நீக்குவார்.                         22

 

ஆயவெஞ் சூரன தாவி நீக்கவோர்

சேயினை யருளுவான் சிமைய மாகிய

மீயுயர் வரையிடை மேவி நோற்றிடும்

மாயையின் முதல்வியை மணத்தல் வேண்டுநீ.                  23

 

என்றிவை கூறியே யாரு மெம்பிரான்

மன்றலந் தாள்மலர் வணங்கிப் போற்றலும்

மின்றிகழ பசுங்கதிர் மிலைச்சும் வேணியான்

நன்றென இசைந்தியை நவிறல் மேயினான்.                             24

 

புங்கவர் யாவரும் பொருமல் கொள்ளலீர்

உங்கடம் பொருட்டிலவ் வோங்கல் வைகிய

மங்கையை மணந்துநும் வருத்தம் நீக்குதும்

இங்கினி யாவரு மேகு கென்றனன்.                                     25

 

முழுதுணர் பரனிது மொழியப் போதனுஞ்

செழுமையில் பொன்னகர்த் தேவும் யாவருந்

தொழுதனர் விடைகொடு துயரஞ் சிந்தியே

விழுமிய மேருவின் மிசைக்கண் ஏகினார்.                       26

 

வேறு

 

அன்னார் விடைகொண் டேகியபின்

        அதுகண் டிரதி யெம்பெருமான்

முன்னா விறைஞ்சிப்* போற்றிசெய்து

        முறையோ முறையோ இறையோனே

பொன்னார் கமலத் தயன்முதலோர்

        புணர்ப்பா லெங்கோன் போந்திங்கே

உன்னால் முடிந்தான் அவன்பிழையை

        உளங்கொ ளாமல் அருளென்றாள்.                              27

 

( பா-ம் * - முன்னாலிறைஞ்சிப் )

 

வேறு

 

இனைய கூறினள் இரதிவேண் டிடுதலும் இணைதீர்£ந்த

புனிதன் நல்லரு ளெய்தியே மங்கைநீ புலம்பாய்கேள்

வனைக ருங்குழற் கவுரியை மேவியாம் வரைபோ தில்

உனது கேள்வனை அளிக்குதும் போதியென் றுரைசெய்தான்.               28

 

தன்னை யேதனக் கொப்பவன் இர தியைத் தளரேலென்

றின்ன வாறருள் செய்தலும் மகிழந்தடி இறைஞ்சிப்போய்ப்

பொன்னின் மாலிமை யக்கிரி புகுந்தொரு புடையுற்றான்

வன்ன மாமுகில் வரவுபார்த் துறைதரு மயிலேபோல்.                            29

 

வேறு

 

தமியளாய் இரதிபோய்த் தானங் குற்றிட

அமரர்க ளாயுளா ரரந்தை தீர்க்கவும்

இமையமால் வரைமிசை யிருந்து நோற்றிடும்

உமைதலை மணப்பவும் முதல்வன்உன்னினான்.                  30

 

மனந்தனி லித்திறம் மதித்து வானதி

புனைந்தவன் சனகனென் றுரைக்கும் புங்கவன்

சனந்தனன் சனாதனன் சனற்கு மாரனாம்

இனந்தரு முனிவரை இனிது நோக்கினான்.                              31

 

நன்னல மைந்தர்காள் ஞான போதகஞ்

சொன்னடை யன்றது துயர நீங்கியே

இந்நிலை மோனமோ டிருந்து நந்தமை

உன்னுத லேயென உணர வோதினான்.                          32

 

கட்படும் இமைத்துணை காட்சி யோகினை

நுட்பம தாகவே நுதலிக் காட்டினோன்

ஒட்பமோ டிவ்வகை உரைப்ப வாற்றவும்

தெட்பம தடைந்தனர் விதியின் சேயினோர்.                              33

 

அந்தநல் வேலையில் ஆற்றும் நோன்பினோர்

சிந்தைகொ ளன்பொடு சிவன்பொற் றாள்முறை

வந்தனை செய்துநம் மருட்கை நீங்கியே

உய்ந்தனம் யாமென உரைத்துப் போற்றினர்.                             34

 

போற்றது மத்துணைப் புனிதன் இன்னினி

ஏற்றிடு நிட்டையி லிருந்து வீடுறீஇ

மேற்றிகழ் எம்பத மேவு வீரெனாச்

சாற்றினன் விடுத்தனன் தவத்தி னோர்தமை.                             35

 

ஆகத் திருவிருத்தம் - 636

 

 

6. தவங்காண் படலம்

 

தீதறு முனிமைந்தர் செல்லலும் அதுபோழ்தின்

மாதவ நெறிநிற்கும் மலைமக டனியன்புங்

காதலு மெனைவோர்க்குங் காட்டுத லருளாகிச்

சோதனை புரிவாரின் துண்ணென எழலுற்றான்.                   1

 

செறிதுவ ருடையாளன் சிகையினன் அணிநீற்றின்

குறியினன் ஔ¤ர்நூலன் குண்டிகை யசைகையன்

உறைபனி கதிர்போற்று மோலையன் உயர்கோலன்

மறைபயில் முதியோர்போல் வடிவிது கொடுபோனான்.            2

 

போயினன் இமையத்திற் புவனமொ டுயிர்நல்குந்

தாய்தளர் வொடுநோற்குஞ் சாலையி னிடைசாரத்

தூயவ ரிவரென்றே தோகையர் கடைகாப்போ

ராயவர் பலர்வந்தே அடிதொழு துரைசெய்வார்.                   3

 

தளர்நடை முதியீர்இத் தடவரை யிடைசேறல்

எளிதல அடிகேள்வந் தெய்திய தெவனென்ன

வளமலை யரசன்றன் மகள்புரி தவநாடற்

குளமுட னிவண்வந்தேன் உவகையி னுடனென்றான்.             4

 

என்றலு மினிதென்றே இமையவ ளிடைசில்லோர்

சென்றனர் கிழவோன்றன் செயலினை அறைகாலை

ஒன்றிய முதியோரேல் உய்க்குதிர் இவணென்ன

நின்றதொர் பெரியோனை நேரிழை முனமுய்த்தார்.                       5

 

உய்த்தலும் இவரெந்தைக் குறுபரி வினரென்றே

பத்திமை படுபாலாற் பார்ப்பதி தொழலோடும்

மெய்த்துணை யெனநின்ற விசயையொர் தவிசிட்டு

நித்தனை உறைவித்தாள் நிமலையும் அயனின்றாள்.                     6

 

அப்பொழு துமைதன்னை யாதர வொடுபாராச்

செப்புத லரிதாமுன் றிருநலன் அழிவெய்த

மெய்ப்படு தசையொல்க மிகுதவ முயல்கின்றாய்

எப்பொருள் விழைவுற்றாய் எண்ணிய துரையென்றான்.           7

 

வேறு

 

முடிவி லானிவை யுரைத்தலும் விசயையை முகநோக்கிக்

கொடியி னொல்கிய நுசுப்புடை உமையவள் குறிப்பாலே

கடிதி னீங்கிவர்க் கெதிர்மொழி யீகெனக் கண்காட்ட

அடிய னேற்கிது பணித்தன ளெனஅறிந் தவள்சொல்வாள்.                 8

 

மன்னு யிர்க்குயி ராகிய கண்ணுதல் மணஞ்செய்து

தன்னி டத்தினி லிருத்தினன் கொள்வதே தானுன்னிக்

கன்னி மெய்த்தவ மியற்றின ளென்றுகா தலிகூற

முன்ன வர்க்குமுன் னானவன் நகைத்திவை மொழிகின்றான்.              9

 

புவிய ளித்தருள் முதல்வரும் நாடரும் புனிதன்றான்

இவள்த வத்தினுக் கெய்துமோ எய்தினு மினையாளை

அவன்வி ருப்பொடு வரையுமோ உமையவ ளறியாமே

தவமி யற்றினள் எளியனோ சங்கரன் றனக்கம்மா.                        10

 

அல்லல் பெற்றிட நோற்றிடு பகுதியால் ஆம்பாலொன்

றில்லை யித்துணைப் பெறலரும் பொருளிவட கௌ¤தாமோ

பல்ப கல்தன தெழில்நலம் வறிதுபட் டனவன்றோ

ஒல்லை இத்தவம் விடுவதே கடனினி உமைக்கென்றான்.                 11

 

இந்த வாசகங் கேட்டலு மெம்பிராற் கிவரன்பர்

அந்தண் மாமுது குரவரென் றுன்னினன் அறியேனால்

வந்து வெம்மொழ கூறுத லெனச்சின மனங்கொண்டு

நொந்து யிர்த்துநாண் நீக்கியே பொறாதுமை நுவல்கின்றாள்.                       12

 

முடிவிலாதுறை பகவனென் வேட்கையை முடியாது

விடுவ னென்னினுந் தவத்தினை விடுவனோ மிகவின்னங்

கடிய நோன்பினை யளப்பில செய்துயிர் கழிப்பேன்நான்

நெடிது மூத்தலின் மயங்கினை பித்தனோ நீயென்றாள்.                    13

 

ஈட்டு மாருயிர்த்தொகையெலா மளித்தவள் இவைகூற

மீட்டு மோர்புணர்ப் புன்னியே மாதுநீ வெ•குற்ற

நாட்ட மூன்றுடைப் பிஞ்ஞகன் வளத்தியல் நன்றாய்ந்து

கேட்டி லாய்கொலா முணர்த்துவன் அ•தெனக் கிளக்கின்றான்.              14

 

ஆடை தோல்விடை யேறுவ தணிகல மரவென்பு

கேடில் வெண்டலை மாலிகை கேழலின் மருப்பின்ன

ஓடு கொள்கல மூண்பலி வெய்யநஞ் சுலப்புற்றோர்

காட தேநடம் புரியிடங் கண்ணுதற் கடவுட்கே.                           15

 

வேய்ந்து கொள்வது வௌ¢ளெருக் கறுகுநீர் வியன்கொன்றை

பாந்தள் நொச்சியே மத்தமென் றினையன பலவுண்டால்

சாந்தம் வெண்பொடி சூலமான் மழுத்துடி தழலங்கை

ஏந்து கின்றது பாரிடஞ் சூழ்படை இறையோற்கே.                        16

 

அன்னை தாதைகேள் வடிவொடு குணங்களி லனையானுக்

கின்ன வாகிய பலவள னுண்டவை எவையுந்தாம்

நின்ன வாகவோ தவம்புரிந் தெய்த்தனை நெடுந்தொல்சீர்

மன்னன் மாமகட் கியைவதே இத்துணை வழக்கென்றான்.                 17

 

வேறு

 

புரங்கண்மூன் றினையு மட்ட புங்கவன் இனைய கூற

வரங்கண்மே தகைய வெற்பின் மடமயில் கேட்ட லோடுங்

கரங்களாற் செவிகள் பொத்திக் கண்ணுதல் நாமம் போற்றி

இரங்கிவெஞ் சினத்த ளாகி இடருழந் தினைய சொல்வாள்.                18

 

கேட்டியால் அந்தணாள கேடிலா வெம்பி ரான்றன்

மாட்டொரு சிறிது மன்பு மனத்திடை நிகழந்த தில்லை

காட்டுறு புள்ளின் சூழல் கவருவான் புதன்மேற் கொண்ட

வேட்டுவன் இயல்போல் மேலோன் வேடநீ கொண்ட தன்மை.             19

 

நேசமி லாது தக்கன் நிமலனை யிழித்து நின்போற்

பேசிய திறனும் அன்னான் பெற்றதுங் கேட்டி லாயோ

ஈசனை யிங்ஙன் என்முன் இகழ்ந்தனை இந்நாள் காறும்

ஆசறு மறைக ளேது மாய்ந்திலை போலு மன்றே.                        20

 

முறைபடு சுருதி யெல்லா மொழியினும் அதுவே சார்வா

உறுகில ராகிப் பொல்லா வொழுக்கமே கொண்டு முக்கண்

இறைவனை யிகழ்ந்து முத்தி யெய்திடா துழல முன்னாள்

மறையவர் பெற்ற சாபம் நின்னையும் மயக்கு றாதோ.                           21

 

தாதையாய்த் தம்மை நல்கித் தந்தொழிற் குரிய னாகி

ஆதியாய்த் தங்கட் கின்றி யமைவுறாச் சிவனை நீங்கி

ஏதிலார் பக்க மாகி இல்லொழுக் கிறந்தார் போலும்

வேதியர் முறையே செய்தாய் வெறுப்பதென் நின்னை யானே.                     22

 

ஆயினும் மறையோர் தம்மி னருமறை முறையே வேடம்

தூயன தாங்கி யெங்கோன் தொண்டுசெய் வோரு முண்டால்

நீயவர் தன்மைத் தாயும் நித்தனை யிகழந்தா யென்னில்

தீயவ ருனைப்போ லில்லை அவுணர்தந் திறத்து மாதோ.                  23

 

வேண்டுதல் வேண்டி டாமை யில்லதோர் விமலன் றன்னை

ஈண்டுநீ யிகழ்ந்த வெல்லாம் யாரையு மளிக்கு மன்பு

பூண்டிடு குறிகாண் அற்றாற் புகழ்ச்சியா மன்றி முக்கண்

ஆண்டகை யியற்கை யெல்லா மார்கொலோ அறிய கிற்பார்.                      24

 

போதனே முதலா வுள்ள புங்கவர் வழிபட் டேத்த

வேதமி லிறைமை யாற்ற லியாவையும் புரிந்த நாதன்

காதலும் வெறுப்பு மின்றிக் கருணைசெய் நிலைமை யேகாண்

பேதைநீ யிகழ்ச்சி யேபோற் பேசிய தன்மை யெல்லாம்.                  25

 

இம்முறை மறைக ளாதி இசைத்தன இனைய வெல்லாஞ்

செம்மைகொ ளுணர்வின் ஆன்றோர் தௌ¤குவ ரிறையை யௌ¢ளும்

வெம்மைகொள் குணத்தாய் நிற்கு விளம்பொணா விளம்பிற் பாவம்

பொய்ம்மறை வேடத் தோடும் போதிநீ புறத்தி லென்றாள்.                 26

 

அறத்தினைப் புரிவாள் இவ்வா றறைதலும் அணங்கே ஈங்குன்

திறத்தினி லார்வஞ் செய்து சென்றவென் செயல்கே ளாது

புறத்திடைப் போதி யென்றி புரைவதோ புகுந்த பான்மை

மறைச்சடங் கியற்றி நின்னை வரைந்திடற் காகு மென்றான்.                      27

 

வஞ்சக முதல்வன் சொற்ற வாசகம் இறைவி கேளா

அஞ்செவி பொத்தி யாற்றா தழுங்கிமெய் பதைப்ப விம்மி

எஞ்சலின் முதியோன் போகான் ஏகுவன் யானே யென்னாப்

பஞ்சடி சேப்ப ஆண்டோர் பாங்கரிற் படர்த லுற்றாள்.                             28

 

படர்ந்தனள் போத லோடும் பனிபடு மிமையம் வைகும்

மடந்தைதன் னியற்கை நோக்கி வரம்பிலா அருண்மீ தூர

அடைந்ததொல் பனவக்கோல மகன்றுமால் விடைமேல்கொண்டு

தொடர்ந்துபல் கணங்கள் போற்றத் தோன்றினன் றொலைவி லாதோன்.     29

 

தொலைவறு பகவன் வான்மீத் தோன்றலுந் துளங்கி நாணி

மலைமகள் கண்டு பல்கால் வணங்கியஞ் சலியாற் போற்றி

அலகிலா வுணர்வால் எட்டா வாதிநின் மாயை தேறேன்

புலனிலாச் சிறியேன் நின்னை யிகழ்ந்தவா பொறுத்தி யென்றாள்.          30

 

நற்றவ மடந்தை கேண்மோ நம்மிடத் தன்பால் நீமுன்

சொற்றன யாவு மீண்டே துதித்தன போலக் கொண்டாம்

குற்றமுண் டாயி னன்றே பொறுப்பது கொடிய நோன்பால்

மற்றினி வருந்தல் நாளை மணஞ்செய வருது மெனறான்.                31

 

சிறந்தநின் வதுவை முற்றச் செல்லுது மென்று தொல்லோன்

மறைந்தனன் போத லோடும் மலைமக ளுள்ளந் தன்னில்

நிறைந்திடு மகிழ்ச்சி கொண்டு நித்தனை நினைந்து போற்றி

உறைந்தனள் இதனை வேந்தற் குரைத்திடச் சிலவர் போனார்.             32

 

அண்ணல்வந் தருளிச் செய்கை அரசனுக் குரைத்த லோடும்

உண்ணிக ழயர்ச்சி நீங்கி யொல்லைதன் னில்லி னோடு

நண்ணினன் உமையைக் கொண்டுநலங்கொள்தன் நகரத் துய்த்தான்

கண்ணுத லிறைவன் அங்கட் செய்தன கழற லுற்றேன்.                   33

 

        ஆகத் திருவிருத்தம் - 669

- - -

 

7. ம ண ம்  பே சு  ப ட ல ம்

 

பொருடரு மலைக்கொடி புரியும் நோன்புகண்

டருடனை நல்கிய வாதி நாயகன்

தெருடரு கயிலையிற் சேர்வுற் றேழ்வகை

இருடிகள் தங்களை இதயத் துன்னினான்,                        1

 

நினைதலுங் கண்ணுதல் நிமல னேழ்பெரு

முனிவரு மன்னதை முன்னி யுள்வெரீஇப்

பனிவரு மெய்யொடு படர்ந்து வல்லையில்

அனையனை இறைஞ்சிநின் றறைதல் மேயினார்.                 2

 

பங்கயன் மான்முதற் பகரும் பண்ணவர்

உங்குன தேவலுக் குரிய ராயுற

எங்களை யுன்னினை யாங்கள் செய்தவம்

அங்கவர் தவத்தினு மதகம் போலுமால்.                         3

 

எந்தையெம் பெருமநீ யெம்மை வம்மென

முந்துறு கருணையின் முன்னிற் றாதலின்

உய்ந்தனம் அடியரே முடிய தீப்பவஞ்

சிந்தினம் இனியொரு தீதுண் டாகுமோ.                          4

 

ஒருதலை யைந்தொழி லுலப்பு றாவகை

புரிதரு பகவநம் புன்மை நீக்குவான்

கருணையொ டுன்னினை கடிதிற் செய்பணி

அருளுதி யென்றனர் ஆற்றும் நோன்பினோர்.                            5

 

வேறு

 

அமலனம் முனிவர் மாற்றங் கேட்டலு மவரை நோக்கி

அமையமே லிறைவன் றன்பா லேகியே எமக்கிவ் வைகல்

உமைதனை வதுவை நீரா லுதவுவான் வினவி வல்லே

நமதுமுன் வம்மி னென்னா நன்றருள் புரிந்தா னன்றே.                    6

 

நாயக னருளக் கேளா நன்றென இறைஞ்சி யேகி

ஏயதொன் முனிவர் யாரும் இமையமே லிறைமுன் நண்ண

ஆயவன் மனைவி யோடு மடைந்தெதிர் கொண்டு தாழ்ந்து

நேயமொ டருச்சித் தேத்தி நின்றிது புகலு கின்றறான்.                             7

 

படியறு நுத்£ள் ஈண்டுப் படுதலால் இமைய மேருத்

தடவரை யதனில் தூய்தாய்த் தலைமையும் பெற்ற தன்றே

நெடியவென் பவமு மினனே நீங்கின நீவி ரெல்லாம்

அடியனேன் றன்பால் வந்த நிமித்தமென் னறையு மென்றான்.                     8

 

அங்கது வினவு மெல்லை அருந்தவ ரகில மீன்ற

மங்கையை வதுவை செய்வான் மன்னுயிர்க் குயிராய் நின்ற

சங்கரன் நினைந்துன் னோடு சாற்றுதற் கெமமை யுய்த்தான்

இங்கிதெம் வரலா றென்ன இசைவுகொண் டிறைவன் சொல்வான்.         9

 

துன்னிய வுயிர்கள் யாவுந் தொல்லுல கனைத்து மீன்ற

கன்னிகை யுமையா டன்னைக் கடிமண முறையின் நல்கி

என்னையு மடிமை யாக ஈகுவன் இறைவற் கென்ன

மன்னவன் அயலே நின்ற மனைவியீ துரைக்க லுற்றாள்.                  10

 

மலரயன் புதல்வன் றன்னோர் மடந்தையை மணத்தின் நல்க

அலைபுனற் சடிலத் தண்ணல் அவன்றலை கொண்டான் என்பர்

நிலைமையங் கதனை யுன்னி நெஞ்சக மஞ்சு மெங்கள்

குலமகள் தனைய வற்குக் கொடுத்திட லெவனோ வென்றாள்.             11

 

என்றலு மவளை நோக்கி எழுமுனி வோருஞ் சொல்வார்

ஒன்றுநீ யிரங்கல் வாழி யொப்பிலா முதல்வன் செய்கை

நன்றுதேர்ந் திலையால் தக்கன் நலத்தகும் அவியை மாற்றி

அன்றுதன் இகழ்த லாலே அவன்றலை முடிவு செய்தான்.                 12

 

அடைந்துளோர்க் கருளுமாறும் அல்லவர் தமக்குத் தண்டம்

படுந்துணை தெரிந்து கூட்டும் பான்மையும் பரமன் செய்கை

மடந்தையித் தன்மை யாரும் மனப்படுத் துணர்வ ரீதே

திடம்பட வுணர்தி வேறு சிந்தனை செய்யே லென்றார்.                    13

 

      வேறு

 

இயலுறு முனிவோர்கள் இவைமொழி தலுமோரா

மயலறு வரையண்ணல் வாய்மையி தெனலோடும்

அயலுறு மனைமேனை யஞ்சினள் அமலன்றன்

செயலிது வுணராதே செப்பினன் இவையென்றே.                  14

 

உண்ணலி வொடுமேனை உவர்மல ரடிதாழூஉப்

பெண்ணறி வெவையேனும் பேதைமை வழியன்றோ

அண்ணறன் அருணீர்மை யணுவது மறிகில்லேன்

புண்ணிய முனிவீரென் புன்மொழி பொறுமென்றாள்.                      15

 

பணிவுட னிவைமேனை பகர்தலும் அவடன்பாற்

கணிதமி லருள்செய்யக் காவல னதுகாணா

இணைதவிர் முனிவீர்காள் இவளுரை கருதன்மின்

இணமியல் இறையோனை வரமொழி குதிரென்றான்.                      16

 

பனிபடு வரையண்ணல் பகர்மொழி யதுகேளா

மனமிக மகிழ்வாகி மற்றவர் தமையங்கண்

இனிமையொ டுறநல்கி யெழுவரும் அவணீங்கித்

தனைநிகர் பிறிதில்லாத் தண்கயி லையில்வந்தார்.                17

 

வந்தெழு முனிவோரும் மாநக ரிடைசாரா

நந்திகண் முறையுய்ப்ப நாதனை நணுகுற்றே

அந்தமில் அளியோடு மவனடி தொழுதேத்தி

எந்தையை இதுகேளென் றியாவது முரைசெய்தார்.                       18

 

வரைமிசை யரசாள்வோன் மணவினை யிசைவெல்லாம்

உரைசெய வருள்செய்தே யும்பரின் முனிகாள்நீர்

புரிதரு செயலாற்றப் போகுதி ரெனலோடும்

அரனடி தொழுதேத்தி அவர்பதம் அணுகுற்றார்.                   19

 

வேறு

 

எங்குறை தீர்ந்ததென் றெழுத வத்தருந்

தங்கடம் பதத்திடைத் தணப்பின் றெய்தினார்

இங்கிது நின்றிட இமைய மேலிறை

அங்கினிச் செய்தவா றறியக் கூறுவாம்.                  20

 

ஆகத் திருவிருத்தம் - 689

    - - -

 

8. வ ரை பு னை  ப ட ல ம்

 

கண்ணுதல் உமைதவங் கண்டு நின்னையாம்

மண்ணவர் புகழ்வகை மணத்து மென்றதும்

விண்ணெழு முனிவரின் வினவி விட்டதும்

எண்ணினன் மகிழ்ந்தனன் இமையத் தண்ணலே.          1

 

கணிதமி லுயிரெலாங் கலந்து மற்றவை

உணர்வுதொ றிருந்தவற் கொருதன் கன்னியை

மணமுறை புரிதிறம் மதித்துத் தேவர்தம்

பணிபுரி தச்சனைப் பரிவொ டுன்னினான்.                2

 

உன்னிய போதினி லும்பர் கம்மியன்

மன்னவன் எதிருற வந்து கைதொழு

தென்னைகொல் கருதினை யாது செய்பணி

அன்னதை மொழிகென அறைதல் மேயினான்.            3

 

என்னையாள் கண்ணுத லறைவற் கியான்பெறும்

அன்னையாம் உமைதனை யளிப்பன் இவ்வரைக்

கன்னிமா நகரெலாங் கவின்சி றந்திடப்

பொன்னினா டாமெனப் புனைதி யாலென்றான்.            4

 

அப்பொழு தத்தினில் அடுக்கன் மேலையோன்

செப்பிய வாசகஞ் செவிக்கொண் டுள்ளமேன்

மெய்ப்பெரு மகிழ்ச்சியை மேவி யந்நகர்

ஒப்பனை செய்திட வுன்னி னானரோ.                            5

 

நீடுறு தருநிரை நிமிருங் கால்களாய்ப்

பாடுறு கழிகளாய்ப் பரம்பும் பல்பணை

மூடுற அதன்மிசை முகில்க ளெங்கணும்

பீடுறு பந்தர்போற் பிறங்கும் வெற்பின்மேல்.                     6

 

மலையுறழ் கோபுர மன்றஞ் சூளிகை

நிலைகெழு செய்யதேர் நிழற்று மண்டபம்

பலவுடன் நறுமலர்ப் பந்தர் அன்னவை

தொலைவறும் ஆவணந் தோறும் நல்கினான்.                    7

 

நீக்கமில் கதலிகை நெடிய கேதனம்

மேக்குயர் காவண மிசைத்தந் துள்ளிடை

ஆக்குறு கம்பல மணிசெய் தாயிடைத்

தூக்கினன் கவரியுஞ் சுடர்கொள் மாலையும்.                     8

 

குரகத முகம்புரை குலைகள் தூங்கிய

மரகத வொளிபடு வாழை பூகநல்

நிரைகெழு தன்மையின் நிறுவிப் பூந்துணர்

விரைகெழு தோரணம் விசும்பின் நாற்றினான்.           9

 

ஒண்ணிதி இயக்கர்கோ னுறையு ளானதும்

விண்ணவர் தொழுதிட வீற்றி ருந்திடும்

அண்ணறன் கோயிலு மாக வீதிகள்

எண்ணருந் திருவுற எழில்ப டுத்தினான்.                 10

 

ஒருபுறத் தினைஇனி யுமைக்கு நல்குவோன்

இருபுறத் தினும்வெரு மெண்ணில் தேவருந்

தருபுறப் பொருளெலாஞ் சாரச் சாலைகள்

திரிபுறத் திரிபுறச் செய்த மைத்தனன்.                           11

 

ஆயிரப் பத்தென அறையும் யோசனை

போயதோ ரளவையிற் புரிசை யொன்றினைக்

கோயிலி னொருபுடை குயிற்றிக் கோபுரம்

வாயில்கள் நான்கினு மரபின் நல்கினான்.                12

 

அங்கதன் நடுபுற அகன்ப ரப்பினின்

மங்கல மணஞ்செய வதுவைச் சாலையைச்

செங்கன கத்தினால் திகழச் செய்தனன்

கங்கையஞ் சடையினான் கயிலைக் கோயில்போல்.               13

 

சாலையின் நிலத்திடைச் சந்த மான்மதம்

மேலுறு நாவிநீர் விரவிப் பூசியே

கோலமென் மலர்கடூஉய்க் குறுகும் வானவர்க்

கேலுறு பலதவி சிருப்பச் செய்தனன்.                           14

 

வானவில் மணிமுகில் வனச மாமலர்

நீனிறம் விரிதரு நெய்தல் சண்பகம்

ஏனைய நிறங்களால் எண்ணில் வேதிகை

ஆனவை புரிந்தனன் அயனும் நாணவே.                 15

 

கண்ணடி பூந்தொடை கவரி ப•றுகின்

மண்ணிய செழுமணி மாலை தூங்குறப்

பண்ணுறு வித்தனன் பரமன் பால்வரும்

விண்ணவர் விழியெலாம் விருந்து கொள்ளவே.          16

 

தேவரு முனிவருந் திருவ னார்களும்

பாவையின் உயிருறு பண்பி னாக்கியே

மேவரு கவரிதார் வீணை யேந்தியே

ஏவலர் தொழின்முறை இயற்ற நல்கினான்.                      17

 

பெண்ணிய லாரெனப் பிறங்கும் பாவைகள்

தண்ணுமை முதலிய தாக்கித் தண்டியல்

பண்ணொடு களிநடம் பயிலு வித்தனன்

விண்ணவர் அரம்பையர் யாரும் வெ•கவே.                      18

 

நெருங்கிய கிளிமயில் நேமி தண்புறாப்

பொருங்கரி அரிபரி பொருநர் வானுளோர்

ஒருங்குடன் மணிகளா லோவி யப்பட

அருங்கடி யிருக்கையுள் அமர நல்கினான்.                19

 

குறைதவிர் நிலைமையாற் குயிற்றுஞ் சாலையுள்

நிறைதரு மிந்திர நீலத் தாலொரு

திறலரி யணையினைச் சிறப்பிற் செய்தனன்

இறைவனு மிறைவியும் இனிது மேவவே.                       20

 

குண்டமும் வேதிகை வகையுங் கோதில்சீர்

மண்டல மானதும் வகுத்து வேள்விசெய்

பண்டம தானதும் படுத்திப் பண்ணவர்

எண்டொகை மங்கலம் இருத்தி னானரோ.                21

 

கண்டெறு கதிர்மதிக் காந்தங் காஞ்சனம்

ஒண்டுகிர் நித்தில மொளிறு வச்சிரம்

முண்டக வெயின்மணி முதல்வெ றுக்கையால்

மண்டப மெண்ணில மருங்கின் நல்கினான்.                      22

 

காவிகண் மலர்தரு கயங்க ளோர்பல

ஓவறு முற்பல வோடை யோர்பல

பூவியல் வாரிசப் பொய்கை யோர்பல

வாவிக ளோர்பல மருங்கில் ஆக்கினான்.                 23

 

பாசடை மரகதம் பளிங்கு வச்சிரங்

பாசறு நன்மணி கனக மன்னதால்

தேசுறு நளிமலர் செறிந்த பூந்தடம்

வாசவன் கண்டுள மருளத் தந்தனன்.                            24

 

கற்பகஞ் சந்தகில் கதலி பூகமே

பொற்புறு வருக்கைமாப் புன்னை யாதிய

பற்பல மணிகளாற் படுத்தி அன்னவை

நற்பயன் வழங்கவும் நல்கி னானரோ.                           25

 

இன்னவா றளப்பில இமைய வர்க்கெலாம்

முன்னுறு கம்மியன் முன்னிச் செய்தலும்

பொன்னியல் இமகிரிப் புரத்து மேவிய

மன்னவன் கண்டவை மகிழ்ச்சி எய்தினான்.                      26

 

சீதரன் அயன்முதற் றேவர் மாத்தொகை

மாதவ முனிவரர் மடந்தை மாரொடு

காதலின் உமைமணங் காண வந்திடத்

தூதரை யெங்கணுந் தூண்டி னானரோ.                   27

 

ஒற்றர்தம் முரைதெரிந் தும்பர் யாவருங்

குற்றமில் முனிவருங் குன்ற வில்லினால்

பற்றலர் புரமடு பரமற் போற்றியே

மற்றவன் றன்னொடு வருது மென்றனர்.                 28

 

வெற்றிகொள் வயப்புலி மிசையு யர்த்திடுங்

கொற்றவை யாமளை குழீஇய காளிகள்

சுற்றுறும் எழுநதி இமையத் தொல்கிரி

உற்றனர் தொழுதனர் உமைமுன் நண்ணினார்.            29

 

செந்திரு நாமகள் சீர்பெ றுஞ்சசி

பந்தமில் தாபத பன்னி யாயுளார்

அந்தமில் அணங்கினர் யாரு மவ்வரை

வந்தனர் அவரவர் மகிழ்நர் ஏவலால்.                           30

 

பங்கய மிசைவரு பாவை யேமுதல்

நங்கையர் யாவரும் நற்ற வத்தினால்

அங்கநொந் துறைதரும் அம்மை தாடொழா

அங்கல வதுவையின் வனப்புச் செய்தனர்.                31

 

நெறிதரு தவத்துரு நீக்கிக் காமருக்

குறையுள தாகிய உமைதன் மெய்யினைக்

குறைதவிர் நிலைமையிற் கோலஞ் செய்தனர்

இறைவனை வழிபடும் இயல்பி னாரென.                32

 

மேதகு பொலஞ்சுடர் மேரு மந்தரம்

ஆதிய வாகிய அலகில் சுற்றமும்

ஓதருங் கடல்களும் அரக வேந்தரும்

மாதிர யானையும் பிறவும் வந்தவே.                            33

 

வேறு

 

ஈங்கிது காலை தன்னில் இமகிரி புரக்கு மன்னன்

பாங்குறு தமர்க ளோடும் பரிவொடுஞ் சென்று வௌ¢ளி

ஓங்கலில் நந்தி யுய்ப்ப உயிர்க்குயி ரான அண்ணல்

பூங்கழல் வணங்கி நின்றாங் கினையன புகல லுற்றான்.           34

 

ஆதியி னுலக மெல்லா மளித்திடு மன்னை தன்னைக்

காதலின் வதுவை செய்யக் கருதினை கணித நூலோர்

ஓதுபங் குனியின் திங்கள் உத்தரம் இன்றே யாரும்

ஈதுநன் முகூர்த்தம் எந்தாய் இமையமேல் வருதி யென்றான்.              35

 

அல்லுறுழ் கண்டத் தெந்தை யரசனை நோக்கி யின்னே

எல்லையில் கணங்கள் சூழ இமையமேல் வருதும் முன்னஞ்

செல்லுதி யென்ற லோடுந் திருவடி வணங்கிப் போற்றி

வல்லையின் மீண்டு போய்த்தன் வளநகர் இருக்கை புக்கான்.       36

 

ஆகத் திருவிருத்தம் - 725

   - - -

 

 

 

 

முந்தையது : பாயிரம்


 

அடுத்தது : உற்பத்திக் காண்டம் - பகுதி - 2

 

Related Content

Discourse - The Great Vratas - Significance

Skanda Puranam Lectures

History of Thirumurai Composers - Drama-திருமுறை கண்ட புராணம

கந்தபுராணம் - பாயிரம்

கந்தபுராணம் - உற்பத்தி காண்டம் - கணங்கள் செல் படலம்