logo

|

Home >

to-practise >

adiyaar-tham-cheruku

அடியார் தம் செருக்கு

 
 

திருநாவுக்கரசர் தேவாரம்

 
தலம்    : பொது 
பண்     : சாதாரி 
நான்காம் திருமுறை 
 
திருவங்கமாலை 
 
திருச்சிற்றம்பலம் 
 
இறுமாந்திருப்பன் கொலோ - ஈசன் பல்கணத்து எண்ணப்பட்டு 
சிறு மான் ஏந்தி தன் சேவடிக் கீழ்ச் சென்றங்கு இறுமாந்திருப்பன் கொலோ.        4.9.11 
 
திருச்சிற்றம்பலம் 


 
thirunAvukkaracar thEvAram

 
thalam    :    common 
paN    :    cAthAri 
Fourth thirumuRai 
 
thiruvangamAlai  
 
thirucciRRambalam 
 
iRumAn^dhu iruppan kolO - Ican pal gaNaththu eNNappaTTu 
ciRu mAn En^thi than cEvaDik kIzc cenRaN^gu iRumAn^dhu iruppan kolO.    4.9.11 
 
thirucciRRambalam 
 
Meaning of Thevaram


I would stay proud! 
Seeing the Master in the various creatures, 
going under the Perfect feet of the Holder of small deer, 
I would stay proud! 
 
பொருளுரை


செருக்குற்று அமர்ந்திருப்பேன்! 
ஈசனானவன் பல (உயிர்க்) கணங்களிலும் காணப்பெற்று 
சிறிய மானை ஏந்திய அவன் செம்மையான அடிக்கீழ் 
செருக்குற்று அமர்ந்திருப்பேன்! 
 
Notes


1. பல் கணத்து எண்ணப்பட்டு - 
எல்லா உயிர்களிலும் இறைவனைக் கண்டு. 
இவ்வாறு எங்கும் இறைவனைக் காணுதலால் அவர் தம் 
பேரின்பமே எல்லாவிடத்தும் கிடைக்கின்றது. 
 "அனைத்து வேடமாம்" அம்பலக் கூத்தனைத் 
  தினைத்தனைப் பொழுதும் மறந்து உய்வனோ - அப்பர் 
2. இறைவனுடைய இனிமையான திருவடியைப் போற்றி 
அப்புண்ணியச் சேவடிக்கீழ் இருத்தல் குறித்து அடியவர்கள் 
கருவமே கொள்ளவேண்டும். மிக உயர்ந்ததும் அழியாததுமான 
செல்வம் அதுவேயன்றோ! 
  "நாமார்க்கும் குடியல்லோம் நமனையஞ்சோம்" என்ற 
மறுமாற்றத் திருத்தாண்டகத்தில் இவ்வுயரிய இறுமாப்பு 
கொண்டு அப்பர் பெருமான் பல்லவப் பேரரசனையும்  
பணிய வைத்த பெருஞ்சிறப்பு காணலாம். 
  ஞானசம்பந்தப் பெருமானின் பதிகங்கள் தோறும்  
இச்செம்மாப்பு அணி செய்வதைக் காணலாம். 
ஒ. பணிந்தும் படர்சடையான் பாதங்கள் போதால் 
   அணிந்தும் அணிந்தவரை ஏத்தத் - துணிந்தும் 
   எந்தையார்க்கு ஆட்செய்யப்பெற்ற இதுகொலோ 
   சிந்தையார்க்கு உள்ள செருக்கு  
       - காரைக்கால் அம்மையார். 

Related Content

Pictures of Sthala vruksham or Temple Trees

The Glory of Arudra Dharisanam

Devotees' Hurdle Remover

Books on vratas / festivals

For Glorious Marriage