logo

|

Home >

to-know >

thiruvasaga-yappu-vakai-attavanai

திருவாசக யாப்புவகை அட்டவணை

சிவமயம்

(திரு.ஜி.கலியாணம் பிள்ளையவர்கள், பி.ஏ., தொகுத்தது)

எண்கள் - செய்யுள் எண்கள்

a) அறுசீர் விருத்தம்            35-44, 55-74, 195-214 (ஆக 50)

b) ஆசிரிய விருத்தம்            348-357, 368-407, 418-474, 485-505, 516-525, 536-545, 569-614, 635-649 (ஆக 209)

c) இணைக்குறள் ஆசிரியப்பா        3

d) எண்சீர் விருத்தம்            25-34,95-104 (ஆக 20)

e) எழுசீர் விருத்தம்            75-84 (ஆக 10)

f) கட்டளைக்கலித்துறை            5-14, 105-154, 526-535 (70)

g) கலவைப்பாட்டு            408-417 (ஆக 10)

h) கலித்தாழிசை                295-314 (ஆக 20)

i) கலிநிலைத்துறை            85-94 (ஆக 10)

j) கலிவிருத்தம்                45-54, 338-347, 506-515, 615, 616, 650-658 (ஆக 41)

k) கலிவெண்பா                1.*

l) கொச்சகக்கலிப்பா            155-174, 475-484, 546-568 (ஆக 53) *

m) தரவுகொச்சகக் கலிப்பா        15-24, 175-194, 215-294, 315-337 (ஆக 133)

n) நிலைமண்டில ஆசிரியப்பா        2,4(ஆக2)

o) நேரிசை வெண்பா            358, 367, 617-634 (ஆக 28)


மிகுதியான பாடல்கள் ஆசிரிய விருத்தத்திலும் தரவு கொச்சகக் கலிப்பாவிலும் உள்ளன.

1 k, 2 n, 3 c, 4 n, 5-14 f, 15-24 m, 25-34 d, 35-44 a, 45-54 j, 55-74 a, 75-84 e, 85-94 i, 95-104 d, 105-154 f.

c. இஃது இணைக் குறளாசிரியப் பாவாதலின் இடையிடையே இருசீரடியாகிய குறளடியும், முச்சீரடியாகிய சிந்தடியும், ஐஞ்சீரடியாகிய நெடிலடியும், விரவப் பெற்று வந்தது.

k. இந்த முதற் செய்யுளுக்குப் பெயர் பல பிரதிகளிற் சிவ புராணத் தகவலென்று எழுதப்பட்டிருக்கின்றது. அன்றித் திருவாதவூரர் புராணத்திலும் அகவலென்று சொல்லப்பட்டு 
இருக்கின்றது. ஆயினும் இதனீற்றடி "பல்லோரு மேத்தப் பணிந்து" என முச்சீரதாய் நிற்றலின் அகவலினீற்றடி இப்படி வருதற்கியாண்டும் இலக்கணம் இல்லாமையாலும், எதுகைத்தொடை நயம் கருதாது "செல்வர் சிவபுரத்தினுள்ளார் சிவனடிக் கீழ்ப் பல்லோரு மேத்தப் பணிந்து" எனப் பிரிந்து நிலைமண்டிலவகவலாகக் கொள்கவெனின் அங்ஙனம் எங்கும் வழக்கம் இல்லாமையாலும் "அகவலிசையன வகவன் மற்றவை -ஏ-ஓ-ஈ-ஆ- எனயென்றிறுமே" என யாப்பருங்கல விருத்தியுட் கூறியவாறே அவ்வீற்றடியினீறு முடிவு பெறாமையாலும் அகவலென்பது ஒருவாற்றானும் பொருந்தாது. பஃறொடை வெண்பாவெனக் கொள்க வெனின், இது பன்னிரண்டடியின் மிக்க பலவடிகளால் வருதலின் அதுவும் பொருந்தாது. "நெடுவெண் பாட்டு முந்நாலடித்தே, குறுவெண்பாட்டிற் களவெழுசீரே" என ஆசிரியர் தொல்காப்பியர்   வெண்பாவிற்குப் பன்னிரண்டடியே பேரெல்லையாகக் கூறுதலானென்க. ஆதலால் இதனை "ஒரு பொருணுதலிய வெள்ளடி யியலாற்றிரிபின்றி வருவது கலிவெண்பாட்டே” என்னுந் தொல்காப்பியச் சூத்திரவிதிப்படி வந்த கலிவெண்பாவெனக் கொள்ளப்பட்டது. இக்கலிவெண்பா வெண்டளையான் வந்தது.

l. இதிலே வந்த பதிகப்பாடல்களிலே கொச்சகக் கலிப்பா வென்று சொல்லப்பட்டவைகளுள் திருக்கோத்தும்பியிலே, “நானாரென்னுள்ளமார் ஞானங்களா ரென்னையாரறிவார்" என்பது போல ஐஞ்சீரடிகள் சிலவற்றிலே வந்திருக்கின்றன. கலிப்பாவில் ஐஞ்சீரடிகள் சிறுபான்மை வருமென்றிலக்கண மிருக்கின்றமையால் “அருகிக்கலியோ டகவன்மருங்கி னைஞ்சீரடியும், வருதற்குரித்து' எனக் காரிகையிலே சொல்லப்பட்டதனாலும் அறிக.

155-174 l, 175-194 m, 195-214 a, 215-294 m, 295-314 h, 315-337 m, 338-347 j, 348-357 b, 358-367 p, 368-407 b, 408-417 g, 418-474 b, 475-484 l, 485-505 b, 506-514 j, 516-525 b, 526-535 f, 536-545 b, 546-568 l, 569-614 b, 615 & 616 j, 617-634 p, 635-649 b, 650-658 j.

    பதிகங்களிலுள்ள அடிகளின் எண்ணிக்கை:- 1-95, 2-146, 3-182, 4-225, 5-400, 6-200, 7-80, 8-120, 9 to 12 each 40, 13-76, 14-57, 15-56, 16-54, 17 to 29 each 40, 30-28, 31-40, 32- 44, 33 to 38 each 40, 39-12, 40 to 43 each 40, 44-24, 45-40, 46-8, 47-44, 48-28, 49-32, 50- 28,51-36 ஆக 3295 அடிகள் (இக்கணக்கில் 294, 314ம் பாடல்கள் சேர்ந்துள்ளன, 659-661ம் பாடல்கள் சேர்ந்தில. 294, 314ம் பாடல்கள் மொத்தக் கணக்கிற் சேராவிடின் மொத்த அடிகளின் தொகை 3288 ஆகும்).

    பாடல்களின் எண்ணிக்கை:- இது 656 என்றும், 658 என்றும் கூறப்படுகிறது. இவற்றுக்கு ஆதாரமான செய்யுட்கள் கீழ்வருவன:

    சிவபுராணங்கீர்த்தி திருவண்டம் போற்றித்
        திருவகவல் முதல்நான்காஞ் சதகம் நூறாம் 
    இவை நீத்தல்விண்ணப்பம் ஐம்பதாகும்
        எம்பாவை அம்மானை சுண்ணங் கோத்தும்பி
    புவனமகிழ் தெள்ளேணஞ் சாழல் இருபதாகும் 
        பூவல்லி திருவுந்தி பத்தொன்பானாம்
    உவமையிலாத் தோணோக்கம் பதினான்காகும்
        ஊசல் ஒன்பதாகு மெனவுரைத்த வாறே.            (1)

    திருவன்னை குயிற்பத்து திருத்த சாங்கம்
        திருப்பள் ளியொடு கோயின்மூத்த திருப்பதிகம் 
    அருள்கோவிற் றிருப்பதிகஞ் செத்தி லடைக்கலமே
        ஆசை யதிசயம் புணர்ச்சி வாழாப் பத்தருட்பத்
    தொருபதென வுரைசெய்வர் கழுக்குன்றம் ஏழாம்
        ஒருபதாங் கண்டம் பிரார்த்தனை பதினொன்றே
    திருமருவு குழைத்தபத்து உயிருண்ணி அச்சம்
        திருப்பாண்டிப் பிடித்தப்பத்தே சறவும் பத்தே.        (2)

    திருப்புலம்பல் மூன்றாகும் குலாப்பத் தற்புதமே
        சென்னிதிரு வார்த்தைப் பத்தெண்ணப் பத்தாறாம்
    பாற்கு ரியயாத் திரைப்பத் தொருபதாம்
        படையெழுச்சி யிரண்டாகும் பதினொன்று வெண்பா
    இரட்டவாம் பண்டாய நான்மறை யேழாகும்
        எட்டாகும் படையாட்சி மின்னே ரேழாம்
    அருட்பெரும் அச்சோவொன்பான் நாற்பத்தேழ் பதிகம்
        அகவலுடன் பாட்டறு நூற்றைம் பத்தாறே.            (3) 

    சிவபுரா ணங்கீர்த்தி திருவண்டப் பகுதி 
        திருப்போற்றி யுடனகவ றிருச்சதக நூறாம்
    நவநீத்தல் விண்ணப்ப மைம்பதாம் பாவை 
        நலந்திகழு மம்மானை நல்லபொற் சுண்ணம்
     புவனமகிழ் கோத்தும்பி திருவார்தெள் ளேணம்
        பொருவரிய திருச்சாழல் பூவல்லி யுந்தி 
    இவையிருப  தாமிரே ழாகுதோ ணோக்கம்
        எழிற்பொன்னூ சலுமேயொன் பானென்ப விவையே        (4)

    திருவன்னை குயிற்பத்துத் திருத்தசாங்கம்
        திருப்பள்ளி யொடுகோயின் மூத்ததிருப் பதிகம் 
    அருட்கோயிற் றிருப்பதிகஞ் செத்திலடைக் கலமே
        ஆசையதி சயம்புணர்ச்சி வாழாப்பத் தருட்பத்
    தொருபதென வுரைசெய்வர் கழுக்குன்ற மேழாம்
        உயர்பிரார்த் தனைகள்பதி னொன்றாகுங் காண்பத்
    திறமைபெருங் குழைத்தபத் துயிருண்ணி யச்சம் 
        எழிற்பாண்டி பிடித்தபத்தொ டேசறவு பத்தே.            (5)

    திருப்புலம்பல் மூன்றுகுலா வற்புதமே சென்னி 
        திருவார்த்தை பத்தெண்ணப் பதிகமொரு வாறாம்
    பாற்குரிய யாத்திரைப்பத் தொருபதா மற்றைப் 
        படையெழுச்சி யிரண்டாகும் பதினொன்றாம் வெண்பா
    அருட்டவழும் பண்டாய நான்மறையே ழாகும் 
        வலியபடை யாட்சியெட் டானந்த மேழாம்
    அருட்பெறுமச் சோவொன்ப தைம்பத்தொன்றாம் பதிகம்                
         அகவலொடு செய்யுள் அறு நூற்றைம்ப தெட்டே.        (6)

                திருச்சிற்றம்பலம் 
 

Related Content