logo

|

Home >

to-know >

references-to-rudhratcham-in-thirumurais

திருமுறைகளில் ருத்ராட்சம் பற்றிய குறிப்புகள்

 

கொக்கின் னிறகின் னொடுவன்னி புக்க சடையார்க் கிடமாகுந் திக்கின் னிசைதே வர்வணங்கும் அக்கின் னரையா ரதையாறே. 1.36.3 கொக்கிற கோடு கூவிள மத்தங் கொன்றையொ டெருக்கணி சடையர் அக்கினொ டாமை பூண்டழ காக அனலது ஆடுமெம் மடிகள் மிக்கநல் வேத வேள்வியு ளெங்கும் விண்ணவர் விரைமலர் தூவப் பக்கம்பல் பூதம் பாடிட வருவார் பாம்புர நன்னக ராரே. 1.41.2 கழல்மல்கு காலினர் வேலினர் நூலர் கவர்தலை யரவொடு கண்டியும் பூண்பர் அழல்மல்கு மெரியொடும் அணிமழு வேந்தி ஆடுவர் பாடுவர் ஆரணங் குடையர் பொழில்மல்கு நீடிய அரவமு மரவம் மன்னிய கவட்டிடைப் புணர்குயி லாலும் எழில்மல்கு சோலையில் வண்டிசை பாடும் இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.  1.78.7 அரையார் அழல்நாகம் அக்கோ டசைத்திட்டு விரையார் வரைமார்பின் வெண்ணீ றணியண்ணல் வரையார் வனபோல வளரும்வங்கங்கள் கரையார் கடல்நாகைக் காரோ ணத்தானே. 1.84.7 பக்கம்வாழைப் பாய்கனியோடு பலவின்றேன் கொக்கின்கோட்டுப் பைங்கனிதூங்குங் குற்றாலம் அக்கும்பாம்பும் ஆமையும்பூண்டோ ர் அனலேந்தும் நக்கன்மேய நன்னகர்போலு நமரங்காள். 1.99.4 கொட்டுவர் அக்கரை யார்ப்பது தக்கை குறுந்தாளன விட்டுவர் பூதங் கலப்பில ரின்புக ழென்புலவின் மட்டுவ ருந்தழல் சூடுவர் மத்தமும் ஏந்துவர்வான் தொட்டுவ ருங்கொடித் தோணி புரத்துறை சுந்தரரே. 1.117.5 அக்கிருந்த ஆரமும் ஆடரவும் ஆமையுந் தொக்கிருந்த மார்பினான் தோலுடையான் வெண்ணீற்றான் புக்கிருந்த தொல்கோயில் பொய்யிலா மெய்ந்நெறிக்கே தக்கிருந்தார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே. 2.042.1 சக்கரமாற் கீந்தானுஞ் சலந்தரனைப் பிளந்தானும் அக்கரைமே லசைத்தானும் அடைந்தயிரா வதம்பணிய மிக்கதனுக் கருள்சுரக்கும் வெண்காடும் வினைதுரக்கும் முக்குளம்நன் குடையானும் முக்கணுடை இறையவனே. 2.048.7 தக்கனார்பெரு வேள்வியைத் தகர்த்துகந்தவன் தாழ்சடை முக்கணான்மறை பாடிய முறைமையான்முனி வர்தொழ அக்கினோடெழில் ஆமைபூண் அண்ணலாரறை யணிநல்லூர் நக்கனாரவர் சார்வலால் நல்குசார்விலோம் நாங்களே 2.077.8 அக்கரவ்வணி கலனென அதனொடார்த்ததோர் ஆமைபூண் டுக்கவர்சுடு நீறணிந் தொளிமல்குபுனற் காவிரிப் புக்கவர்துயர் கெடுகெனப் பூசுவெண்பொடி மேவிய மிக்கவர்வழி பாடுசெய் விளநகரவர் மேயதே. 2.078.2 மிக்க காலனை வீட்டி மெய்கெடக் காமனை விழித்துப் புக்க ஊரிடு பிச்சை யுண்பது பொன்றிகழ் கொன்றை தக்க நூல்திகழ் மார்பில் தவளவெண் ணீறணிந் தாமை அக்கின் ஆரமும் பூண்ட அடிகளுக் கிடம்அர சிலியே. 2.095.4 தக்கனார் தலையரிந்த சங்கரன் றனதரை அக்கினோ டரவசைத்த அந்திவண்ணர் காழியை ஒக்கஞான சம்பந்தன் உரைத்தபாடல் வல்லவர் மிக்கஇன்ப மெய்திவீற் றிருந்துவாழ்தல் மெய்ம்மையே. 2.097.11 துக்கமிக்க வாழ்க்கையின் சோர்வினைத் துறந்துநீர் தக்கதோர் நெறியினைச் சார்தல்செய்யப் போதுமின் அக்கணிந் தரைமிசை யாறணிந்த சென்னிமேல் கொக்கிற கணிந்தவன் கோடிகாவு சேர்மினே. 2.099.3 ÀÃÍ À¡½¢¨Âô Àò¾÷¸û «ò¾¨Éô ¨ÀÂçšΠ«ìÌ ¿¢¨Ã ¦ºö âñ ¾¢ÕÁ¡÷Ò¨¼ ¿¢ÁÄ¨É ¿¢ò¾¢Äô ¦ÀÕ󦾡ò¨¾ Å¢¨Ã¦ºö âõ¦À¡Æ¢ü º¢ÃÒÃòÐ «ñ½¨Ä Å¢ñ½Å÷ ¦ÀÕÁ¡¨Éô ÀÃ× ºõÀó¾ý ¦ºó¾Á¢ú ÅøÄÅ÷ ÀÃÁ¨Éô À½¢Å¡§Ã. 2.102.11 கலையிலங் கும்மழு கட்டங்கம் கண்டிகை குண்டலம் விலையிலங் கும்மணி மாடத்தர் வீழிமி ழலையார் தலையிலங் கும்பிறை தாழ்வடஞ் சூலந் தமருகம் அலையிலங் கும்புன லேற்றவர்க் கும்மடி யார்க்குமே. 3.009.04 அக்கர வரையினர் அரிவை பாகமாத் தொக்கநல் விடையுடைச் சோதி தொன்னகர் தக்கநல் வானவர் தலைவர் நாடொறும் மிக்கவர் தொழுதெழு விசய மங்கையே. 3.017.03 நெக்கு ளார்வ மிகப்பெரு கிந்நினைந் தக்கு மாலைகொ டங்கையில் எண்ணுவார் தக்க வானவ ராத்தகு விப்பது நக்கன் நாமம் நமச்சி வாயவே. 3.049.3 மிக்கரை தாழவேங்கை யுரியார்த்துமை யாள்வெருவ அக்கர வாமையேன மருப்போடவை பூண்டழகார் கொக்கரை யோடுபாட லுடையான்குட மூக்கிடமா எக்கரை யாருமேத்த இருந்தானவன் எம்மிறையே. 3.059.04 ஓமையன கள்ளியன வாகையன கூகைமுர லோசை ஈமம்எரி சூழ்சுடலை வாசமுது காடுநட மாடித் தூய்மையுடை அக்கொடர வம்விரவி மிக்கொளி துளங்க ஆமையொடு பூணும்அடி கள்ளுறைவ தவளிவண லூரே. 3.82.2 கொக்குடை இறகொடு பிறையொடு குளிர்சடை முடியினர் அக்குடை வடமுமோர் அரவமு மலரரை மிசையினிற் திக்குடை மருவிய வுருவினர் திகழ்மலை மகளொடும் புக்குட னுறைவது புதுமலர் விரைகமழ் புறவமே. 3.84.2 அக்கினோ டரவரை யணிதிகழ் ஒளியதோ ராமைபூண் டிக்குக மலிதலை கலனென இடுபலி யேகுவர் கொக்கரை குழல்முழ விழவொடு மிசைவதோர் சரிதையர் மிக்கவர் உறைவது விரைகமழ் பொழில்விழி மிழலையே. 3.85.7 அக்குலாம் அரையினர் திரையுலாம் முடியினர் அடிகளன்று தக்கனார் வேள்வியைச் சாடிய சதுரனார் கதிர்கொள்செம்மை புக்கதோர் புரிவினர் வரிதரு வண்டுபண் முரலுஞ்சோலைத் திக்கெலாம் புகழுறுந் திருநெல்வே லியுறை செல்வர்தாமே. 3.92.7 மிக்கவர் தொழுதெழு வெங்குரு மேவிய அக்கினோ டரவசைத் தீரே அக்கினோ டரவசைத் தீரும தடியிணை தக்கவர் உறுவது தவமே. 3.94.5 கொக்கிற குங்குளிர் சென்னிமத்தங் குலாய மலர்சூடி அக்கர வோடரை யார்த்துகந்த அழகன் குழகாக நக்கம ருந்திரு மேனியாளன் திருநாரை யூர்மேவிப் புக்கம ரும்மனத் தோர்கள்தம்மைப் புணரும் புகல்தானே. 3.107.6 சக்கரம் வேண்டுமால் பிரமன்காணா மிக்கவர் கயிலை மயேந்திரருந் தக்கனைத் தலையரி தழலுருவர் அக்கணி யவராரூர் ஆனைக்காவே. 3.109.6 நக்கமேகுவர் நாடுமோர் ஊருமே நாதன்மேனியின் மாசுணம் ஊருமே தக்கபூமனைச் சுற்றக் கருளொடே தாரமுய்த்தது பாணற் கருளொடே மிக்கதென்னவன் தேவிக் கணியையே மெல்லநல்கிய தொண்டர்க் கணியையே அக்கினாரமு துண்கல னோடுமே ஆலவாயர னாருமை யோடுமே. 3.115.6 அக்கார் அணிவடம் ஆகத்தர் நாகத்தர் நக்கார் இளமதிக் கண்ணியர் நாடொறும் உக்கார் தலைபிடித் துன்பலிக் கூர்தொறும் புக்கார் புகலூர்ப் புரிசடை யாரே. 4.16.4 முக்கிமுன் வெகுண்டெ டுத்த முடியுடை அரக்கர்கோனை நக்கிருந் தூன்றிச் சென்னி நாண்மதி வைத்த எந்தை அக்கர வாமை பூண்ட அழகனார் கருத்தி னாலே தெக்குநீர்த் திரைகள் மோதுந் திருமறைக் காட னாரே. 4.33.2 வக்கரன் உயிரை வவ்வக் கண்மலர் கொண்டு போற்றச் சக்கரங் கொடுப்பர் போலுந் தானவர் தலைவர் போலுந் துக்கமா மூடர் தம்மைத் துயரிலே வீழ்ப்பர் போலும் அக்கரை ஆர்ப்பர் போலும் ஆவடு துறைய னாரே. 4.56.6 கொக்கரை தாளம் வீணை பாணிசெய் குழகர் போலும் அக்கரை யணிவர் போலும் ஐந்தலை யரவர் போலும் வக்கரை யமர்வர் போலும் மாதரை மையல் செய்யும் நக்கரை யுருவர் போலும் நாகஈச் சரவ னாரே. 4.66.9 கண்டியிற் பட்ட கழுத்துடை யீர்கரி காட்டிலிட்ட பண்டியிற் பட்ட பரிகலத் தீர்பதி வீழிகொண்டீர் உண்டியிற் பட்டினி நோயில் உறக்கத்தில் உம்மையைவர் கொண்டியிற் பட்டு மறக்கினும் என்னைக் குறிக்கொண்மினே. 4.95.6 வெண்டிரைக் கங்கை விகிர்தாவென் விண்ணப்பம் மேலிலங்கு கண்டிகை பூண்டு கடிசூத் திரமேற் கபாலவடங் குண்டிகை கொக்கரை கோணற் பிறைகுறட் பூதப்படை தண்டிவைத் திட்ட சரக்கறை யோவென் றனிநெஞ்சமே. 4.111.9 கொக்க ரைகுழல் வீணை கொடுகொட்டி பக்க மேபகு வாயன பூதங்கள் ஒக்க ஆட லுகந்துடன் கூத்தராய் அக்கி னோடர வார்ப்பர்ஆ ரூரரே. 5.7.1 நக்க ரையனை நாடொறும் நன்னெஞ்சே வக்க ரையுறை வானை வணங்குநீ அக்க ரையோ டரவரை யார்த்தவன் கொக்க ரையுடை யான்குட மூக்கிலே. 5.22.5 பக்கம் பூதங்கள் பாடப் பலிகொள்வான் மிக்க வாளரக் கன்வலி வீட்டினான் அக்க ணிந்தவன் ஆவடு தண்டுறை நக்கன் என்னுமிந் நாணிலி காண்மினே. 5.29.10 செக்க ரங்கெழு செஞ்சுடர்ச் சோதியார் அக்க ரையரெம் மாதிபு ராணனார் கொக்கி னம்வயல் சேருங் குரக்குக்கா நக்க னைத்தொழ நம்வினை நாசமே. 5.75.8 கொக்கி றகர் குளிர்மதிச் சென்னியர் மிக்க ரக்கர் புரமெரி செய்தவர் அக்க ரையினர் அன்பிலா லந்துறை நக்கு ருவரும் நம்மை யறிவரே. 5.80.5 கண்டி பூண்டு கபாலங்கைக் கொண்டிலர் விண்ட வான்சங்கம் விம்மவாய் வைத்திலர் அண்ட மூர்த்தி அழல்நிற வண்ணனைக் கெண்டிக் காணலுற் றாரங் கிருவரே. 5.95.10 அக்கும் ஆமையும் பூண்டன லேந்திஇல் புக்குப் பல்பலி தேரும் புராணனை நக்கு நீர்கள் நரகம் புகேன்மினோ தொக்க வானவ ராற்றொழு வானையே. 5.97.14 அக்குலாம் அரையினன்காண் அடியார்க் கென்றும் ஆரமுதாய் அண்ணிக்கும் ஐயாற் றான்காண் கொக்குலாம் பீலியொடு கொன்றை மாலை குளிர்மதியுங் கூரரவும் நீருஞ் சென்னித் தொக்குலாஞ் சடையினன்காண் தொண்டர் சொல்லுந் தூநெறிகாண் வானவர்கள் துதிசெய் தேத்துந் திக்கெலாம் நிறைந்தபுகழ்த் திருவா ரூரிற் றிருமூலத் தானத்தெஞ் செல்வன் றானே. 6.30.2 கொக்கிறகு சென்னி யுடையான் கண்டாய் கொல்லை விடையேறுங் கூத்தன் கண்டாய் அக்கரைமே லாட லுடையான் கண்டாய் அனலங்கை யேந்திய ஆதி கண்டாய் அக்கோ டரவ மணிந்தான் கண்டாய் அடியார்கட் காரமுத மானான் கண்டாய் மற்றிருந்த கங்கைச் சடையான் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன் றானே. 6.39.2 தக்கா ரடியார்க்கு நீயே யென்றுந் தலையார் கயிலாயன் நீயே யென்றும் அக்காரம் பூண்டாயும் நீயே யென்றும் ஆக்கூரில் தான்றோன்றி நீயே யென்றும் புக்காய ஏழுலகும் நீயே யென்றும் புள்ளிருக்கு வேளூராய் நீயே யென்றும் தெக்காரு மாகோணத் தானே யென்றும் நின்ற நெய்த் தானாவென் நெஞ்சு ளாயே. 6.41.6 மூத்தவனை வானவர்க்கு மூவா மேனி முதலவனைத் திருவரையின் மூக்கப் பாம்பொன் றார்த்தவனை அக்கரவம் ஆர மாக அணிந்தவனைப் பணிந்தடியா ரடைந்த வன்போ டேத்தவனை இறுவரையிற் றேனை ஏனோர்க் கின்னமுதம் அளித்தவனை யிடரை யெல்லாங் காத்தவனைக் கற்குடியில் விழுமி யானைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே. 6.60.1 உரையாரும் புகழானே ஒற்றி யூராய் கச்சியே கம்பனே காரோ ணத்தாய் விரையாரும் மலர்தூவி வணங்கு வார்பால் மிக்கானே அக்கரவம் ஆரம் பூண்டாய் திரையாரும் புனற்பொன்னித் தீர்த்த மல்கு திருவானைக் காவிலுறை தேனே வானோர் அரையாவுன் பொற்பாத மடையப் பெற்றால் அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே. 6.62.6 தக்கனது பெருவேள்வி தகர்த்தா னாகித் தாமரையான் நான்முகனுந் தானே யாகி மிக்கதொரு தீவளிநீர் ஆகா சமாய் மேலுலகுக் கப்பாலாய் இப்பா லானை அக்கினொடு முத்தினையு மணிந்து தொண்டர்க் கங்கங்கே அறுசமய மாகி நின்ற திக்கினையென் றிருமுதுகுன் றுடையான் றன்னைத் தீவினையேன் அறியாதே திகைத்த வாறே. 6.68.5 அக்கரவம் அரைக்கசைத்த அம்மான் கண்டாய் அருமறைக ளாறங்க மானான் கண்டாய் தக்கனது பெருவேள்வி தகர்த்தான் கண்டாய் சதாசிவன்காண் சலந்தரனைப் பிளந்தான் கண்டாய் மைக்கொண்மயிற் றழைகொண்டு வருநீர்ப் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மழுவன் கண்டாய் கொக்கமரும் வயற்புடைசூழ் கொட்டை யூரிற் கோடீச் சரத்துறையுங் கோமான் றானே. 6.73.5 தக்கனது வேள்விகெடச் சாடி னானைத் தலைகலனாப் பலியேற்ற தலைவன் றன்னைக் கொக்கரைசச் சரிவீணைப் பாணி யானைக் கோணாகம் பூணாகக் கொண்டான் றன்னை அக்கினொடும் என்பணிந்த அழகன் றன்னை அறுமுகனோ டானைமுகற் கப்பன் றன்னை நக்கனைவக் கரையானை நள்ளாற் றானை நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே. 6.74.7 வெறிவிரவு மலர்க்கொன்றை விளங்கு திங்கள் வன்னியொடு விரிசடைமேல் மிலைச்சி னான்காண் பொறிவிரவு கதநாகம் அக்கி னோடு பூண்டவன்காண் பொருபுலித்தோ லாடை யான்காண் அறிவரிய நுண்பொருள்க ளாயி னான்காண் ஆயிரம்பே ருடையவன்காண் அந்தண் கானற் செறிபொழில்சூழ் மணிமாடத் திருப்புத் தூரில் திருத்தளியான் காணவனென் சிந்தை யானே. 6.76.7 அக்கிருந்த அரையானை அம்மான் றன்னை அவுணர்புர மொருநொடியி லெரிசெய் தானைக் கொக்கிருந்த மகுடத்தெங் கூத்தன் றன்னைக் குண்டலஞ்சேர் காதானைக் குழைவார் சிந்தை புக்கிருந்து போகாத புனிதன் றன்னைப் புண்ணியனை எண்ணருஞ்சீர்ப் போக மெல்லாந் தக்கிருந்த தலையாலங் காடன் றன்னைச் சாராதே சாலநாள் போக்கி னேனே. 6.79.2 பொக்கணமும் புலித்தோலும் புயத்திற் கொண்டார் பூதப் படைகள்புடை சூழக் கொண்டார் அக்கினொடு படவரவம் அரைமேற் கொண்டார் அனைத்துலகும் படைத்தவையும் அடங்கக் கொண்டார் கொக்கிறகுங் கூவிளமுங் கொண்டை கொண்டார் கொடியானை அடலாழிக் கிரையாக் கொண்டார் செக்கர்நிறத் திருமேனி திகழக் கொண்டார் செடியேனை யாட்கொண்ட சிவனார் தாமே. 6.96.4 துன்னஞ்சேர் கோவணத்தாய் தூய நீற்றாய் துதைந்திலங்கு வெண்மழுவாள் கையி லேந்தித் தன்னணையுந் தண்மதியும் பாம்பும் நீருஞ் சடைமுடிமேல் வைத்துகந்த தன்மை யானே அன்ன நடைமடவாள் பாகத் தானே அக்காரம் பூண்டானே ஆதி யானே பொன்னங் கழலடிக்கே போது கின்றேன் பூம்புகலூர் மேவிய புண்ணி யனே. 6.99.9 அக்கின்ற வாமணி சேர்கண்டன் அம்பல வன்மலயத்து இக்குன்ற வாணர் கொழுந்திச் செழுந்தண் புனமுடையாள் அக்குன்ற ஆ(று)அமர்ந்(து) ஆடச்சென் றாள்அங்கம் அவ்அவையே ஒக்கின்ற ஆரணங் கேஇணங் காகும் உனக்கவளே. .. கோவை.68 அக்கும் அரவும் அணிமணிக் கூத்தன்சிற் றம்பலமே ஓக்கும் இவள(து) ஒளிர்உரு அஞ்சி மஞ் சார்சிலம்பா கொக்கும் சுனையும் குளிர்தளி ரும்கொழும் போதுகளும் இக்குன்றில் என்றும் மலர்ந்தறி யாத இயல்பினவே. .. கோவை.103 மணிஅக்(கு) அணியும் அரன்நஞ்சம் அஞ்சி மறுகிவிண்ணோர் பணியக் கருணை தரும்பரன் தில்லையன் னாள்திறத்துத் துணியக் கருதுவ(து) இன்றே துணிதுறை வாநிறைபொன் அணியக் கருதுநின் றார்பலர் மேன்மேல் அயலவரே. .. கோவை.195 ஆகின்ற தன்மையில் அக்கணி கொன்றையன் வேகின்ற செம்பொனின் மேலணி மேனியன் போகின்ற சீவன் புகுந்துட லாய்உளன் ஆகின்ற தன்மைசெய் ஆண்டகை யானே மந்.395 தெக்கண மாகும் வியாழத்துச் சேர்த்திசை அக்கணி சூலமு மாமிடம் பின்னாகில் துக்கமும் இல்லை வலமுன்னே தோன்றிடின் மிக்கது மேல்வினை மேன்மேல் விளையுமே மந்.798 குண்டலக் காதி கொலைவிற் புருவத்தள் கொண்ட அரத்த நிறமன்னு கோலத்தள் கண்டிகை ஆரம் கதிர்முடி மாமதிச் சண்டிகை நாற்றிசை தாங்கிநின் றாளே. மந்.1050 நின்ற திரிபுரை நீளும் புராதனி குன்றலில் மோகினி மாதிருக் கும்சிகை நன்றறி கண்டிகை நாற்கால் கரீடணி துன்றிய நற்சுத்த தாமரைச் சுத்தையே மந்.1051 பூதி யணிவது சாதன மாதியிற் காதணி தாம்பிர குண்டலங் கண்டிகை ஓதி யவர்க்கும் உருத்திர சாதனந் தீதில் சிவயோகி சாதனந் தேரிலே மந்.1662 காதணி குண்டலங் கண்டிகை நாதமும் ஊதுநற் சங்கும் உயர்கட்டி கப்பரை ஏதமில் பாதுகம் யோகாந்த மாதனம் ஏதமில் யோகபட் டந்தண்டம் ஈரைந்தே. மந்.1664 அங்கி தமருகம் அக்குமா லைபாசம் அங்குசம் சூலம் கபாலம் உடன்ஞானம் தங்குஉ பயந்தரு நீல மும்உடன் மங்கையோர் பாகமாய் மாநடம் ஆடுமே மந்.2780 குறிப்பு: பல இடங்களில் அக்கு என வரும் குறிப்பு மச்சாவதாரத்தில் மீனின் கண்ணை சிவபெருமான் அணிந்ததைக் குறிப்பதாகவும் அமையும்.

See Also:
1. Glory of rudrAksham
2. shiva lingam
3. Holy Ash
4. skandha purANam - shankara samhita - upadesha kANDam 
5. rudrAksha jAbAla upanishat 

 

Related Content