சாலோக மாதி சரியாதி யிற்பெறுஞ் சாலோகஞ் சாமீபந் தங்குஞ் சரியையால் மாலோகஞ் சேரில் வழியாகுஞ் சாரூபம் பாலோகம் இல்லாப் பரனுரு வாமே. 1
சமயங் கிரியையிற் றன்மனங் கோயில் சமய மனுமுறை தானே விசேடஞ் சமயத்து மூலந் தனைத்தேறன் மூன்றாஞ் சமயாபி டேகந் தானாஞ் சமாதியே. 2