ஆண்டான் அடியவர் ஆர்க்கும் விரோதிகள் ஆண்டான் அடியவர் ஐயமேற் றுண்பவர்1 ஆண்டான் அடியரை வேண்டாது பேசினோர் தாம்தாம் விழுவது தாழ்நர காகுமே. பா-ம் : 1றுண்பார் 1
ஞானியை நிந்திப் பவனும் நலன் என்றே ஞானியை வந்திப் பவனுமே நல்வினை யான கொடுவினை தீர்வார் அவன்வயம் போன பொழுதே புகுஞ்சிவ போகமே. 2