Name of Hara encompass;
World be free from Suffering
Abode of God Shiva On the Internet
|| செந்தமிழ்க் கீதம் இசைதொடர் - நேரலை
நடுவுநில் லாதிவ் வுலகஞ் சரிந்து கெடுகின்ற தெம்பெரு மானென்ன ஈசன் நடுவுள அங்கி அகத்திய நீபோய் முடுகிய வையத்து முன்னிரென் றானே. 1
அங்கி உதயம் வளர்க்கும் அகத்தியன் அங்கி உதயஞ்செய் மேல்பா லவனொடு மங்கி உதய வடபால் தவமுனி எங்கும் வளங்கொள் இலங்கொளி தானே. 2