பேரிடர்ப் பிணிகள் தீர்க்கும்
பிஞ்ஞகன் எந்தை பெம்மான்
காருடைக் கண்ட ராகிக்
கபாலமோர் கையி லேந்திச்
சீருடைச் செங்கண் வெள்ளே
றேறிய செல்வர் நல்ல
பாரிடம் பாணி செய்யப்
பருப்பத நோக்கி னாரே. 8
அங்கண்மா லுடைய ராய
ஐவரா லாட்டு ணாதே
உங்கள்மால் தீர வேண்டில்
உள்ளத்தா லுள்கி யேத்துஞ்
செங்கண்மால் பரவி யேத்திச்
சிவனென நின்ற செல்வர்
பைங்கண்வெள் ளேற தேறிப்
பருப்பத நோக்கி னாரே. 9
அடல்விடை யூர்தி யாகி
அரக்கன்றோள் அடர வூன்றிக்
கடலிடை நஞ்ச முண்ட
கறையணி கண்ட னார்தாஞ்
சுடர்விடு மேனி தன்மேற்
சுண்ணவெண் ணீறு பூசிப்
படர்சடை மதியஞ் சேர்த்திப்
பருப்பத நோக்கி னாரே.
இத்தலம் வடநாட்டிலுள்ளது.
சுவாமி : பருப்பதேசுவரர்; அம்பாள் : மனோன்மணியம்மை. 10