ஆத்தமாம் அயனு மாலும்
அன்றிமற் றொழிந்த தேவர்
சோத்தமெம் பெருமான் என்று
தொழுதுதோத் திரங்கள் சொல்லத்
தீர்த்தமாம் அட்ட மீமுன்
சீருடை ஏழு நாளுங்
கூத்தராய் வீதி போந்தார்
குறுக்கைவீ ரட்ட னாரே.
இப்பதிகத்தில் ஏனைய செய்யுட்கள் சிதைவுற்றன.
சுவாமி : வீரட்டேசுவரர்; அம்பாள் : ஞானாம்பிகையம்மை. 2