மனமெனுந் தோணி பற்றி
மதியெனுங் கோலை யூன்றிச்
சினமெனுஞ் சரக்கை யேற்றிச்
செறிகட லோடும் போது
மதனெனும் பாறை தாக்கி
மறியும்போ தறிய வொண்ணா
துனையுனும் உணர்வை நல்காய்
ஒற்றியூ ருடய கோவே.
இப்பதிகத்தில் ஏனைய செய்யுட்கள் சிதைவுற்றன.
சுவாமி : மாணிக்கத்தியாகர்; அம்பாள் : வடிவுடையம்மை. 2