வேலை வென்றகண்
ணாரை விரும்பிநீர்
சீலங் கெட்டுத்
திகையன்மின் பேதைகாள்
காலை யேதொழுங்
காட்டுப்பள் ளியுறை
நீல கண்டனை
நித்தல் நினைமினே. 8
இன்று ளார்நாளை
இல்லை யெனும்பொருள்
ஒன்று மோரா
துழிதரும் ஊமர்காள்
அன்று வானவர்க்
காக விடமுண்ட
கண்ட னார்காட்டுப்
பள்ளிகண் டுய்ம்மினே. 9
எண்ணி லாவரக்
கன்மலை யேந்திட
எண்ணி நீண்முடி
பத்து மிறுத்தவன்
கண்ணு ளார்கரு
துங்காட்டுப் பள்ளியை
நண்ணு வாரவர்
தம்வினை நாசமே.
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமி : ஆரணியசுந்தரர்; அம்பாள் : அகிலாண்டநாயகி. 10