பதிக வகை: 2. பிரிவுநினைவுரைத்தல்
பொருட்பிரிவு இருபதும் அருட்பிரி வுயிரே ஆனந்த மாகி அதுவே தானாய்த் தானே அதுவாய்ப் பேசிய கருணை. 1. வாட்டங்கூறல் முனிவரும் மன்னரும் முன்னுவ பொன்னான் முடியுமெனப் பனிவருங் கண்பர மன்திருச் சிற்றம் பலமனையாய் துனிவரு நீர்மையி தென்னென்று தூநீர் தெளித்தளிப்ப நனிவரு நாளிது வோவென்று வந்திக்கும் நன்னுதலே. 332 கொளு பிரிவு கேட்ட வரிவை வாட்டம் நீங்க லுற்றவன் பாங்கிக் குரைத்தது. 1
பதிக வகை: 3. ஆற்றாது புலம்பல்
வறியா ரிருமை யறியா ரெனமன்னும் மாநிதிக்கு நெறியா ரருஞ்சுரஞ் செல்லலுற் றார்நமர் நீண்டிருவர் அறியா வளவுநின் றோன்தில்லைச் சிற்றம் பலமனைய செறிவார் கருங்குழல் வெண்ணகைச் செவ்வாய்த் திருநுதலே. 333 கொளு பொருள்வயிற் பிரியும் பொருவே லவனெனச் சுருளுறு குழலிக்குத் தோழி சொல்லியது. 2
பதிக வகை: 4. ஆற்றாமைகூறல்
சிறுவா ளுகிருற் றுறாமுன்னஞ் சின்னப் படுங்குவளைக் கெறிவாள் கழித்தனள் தோழி எழுதிற் கரப்பதற்கே அறிவாள் ஒழுகுவ தஞ்சனம் அம்பல வர்ப்பணியார் குறிவாழ் நெறிசெல்வ ரன்பரென் றம்ம கொடியவளே. 334 கொளு பொருள்தரப் பிரியும் அருள்தரு பவனெனப் பாங்கி பகரப் பூங்கொடி புலம்பியது. 3
பதிக வகை: 5. திணைபெயர்த்துரைத்தல்
வானக் கடிமதில் தில்லையெங் கூத்தனை ஏத்தலர்போற் கானக் கடஞ்செல்வர் காதல ரென்னக் கதிர்முலைகள் மானக் கனகந் தருமலர்க் கண்கள்முத் தம்வளர்க்குந் தேனக்க தார்மன்ன னென்னோ இனிச்சென்று தேர்பொருளே. 335 கொளு ஏழை யழுங்கத் தோழி சொல்லியது. 4
பதிக வகை: 6. பொருத்தமறிந்துரைத்தல்
சுருடரு செஞ்சடை வெண்சுட ரம்பல வன்மலயத் திருடரு பூம்பொழில் இன்னுயிர் போலக் கலந்திசைத்த அருடரு மின்சொற்க ளத்தனை யும்மறந் தத்தஞ்சென்றோ பொருடரக் கிற்கின் றதுவினை யேற்குப் புரவலரே. 336 கொளு துணைவன் பிரியத் துயருறு மனத்தொடு திணைபெயர்த் திட்டுத் தேமொழி மொழிந்தது. 5
பதிக வகை: 7. பிரிந்தமைகூறல்
மூவர்நின் றேத்த முதல்வன் ஆடமுப் பத்துமும்மைத் தேவர்சென் றேத்துஞ் சிவன்தில்லை யம்பலஞ் சீர்வழுத்தாப் பாவர்சென் றல்கும் நரக மனைய புனையழற்கான் போவர்நங் காதல ரென்நாம் உரைப்பது பூங்கொடியே. 337 கொளு பொருள்வயிற் பிரிவோன் பொருத்த நினைந்து சுருளுறு குழலிக்குத் தோழி சொல்லியது. 6
பதிக வகை: 8. இரவுறுதுயரத்திற்கிரங்கியுரைத்தல்
தென்மாத் திசைவசை தீர்தரத் தில்லைச்சிற் றம்பலத்துள் என்மாத் தலைக்கழல் வைத்தெரி யாடும் இறைதிகழும் பொன்மாப் புரிசைப் பொழில்திருப் பூவணம் அன்னபொன்னே வன்மாக் களிற்றொடு சென்றனர் இன்றுநம் மன்னவரே. 338 கொளு எதிர்நின்று பிரியிற் கதிர்நீ வாடுதற் குணர்த்தா தகன்றான் மணித்தேரோ னென்றது. 7
பதிக வகை: 9. இகழ்ச்சி நினைந்தழிதல்
ஆழியொன் றீரடி யும்மிலன் பாகன்முக் கட்டில்லையோன் ஊழியொன் றாதன நான்குமைம் பூதமும் ஆறொடுங்கும் ஏழியன் றாழ்கடலும் மெண்டிசையுந் திரிந்தி ளைத்து வாழியன் றோஅருக் கன்பெருந் தேர்வந்து வைகுவதே. 339 கொளு அயில்தரு கண்ணியைப் பயில்தரு மிரவினுள் தாங்குவ தரிதெனப் பாங்கி பகர்ந்தது. 8
பதிக வகை: 10. உறவுவெளிப்பட்டு நிற்றல்
பிரியா ரெனஇகழ்ந் தேன்முன்னம் யான்பின்னை எற்பிரியின் தரியா ளெனஇகழ்ந் தார்மன்னர் தாந்தக்கன் வேள்விமிக்க எரியா ரெழிலழிக் கும்எழி லம்பலத் தோனெவர்க்கும் அரியா னருளிலர் போலன்ன என்னை யழிவித்தவே. 340 கொளு உணர்த்தாது பிரிந்தாரென மணித்தாழ்குழலி வாடியது. 9
பதிக வகை: 11. நெஞ்சொடுநோதல்
சேணுந் திகழ்மதிற் சிற்றம் பலவன்தெண் ணீர்க்கடல்நஞ் சூணுந் திருத்து மொருவன் திருத்தும் உலகினெல்லாங் காணுந் திசைதொறுங் கார்க்கய லுஞ்செங் கனியொடுபைம் பூணும் புணர்முலை யுங்கொண்டு தோன்றுமொர் பூங்கொடியே. 341 கொளு பொருள்வயிற் பிரிந்த ஒளியுறு வேலவன் ஓங்கழற் கடத்துப் பூங்கொடியை நினைந்தது. 10
பதிக வகை: 12. நெஞ்சொடுபுலத்தல்
பொன்னணி யீட்டிய ஒட்டரும் நெஞ்சமிப் பொங்குவெங்கா னின்னணி நிற்குமி தென்னென்ப தேஇமை யோரிறைஞ்சும் மன்னணி தில்லை வளநக ரன்னஅன் னந்நடையாள் மின்னணி நுண்ணிடைக் கோபொருட் கோநீ விரைகின்றதே. 342 கொளு வல்லழற் கடத்து மெல்லியலை நினைந்து வெஞ்சுடர் வேலோன் நெஞ்சொடு நொந்தது. 11
பதிக வகை: 13. நெஞ்சொடுமறுத்தல்
நாய்வயி னுள்ள குணமுமில் லேனைநற் றொண்டுகொண்ட தீவயின் மேனியன் சிற்றம் பலமன்ன சின்மொழியைப் பேய்வயி னும்மரி தாகும் பிரிவெளி தாக்குவித்துச் சேய்வயிற் போந்தநெஞ் சேயஞ்சத் தக்கதுன் சிக்கனவே. 343 கொளு அழற்கடத் தழுக்கமிக்கு நிழற்கதிர்வேலோன் நீடுவாடியது. 12
பதிக வகை: 14. நாளெண்ணிவருந்தல்
தீமே வியநிருத் தன்திருச் சிற்றம் பலம்அனைய பூமே வியபொன்னை விட்டுப்பொன் தேடியிப் பொங்குவெங்கான் நாமே நடக்க வொழிந்தனம் யாம்நெஞ்சம் வஞ்சியன்ன வாமே கலையைவிட் டோபொருள்தேர்ந் தெம்மை வாழ்விப்பதே. 344 கொளு நீணெறி சென்ற நாறிணர்த் தாரோன் சேணெறி யஞ்சி மீணெறி சென்றது. 13
பதிக வகை: 15. ஏறுவரவுகண்டிரங்கியுரைத்தல்
தெண்ணீ ரணிசிவன் சிற்றம் பலஞ்சிந்தி யாதவரிற் பண்ணீர் மொழியிவ ளைப்பையுள் எய்தப் பனித்தடங்க ணுண்ணீர் உகவொளி வாடிட நீடுசென் றார்சென்றநாள் எண்ணீர் மையின்நில னுங்குழி யும்விர லிட்டறவே. 345 கொளு சென்றவர் திறத்து நின்றுநனி வாடுஞ் சூழிருங் கூந்தற்குத் தோழிநனி வாடியது. 14
பதிக வகை: 16. பருவங்கண்டிரங்கல்
சுற்றம் பலமின்மை காட்டித்தன் தொல்கழல் தந்ததொல்லோன் சிற்றம் பலமனை யாள்பர மன்றுதிண் கோட்டின்வண்ணப் புற்றங் குதர்ந்துநன் னாகொடும் பொன்னார் மணிபுலம்பக் கொற்றம் மருவுகொல் லேறுசெல் லாநின்ற கூர்ஞ்செக்கரே. 346 கொளு நீடியபொன்னின் நெஞ்சம்நெகிழ்ந்து வாடியவன் வரவுற்றது. 15
பதிக வகை: 17. முகிலொடு கூறல்
கண்ணுழை யாதுவிண் மேகங் கலந்துகண மயில்தொக் கெண்ணுழை யாத்தழை கோலிநின் றாலுமின மலர்வாய் மண்ணுழை யாவும் அறிதில்லை மன்னன தின்னருள்போற் பண்ணுழை யாமொழி யாளென்ன ளாங்கொல்மன் பாவியற்கே. 347 கொளு மன்னிய பருவ முன்னிய செலவின் இன்ன லெய்தி மன்னனே கியது. 16
பதிக வகை: 18. தேர்வரவு கூறல்
அற்படு காட்டில்நின் றாடிசிற் றம்பலத் தான்மிடற்றின் முற்படு நீள்முகி லென்னின்முன் னேல்முது வோர்குழுமி விற்படு வாணுத லாள்செல்லல் தீர்ப்பான் விரைமலர்தூய் நெற்படு வான்பலி செய்தய ராநிற்கும் நீள்நகர்க்கே. 348 கொளு எனைப்பல துயரமோ டேகா நின்றவன் துணைக்கா ரதற்குத் துணிந்துசொல்லியது. 17
பதிக வகை: 19. இளையரெதிர்கோடல்
பாவியை வெல்லும் பரிசில்லை யேமுகில் பாவையஞ்சீர் ஆவியை வெல்லக் கறுக்கின்ற போழ்தத்தி னம்பலத்துக் காவியை வெல்லும் மிடற்றோ னருளிற் கதுமெனப்போய் மேவிய மாநிதி யோடன்பர் தேர்வந்து மேவினதே. 349 கொளு வேந்தன் பொருளொடு விரும்பி வருமென ஏந்திழைப் பாங்கி இனிதியம் பியது. 18
பதிக வகை: 20. உண்மகிழ்ந்துரைத்தல்
யாழின் மொழிமங்கை பங்கன்சிற் றம்பலத் தானமைத்த ஊழின் வலியதொன் றென்னை ஒளிமே கலையுகளும் வீழும் வரிவளை மெல்லியல் ஆவிசெல் லாதமுன்னே சூழுந் தொகுநிதி யோடன்பர் தேர்வந்து தோன்றியதே. 350 கொளு செறிகழலவன் திருநகர்புகுதர எறிவேல் இளைஞர் எதிர்கொண்டது 19
மயின்மன்னு சாயலிம் மானைப் பிரிந்து பொருள்வளர்ப்பான் வெயின்மன்னு வெஞ்சுரஞ் சென்றதெல் லாம்விடை யோன்புலியூர்க் குயின்மன்னு சொல்லிமென் கொங்கையென் அங்கத் திடைகுளிப்பத் துயின்மன்னு பூவணை மேலணை யாமுன் துவளுற்றதே. 351 கொளு பெருநிதியோடு திருமனை புகுந்தவன் வளமனைக் கிழத்தியோ டுளமகிழ்ந் துரைத்தது. பொருள்வயிற்பிரிவு முற்றிற்று 20