பதிக வகை: 2. மகிழ்ந்துரைத்தல்
மணஞ்சிறப் புரைத்தல் வருமோர் ஒன்பதும் உயிர்சிவ மணம்பெற் றுண்மைஇன் பாகிய பரைகடந் தின்பப் பண்பாய் நிற்றல். 1. மணமுரசுகூறல் பிரசந் திகழும் வரைபுரை யானையின் பீடழித்தார் முரசந் திகழு முருகியம் நீங்கும் எவர்க்குமுன்னாம் அரசம் பலத்துநின் றாடும் பிரானருள் பெற்றவரிற் புரைசந்த மேகலை யாய்துயர் தீரப்புகுந்து நின்றே. 299 கொளு வரைவுதோன்ற மகிழ்வுறுதோழி நிரைவளைக்கு நின்றுரைத்தது. 1
பதிக வகை: 3. வழிபாடுகூறல்
இருந்துதி யென்வயிற் கொண்டவன் யான்எப் பொழுதுமுன்னும் மருந்து திசைமுகன் மாற்கரி யோன்தில்லை வாழ்த்தினர்போல் இருந்து திவண்டன வாலெரி முன்வலஞ் செய்திடப்பால் அருந்துதி காணு மளவுஞ் சிலம்பன் அருந்தழையே. 300 கொளு மன்னிய கடியிற் பொன்னறுங் கோதையை நன்னுதற் றோழி தன்னின் மகிழ்ந்தது. 2
பதிக வகை: 4. வாழ்க்கைநலங்கூறல்
சீரியல் ஆவியும் யாக்கையும் என்னச் சிறந்தமையாற் காரியல் வாட்கண்ணி எண்ணக லார்கம லங்கலந்த வேரியுஞ் சந்தும் வியல்தந் தெனக்கற்பின் நிற்பரன்னே காரியல் கண்டவர்வண் தில்லை வணங்குமெங் காவலரே. 301 கொளு மணமனை காண வந்தசெவி லிக்குத் துணைமலர்க் குழலி தோழி சொல்லியது. 3
பதிக வகை: 5. காதல் கட்டுரைத்தல்
தொண்டின மேவுஞ் சுடர்க்கழ லோன்தில்லைத் தொல்நகரிற் கண்டின மேவுமில் நீயவள் நின்கொழு நன்செழுமென் தண்டின மேவுதிண் தோளவன் யானவள் தற்பணிவோள் வண்டின மேவுங் குழலா ளயல்மன்னும் இவ்வயலே. 302 கொளு மணமனைச் சென்று மகிழ்தரு செவிலி அணிமனைக் கிழத்திக் கதன்சிறப் புரைத்தது. 4
பதிக வகை: 6. கற்பறிவித்தல்
பொட்டணி யான்நுதல் போயிறும் பொய்போலிடை யெனப்பூண் இட்டணி யான்தவி சின்மல ரன்றி மிதிப்பக்கொடான் மட்டணி வார்குழல் வையான் மலர்வண் டுறுதலஞ்சிக் கட்டணி வார்சடை யோன்தில்லை போலிதன் காதலனே. 303 கொளு சோதி வேலவன், காதல்கட்டு ரைத்தது. 5
பதிக வகை: 7. கற்புப்பயப்புரைத்தல்
தெய்வம் பணிகழ லோன்தில்லைச் சிற்றம் பலம்அனையாள் தெய்வம் பணிந்தறி யாள்என்று நின்று திறைவழங்காத் தெய்வம் பணியச்சென் றாலுமன் வந்தன்றிச் சேர்ந்தறியான் பெளவம் பணிமணி யன்னார் பரிசின்ன பான்மைகளே. 304 கொளு விற்பொலி நுதலி, கற்பறி வித்தது. 6
பதிக வகை: 8. மருவுதலுரைத்தல்
சிற்பந் திகழ்தரு திண்மதில் தில்லைச்சிற் றம்பலத்துப் பொற்பந்தி யன்ன சடையவன் பூவணம் அன்னபொன்னின் கற்பந்தி வாய்வட மீனுங் கடக்கும் படிகடந்தும் இற்பந்தி வாயன்றி வைகல்செல் லாதவ னீர்ங்களிறே. 305 கொளு கற்புப் பயந்த, அற்புத முரைத்தது. 7
பதிக வகை: 9. கலவியின்பங்கூறல்
மன்னவன் தெம்முனை மேற்செல்லு மாயினும் மாலரியே றன்னவன் தேர்புறத் தல்கல்செல் லாது வரகுணனாந் தென்னவ னேத்துசிற் றம்பலந் தான்மற்றைத் தேவர்க்கெல்லாம் முன்னவன் மூலவன் னாளும்மற் றோர்தெய்வ முன்னலளே. 306 கொளு இருவர் காதலும், மருவுத லுரைத்தது. 8
ஆனந்த வெள்ளத் தழுந்துமொர் ஆருயிர் ஈருருக்கொண் டானந்த வெள்ளத் திடைத்திளைத் தாலொக்கும் அம்பலஞ்சேர் ஆனந்த வெள்ளத் தறைகழ லோனருள் பெற்றவரின் ஆனந்த வெள்ளம்வற் றாதுமுற் றாதிவ் வணிநலமே. 307 கொளு நன்னுதல் மடந்தை தன்னலங் கண்டு மகிழ்தூங் குளத்தோ டிகுளை கூறியது. கற்பியல் முற்றிற்று 9