பதிக வகை: 2. வேறுபடுத்துக்கூறல்
மைவார் கருங்கண்ணி செங்கரங் கூப்பு மறந்துமற்றப் பொய்வா னவரிற் புகாதுதன் பொற்கழற் கேயடியேன் உய்வான் புகவொளிர் தில்லைநின் றோன்சடை மேலதொத்துச் செவ்வா னடைந்த பசுங்கதிர் வெள்ளைச் சிறுபிறைக்கே. 67 கொளு பிறைதொழு கென்று பேதை மாதரை நறுநுதற் பாங்கி நாண நாட்டியது. 1
பதிக வகை: 3. சுனையாடல்கூறி நகைத்தல்
அக்கின்ற வாமணி சேர்கண்டன் அம்பல வன்மலயத் திக்குன்ற வாணர் கொழுந்திச் செழுந்தண் புனமுடையாள் அக்குன்ற வாறமர்ந் தாடச்சென் றாளங்க மவ்வவையே ஒக்கின்ற வாரணங் கேயிணங் காகு முனக்கவளே. 68 கொளு வேய்வளைத் தோளியை வேறு பாடுகண் டாய்வளைத்தோழி யணங்கென்றது. 2
பதிக வகை: 4. புணர்ச்சியுரைத்தல்
செந்நிற மேனிவெண்ணீறணி வோன்தில்லை யம்பலம்போல் அந்நிற மேனிநின் கொங்கையி லங்கழி குங்குமமும் மைந்நிற வார்குழல் மாலையும் தாதும் வளாய்மதஞ்சேர் இந்நிற மும்பெறின் யானுங் குடைவ னிருஞ்சுனையே. 69 கொளு மாணநாட்டிய வார்குழற் பேதையை நாணநாட்டி நகைசெய்தது. 3
பதிக வகை: 5. மதியுடம்படுதல்
பருங்கண் கவர்கொலை வேழப் படையோன் படப்படர்தீத் தருங்கண் ணுதற்றில்லை யம்பலத் தோன்தடமால்வரை வாய்க் கருங்கண் சிவப்பக் கனிவாய் விளர்ப்பகண் ணாரளிபின் வருங்கண் மலைமலர் சூட்டவற் றோமற்றவ் வான்சுனையே. 70 கொளு மணக்குறி நோக்கிப், புணர்ச்சி யுரைத்தது. 4
காகத் திருகண்ணிற் கொன்றே மணிகலந் தாங்கிருவர் ஆகத்து ளோருயிர் கண்டனம் யாமின்றி யாவையுமாம் ஏகத்தொருவ னிரும்பொழி லம்பல வன்மலையில் தோகைக்குந் தோன்றற்கு மொன்றாய் வருமின்பத் துன்பங்களே. 71 கொளு அயில்வேற் கண்ணியொ டாடவன்றனக் குயிரொன்றென மயிலியற் றோழி மதியுடம் பட்டது. நாணநாட்டம் முற்றிற்று 5