துளசி Ocimum Sanctum, Linn.; Lamiaceae.
கடிய ஏற்றினர் கனலன மேனியர் அனலெழ ஓர்மூன்றும் இடிய மால்வரை கால்வளைத் தான்றன தடியவர் மேலுள்ள வெடிய வல்வினை வீட்டுவிப் பானுறை விற்குடி வீரட்டம் படிய தாகவே பரவுமின் பரவினாற் பற்றறும் அருநோயே.
. - திருஞானசம்பந்தர்.
தூங்கான் துளங்கான் துழாய்கொன்றை துன்னிய செஞ்சடைமேல் வாங்கா மதியமும் வாளர வுங்கங்கை தான்புனைந்தான் தேங்கார் திரிபுரந் தீயெழ வெய்து தியக்கறுத்து நீங்கான் உமையவ ளோடுநெய்த் தானத் திருந்தவனே.
- திருநாவுக்கரசர்.
திருவிற்குடி வீரட்டம் திருத்தலத்தில் தலமரமாக விளங்குவது துளசியாகும். துளவம், திருத்துழாய் என்ற பெயர்களாலும் இது குறிக்கப்பெறுகிறது. இதில் நல்துளசி, கருந்துளசி, செந்துளசி, முள்துளசி முதலிய பல இனங்கள் உள்ளன. கற்பூர மணம் பொருந்திய இலைகளையும் கதிராக வளர்ந்துள்ள பூங்கொத்துக்களையும் உடைய சிறுசெடி. தமிழகமெங்கும் தானே வளர்வது. இலை, பூ, விதை, வேர் ஆகியவை மருத்துவப் பயனுடையவை.
இலை கோழையகற்றும், நோய் நீக்கி உடல் தேற்றும், வியர்வை பெருக்கும், உடலுக்கும், உடலுக்கு வெப்பந்தந்து நாடிநடையை மிகுக்கும், முறைநோய் நீக்கும்.
< PREV < தில்லைமரம் |
Table of Content | > NEXT > தென்னைமரம் |