logo

|

Home >

thala-marangalin-sirappukal >

temple-trees-palm-tree

temple-trees-தலமரச் சிறப்புகள் பனை மரம் (Palm Tree)

தலமரச் சிறப்புகள்


பனை Borassus flabelliber, Linn.; Palmae.

ஏடுலா மலர்மிசை அயனெழில் மாலுமாய் 
நாடினார்க் கரியசீர் நாதனார் உறைவிடம் 
பாடெலாம் பெண்ணை யின்பழம்விழப் பைம்பொழில் 
மாடெலாம் மல்குசீர் மாமழ பாடியே.

                                                                                                  - திருஞானசம்பந்தர்.

திருப்பனந்தாள்,திருப்புறவார் பனங்காட்டூர்,திருப்பனையூர்,திருமழபாடி, திருவோத்தூர், திருவன்பார்த்தான் பனங்காட்டூர், திருவலம்புரம் , திருப்பாலைத்துறை, திருக்கன்றாப்பூர முதலிய சிவத் தலங்களில் பனை மரம் தலமரமாக விளங்குகின்றது. இவற்றுள் திருக்கன்றாப்பூர் தலத்தில் இம்மரம் தற்போதில்லை.  கைவடிவமான விசிறி போன்ற தனியிலைகளையும் புறவயிரமுடைய நெடிதுயர்ந்து கிளையிலாது வளரும் புல்லின மரமாகும். தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் தானே வளர்வது. குருத்து, ஓலை, பாளை, பூ, மது, கள், நுங்கு, பழம் ஆகியவை மருத்துவப் பயனுடையதாகும்.

ஓலை சதை நரம்புகளைச் சுருங்கச் செய்து குருதி சீழ்க்கசிவைத் தடுக்கும். நுங்கு சிறுசீர்ப் பெருக்கி அகவெப்பத்தைத் தணித்து உடலை உரமாக்கும்; மது சிறுநீர் பெருக்கி குளிர்ச்சி உண்டாக்கும். கள் நாடி நடையை மிகுத்து உடல் வெப்பம் தரும்; நீர்விடாய்த் தணிக்கும்.

திருமுறைகளில் பனை பற்றிய குறிப்பு :-

1.037 - திருப்பனையூர் - அரவச் சடைமேல்

2.053 - திருப்புறவார்பனங்காட்டூர் - விண்ண மர்ந்தன

3.062 - திருப்பனந்தாள் - கண்பொலி நெற்றியினான்

நினைப்பெனும் நெடுங்கிணற்றை 
 நின்றுநின் றயராதே
மனத்தினை வலித்தொழிந்தேன் 
 அவலம்வந் தடையாமைக்
கனைத்தெழு திரள்கங்கை 
 கமழ்சடைக் கரந்தான்றன்
பனைத்திரள் பாயருவிப் 
 பருப்பதம் பரவுதுமே.   8  

தண்மதியும் வெய்யரவுந்
 தாங்கினான் சடையினுடன்
ஒண்மதிய நுதலுமையோர்
 கூறுகந்தான் உறைகோயில்
பண்மொழியால் அவன்நாமம்
 பலவோதப் பசுங்கிள்ளை
வெண்முகில்சேர் கரும்பெணைமேல்
 வீற்றிருக்கும் வெண்காடே.  2.048.6 

கனைகொள் இருமல் சூலைநோய்
 கம்பதாளி குன்மமும்
இனையபலவும் மூப்பினோ
 டெய்திவந்து நலியாமுன்
பனைகளுலவு பைம்பொழிற்
 பழனஞ்சூழ்ந்த கோவலூர்
வினையை வென்ற வேடத்தான்
 வீரட்டானஞ் சேர்துமே.   4  

பனைபுரை கைம்மத யானை 
 யுரித்த பரஞ்சுடரே
கனைகடல் சூழ்தரு நாகைக்கா 
 ரோணத்தெங் கண்ணுதலே
மனைதுறந் தல்லுணா வல்லமண் 
 குண்டர் மயக்கநீக்கி
எனைநினைந் தாட்கொண்டாய்க் கென்னினி 
 யான்செயும் இச்சைகளே.   6  

செழுநீர்ப் புனற்கெடில வீரட்டமுந்
திரிபுராந் தகந்தென்னார் தேவீச்சரங்
கொழுநீர் புடைசுழிக்குங் கோட்டுக்காவுங் 
குடமூக்குங் கோகரணங் கோலக்காவும்
பழிநீர்மை யில்லாப் பனங்காட்டூரும்
பனையூர் பயற்றூர் பராய்த்துறையுங்
கழுநீர் மதுவிரியுங் காளிங்கமுங்
கணபதீச் சரத்தார்தங் காப்புக்களே.  6.007.5 

வீழி மிழலைவெண் காடு வேங்கூர்
வேதி குடிவிசய மங்கை வியலூர்
ஆழியகத் தியான்பள்ளி அண்ணா மலை
ஆலங் காடும் அரதைப் பெரும்
பாழி பழனம்பனந் தாள்பா தாளம்
பராய்த்துறை பைஞ்ஞீலி பனங்காட் டூர்தண்
காழி கடல்நாகைக் காரோ ணத்துங்
கயிலாய நாதனையே காண லாமே.  6.070.7 

மலையார்தம் மகளொடுமா தேவன் சேரும்
மறைக்காடு வண்பொழில்சூழ் தலைச்சங் காடு
தலையாலங் காடுதடங் கடல்சூ ழந்தண்
சாய்க்காடு தெள்ளுபுனற் கொள்ளிக் காடு
பலர்பாடும் பழையனூர் ஆலங் காடு
பனங்காடு பாவையர்கள் பாவம் நீங்க
விலையாடும் வளைதிளைக்கக் குடையும் பொய்கை
வெண்காடும் அடையவினை வேறா மன்றே.  6.071.6 

7.086 - திருவன்பார்த்தான் பனங்காட்டூர் - விடையின்மேல் வருவானை

காட்டூர்க் கடலே கடம்பூர் மலையே
 கானப் பேரூராய்
கோட்டூர்க் கொழுந்தே அழுந்தூ ரரசே
 கொழுநற் கொல்லேறே
பாட்டூர் பலரும் பரவப் படுவாய்
 பனங்காட் டூரானே
மாட்டூர் அறவா மறவா துன்னைப்
 பாடப் பணியாயே.  7.047.1 

கருங்கடக் களிற்றுரிக்
 கடவுள திடங்கயல்
நெருங்கிய நெடும்பெணை
 அடும்பொடு விரவிய
மருங்கொடு வலம்புரி
 சலஞ்சலம் மணம்புணர்ந்
திருங்கடல் அணைகரை
 இடம்வலம் புரமே.  7.072.6 

சடசட விடுபெணை
 பழம்படும் இடவகை
படவட கத்தொடு
 பலிகலந் துலவிய
கடைகடை பலிதிரி
 கபாலிதன் இடமது
இடிகரை மணலடை
 இடம்வலம் புரமே.  7.072.9 

மனையுள் இருந்தவர் மாதவர் ஒப்பர்
நினைவுள் இருந்தவர் நேசத்துள் நிற்பர்
பனையுள் இருந்த பருந்தது போல
நினையாத வர்க்கில்லை நின்இன்பந் தானே.  10.00.01.47

ஆறு தெருவில் அகப்பட்ட சந்தியில்
சாறுபடுவன நான்கு பனையுள
ஏறற்கு அரியதோர் ஏணியிட்டு அப்பனை
ஏறலுற் றேன்கடல் ஏழுங்கண் டேனே.  10.9.17.3 

கரம்ஊன்றிக் கண்ணிடுங்கிக் 
 கால்குலைய மற்றோர்
மரம்ஊன்றி வாய்குதட்டா 
 முன்னம் - புரம்மூன்றுந்
தீச்சரத்தாற் செற்றான் 
 திருப்பனந்தாள் தாடகைய
ஈச்சரத்தான் பாதமே ஏத்து.  11.006.21 

நிலாவு புகழ்த்திரு வோத்தூர் 
 திருஆமாத் தூர்நிறைநீர்
சுலாவு சடையோன் புலிவலம் 
 வில்வலம் கொச்சைதொண்டர்
குலாவு திருப்பனங் காடுநன் 
 மாகறல் கூற்றம்வந்தால்
அலாய்என் றடியார்க் கருள்புரி 
 ஏகம்பர் ஆலயமே.  11.030.64 

ஏய்ந்த கயிறுதன் கண்டத்திற் 
 பூட்டி எழிற்பனந்தாள்
சாய்ந்த சிவன்நிலைத் தான்என்பர் 
 காதலி தாலிகொடுத்
தாய்ந்தநற் குங்குலி யங்கொண் 
 டனற்புகை காலனைமுன்
காய்ந்த அரற்கிட்ட தென்கட 
 வூரில் கலயனையே.  11.034.13 

செங்கண் வெள் ஏற்றின் பாகன் 
 திருப் பனந் தாளில் மேவும்
அங்கணன் செம்மை கண்டு 
 கும்பிட அரசன் ஆர்வம்
பொங்கித் தன் வேழம் எல்லாம் 
 பூட்டவும் நேர் நில்லாமைக்
கங்குலும் பகலும் தீராக் கவலை 
 உற்று அழுங்கிச் செல்ல.  12.017.23 

மழுவுடைச் செய்ய கையர் 
 கோயில்கள் மருங்கு சென்று
தொழுது போந்து அன்பினோடும் 
 தொன்மறை நெறி வழாமை
முழுதுலகினையும் போற்ற மூன்று 
 எரிபுரப் போர் வாழும்
செழு மலர்ச் சோலை வேலித் 
 திருப் பனந் தாளில் சேர்ந்தார்.  12.017.25 

இன்னிசை வண் தமிழ் 
 பாடி ஏத்தியே 
நன்னெடும் பதி உளோர் 
 நயக்க வைகிய 
பின்னர் வெண்பிறை அணி 
 வேணிப் பிஞ்ஞகர் 
மன்னிய திருப்பனந்தாள் 
 வணங்கினார்.  12.034.249 

அரசிலியை அமர்ந்து அருளும் 
 அங்கண் அரசைப் பணிந்து
பரசி எழு திருப் 
 புறவார் பனங்காட்டூர் முதலாய 
விரை செய் மலர்க் கொன்றையினார் 
 மேவு பதி பல வணங்கித் 
திரை செய் நெடுங் கடல் 
 உடுத்த திருத்தில்லை நகர் அணைந்தார்.  12.034.1135 

செல்வம் மல்கு திருப்பனங் காட்டூரில் 
 செம் பொன் செழும் சுடரை
அல்லல் அறுக்கும் அரு மருந்தை 
 வணங்கி அன்பு பொழி கண்ணீர்
மல்க நின்று விடையின் மேல் 
 வருவான் எனும் வண்தமிழப் பதிகம்
நல்ல இசையின் உடன் பாடிப் 
 போந்து புறம்பு நண் ணுவார்.  12.035.194 

 

< PREV <
பன்னீர்மரம்
Table of Content> NEXT >
பாதிரிமரம்

 

Related Content

My duty is just to keep serving

Who is most beautiful ?

Worship however you can

திருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பனையூர் - அரவச் சடைமேல்