மகிழம் Mumusops elengi, Linn.; Sapotaceae.
பாட்டும் பாடிப் பரவித் திரிவார்
ஈட்டும் வினைகள் தீர்ப்பார் கோயில்
காட்டுங் கலமுந் திமிலுங் கரைக்கே
ஓட்டுந் திரைவாய் ஒற்றியூரே.
- சுந்தரர்.
.திருவொற்றியூர், திருவண்ணாமலை, திருஇராமனதீச்சரம், திருநீடூர், திருப்புனவாயில் ,திருக்காளத்தி முதலிய சிவத் தலங்களில் மகிழமரம் தலமரமாக உள்ளது. திருவண்ணாமலை, திருக்கண்ணமங்கை போன்ற திருத்தலங்களில் மகிழம்பூ இறைவழிபாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது. இம்மரம் அடர்த்தியான இலைகளையும் மனங்கவரும் இனிய மணமுடைய கொத்தான வெண்மலர்களையும் உடையது. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் தானே வளர்கிறது. வீடுகளிலும் வளர்க்கப்படுகிறது. இலை, பூ, காய், விதை, பட்டை ஆகியன மருத்துவக் குணமுடையது.
பூ தாது வெப்பகற்றும், காமம் பெருக்கும், விதை குளிர்ச்சியூட்டும், தாதுபலம் பெருக்கும், நஞ்சு நீக்கும்.
Name | Maulsari Tree |
Family | Sapotaceae |
Genus | Mimusops |
Species | Elengi |
Authority | L. |
Type | ALmost Evergreen |
Common Family | Mahua |
Native | India |
Size | Medium |
Wiki | wikipedia |
Links | flowersofindia ars-grin theplantlist |
Language Common | indian medlar, spanish cherry, bulletwood |
Description | Spanish cherry is a lovely green small tree of the Indian subcontinent. With its small shiny, thick, narrow, pointed leaves, straight trunk and spreading branches, it is a prized oranamental specimen because it provides a dense shade and during the months from March to July fills the night air with the delicious heady aroma of its tiny cream colored flowers. Flowers are small, star-shaped, yellowish white in color, with a crown rising from the center. Oval leaves, wavy at margin, about 5-16 cm and 3-7 cm wide. In the morning the fragrant flowers which so graciously scented their surroundings with their deep, rich, fragrance during the evening hours, fall to the ground. People love to collect them as they retain their odor for many days after they fall. They are offered in temples and shrines throughout the country. Appears in Indian mythology as Vakula - said to put forth blossoms when sprinkled with nectar from the mouth of lovely women. Fruits are eaten fresh. |
Medicinal uses | Various parts of the tree have medicinal properties. It is used in the treatment and maintenance of oral hygiene. Rinsing mouth with water solution made with bakul helps in strengthening the teeth. It also prevents bad breath and helps keep the gums healthy. |
Where | 12th main road, indiranagar, Bangalore doopannahalli arch, 100ft road, indiranagar, Bangalore |
Color | nut brown or greyish |
Texture | Scaly |
Info | Scaly and craked on ageing |
Color | White |
Info | fragrant |
Season | Apr-May |
Shape | berry |
Texture | Smooth |
Color | Green turning red-yellow |
Type | oval |
Size | 5-15 cm |
Maulsari Tree - Flower Bud
திருமுறைகளில் மகிழமரம் பற்றிய குறிப்பு :-
பந்தார்விரல் உமையாளொரு
பங்காகங்கை முடிமேல்
செந்தாமரை மலர்மல்கிய
செழுநீர்வயற் கரைமேல்
கொந்தார்மலர் புன்னைமகிழ்
குரவங்கமழ் குன்றில்
எந்தாயென இருந்தானிடம்
இடும்பாவன மிதுவே. 1.017.5
ஏறுமொன் றேறி நீறுமெய் பூசி
இளங்கிளை அரிவையொ டொருங்குட னாகிக்
கூறுமொன் றருளிக் கொன்றையந் தாருங்
குளிரிள மதியமுங் கூவிள மலரும்
நாறுமல் லிகையும் எருக்கொடு முருக்கும்
மகிழிள வன்னியும் இவைநலம் பகர
ஆறுமோர் சடைமேல் அணிந்தஎம் அடிகள்
அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே. 1.077.7
கானமுறு மான்மறியன் ஆனையுரி
போர்வைகன லாடல்புரிவோன்
ஏனஎயி றாமையிள நாகம்வளர்
மார்பினிமை யோர்தலைவனூர்
வானணவு சூதமிள வாழைமகிழ்
மாதவிப லாநிலவிவார்
தேனமுது வுண்டுவரி வண்டுமருள்
பாடிவரு தேவூரதுவே. 3.074.5
போழுமதி தாழுநதி பொங்கரவு
தங்குபுரி புன்சடையினன்
யாழின்மொழி மாழைவிழி யேழையிள
மாதினொ டிருந்தபதிதான்
வாழைவளர் ஞாழல்மகிழ் மன்னுபுனை
துன்னுபொழில் மாடுமடலார்
தாழைமுகிழ் வேழமிகு தந்தமென
உந்துதகு சண்பைநகரே. 3.075.3
தாங்கருங் காலந் தவிரவந் திருவர்
தம்மொடுங் கூடினா ரங்கம்
பாங்கினால் தரித்துப் பண்டுபோ லெல்லாம்
பண்ணிய கண்ணுதற் பரமர்
தேங்கொள்பூங் கமுகு தெங்கிளங் கொடிமாச்
செண்பகம் வண்பலா இலுப்பை
வேங்கைபூ மகிழால் வெயில்புகா வீழி
மிழலையா னெனவினை கெடுமே. 3.119.4
திருவமர் தாமரை சீர்வளர்
செங்கழு நீர்கொள்நெய்தல்
குருவமர் கோங்கங் குராமகிழ்
சண்பகங் கொன்றைவன்னி
மருவமர் நீள்கொடி மாட
மலிமறை யோர்கள்நல்லூர்
உருவமர் பாகத் துமையவள்
பாகனை உள்குதுமே. 4.097.10
பதியுஞ்சுற்றமும் பெற்றமக்களும்
பண்டையாரலர் பெண்டிரும்
நிதியிலிம்மனை வாழும்வாழ்க்கையும்
நினைப்பொழிமட நெஞ்சமே
மதியஞ்சேர்சடைக் கங்கையானிடம்
மகிழும்மல்லிகை செண்பகம்
புதியபூமலர்ந் தெல்லிநாறும்
புறம்பயந்தொழப் போதுமே. 7.035.2
பொன்னவிலுங் கொன்றையினாய்
போய்மகிழ்க்கீ ழிருவென்று
சொன்னஎனைக் காணாமே
சூளறவு மகிழ்க்கீழே
என்னவல்ல பெருமானே
இங்கிருந்தா யோவென்ன
ஒன்னலரைக் கண்டாற்போல்
உளோம்போகீர் என்றானே. 7.089.9
முன்னோன் மணிகண்ட மொத்தவன் அம்பலந் தம்முடிதாழ்த்
துன்னா தவர்வினை போற்பரந் தோங்கும் எனதுயிரே
அன்னாள் அரும்பெற லாவியன் னாய்அரு ளாசையினாற்
பொன்னார் மணிமகிழ்ப் பூவிழ யாம்விழை பொங்கிருளே. 8.கோவை.210
என்னை நினைந்தடிமை
கொண்டென் இடர்கெடுத்துத்
தன்னை நினையத்
தருகின்றான் - புன்னை
விரசுமகிழ் சோலை
வியன்நாரை யூர்முக்கண்
அரசுமகிழ் அத்திமுகத் தான். 11.032.1
சங்கரர் தாள் பணிந்து இருந்து
தமிழ் வேந்தர் மொழிகின்றார்
மங்கை அவள் தனைப் பிரியா
வகை சபதம் செய்வதனுக்(கு)
அங்கு அவளோடு யான் வந்தால்
அப்பொழுது கோயில் விடத்
தங்கும் இடம் திரு மகிழ்க் கீழ்க்
கொள வேண்டும் எனத்தாழ்ந்தார். 12.035.248
சங்கிலியார் தம் மருங்கு முன்பு
போல் சார்ந்து அருளி
நங்கை உனக்கு ஆரூரன் நயந்து
சூள் உறக் கடவன்
அங்கு நமக்கு எதிர் செய்யும்
அதற்கு நீ இசையாதே
கொங்கலர் பூ மகிழின் கீழ்க் கொள்க
எனக் குறித்து அருள. 12.035.251
மாதர் அவர் மகிழ்க் கீழே
அமையும் என மனமருள்வார்
ஈதலர் ஆகிலும் ஆகும் இவர்
சொன்ன படி மறுக்கில்
ஆதலினால் உடன் படவே அமையும்
எனத் துணிந்து ஆகில்
போதுவீர் என மகிழ்க்கீழ் அவர்
போதப் போய் அணைந்தார். 12.035.259
தாவாத பெருந் தவத்துச்
சங்கிலி யாரும் காண
மூவாத திரு மகிழை
முக்காலும் வலம் வந்து
மேவாது இங்குயான் அகலேன்
என நின்று விளம்பினார்
பூவார் தண் புனல் பொய்கை
முனைப் பாடிப் புரவலனார். 12.035.260