காட்டாத்தி Bauhinia tomentosa, Linn.; Caesalpiniaceae.
உள்ளுமாய் புறமுமாகி உருவுமாய் அருவுமாகி வெள்ளமாய்க் கரையுமாகி விரிகதிர் ஞாயிறாகிக் கள்ளமாய்க்கள் ளத்துள்ளார் கருத்துமாய் அருத்தமாகி அள்ளுவார்க்கள் ளல்செய்திட் டிருந்தஆப் பாடியாரே.
. - திருநாவுக்கரசர்.
இது தமிழகக் காடுகளில் தானே வளரும் ஒரு வகை மரம். இரண்டாகப் பிரிந்த இலைகளையும், மஞ்சள் நிறப்பூக்களையும், கருநிறக் கட்டைகளையும் உடைய மரமாகும். இதன் இலை, மொட்டு, பூ, பிஞ்சு, காய் ஆகிய அனைத்து உறுப்புகளும் மருத்துவப் பயனுடையவை.
சமூலம் சீதக்கழிச்சல் போக்கியாகவும், நுண்புழுக்கொல்லியாகவும் செயற்படும். பூ இரத்தம், சீழ்க் கசிவைத் தடுத்து தாது பலம் மிகுக்கும். காய் சிறுநீர்ப் பெருக்கும். விதை உடல்பலம் மிகுக்கும்.