logo

|

Home >

thala-marangalin-sirappukal >

temple-trees-champak-tree

temple-trees-தலமரச் சிறப்புகள் - சண்பக மரம் - Champak tree

சண்பக மரம் (Champak tree)

சண்பகம் Michelia champaka, Linn.; Magnoliaceae.

வருந்திவா னோர்கள்வந் தடையமா நஞ்சுதான் 
அருந்திஆர் அமுதவர்க் கருள்செய்தான் அமருமூர் 
செருந்திப்பூ மாதவிப் பந்தர்வண் செண்பகம்
திருந்திநீள் வளர்பொழில் தென்குடித் திட்டையே.                        - திருஞானசம்பந்தர்.

 

திருத்தென்குடித்திட்டை,  திருஇன்னம்பர்திருச்சிவபுரம்  ,திருநாகேசுவரம்திருப்பெண்ணாகடம் (திருத்தூங்கானைமாடம்), திருவைகல்மாடக்கோயில்திருஇராமனதீச்சரம் , திருநன்னிலம் (நன்னிலத்துப் பெருங்கோயில்) முதலிய திருத்தலங்களில் சண்பகம் தல விருட்சமாக உள்ளது. இவற்றுள் திருத்தென் குடித்திட்டை, திருச்சிவபுரம், திருவைகல் மாடக்கோயில், திருஇராமனதீச்சரம் தலங்களில் இம்மரம் தற்போதில்லை. மேற்குத் தொடர்ச்சிமலைக் காடுகளில் தானே வளருகின்றது. மையப்பகுதி மேல்நோக்கிக் குவிந்த இலைகளையும் நறுமணமுள்ள மஞ்சள் அல்லது வெண்மை நிறமுள்ள மலர்களையும் உடைய நெடிதுயர்ந்து வளரும் என்றுமே பசுமையாகக் காணப்படும் மரமாகும். மலருக்காக வீடுகளிலும், கோயில் நந்தவனங்களிலும் வளர்க்கப்படுகிறது. இதன் இலை, பூ, விதை, வேர், பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையதாகும்.

 

நோய் நீக்கி உடல் தேற்றுதல், முறை நோய் தீர்த்தல், உள்ளுறுப்பு அழற்சியைத் தணித்தல், வீக்கம் குறைத்தல், பசி, மாதவிடாய் ஆகியவற்றைத் தூண்டுதல் ஆகிய மருத்துவக் குணமுடையது.

Magnolia x alba, (DC.) Figlar <=> Champak Tree

 

Canopy

 

Champak Tree

NameChampak Tree
FamilyMagnoliaceae
GenusMagnolia
Speciesx alba
Authority(DC.) Figlar
TypeSemi Evergreen
Common FamilyMagnolia
NativeIndia, Indonesia
SizeMedium

 

Reference

 

Wikiwikipedia
Linksflowersofindia
ars-grin
theplantlist
Language CommonJoy Perfume Tree
Language HindiChampa
Language KannadaSamipge
Language TamilSambagan
DescriptionChampa is native to Indonesia, India and other neighbouring areas. It occurs naturally in the eastern Himalayan region. It is a large evergreen tree with a long straight bole of 18-21 m with a close tapering crown composed of ascending branches. The most interesting part of the tree are its flowers which are not very showy with few narrow yellowish white petals, but have an extremely heady fragrance. This fragrance has made Champa flowers very popular and they have been part of the culture in India from time immemorial. They are used in religeous offering in various parts of India. On a warm humid night, the scents can easily be enjoyed several hundred feet away. Champa flowers are used to make the world's most expensive perfume 'Joy' in America.
Wherecross roads, cambridge road, ulsoor, Bangalore

 

Bark

 

Champak Tree Bark

ColorAshy Grey
Texturenot rough
InfoShallowly fissured, prominent lenticels

 

Flowers

 

Champak Tree Flower

ColorYellowish White
SeasonMar-May

 

Leaves

 

Champak Tree Leaf

Typeoval
Size15-20 cm
TextureSmooth

 

Picture Carousel (32)

 

Champak Tree Flower Bud

Champak Tree - Flower Bud 1

திருமுறைகளில் சண்பக மரம் பற்றிய குறிப்பு :-

கஞ்சத்தேன் உண்டிட்டே களித்துவண்டு சண்பகக் 
 கானேதேனே போராருங் கழுமல நகரிறையைத்
தஞ்சைச்சார் சண்பைக்கோன் சமைத்தநற் கலைத்துறை 
 தாமேபோல்வார் தேனேரார் தமிழ்விர கனமொழிகள்
எஞ்சத்தேய் வின்றிக்கே இமைத்திசைத் தமைத்தகொண் 
 டேழேயேழே நாலேமூன் றியலிசை இசையியல்பா
வஞ்சத்தேய் வின்றிக்கே மனங்கொளப் பயிற்றுவோர் 
 மார்பேசேர்வாள் வானோர்சீர் மதிநுதல் மடவரலே.

அரவின் அணையானும் நான்முகனுங்
 காண்பரிய அண்ணல் சென்னி
விரவி மதியணிந்த விகிர்தர்க்
 கிடம்போலும் விரிபூஞ்சாரல்
மரவம் இருகரையும் மல்லிகையுஞ்
 சண்பகமும் மலர்ந்துமாந்தக்
குரவம் முறுவல்செய்யுங் குன்றிடஞ்சூழ்
 தண்சாரல் குறும்பலாவே.   9  

இருக்குநீள் வரைபற்
 றியடர்த் தன்றெடுத்த
அரக்கன் ஆகம்நெரித்
 தருள்செய் தவன்கோயில்
மருக்குலா வியமல்
 லிகைசண் பகம்வண்பூந்
தருக்குலா வியதண்
 பொழில்நீடு சாய்க்காடே.   8  

ஏலமார் தருகுழல்
 ஏழையோ டெழில்பெறுங்
கோலமார் தருவிடைக்
 குழகனார் உறைவிடஞ்
சாலமா தவிகளுஞ்
 சந்தனஞ் சண்பகஞ்
சீலமார் ஏடகஞ்
 சேர்தலாஞ் செல்வமே.   4  

உரிந்துயர் உருவில் உடைதவிர்ந் தாரும்                         
 அத்துகில் போர்த்துழல் வாருந்                        
தெரிந்துபுன் மொழிகள் செப்பின கேளாச்                         
 செம்மையார் நன்மையால் உறைவாங்                        
குருந்துயர் கோங்கு கொடிவிடு முல்லை                         
 மல்லிகை சண்பகம் வேங்கை                        
கருந்தடங் கண்ணின் மங்கைமார் கொய்யுங்                         
 கழுமல நகரென லாமே.   10  

ஆலமா மரவமோ
 டமைந்தசீர்ச் சந்தனஞ்
சாலமா பீலியுஞ்
 சண்பக முந்தியே
காலமார் முகலிவந்
 தணைதரு காளத்தி
நீலமார் கண்டனை
 நினையுமா நினைவதே.   2  

செல்வம் மல்கு செண்பகம் வேங்கை சென்றேறிக்
கொல்லை முல்லை மெல்லரும்பீனுங் குற்றாலம்
வில்லின் ஒல்க மும்மதி லெய்து வினைபோக
நல்கு நம்பான் நன்னகர் போலுந் நமரங்காள்.   3  

மண்புன லனலொடு மாருதமும்
விண்புனை மருவிய விகிர்தன்நகர்
பண்புனை குரல்வழி வண்டுகெண்டிச்
செண்பக மலர்பொழிற் சிவபுரமே.   4  

பின்தாழ் சடைமேல் நகுவெண் 
 டலையர் பிரமன் தலையேந்தி
மின்தா ழுருவிற் சங்கார் 
 குழைதான் மிளிரும் ஒருகாதர்
பொன்தாழ் கொன்றை செருந்தி 
 புன்னை பொருந்து செண்பகம்
சென்றார் செல்வத் திருவார் 
 நறையூர்ச் சித்தீச் சரத்தாரே.   4  

பண்பழனக் கோட்டகத்து 
 வாட்டமிலாச் செஞ்சூட்டுக்
கண்பகத்தின் வாரணமே 
 கடுவினையேன் உறுபயலை
செண்பகஞ்சேர் பொழில்புடைசூழ் 
 திருத்தோணி புரத்துறையும்
பண்பனுக்கென் பரிசுரைத்தால் 
 பழியாமோ மொழியாயே.   3  

சங்குலாவு திங்கள்சூடி
 தன்னையுன்னு வார்மனத்
தங்குலாவி நின்றஎங்க
 ளாதிதேவன் மன்னுமூர்
தெங்குலாவு சோலைநீடு
 தேனுலாவு செண்பகம்
அங்குலாவி யண்டநாறும்
 அந்தணாரூ ரென்பதே.   5  

கோங்கு செண்பகங் குருந்தொடு
 பாதிரி குரவிடை மலருந்தி
ஓங்கி நீர்வரு காவிரி
 வடகரை மாந்துறை யுறைவானைப்
பாங்கி னாலிடுந் தூபமுந்
 தீபமும் பாட்டவி மலர்சேர்த்தித்
தாங்கு வாரவர் நாமங்கள்
 நாவினில் தலைப்படுந் தவத்தோரே.   5  

இருந்தவன்கி டந்தவன்னி
 டந்துவிண் பறந்துமெய்
வருந்தியும் அளப்பொணாத
 வானவன் மகிழ்ந்தவூர்
செருந்திஞாழல் புன்னைவன்னி
 செண்பகஞ் செழுங்குரா
அரும்புசோலை வாசநாறும்
 அந்தணாரூ ரென்பதே.   9  

செம்பொ னார்தரு வேங்கையும்
 ஞாழலுஞ் செருந்திசெண் பகம்ஆனைக்
கொம்பும் ஆரமும் மாதவி
 சுரபுனை குருந்தலர் பரந்துந்தி
அம்பொன் நேர்வரு காவிரி
 வடகரை மாந்துறை யுறைகின்ற
எம்பி ரானிமை யோர்தொழு
 பைங்கழல் ஏத்துதல் செய்வோமே.   1  

பரிந்துநன் மனத்தால் வழிபடும் மாணி
 தன்னுயிர் மேல்வருங் கூற்றைத்
திரிந்திடா வண்ணம் உதைத்தவற் கருளுஞ்
 செம்மையார் நம்மையா ளுடையார்
விரிந்துயர் மௌவல் மாதவி புன்னை
 வேங்கைவண் செருந்திசெண் பகத்தின்
குருந்தொடு முல்லை கொடிவிடும் பொழில்சூழ்
 கோணமா மலையமர்ந் தாரே.   6  

தாங்கருங் காலந் தவிரவந் திருவர் 
 தம்மொடுங் கூடினா ரங்கம் 
பாங்கினால் தரித்துப் பண்டுபோ லெல்லாம் 
 பண்ணிய கண்ணுதற் பரமர்
தேங்கொள்பூங் கமுகு தெங்கிளங் கொடிமாச் 
 செண்பகம் வண்பலா இலுப்பை
வேங்கைபூ மகிழால் வெயில்புகா வீழி 
 மிழலையா னெனவினை கெடுமே.   4  

வருந்திவா னோர்கள்வந்
 தடையமா நஞ்சுதான்
அருந்திஆர் அமுதவர்க்
 கருள்செய்தான் அமருமூர்
செருந்திபூ மாதவிப்
 பந்தர்வண் செண்பகந்
திருந்துநீள் வளர்பொழில்
 தென்குடித் திட்டையே.   5  


திருவமர் தாமரை சீர்வளர் 
 செங்கழு நீர்கொள்நெய்தல்
குருவமர் கோங்கங் குராமகிழ் 
 சண்பகங் கொன்றைவன்னி
மருவமர் நீள்கொடி மாட 
 மலிமறை யோர்கள்நல்லூர்
உருவமர் பாகத் துமையவள் 
 பாகனை உள்குதுமே.   10  

எண்பதும் பத்தும் ஆறு 
 மென்னுளே இருந்து மன்னிக்
கண்பழக் கொன்று மின்றிக் 
 கலக்கநான் அலக்க ழிந்தேன்
செண்பகந் திகழும் புன்னை 
 செழுந்திரட் குரவம் வேங்கை
நண்புசெய் சோலை சூழ்ந்த 
 நனிபள்ளி அடிக ளாரே.   3  


குரவ னார்கொடு
 கொட்டியுங் கொக்கரை
விரவி னார்பண்
 கெழுமிய வீணையும்
மருவு நாண்மலர்
 மல்லிகை செண்பகம்
பரவு நீர்ப்பொன்னிப்
 பாலைத் துறையரே.   7  

நாறு மல்லிகை
 கூவிளஞ் செண்பகம்
வேறு வேறு
 விரித்த சடையிடை
ஆறு கொண்டுகந்
 தான்றிரு மீயச்சூர்
ஏறு கொண்டுகந்
 தாரிளங் கோயிலே.   4  


நாறுசெங்கழு நீர்மலர்
 நல்லமல்லிகை சண்பகத்தொடு
சேறுசெய் கழனிப்
 பழனத் திருப்பனையூர்
நீறுபூசிநெய் யாடிதன்னை
 நினைப்பவர்தம் மனத்தராகிநின்
றாறு சூடவல்லார்
 அவரே அழகியரே.      2  

வரியர நாணதாக 
 மாமேரு வில்லதாக 
அரியன முப்புரங்கள் 
 அவைஆரழல் ஊட்டல்என்னே 
விரிதரு மல்லிகையும் 
 மலர்ச்சண்பக மும்மளைந்து 
திரிதரு வண்டுபண்செய் 
 திருநாகேச் சரத்தானே.   8  

சிலைத்துநோக்கும்வெள் ளேறுசெந்தழல்
 வாயபாம்பது மூசெனும்
பலிக்குநீர்வரும் போதுநுங்கையிற்
 பாம்புவேண்டா பிரானிரே
மலைத்தசந்தொடு வேங்கைகோங்கமும்
 மன்னுகாரகில் சண்பகம்
அலைக்கும்பைம்புனல் சூழ்பைஞ்ஞீலியில்
 ஆரணீய விடங்கரே.   2  

குளிர்தரு திங்கள்கங் கைகுர
 வோடரக் கூவிளமும்
மிளிர்தரு புன்சடை மேலுடை
 யான்விடை யான்விரைசேர்
தளிர்தரு கோங்குவேங் கைதட
 மாதவி சண்பகமும்
நளிர்தரு நன்னிலத் துப்பெருங்
 கோயில் நயந்தவனே.   8  

அரும்பார்ந் தனமல்
 லிகைசண் பகஞ்சாடிச் 
சுரும்பாரக் கொணர்ந்தெற்றி
 யோர்பெண்ணை வடபால் 
கரும்பார் மொழிக்கன்
 னியர்ஆடுந் துறையூர் 
விரும்பா உனைவேண்டிக்
 கொள்வேன் தவநெறியே.   4  

விண்பணிந் தேத்தும் வேதியா மாதர் 
 வெருவிட வேழமன் றுரித்தாய் 
செண்பகச் சோலை சூழ்திரு முல்லை 
 வாயிலாய் தேவர்தம் மரசே 
தண்பொழில் ஒற்றி மாநகர் உடையாய் 
 சங்கிலிக் காஎன்கண் கொண்ட 
பண்பநின் னடியேன் படுதுயர் களையாய் 
 பாசுப தாபரஞ் சுடரே.   3  


பதியுஞ்சுற்றமும் பெற்றமக்களும்
 பண்டையாரலர் பெண்டிரும்
நிதியிலிம்மனை வாழும்வாழ்க்கையும்
 நினைப்பொழிமட நெஞ்சமே
மதியஞ்சேர்சடைக் கங்கையானிடம்
 மகிழும்மல்லிகை செண்பகம்
புதியபூமலர்ந் தெல்லிநாறும்
 புறம்பயந்தொழப் போதுமே.   2  

பெற்றிமையொன் றறியாத தக்கனது வேள்விப்
 பெருந்தேவர் சிரந்தோள்பல் கரங்கண்பீ டழியச்
செற்றுமதிக் கலைசிதையத் திருவிரலாற் றேய்வித்
 தருள்பெருகு சிவபெருமான் சேர்தருமூர் வினவில்
தெற்றுகொடி முல்லையொடு மல்லிகைசெண் பகமுந்
 திரைபொருது வருபுனல்சேர் அரிசிலின்றென் கரைமேல் 
கற்றின(ம்)நன் கரும்பின்முளை கறிகற்கக் கறவை
 கமழ்கழுநீர் கவர்கழனிக் கலயநல்லூர் காணே.   6  


சரளமந் தார சண்பக வகுள
 சந்தன நந்தன வனத்தின்
இருள்விரி மொழுப்பின் இஞ்சிசூழ் தஞ்சை
 இராசரா சேச்சரத் திவரை
அருமருந்து அருந்தி அல்லல்தீர் கருவூர்
 அறைந்தசொல் மாலைஈ ரைந்தின்
பொருள்மருந்(து) உடையோர் சிவபதம் என்னும்
 பொன்நெடுங் குன்றுடை யோரே.

கண்பனி அரும்பக் கைகள் மொட்டித்(து)என்
 களைகணே! ஓலம்என்(று) ஓலிட்டு
என்பெலாம் உருகும் அன்பர்தம் கூட்டத்(து)
 என்னையும் புணர்ப்பவன் கோயில்
பண்பல தெளிதேன் பாடிநின் றாடப்
 பனிமலர்ச் சோலைசூழ் மொழுப்பில்
செண்பகம் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
 திருவளர் திருச்சிற்றம் பலமே.   5  

வாரணி நறுமலர் வண்டு கெண்டு
  பஞ்சமம் செண்பக மாலைமாலை
வாரணி வனமுலை மெலியும் வண்ணம்
  வந்து வந்திவைநம்மை மயக்குமாலோ
சீரணி மணிதிகழ் மாடம் ஓங்கு
  தில்லையம்பலத்(து) எங்கள் செல்வன் வாரான்
ஆரெனை அருள்புரிந்(து) அஞ்சல் என்பார்
  ஆவியின் பரம்என்றன் ஆதரவே.   1  

அம்புயம் நீலம் கழுநீர் அணிநெய்தல்
வம்பவிழ் பூகமும் மாதவி மந்தாரம்
தும்பை வகுளம் சுரபுன்னை மல்லிகை
செண்பகம் பாதிரி செவ்வந்தி சாத்திடே.   1  


மேதகுந் திகழ்பூக 
 நாகசண் பகசூத
வேரிவண் டறைசோலை 
 ஆலைதுன் றியகாழி
நாதன்அந் தணர்கோனென் 
 ஆனைவண் புகழாளி
ஞானசுந் தரன்மேவு 
 தார்நினைந் தயர்வேனை
நீதியன்றன பேசும் 
 யாயுமிந் துவும்வாசம்
நீடுதென் றலும்வீணை 
 ஓசையும் கரைசேர
மோதுதெண் திரைசேவல் 
 சேரும்அன் றிலும்வேயும்
மூடுதண் பனிவாடை 
 கூடிவன் பகையாமே.   19  

பெருந்தண் சண்பகம் 
 செரீஇக் கருந்தகட்டு
உளைப்பூ மருதின் 
 ஒள்ளிணர் அட்டிக்

கூந்தற் கமுகும் 
 குளிர்பாட லத்தெழிலும்
வாய்ந்தசீர் சண்பகத்தின் 
 வண்காடும் - ஏந்தெழிலார்.   20  

சந்தன சரள 
 சண்பக வகுள
நந்தன வனத்திடை 
 ஞாயிறு வழங்காது 13  

ஆறதே றுஞ்சடை யான்அருள் 
 மேவ அவனியர்க்கு
வீறதே றுந்தமி ழால்வழி 
 கண்டவன் மென்கிளிமாந்
தேறல்கோ தித்தூறு சண்பகம் 
 தாவிச் செழுங்கமுகின்
தாறதே றும்பொழிற் சண்பையர் 
 காவலன் சம்பந்தனே.   5  

கேதகையும் சண்பகமும் 
 நேர்கிடத்திக் கீழ்த்தாழ்ந்த
மாதவியின் போதை 
 மருங்கணைத்துக் - கோதில்.   90  

கெழு மலர் மாதவி புன்னை 
 கிளைஞாழல் தளை அவிழும்
கொழு முகைய சண்பகங்கள் குளிர் 
 செருந்தி வளர் கைதை
முழு மணமே முந் நீரும் 
 கமழ மலர் முருகு உயிர்க்கும்
செழு நிலவின் துகள் அனைய 
 மணல் பரப்பும் திருப்பரப்பு.   4  

வன்னி கொன்றை வழை சண்பகம் ஆரம் 
 மலர்ப் பலாசொடு செருந்தி மந்தாரம் 
கன்னி காரங் குரவங் கமழ் புன்னை 
 கற்பு பாடலம் கூவிளம் ஓங்கித் 
துன்னு சாதி மரு மாலதி மௌவல் 
 துதைந்த நந்திகரம் வீரம் மிடைந்த 
பன் மலர்ப் புனித நந்த வனங்கள் 
 பணிந்து சென்றனன் மணங்கமழ் தாரான்.   94  

சூத பாடலங்கள் எங்கும்சூழ்
 வழை ஞாழல் எங்கும்
சாதி மாலதிகள் எங்கும்
 தண்தளிர் நறவம் எங்கும்
மாதவி சரளம் எங்கும்
 வகுள சண்பகங்கள் எங்கும்
போதவிழ் கைதை எங்கும்
 பூக புன்னாகம் எங்கும்.   29  
 

< PREV <
கோரை
Table of Content> NEXT >
சதுரக்கள்ளி

 

Related Content