தென்பாண்டி நாட்டில் அதுவும் குறிப்பாக தாமிரபரணி நதிக்கரையின் இரு ஓரங்களிலும் 274 சிவாலயங்கள் சிறப்புற்று விளங்கி இருந்ததாக பல புராணங்கள் கூறுகின்றன. அத்தகைய புராணங்களில், தாமிரபரணி மகாத்மியம், நவசமுத்திர மகாத்மியம், சிவசைல மகாத்மியம், திருப்புடை மருதூர் மகாத்மியம், திருக்குற்றால தலபுராணம், தென்காசி தலபுராணம், கருவை தலபுராணம், திருச்செந்தூர் புராணம் போன்ற நூல்களில் தென்பாண்டி நாட்டில் உள்ள சிவாலயங்கள் திரி (3), பஞ்ச (5), அஷ்ட (8), நவ (9), தச (10) போன்ற எண்ணிக்கையில் பிரித்து நம்முன்னோர்கள் வழிபட்டுள்ளனர்.
சிவ கைலாயங்கள் (ஆதி கைலாசம்) பிரம்மதேசம் - கைலாசநாதர் திருக்கோயில் அரியநாயகிபுரம் - கைலாசநாதர் திருக்கோயில் திருநெல்வேலி (தென்கைலாயம் - தென்கைலாசநாதர் (நெல்லையப்பர்) திருக்கோயில் கீழநத்தம் (மேலூர்) - கைலாசநாதர் திருக்கோயில் முறப்பநாடு - கைலாசநாதர் திருக்கோயில் ஸ்ரீவைகுண்டம் - கைலாசநாதர் திருக்கோயில் தென்திருப்பேரை - கைலாசநாதர் திருக்கோயில் சேர்ந்தபூமங்கலம் - கைலாசநாதர் திருக்கோயில் கங்கைகொண்டான் - கைலாசநாதர் திருக்கோயில்
தேர், தெப்பம், கொடிமரம், பலி பீடம், பரிவார தெய்வங்கள், தேவர்கள், அப்சரஸ்கன்னிகள், நடராஜரின் திருநடனம், மூர்த்தி, தலம், தீர்த்தம், இவைகள் அனைத்தும் பூர்ணமாக இடம் பெற்றிருக்கும். சிவமே தானாகி ஞானோதயம் அளித்த தலங்கள் இவை.
இது தவிர தென் காளஹஸ்தி என்று போற்றப்படும் கரிசூழ்ந்தமங்கலம் காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயிலை சுற்றி அஷ்டலிங தலங்கள் உள்ளதாக திருநெல்வேலி தல புராணம் கூறுகிறது. துர்வாச முனிவர் வழிபட்ட இந்த கோயில்கள் பற்றி ஆய்வுகள் நடந்து வருகின்றன.
State : Tamil Nadu
District : Thirunelveli