logo

|

Home >

temples-special >

thenpandi-natil-thasaratharaman-vazhipatta-panjcha-lingam

தென்பாண்டி நாட்டில் தசரதராமன் வழிபட்டு பேறுபெற்ற பஞ்சலிங்க தலங்கள்

 

தென்பாண்டி நாட்டில் அதுவும் குறிப்பாக தாமிரபரணி நதிக்கரையின் இரு ஓரங்களிலும் 274 சிவாலயங்கள் சிறப்புற்று விளங்கி இருந்ததாக பல புராணங்கள் கூறுகின்றன. அத்தகைய புராணங்களில், தாமிரபரணி மகாத்மியம், நவசமுத்திர மகாத்மியம், சிவசைல மகாத்மியம், திருப்புடை மருதூர் மகாத்மியம், திருக்குற்றால தலபுராணம், தென்காசி தலபுராணம், கருவை தலபுராணம், திருச்செந்தூர் புராணம் போன்ற நூல்களில் தென்பாண்டி நாட்டில் உள்ள சிவாலயங்கள் திரி (3), பஞ்ச (5), அஷ்ட (8), நவ (9), தச (10) போன்ற எண்ணிக்கையில் பிரித்து நம்முன்னோர்கள் வழிபட்டுள்ளனர்.

 
			இராமர் வழிபட்ட பஞ்சலிங்க தலங்கள் 
 
			களக்காடு 	- 	சத்யவாகீசர்  
			பத்தை		-	குலசேகரநாதம்  
			பதுமனேரி 	- 	நெல்லையப்பர்  
			தேவநல்லூர் 	-	சோமநாதம்  
			சிங்கிகுளம் 	- 	கைலாசநாதம்  
 
		இவை ஐந்தும் பஞ்சலிங்க தலங்கள், பஞ்சகிரி தலங்கள், பஞ்சயக்ஞ தலங்கள் ஆகும். 
 

இது தவிர தென் காளஹஸ்தி என்று போற்றப்படும் கரிசூழ்ந்தமங்கலம் காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயிலை சுற்றி அஷ்டலிங தலங்கள் உள்ளதாக திருநெல்வேலி தல புராணம் கூறுகிறது. துர்வாச முனிவர் வழிபட்ட இந்த கோயில்கள் பற்றி ஆய்வுகள் நடந்து வருகின்றன.

Location:

State : Tamil Nadu 
District : Thirunelveli 

 

 

Related Content

Ramanujar - Reformer

How I am, so is my Lord

Description of sankaranArAyanar

Enslaves and Dances with me !

Hindu Spiritual Interview (Devotional Discussion)