tiruvarutpA of rAmalinga aTikaL
|
1. அன்பு மாலை | 31 | 3029 - 3059 |
2. அருட்பிரகாச மாலை | 100 | 3060 - 3159 |
3. பிரசாத மாலை | 10 | 3160 - 3169 |
4. ஆனந்த மாலை | 10 | 3170 - 3179 |
5. பக்தி மாலை | 10 | 3180 - 3189 |
6. சௌந்தர மாலை | 12 | 3190 - 3201 |
7. அதிசய மாலை | 14 | 3202 - 3215 |
8. அபராத மன்னிப்பு மாலை | 10 | 3216 - 3225 |
9. ஆளுடைய பிள்ளையார் அருண்மாலை | 11 | 3226 - 3236 |
10. ஆளுடைய அரசுகள் அருண்மாலை | 10 | 3237 - 3246 |
11. ஆளுடைய நம்பிகள் அருண்மாலை | 10 | 3247 - 3256 |
12. ஆளுடைய அடிகள் அருண்மாலை | 10 | 3257 - 3266 |
1. அன்பு மாலைஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3029 | அற்புதப்பொன் அம்பலத்தே ஆடுகின்ற அரசே
ஆரமுதே அடியேன்றன் அன்பேஎன் அறிவே கண்ணுதலே ஆனந்தக் களிப்பேமெய்க் கதியே வேதஆ கமமுடியின் விளங்கும்ஒளி விளக்கே பொருத்தமும் நின்திருவருளின் பொருத்தமது தானே. |
1 |
3030 | நிறைஅணிந்த சிவகாமி நேயநிறை ஒளியே
நித்தபரி பூரணமாம் சுத்தசிவ வெளியே கற்கண்டே கனியேஎன் கண்ணேகண் மணியே பெரியவரெல் லாம்வணங்கும் பெரியபரம் பொருளே குற்றமெலாங் குணமாகக் கொள்வதுநின் குணமே. |
2 |
3031 | ஆண்பனைபெண் பனையாக்கி அங்கமதங் கனையாய்
ஆக்கிஅருண் மணத்தில்ஒளி அனைவரையும் ஆக்கும் வருத்தமெலாந் தவிர்த்தெனக்கு வாழ்வளித்த வாழ்வே நாயடியேன் உள்ளகத்து நண்ணியநா யகனே விருப்பமெலாம் நின்அருளின் விருப்பம்அன்றி இலையே. |
3 |
3032 | சித்தமனே கம்புரிந்து திரிந்துழலுஞ் சிறியேன்
செய்வகைஒன் றறியாது திகைக்கின்றேன் அந்தோ உன்னாணை உன்னாணை உண்மைஇது கண்டாய் இரங்கிஅருள் செயல்வேண்டும் இதுதருணம் எந்தாய் துயர்தவிப்பான் மணிமன்றில் துலங்குநடத் தரசே. |
4 |
3033 | துப்பாடு திருமேனிச் சோதிமணிச் சுடரே
துரியவெளிக் குள்ளிருந்த சுத்தசிவ வெளியே அருட்கடலே குருவேஎன் ஆண்டவனே அரசே இரங்கிஅருள் செயல்வேண்டும் இதுதருணங் கண்டாய் தனிமன்றுள் நடம்புரியுந் தாண்மலர்எந் தாயே. |
5 |
3034 | கண்ணோங்கு நுதற்கரும்பே கரும்பினிறை அமுதே
கற்கண்டே சர்க்கரையே கதலிநறுங் கனியே விடையவனே சடையவனே வேதமுடிப் பொருளே பெருமானை ஒருகரங்கொள் பெரியபெரு மானே என்னைவிடத் துணியேல்நின் இன்னருள்தந் தருளே. |
6 |
3035 | திருநெறிசேர் மெய்அடியர் திறன்ஒன்றும் அறியேன்
செறிவறியேன் அறிவறியேன் செய்வகையை அறியேன் கற்கின்றேன் சாகாத கல்விநிலை காணேன் பிதற்றுகின்றேன் அதற்குரிய பெற்றியிலேன் அந்தோ மன்றுடைய பெருவாழ்வே வழங்குகநின் அருளே. |
7 |
3036 | குன்றாத குணக்குன்றே கோவாத மணியே
குருவேஎன் குடிமுழுதாட் கொண்டசிவக் கொழுந்தே எழுமையும்என் றனை ஆண்ட என்உயிரின் துணையே பொய்யடியேன் பிழைகளெலாம் பொறுத்தபெருந் தகையே ஆசையெலாம் நின்னடிமேல் அன்றிஒன்றும் இலையே. |
8 |
3037 | பூணாத பூண்களெலாம் பூண்டபரம் பொருளே
பொய்யடியேன் பிழைமுழுதும் பொறுத்தருளி என்றும் கருணைநடம் புரிகின்ற கருணையைஎன் புகல்வேன் மனமுருகி இருகண்ணீர் வடிக்கின்றேன் கண்டாய் எனஅறிந்தேன் அறிந்தபின்னர் இதயமலர்ந் தேனே. |
9 |
3038 | அந்தோஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
அறிவறியாச் சிறியேனை அறிவறியச் செய்தே இதுகாட்டி அதுகாட்டி என்நிலையுங் காட்டிச் சாகாத நிலைகாட்டிச் சகசநிலை காட்டி மகிழ்வித்தாய் நின்அருளின் வண்மைஎவர்க் குளதே. |
10 |
3039 | அன்பர்உளக் கோயிலிலே அமர்ந்தருளும் பதியே
அம்பலத்தில் ஆடுகின்ற ஆனந்த நிதியே மறைமுடிஆ கமமுடியின் வயங்குநிறை மதியே டின்பநிலை தனைஅளித்த என்னறிவுக் கறிவே முறைமைநின தருள்நெறிக்கு மொழிதல்அறிந் திலனே. |
11 |
3040 | பால்காட்டும் ஒளிவண்ணப் படிகமணி மலையே
பத்திக்கு நிலைதனிலே தித்திக்கும் பழமே சிவகாம வல்லிமகிழ் திருநடநா யகனே வழிகாட்டி வழங்குகின்ற வகையதனைக் காட்டிக் காட்டியநின் கருணைக்குக் கைம்மாறொன் றிலனே. |
12 |
3041 | என்னைஒன்றும் அறியாத இளம்பவருவந் தனிலே
என்உளத்தே அமர்ந்தருளி யான்மயங்குந் தோறும் தப்பன்எனத் தெளிவித்தே அறிவுறுத்தி நின்றாய் நீடியஎன் உயிர்த்துணையாம் நேயமதென் பேனோ என்என்பேன் என்னுடைய இன்பமதென் பேனே. |
13 |
3042 | பாடும்வகை அணுத்துணையும் பரிந்தறியாச் சிறிய
பருவத்தே அணிந்தணிந்து பாடும்வகை புரிந்து நல்லறிவு சிறிதளித்துப் புல்லறிவு போக்கி நிறுத்தினைஇச் சிறியேனை நின்அருள்என் என்பேன் குற்றமெலாங் குணமாகக் கொண்டகுணக் குன்றே. |
14 |
3043 | சற்றும்அறி வில்லாத எனையும்வலிந் தாண்டு
தமியேன்செய் குற்றமெலாஞ் சம்மதமாக் கொண்டு கண்டுமகி ழப்புரிந்து பண்டைவினை அகற்றி மன்னுகின்ற மெய்இன்ப வாழ்க்கைமுதற் பொருளே பெருங்கருணை வந்தவகை எந்தவகை பேசே. |
15 |
3044 | சுற்றதுமற் றவ்வழிமா சூததுஎன் றெண்ணாத்
தொண்டரெலாங் கற்கின்றார் பண்டுமின்றுங் காணார் என்னுடைய துரையேநான் நின்னுடைய அருளால் கண்டதுநின் னிடத்தேஉட் கொண்டதுநின் னிடத்தே பெரியதவம் புரிந்தேன்என் பெற்றிஅதி சயமே. |
16 |
3045 | ஏறியநான் ஒருநிலையில் ஏறஅறி யாதே
இளைக்கின்ற காலத்தென் இளைப்பெல்லாம் ஒழிய மேலேற்றச் செய்தவளை மேவுறவுஞ் செய்து தெளிந்திடவுஞ் செய்தனைஇச் செய்கைஎவர் செய்வார் உவந்துநடம் புரிகின்ற ஒருபெரிய பொருளே. |
17 |
3046 | தருநிதியக் குருவியற்றச் சஞ்சலிக்கு மனத்தால்
தளர்ந்தசிறி யேன்தனது தளர்வெல்லாந் தவிர்த்து இசைந்திடுவந் தனம்அப்பா என்றுமகிழ்ந் திசைத்துப் பெற்றிஅளித் தனைஇந்தப் பேதமையேன் தனக்கே உயர்பொதுவில் இனபநடம் உடையபரம் பொருளே. |
18 |
3047 | அஞ்சாதே என்மகனே அனுக்கிரகம் புரிந்தாம்
ஆடுகநீ வேண்டியவா றாடுகஇவ் வுலகில் திருநடங்கண் டன்புருவாய்ச் சித்தசுத்த னாகி இனிதுமிக வாழியவென் றெனக்கருளிச் செய்தாய் துரியநடு வேஇருந்த சுயஞ்சோதி மணியே. |
19 |
3048 | நான்கேட்கின் றவையெல்லாம் அளிக்கின்றாய் எனக்கு
நல்லவனே எல்லாமும் வல்லசிவ சித்தா தத்துவனே மதிஅணிந்த சடைமுடிஎம் இறைவா சிவனேஎம் பெருமானே தேவர்பெரு மானே மணிமிடற்றுப் பெருங்கருணை வள்ளல்என்கண் மணியே. |
20 |
3049 | ஆனந்த வெளியினிடை ஆனந்த வடிவாய்
ஆனந்த நடம்புரியும் ஆனந்த அமுதே மதிக்கின்ற பொருளேவெண் மதிமுடிச்செங் கனியே ஊனமிலா திருக்கின்ற உளவருளிச் செய்தாய் நல்லவனே நீமகிழ்ந்து சொல்லவரு வாயே. |
21 |
3050 | ஆரணமும் ஆகமமும் எதுதுணிந்த ததுவே
அம்பலத்தில் ஆடுகின்ற ஆட்டமென எனக்குக் கண்ணுதலே இங்கிதற்குக் கைம்மாறொன் றறியேன் போற்றிசிவ போற்றிஎனப் போற்றிமகிழ் கின்றேன் நாயடியேன் இதயத்தில் நவிற்றியருள் வாயே. |
22 |
3051 | இறைவநின தருளாலே எனைக்கண்டு கொண்டேன்
எனக்குள்உனைக் கண்டேன்பின் இருவரும்ஒன் றாக உளவறியேன் அவ்வுளவொன் றுரைத்தருளல் வேண்டும் வாழ்முதலே பரமசுக வாரிஎன்கண் மணியே கொழுந்துபடர்ந் தோங்குகின்ற குணநிமலக் குன்றே. |
23 |
3052 | சத்தியமெய் அறிவின்ப வடிவாகிப் பொதுவில்
தனிநடஞ்செய் தருளுகின்ற சற்குருவே எனக்குப் புனிதநிலை தனிலிருக்கப் புரிந்தபரம் பொருளே பரமசுக மயமாக்கிப் படிற்றுளத்தைப் போக்கித் தனித்தசுகா தீதமும்நீ தந்தருள்க மகிழ்ந்தே. |
24 |
3053 | ஏதும்அறி யாதிருளில் இருந்தசிறி யேனை
எடுத்துவிடுத் தறிவுசிறி தேய்ந்திடவும் புரிந்து உணர்விலிருந் துணர்த்திஅருள் உண்மைநிலை காட்டித் திருஅருண்மெய்ப் பொதுநெறியில் செலுத்தியும் நான்மருளும் போக்கிஎனக் குள்ளிருந்த புனிதபரம் பொருளே. |
25 |
3054 | முன்னறியேன் பின்னறியேன் முடிபதொன்று மறியேன்
முன்னியுமுன் னாதும்இங்கே மொழிந்தமொழி முழுதும் பழுதுபடா வண்ணம்அருள் பரிந்தளித்த பதியே தனிமன்றுள் நடம்புரியஞ் சத்தியதற் பரமே எனைஅடிமை கொளல்வேண்டும் இதுசமயங் காணே. |
26 |
3055 | ஐயறிவிற் சிறிதும்அறிந் தனுபவிக்கக் தெரியா
தழுதுகளித் தாடுகின்ற அப்பருவத் தெளியேன் விரும்பிஅருள் நெறிநடக்க விடுத்தனைநீ யன்றோ புரிந்ததவம் யாததனைப் புகன்றருள வேண்டும் சுத்தபரி பூரணமாஞ் சுகரூபப் பொருளே. |
27 |
3056 | அருள்நிறைந்த பெருந்தகையே ஆனந்த அமுதே
அற்புதப்பொன் அம்பலத்தே ஆடுகின்ற அரசே செங்கனியே மதிஅணிந்த செஞ்சடைஎம் பெருமான் மகிழ்ந்தினிய வாழ்வளித்த மாகருணைக் கடலே என்னுடைய நாயகனே இதுதருணங் காணே. |
28 |
3057 | மன்னியபொன் னம்பலத்தே ஆனந்த நடஞ்செய்
மாமணியே என்னிருகண் வயங்கும்ஒளி மணியே தற்பரமே சிற்பரமே தத்துவப்பே ரொளியே ஆதியந்த மேதுமின்றி அமர்ந்தபரம் பொருளே எனைஆண்டு கொளல்வேண்டும் இதுதருணங் காணே. |
29 |
3058 | பூதநிலை முதற்பரம நாதநிலை அளவும்
போந்தவற்றின் இயற்கைமுதற் புணர்ப்பெல்லாம் விளங்க வினையேன்றன் உளத்திருந்து விளக்கியமெய் விளக்கே பொதுவினின்மெய் அறிவின்ப நடம்புரியும் பொருளே எனைக்காத்தல் வேண்டுகின்றேன் இதுதருணங் காணே. |
30 |
3059 | செவ்வண்ணத் திருமேனி கொண்டொருபாற் பசந்து
திகழ்படிக வண்ணமொடு தித்திக்குங் கனியே என்னுயிரே என்னுயிர்க்குள் இருந்தருளும் பதியே ஆரமுதே அடியேனிங் ககமகிழ்ந்து புரிதல் என்னுடைய நாயகனே இதுதருணங் காணே. |
31 |
3060 | உலகமெலாம் உதிக்கின்ற ஒளிநிலைமெய் யின்பம்
உறுகின்ற வெளிநிலையென் றுபயநிலை யாகி இரவில்எளி யேன்இருக்கும் இடந்தேடி அடைந்து களித்தெனைஅங் கழைத்தெனது கையில்ஒன்று கொடுத்தாய் ஆனந்த வல்லிமகிழ் அருள்நடநா யகனே. |
1 |
3061 | ஒளிவண்ணம் வெளிவண்ணம் என்றனந்த வேத
உச்சியெலாம் மெச்சுகின்ற உச்சமல ரடிகள் அடைந்தவிடத் தடைந்துகத வந்திறக்கப் புரிந்து கருணைவண்ணந் தனைவியந்து கருதும்வண்ணம் அறியேன் தெய்வநடம் புரிகின்ற சைவபரம் பொருளே. |
2 |
3062 | திருமாலும் உருமாறிச் சிரஞ்சீவி யாகித்
தேடியுங்கண் டறியாத சேவடிகள் வருந்த வஞ்சகனேன் இருக்குமிடம் வலிந்திரவில் தேடித் செவ்வண்ணத் திடைப்பசந்த திருமேனி காட்டிக் குருமணிநின் திருவருளைக் குறித்துமகிழ்ந் தனனே. |
3 |
3063 | அன்றொருநாள் இரவிடைவந் தணிக்கதவந் திறப்பித்
தருண்மலர்ச்சே வடிவாயிற் படிப்புறத்தும் அகத்தும் வருந்தாதே இங்கிதனை வாங்கிக்கொள் ளென்ன ஒருகைதனிற் கொடுத்திங்கே உறைதிஎன்று மறைந்தாய் என்னதவம் புரிந்தேனோ இனித்துயரொன் றிலனே. |
4 |
3064 | இரவில்அடி வருந்தநடந் தெழிற்கதவந் திறப்பித்
தெனைஅழைத்து மகனேநீ இவ்வுலகிற் சிறிதும் களிப்பொடுவாங் கெனஎனது கைதனிலே கொடுத்து உன்னுடைய பெருங்கருணைக் கொப்பிலைஎன் புகல்வேன் ஆனந்தத் திருநடஞ்செய் தாட்டுகின்ற அரசே. |
5 |
3065 | இயங்காத இரவிடைஅன் றொருநாள்வந் தெளியேன்
இருக்குமிடந் தனைத்தேடிக் கதவுதிறப் பித்துக் கடைப்புறத்தும் அகத்தும்வைத்துக் களித்தெனைஅங் கழைத்து மகனேநீ விளையாடி வாழ்கஎன உரைத்தாய் பொய்யடியேன் அறிந்தின்று பூரித்தேன் உளமே. |
6 |
3066 | ஒருநாளன் றிரவில்அடி வருந்தநடந் தடியேன்
உற்றஇடந் தனைத்தேடிக் கதவுதிறப் பித்து வைத்துமகிழ்ந் தெனைஅழைத்து வாங்கிதனை என்று தடங்கைதனிற் கொடுத்திங்கே சார்கஎன உரைத்தாய் மணிமன்றுள் நடம்புரியும் மாணிக்க மணியே. |
7 |
3067 | நெடுமாலும் பன்றிஎன நெடுங்காலம் விரைந்து
நேடியுங்கண் டறியாது நீடியபூம் பதங்கள் தொல்வினையேன் இருக்குமிடந் தனைத்தேடித் தொடர்ந்து கடையேனை அழைத்தெனது கையில்ஒன்று கொடுத்துக் குணக்குன்றே இந்நாள்நின் கொடையைஅறிந் தனனே. |
8 |
3068 | மறைமுடிக்கு மணியாகி வயங்கியசே வடிகள்
மண்மீது படநடந்து வந்தருளி அடியேன் கூவிஎனை அழைத்தொன்று கொடுத்தருளிச் செய்தாய் கண்ணோங்கும் ஒளியேசிற் கனவெளிக்குள் வெளியே பெரியமன்றுள் நடம்புரியும் பெரியபரம் பொருளே. |
9 |
3069 | அன்றகத்தே அடிவருந்த நடந்தென்னை அழைத்திங்
கஞ்சாதே மகனேஎன் றளித்தனைஒன் றதனைத் சுழன்றதுகண் டிரங்கிமிகத் துணிந்துமகிழ் விப்பான் தின்புறச்செய் தருளியநின் இரக்கம்எவர்க் குளதோ வல்லவரெல் லாம்வணங்கும் நல்லபரம் பொருளே. |
10 |
3070 | அன்பர்மனக் கோயிலிலே அமர்ந்தருளி விளங்கும்
அரும்பொருளாம் உனதுமல ரடிவருந்த நடந்து மனைக்கதவு திறப்பித்து மகிழ்ந்தெனைஅங் கழைத்துத் தொழும்பன்என்ற என்னுடைய துரையேநின் னருளை என்உயிருக் குயிராகி இலங்கியசற் குருவே. |
11 |
3071 | ஞாலநிலை அடிவருந்த நடந்தருளி அடியேன்
நண்ணும்இடந் தனிற்கதவம் நன்றுதிறப் பித்துக் கலங்காதே என்றெனது கையில்ஒன்று கொடுத்துச் சிவபெருமான் நின்பெருமைத் திருவருள்என் னென்பேன் அம்பலத்தில் திருநடஞ்செய் தாட்டுகின்ற அரசே. |
12 |
3072 | இருள்நிறைந்த இரவில்அடி வருந்தநடந் தடியேன்
இருக்குமிடந் தனைத்தேடிக் கதவுதிறப் பித்து மயங்காதே என்றென்னை வரவழைத்துப் புகன்று திகழ்ந்துநின்ற பரம்பொருள்நின் திருவருள்என் னென்பேன் ஆனந்த மன்றில்நடம் ஆடுகின்ற அரசே. |
13 |
3073 | கன்மயமுங் கனிவிக்குந் திருவடிகள் வருந்தக்
கடைப்புலையேன் இருக்குமிடந் தனைத்தேடி நடந்து துணிந்தழைத்தென் கைதனிலே தூயஒன்றை யளித்து மாமணிநின் திருவருளின் வண்மையைஎன் என்பேன் தனிநடஞ்செய் தருளுகின்ற தத்துவப்பே ரொளியே. |
14 |
3074 | பிரணவத்தின் அடிமுடியின் நடுவினும்நின் றோங்கும்
பெருங்கருணைத் திருவடிகள் பெயர்ந்துவருந் திடவே கதவுதிறப் பித்தருளிக் கடையேனை அழைத்துச் தாங்குகஎன் றொன்றெனது தடங்கைதனிற் கொடுத்து மன்றுடையாய் நின்அருளின் வண்மைஎவர்க் குளதே. |
15 |
3075 | ஒங்காரத் துள்ளொளியாய் அவ்வொளிக்குள் ஒளியாய்
உபயவடி வாகியநின் அபயபதம் வருந்த தெழிற்கதவந் திறப்பித்தங் கென்னைவலிந் தழைத்துப் பண்பொடுவாழ்ந் திடுகஎனப் பணித்தபரம் பொருளே அனுபவிக்கின் றேன்பொதுவில் ஆடுகின்ற அரசே. |
16 |
3076 | அரிபிரமா தியரெல்லாம் அறிந்தணுக ஒண்ணா
அரும்பெருஞ்சீர் அடிமலர்கள் அன்றொருநாள் வருந்தக் கதவுதிறப் பித்தெனது கையில்ஒன்று கொடுத்து உவந்தின்றை இரவினும்வந் துணர்த்தினைஎன் மீது பெருநடஞ்செய் அரசேஎன் பிழைபொறுத்த குருவே. |
17 |
3077 | காரணன்என் றுரைக்கின்ற நாரணனும் அயனும்
கனவிடத்துங் காண்பரிய கழலடிகள் வருந்த உவந்தெனது கைதனிலே ஒன்றுகொடுத் திங்கே யாதறிந்து புகன்றேன்முன் யாதுதவம் புரிந்தேன் பணிஅணிந்து மணிமன்றுள் அணிநடஞ்செய் பதியே. |
18 |
3078 | துரியவெளி தனிற்பரம நாதஅணை நடுவே
சுயஞ்சுடரில் துலங்குகின்ற துணையடிகள் வருந்தப் பெருங்கதவந் திறப்பித்துப் பேயன்எனை அழைத்து உறைகமகிழ்ந் தெனஉரைத்த உத்தமநின் னருளைப் பின்னர்அறிந் தேன்இதற்கு முன்னர்அறி யேனே. |
19 |
3079 | நீளாதி மூலமென நின்றவனும் நெடுநாள்
நேடியுங்கண் டறியாத நின்னடிகள் வருந்த அணிக்கதவந் திறப்பித்துள் ளன்பொடெனை அழைத்து வாங்கிக்கொள் என்றெனது மலர்க்கைதனிற் கொடுத்தாய் கீதநடம் புரிகின்ற நாதமுடிப் பொருளே. |
20 |
3080 | சத்தஉரு வாமறைப்பொற் சிலம்பணிந்தம் பலத்தே
தனிநடஞ்செய் தருளும்அடித் தாமரைகள் வருந்த தெருக்கதவந் திறப்பித்தென் செங்கையில்ஒன் றளித்து மகிழ்ந்துறைக எனத்திருவாய் மலர்ந்தகுண மலையே சுத்தஅரு உருவான சுத்தபரம் பொருளே. |
21 |
3081 | பலகோடி மறைகளெலாம் உலகோடி மயங்கப்
பரநாத முடிநடிக்கும் பாதமலர் வருந்தச் தெருக்கதவந் திறப்பித்தென் செங்கையில்ஒன் றளித்தே அலர்ந்தஅருட் குருவேபொன் னம்பலத்தெம் அரசே விரைந்தோடச் செய்தனைஇவ் விளைவறியேன் வியப்பே. |
22 |
3082 | செய்வகைஒன் றறியாது திகைப்பினொடே இருந்தேன்
திடுக்கெனஇங் கெழுந்திருப்பத் தெருக்கதவந் திறப்பித் உய்கமகிழ்ந் தின்றுமுதல் ஒன்றும்அஞ்சேல் என்று மீட்டும்இன்றை இரவில்உணர் வூட்டிஅச்சந் தவிர்த்தாய் அற்புதத்தாள் மலர்வருத்தம் அடைந்தனஎன் பொருட்டே. |
23 |
3083 | உள்ளிரவி மதியாய்நின் றுலகமெலாம் நடத்தும்
உபயவகை யாகியநின் அபயபதம் வருந்த நடைக்கதவந் திறப்பித்து நடைக்கடையில் அழைத்து என்றென்கை தனில்ஒன்றை ஈந்துமகிழ் வித்தாய் அம்பலத்தில் ஆடுகின்ற செம்பவளக் குன்றே. |
24 |
3084 | விளங்கறிவுக் கறிவாகி மெய்த்துரிய நிலத்தே
விளையும்அனு பவமயமாம் மெல்லடிகள் வருந்தத் தொடர்க்கதவந் திறப்பித்துத் தொழும்பன்எனை அழைத்துக் களித்துறைக எனத்திருவாக் களித்தஅருட் கடலே குருமணியே அன்பர்மனக் கோயிலில்வாழ் குருவே. |
25 |
3085 | வேதமுடி மேற்சுடராய் ஆகமத்தின் முடிமேல்
விளங்கும்ஒளி யாகியநின் மெல்லடிகள் வருந்தப் போந்திரவிற் கதவுதனைக் காப்பவிழ்க்கப் புரிந்து நற்பொருள்என் கைதனிலே நல்கியநின் பெருமை உயிர்க்கின்பந் தரநடனம் உடையபரம் பொருளே. |
26 |
3086 | தங்குசரா சரமுழுதும் அளித்தருளி நடத்துந்
தாள்மலர்கள் மிகவருந்தத் தனித்துநடந் தொருநாள் கையில்ஒன்று கொடுத்தஉன்றன் கருணையைஎன் என்பேன் என்குருவே என்உயிருக் கின்பருளும் பொருளே சிவகாம வல்லிமகிழ் திருநடநா யகனே. |
27 |
3087 | மாமாயை அசைந்திடச்சிற் றம்பலத்தே நடித்தும்
வருந்தாத மலரடிகள் வருந்தநடந் தருளி தங்கையில்ஒன் றளித்தினிநீ அஞ்சேல்என் றுவந்து தேனும்ஒக்கக் கலந்ததெனத் திருவார்த்தை அளித்தாய் கூத்தாடி எங்களைஆட் கொண்டபரம் பொருளே. |
28 |
3088 | படைப்பவனுங் காப்பவனும் பற்பலநாள் முயன்று
பார்க்கவிரும் பினுங்கிடையாப் பாதமலர் வருந்த நன்குதிறப் பித்தொன்று நல்கியதும் அன்றி இரிந்திடச்செய் தனைஉன்றன் இன்னருள்என் என்பேன் தனிமன்றில் ஆனந்தத் தாண்டவஞ்செய் அரசே. |
29 |
3089 | முன்னைமறை முடிமணியாம் அடிமலர்கள் வருந்த
முழுதிரவில் நடந்தெளியேன் முயங்குமிடத் தடைந்து தங்கையில்ஒன் றளித்தெனையும் அன்பினொடு நோக்கி டிருத்திஎன உரைத்தாய்நின் இன்னருள்என் என்பேன் வியன்பொதுவில் திருநடஞ்செய் விமலபரம் பொருளே. |
30 |
3090 | மீதானத் தருள்ஒளியாய் விளங்கியநின் அடிகள்
மிகவருந்த நடந்திரவில் வினையேன்றன் பொருட்டாச் செங்கையில்ஒன் றளித்தினிநீ சிறிதுமஞ்சேல் இங்கு மாமணிநின் திருவருளின் வண்மைஎவர்க் குளதே ஓங்கியசிற் றம்பலத்தே ஒளிநடஞ்செய் பதியே. |
31 |
3091 | வேதாந்த சித்தாந்தம் என்னும்அந்தம் இரண்டும்
விளங்கஅமர்ந் தருளியநின் மெல்லடிகள் வருந்த நடந்தருளிக் கடைநாயேன் நண்ணும்இடத் தடைந்து புலையேன்கை யிடத்தொன்று பொருந்தவைத்த பொருளே துரியவெளிக் கேவிளங்கும் பெரியஅருட் குருவே. |
32 |
3092 | ஒருமையிலே இருமைஎன உருக்காட்டிப் பொதுவில்
ஒளிநடஞ்செய் தருளுகின்ற உபயபதம் வருந்த அணிக்கதவந் திறப்பித்தென் அங்கையில்ஒன் றளித்துப் பெருங்கருணைக் கடலேநின் பெற்றியைஎன் என்பேன் கலக்கமெலாந் தவிர்த்தெம்மைக் காத்தருளும் பதியே. |
33 |
3093 | விந்துநிலை நாதநிலை இருநிலைக்கும் அரசாய்
விளங்கியநின் சேவடிகள் மிகவருந்த நடந்து மணிக்கதவந் திறப்பித்து மகனேஎன் றழைத்து என்கையில்ஒன் றளித்தின்பம் எய்துகஎன் றுரைத்தாய் முத்தர்மனந் தித்திக்க நிருத்தமிடும் பொருளே. |
34 |
3094 | நவநிலைக்கும் அதிகாரம் நடத்துகின்ற அரசாய்
நண்ணியநின் பொன்னடிகள் நடந்துவருந் திடவே அணைந்தருளிக் கதவுதிறந் தடியேனை அழைத்தே சித்தமகிழ்ந் துறைகஎனத் திருப்பவளந் திறந்தாய் பரம்பரமா மன்றில்நடம் பயின்றபசு பதியே. |
35 |
3095 | புண்ணியர்தம் மனக்கோயில் புகுந்தமர்ந்து விளங்கும்
பொன்மலர்ச்சே வடிவருத்தம் பொருந்தநடந் தெளியேன் நற்பொருள்ஒன் றென்கைதனில் நல்கியநின் பெருமை எம்பருமான் நின்அருளை என்னெனயான் புகல்வேன் தனித்தமன்றில் ஆனந்தத் தாண்டவஞ்செய் அரசே. |
36 |
3096 | மூவருக்கும் எட்டாது மூத்ததிரு அடிகள்
முழுதிரவில் வருந்தியிட முயங்கிநடந் தருளி எழிற்கதவந் திறப்பித்துள் எனைஅழைத்து மகனே சித்தமகிழ்ந் தளித்தனைநின் திருவருள்என் என்பேன் புரிந்துயிருக் கின்பருளும் பூரணவான் பொருளே. |
37 |
3097 | கற்றவர்தம் கருத்தினின்முக் கனிரசம்போல் இனிக்கும்
கழலடிகள் வருந்தியிடக் கடிதுநடந் திரவில் மனைக்கதவு திறப்பித்து வலிந்தெனைஅங் கழைத்து நல்கியநின் பெருங்கருணை நட்பினைஎன் என்பேன் அருட்குருவே சச்சிதா னந்தபரம் பொருளே. |
38 |
3098 | கருணைவடி வாய்அடியார் உள்ளகத்தே அமர்ந்த
கழலடிகள் வருந்தியிடக் கங்குலிலே நடந்து மணிக்கதவந் திறப்பித்து மகிழ்ந்தழைத்து மகனே பொருந்தஅளித் தருளியநின் பொன்னருள்என் என்பேன் னந்தவுரு வாகிநடம் ஆடுகின்ற அரசே. |
39 |
3099 | அருளுருவாய் ஐந்தொழிலும் நடத்துகின்ற அடிகள்
அசைந்துவருந் திடஇரவில் யானிருக்கும் இடத்தே சிறியேனை அழைத்தெனது செங்கையில்ஒன் றளித்து மகிழ்ந்துதிரு அருள்வழியே வாழ்கஎன உரைத்தாய் எல்லாம்வல் லவனாகி இருந்தபசு பதியே. |
40 |
3100 | முழுதும்உணர்ந் தவர்முடிமேல் முடிக்குமணி யாகி
முப்பொருளு மாகியநின் ஒப்பில்அடி மலர்கள் கடிதுநடந் தடிநாயேன் கருதுமிடத் தடைந்து பணிந்திதனை வாங்கெனஎன் பாணியுறக் கொடுத்துத் தூயஅருட் பெருமையைஎன் சொல்லிவியக் கேனே. |
41 |
3101 | மானினைத்த அளவெல்லாங் கடந்தப்பால் வயங்கும்
மலரடிகள் வருந்தியிட மகிழ்ந்துநடந் தருளிப் பணைக்கதவந் திறப்பித்துப் பரிந்தழைத்து மகனே நின்மலம்என் றென்கைதனில் நேர்ந்தளித்தாய் நினக்கு நாயடியேன் என்புகல்வேன் நடராஜ மணியே. |
42 |
3102 | சூரியசந் திரரெல்லாந் தோன்றாமை விளங்கும்
சுயஞ்சோதி யாகும்அடித் துணைவருந்த நடந்து கொடியேன்நான் இருக்குமிடங் குறித்திரவில் நடந்து கையில் ஒன்றை அளித்தனைஉன் கருணையைஎன் என்பேன் ஆனந்த மன்றில்நடம் ஆடுகின்ற அரசே. |
43 |
3103 | தற்போதந் தோன்றாத தலந்தனிலே தோன்றும்
தாள்மலர்கள் வருந்தியிடத் தனித்துநடந் தருளி தெழிற்கதவந் திறப்பித்திவ் வெளியேனை அழைத்துப் புலையொழிந்த நிலைதனிலே பொருந்துகஎன் றுரைத்தாய் சிவமயமாம் அனுபோகத் திருநடஞ்செய் அரசே. |
44 |
3104 | கற்பனைகள் எல்லாம்போய்க் கரைந்ததலந் தனிலே
கரையாது நிறைந்ததிருக் கழலடிகள் வருந்த விரைந்திரவிற் கதவுதனைக் காப்பவிழ்க்கப் புரிந்து அங்கையில்ஒன் றளித்தனைநின் அருளினைஎன் புகல்வேன் நடம்புரியும் பெருங்கருணை நாயகமா மணியே. |
45 |
3105 | ஒன்றாகி இரண்டாகி ஒன்றிரண்டின் நடுவே
உற்றஅனு பவமயமாய் ஒளிர்அடிகள் வருந்த அடைந்துகத வந்திறப்பித் தன்பொடெனை அழைத்து நண்ணிநீ எண்ணியவா நடத்துகஎன் றுரைத்தாய் என்புகல்வேன் மணிமன்றில் இலங்கியசற் குருவே. |
46 |
3106 | எங்கும்விளங் குவதாகி இன்பமய மாகி
என்னுணர்வுக் குணர்வுதரும் இணையடிகள் வருந்த போந்துமணிக் கதவுதனைக் காப்பவிழ்க்கப் புரிந்து தயவினொடு வாழ்கஎனத் தனித்திருவாய் மலர்ந்தாய் இன்பநடம் புரிகின்ற என்னுடைநா யகனே. |
47 |
3107 | சித்தெவையும் வியத்தியுறுஞ் சுத்தசிவ சித்தாய்ச்
சித்தமதில் தித்திக்குந் திருவடிகள் வருந்த வாழுமனைத் தெருக்கதவு திறப்பித்தங் கடைந்து அன்னையினும் அன்புடையாய் நின்னருள்என் என்பேன் முக்கணுடை ஆனந்தச் செக்கர்மணி மலையே. |
48 |
3108 | சகலமொடு கேவலமுந் தாக்காத இடத்தே
தற்பரமாய் விளங்குகின்ற தாள்மலர்கள் வருந்தப் பரியுமிடத் தடைந்துமணிக் கதவுதிறப் பித்துப் பொருந்தஒன்று கொடுத்தனைநின் பொன்னருள்என் என்பேன் உயர்பொதுவில் இன்பநடம் உடையபரம் பொருளே. |
49 |
3109 | உள்ளுருகுந் தருணத்தே ஒளிகாட்டி விளங்கும்
உயர்மலர்ச்சே வடிவருந்த உவந்துநடந் தருளிக் கதவுதிறப் பித்தருளிக் களித்தெனைஅங் கழைத்து நாளும்உயிர்க் கிதம்புரிந்து நடத்திஎன உரைத்தாய் செழுங்கனியே மணிமன்றில் திருநடநா யகனே. |
50 |
3110 | தன்னுருவங் காட்டாத மலஇரவு விடியுந்
தருணத்தே உதயஞ்செய் தாள்மலர்கள் வருந்தப் பொருந்துமிடத் தடைந்துகத வந்திறக்கப் புரிந்து தந்தருளி மகிழ்ந்திங்கே தங்குகஎன் றுரைத்தாய் என்னுரைப்பேன் மணிமன்றில் இன்பநடத் தரசே. |
51 |
3111 | அண்டவகை பிண்டவகை அனைத்தும்உதித் தொடுங்கும்
அணிமலர்ச்சே வடிவருத்தம் அடையநடந் தருளிக் கருதுமிடத் தடைந்துகத வந்திறக்கப் புரிந்து துரையேநின் அருட்பெருமைத் தொண்மையைஎன் என்பேன் உயர்பொதுவில் இன்பநடம் உடையபரம் பொருளே. |
52 |
3112 | அறிவுடையார் உள்ளகப்போ தலருகின்ற தருணத்
தருள்மணத்தே னாகிஉற்ற அடிஇணைகள் வருந்தப் பெருங்கதவந் திறப்பித்துப் பேயன்எனை அழைத்துச் திரும்பவும்என் கைதனிலே சேரஅளித் தனையே பொற்பொதுவில் நடம்புரியும் பூரணவான் பொருளே. |
53 |
3113 | விடையமொன்றுங் காணாத வெளிநடுவே ஒளியாய்
விளங்குகின்ற சேவடிகள் மிகவருந்த நடந்து கதவுதிறப் பித்தெனது கையில்ஒன்று கொடுக்க என்றுபின்னுங் கொடுத்தாய்நின் இன்னருள்என் என்பேன் உய்யும்வகை அருள்நடனஞ் செய்யும்ஒளி மணியே. |
54 |
3114 | நான்தனிக்குந் தரணத்தே தோன்றுகின்ற துணையாய்
நான்தனியா இடத்தெனக்குத் தோன்றாத துணையாய் யானுறையும் இடத்தடைந்து கதவுதிறப் பித்து கறிவிலியேன் செய்யும்வகை அறியேன்நின் கருணை இன்பநடம் புரிகின்ற என்னுயிர்நா யகனே. |
55 |
3115 | அருள்விளங்கும் உள்ளகத்தே அதுஅதுவாய் விளங்கும்
அணிமலர்ச்சே வடிவருத்தம் அடையநடந் தருளிப் போந்துதெருக் காப்பவிழ்க்கப் புரிந்தெனைஅங் கழைத்துத் சிவபெருமான் பெருங்கருணைத் திறத்தினைஎன் என்பேன் மன்னுயிர்க் கின்பருள வயங்குநடத் தரசே. |
56 |
3116 | பருவமுறு தருணத்தே சர்க்கரையும் தேனும்
பாலுநெய்யும் அளிந்தநறும் பழரசமும் போல வயங்கும்அடி யிணைகள்மிக வருந்தநடந் தருளித் செய்தருளிப் பொருள்ஒன்றென் செங்கைதனில் அளித்தாய் திறத்தினைஇச் சிறியேன்நான் செப்புதல்எங் ஙனமே. |
57 |
3117 | என்அறிவை உண்டருளி என்னுடனே கூடி
என்இன்பம் எனக்கருளி என்னையுந்தா னாக்கித் தனிநடந்து தெருக்கதவந் தாள்திறப்பித் தருளி முன்னவநின் இன்னருளை என்எனயான் மொழிவேன் வடிவாகி நடிக்கின்ற மாகருணை மலையே. |
58 |
3118 | பரயோக அனுபவத்தே அகம்புறந்தோன் றாத
பரஞ்சோதி யாகும்இணைப் பாதமலர் வருந்த வந்துதெருக் கதவுதனைக் காப்பவிழ்க்கப் புரிந்து செங்கைதனில் அளித்தாய்நின் திருவருள்என் என்பேன் உயிர்க்கின்பந் தரநடனம் உடையபரம் பொருளே. |
59 |
3119 | சொன்னிறைந்த பொருளும்அதன் இலக்கியமும் ஆகித்
துரியநடு விருந்தஅடித் துணைவருந்த நடந்து கொழுங்காப்பை அவிழ்வித்துக் கொடியேனை அழைத்து என்மகனே வாழ்கஎன எழில்திருவாய் மலர்ந்தாய் தனிமன்றில் ஆனந்தத் தாண்டவஞ்செய் அரசே. |
60 |
3120 | முத்திஒன்று வியத்திஒன்று காண்மின்என்றா கமத்தின்
முடிகள்முடித் துரைக்கின்ற அடிகள்மிக வருந்தப் படிற்றுளத்தேன் இருக்கும்இடந் தனைத்தேடி நடந்து திறப்பித்தங் கெனைஅழைத்தென் செங்கையிலே மகிழ்ந்து தனிமன்றுள் ஆனந்தத் தாண்டவஞ்செய் அரசே. |
61 |
3121 | எனக்குநன்மை தீமையென்ப திரண்டுமொத்த இடத்தே
இரண்டும்ஒத்துத் தோன்றுகின்ற எழிற்பதங்கள் வருந்தத் தனித்திரவில் கடைப்புலையேன் தங்குமிடத் தடைந்து களிப்பொடெனை அழைத்தெனது கையில்ஒன்று கொடுத்து உடையவநின் அருட்பெருமை உரைக்கமுடி யாதே. |
62 |
3122 | இம்மையினோ டம்மையினும் எய்துகின்ற இன்பம்
எனைத்தொன்றும் வேண்டாத இயற்கைவருந் தருணம் இயற்சொருப சுத்தசுக அனுபவம்என் றிரண்டாய்ச் சிறியேன்பால் அடைந்தெனது செங்கையில்ஒன் றளித்தாய் உயர்பொதுவில் இன்பநடம் உடையபரம் பொருளே. |
63 |
3123 | அன்பளிப்ப தொன்றுபின்னர் இன்பளிப்ப தொன்றென்
றறிஞரெலாம் மதிக்கின்ற அடிமலர்கள் வருந்த எம்பெருமான் நடந்தருளிக் கதவுதிறப் பித்துத் தூயஇள நகைமுகத்தே துளும்பஎனை நோக்கி முன்னவநின் அருட்பெருமை முன்னஅறி யேனே. |
64 |
3124 | மோகஇருட் கடல்கடத்தும் புணைஒன்று நிறைந்த
மோனசுகம் அளிப்பிக்கும் துணைஒன்றென் றுரைக்கும் உணர்விலியேன் பொருட்டாக இருட்டிரவில் நடந்து புலையேனை அழைத்தொன்று பொருந்தஎன்கை கொடுத்தாய் நாயகநின் பெருங்கருணை நவிற்றமுடி யாதே. |
65 |
3125 | காணுகின்ற கண்களுக்குக் காட்டுகின்ற ஒளியாய்க்
காட்டுகின்ற ஒளிதனக்குக் காட்டுவிக்கும் ஒளியாய் பொருந்துமிடத் தடைந்துகத வந்திறக்கப் புரிந்து குறைவறவாழ் கெனமகிழ்ந்து கொடுத்தனைஒன் றெனக்கு மணிமன்றில் ஆனந்த மாநடஞ்செய் அரசே. |
66 |
3126 | ஆறாறு தத்துவத்தின் சொரூபமுதல் அனைத்தும்
அறிவிக்கும் ஒன்றவற்றின் அப்பாலே இருந்த விளக்குவிக்கும் ஒன்றென்று விளைவறிந்தோர் விளம்பும் பேயடியேன் இருக்குமிடத் தடைந்தென்னை அழைத்துச் சோதிநின தருட்பெருமை ஓதிமுடி யாதே. |
67 |
3127 | கருவிகளை நம்முடனே கலந்துளத்தே இயக்கிக் காட்டுவதொன் றக்கருவி கரணங்கள் அனைத்தும் ஒருவிஅப்பாற் படுத்திநமை ஒருதனியாக் குவதொன் றுபயம்எனப் பெரியர்சொலும் அபயபதம் வருந்தத் துருவிஅடி யேன்இருக்கும் இடத்திரவில் அடைந்து துணிந்தெனது கையில்ஒன்று சோதியுறக் கொடுத்து வித்தகநின் திருவருளை வியக்கமுடி யாதே. |
68 |
3128 | ஆதியிலே கலப்பொழிய ஆன்மசுத்தி அளித்தாங்
கதுஅதுஆக் குவதொன்றாம் அதுஅதுவாய் ஆக்கும் சூழ்ச்சிஅறிந் தோர்புகலும் துணையடிகள் வருந்த விரும்பிஅடைந் தெனைக்கூவி விளைவொன்று கொடுத்தாய் பண்பைஅறிந் தேன்ஒழியா நண்பைஅடைந் தேனே. |
69 |
3129 | இருட்டாய மலச்சிறையில் இருக்கும்நமை எல்லாம்
எடுப்பதொன்றாம் இன்பநிலை கொடுப்பதொன்றாம் எனவே பொறையிரவில் யானிருக்கும் இடந்தேடிப் புகுந்து வண்ணம்ஒன்றென் கைதனிலே மகிழ்ந்தளித்தாய் நின்றன் ஆனந்தத் திருநடஞ்செய் தருளுகின்ற அரசே. |
70 |
3130 | உன்மனியின் உள்ளகத்தே ஒளிருவதொன் றாகி
உற்றஅதன் வெளிப்புறத்தே ஓங்குவதொன் றாகிச் சிறுநாயேன் பொருட்டாகத் தெருவில்நடந் தருளிப் பொருள்ஒன்றென் கைதனிலே பொருந்தஅளித் தனையே நிறைந்தஇன்ப வடிவாகி நிருத்தம்இடும் பதியே. |
71 |
3131 | ஐவர்களுக் கைந்தொழிலும் அளித்திடுவ தொன்றாம்
அத்தொழிற்கா ரணம்புரிந்து களித்திடுவ தொன்றாம் திருவடிகள் மிகவருந்தத் தெருவினிடை நடந்து களித்தெனைஅங் கழைத்தெனது கையில்ஒன்று கொடுத்தாய் தற்பரநின் அருட்பெருமை சாற்றமுடி யாதே. |
72 |
3132 | அருளுதிக்குந் தருணத்தே அமுதவடி வாகி
ஆனந்த மயமாகி அமர்ந்ததிரு வடிகள் யானிருக்கும் மனைக்கதவந் திறப்பித்தங் கடைந்து மகிழ்ந்தெனது கரத்தொன்று வழங்கியசற் குருவே சிவபெருமான் நின்கருணைத் திறத்தைவியக் கேனே. |
73 |
3133 | நான்கண்ட போதுசுயஞ் சோதிமய மாகி
நான்பிடித்த போதுமதி நளினவண்ண மாகித் தித்திப்ப தாகிஎன்றன் சென்னிமிசை மகிழ்ந்து தகஉயிருங் குளிர்வித்த தாண்மலர்கள் வருந்த மன்றில்நடத் தரசேநின் மாகருணை வியப்பே. |
74 |
3134 | யோகாந்த மிசைஇருப்ப தொன்றுகலாந் தத்தே
உவந்திருப்ப தொன்றெனமெய் யுணர்வுடையோர் உணர்வால் என்பொருட்டாய் யானிருக்கும் இடந்தேடி நடந்து வரவழைத்தென் கைதனிலே மகிழ்ந்தொன்று கொடுத்தாய் முயங்கிநடம் புரிகின்ற முக்கனுடை அரசே. |
75 |
3135 | மகமதிக்கு மறையும்மறை யான்மதிக்கும் அயனும்
மகிழ்ந்தயனான் மதிக்கும்நெடு மாலும்நெடு மாலான் மேலவனும் அவன்மதிக்க விளங்குசதா சிவனும் தலைமேலும் மறைந்துறையுந் தாள்மலர்கள் வருந்த அம்பலத்தில் ஆடுகின்றாய் அருட்பெருமை வியப்பே. |
76 |
3136 | இருவினைஒப் பாகிமல பரிபாகம் பொருந்தல்
எத்தருணம் அத்தருணத் தியல்ஞான ஒளியாம் உற்றுவெளிப் புறத்தும்எழுந் துணர்த்திஉரைத் தருளும் தெருக்கவந் திறப்பித்துச் சிறியேனை அழைத்துக் குணக்குன்றே நின்னருட்கென் குற்றமெலாங் குணமே. |
77 |
3137 | தம்மடியார் வருந்திலது சகியாதக் கணத்தே
சார்ந்துவருத் தங்களெலாந் தயவினொடு தவிர்த்தே இரவினிடை நடந்தெளியேன் இருக்கும்இடத் தடைந்து கடையேனை அழைத்தெனது கையில்ஒன்று கொடுத்து நடம்புரியும் நாயகநின் நற்கருணை வியப்பே. |
78 |
3138 | உம்பருக்குங் கிடைப்பரிதாம் மணிமன்றில் பூத
உருவடிவங் கடந்தாடுந் திருவடிக ளிடத்தே தெருக்கதவந் திறப்பித்துச் சிறியேனை அழைத்து மகிழ்ந்தளித்துத் துயர்தீர்ந்து வாழ்கஎன உரைத்தாய் |
79 |
3139 | உருவம்ஒரு நான்காகி அருவமும்அவ் வளவாய்
உருஅருஒன் றாகிஇவை ஒன்பானுங் கடந்து சொருபஅனு பவமயமாந் துணையடிகள் வருந்தத் சிறியேன்பால் அடைந்தெனது செங்கையில்ஒன் றளித்தாய் மாகடலே நின்பெருமை வழுத்தமுடி யாதே. |
80 |
3140 | பக்குவத்தால் உயர்வாழைப் பழங்கனிந்தாற் போலும்
பரங்கருணை யாற்கனிந்த பத்தர்சித்தந் தனிலே போற்கலந்து தித்திக்கும் பொன்னடிகள் வருந்த வியன்மனையில் அடைந்துகத வந்திறக்கப் புரிந்து றுரைத்தனைஎம் பெருமான்நின் உயர்கருணை வியப்பே. |
81 |
3141 | உளவறிந்தோர் தமக்கெல்லாம் உபநிடதப் பொருளாய்
உளவறியார்க் கிகபரமும் உறுவிக்கும் பொருளாய் அடிமலர்கள் வருந்தியிட நடந்திரவில் அடைந்து கையில்ஒன்று கொடுத்தாய்நின் கருணையைஎன் என்பேன் விளங்குநடம் புரிகின்ற துளங்கொளிமா மணியே. |
82 |
3142 | எவ்வுலகும் எவ்வுயிரும் எச்செயலும் தோன்றி
இயங்கும்இட மாகிஎல்லாம் முயங்கும்இட மாகித் சித்தர்கள்தம் சித்தத்தே தித்திக்கும் பதங்கள் எழிற்கதவந் திறப்பித்தங் கென்கையில்ஒன் றளித்தாய் அம்பலத்தே நடம்புரியும் செம்பவளக் குன்றே. |
83 |
3143 | மானினொடு மோகினியும் மாமாயை யுடனே
வைந்துவமும் ஒன்றினொன்று வதிந்தசைய அசைத்தே றுறுவித்துப் பின்கரும ஒப்புவருந் தருணம் திருவடிகள் வருந்தநடந் தடியேன்பால் அடைந்து மன்றில்நடத் தரசேநின் மாகருணை வியப்பே. |
84 |
3144 | பசுபாச பந்தம்அறும் பாங்குதனைக் காட்டிப்
பரமாகி உள்ளிருந்து பற்றறவும் புரிந்தே அடைவித்தவ் வனுபவந்தாம் ஆகியசே வடிகள் மனையைஅடைந் தணிக்கதவந் திறப்பித்து நின்று விடையவநின் அருட்பெருமை என்புகல்வேன் வியந்தே. |
85 |
3145 | ஆதியுமாய் அந்தமுமாய் நடுவாகி ஆதி
அந்தநடு வில்லாத மந்தணவான் பொருளாய்ச் துரியமுமாய் விளங்குகின்ற துணையடிகள் வருந்த படர்ந்துதெருக் கதவங்காப் பவிழ்த்திடவும் புரிந்து உடையவநின் அருட்பெருமை என்னுரைப்பேன் உவந்தே. |
86 |
3146 | பாடுகின்ற மறைகளெலாம் ஒருபுறஞ்சூழ்ந் தாடப்
பத்தரொடு முத்தரெலாம் பார்த்தாடப் பொதுவில் அடையும்இடத் தடைந்திரவிற் காப்பவிழ்க்கப் புரிந்து நகைமுகஞ்செய் தென்கரத்தே நல்கினைஒன் றிதனால் மன்னவநின் பொன்னருளை என்னெனவாழ்த் துவனே. |
87 |
3147 | எம்மதத்தில் எவரெவர்க்கும் இயைந்தஅனு பவமாய்
எல்லாமாய் அல்லவுமாய் இருந்தபடி இருந்தே அரும்பெருஞ்சே வடியிணைகள் அசைந்துமிக வருந்த எழிற்கதவந் திறப்பித்தங் கெனைஅழைத்தென் கரத்தே தம்மைஅறிந் தவர்அறிவின் மன்னும்ஒளி மணியே. |
88 |
3148 | பூதவெளி கரணவெளி பகுதிவெளி மாயா
போகவெளி மாமாயா யோகவெளி புகலும் வெளிஏக வெளிபரம வெளிஞான வெளிமா நவில்கின்ற வெளிகளெலாம் நடிக்கும்அடி வருந்த என்கையின்ஒன் றளித்தனைநின் இரக்கம்எவர்க் குளதே. |
89 |
3149 | வானதுவாய்ப் பசுமலம்போய்த் தனித்துநிற்குந் தருணம்
வயங்குபரா னந்தசுகம் வளைந்துகொள்ளுந் தருணம் தடையற்ற அனுபவமாந் தன்மையடி வருந்த மணிக்கதவந் திறப்பித்து மகிழ்ந்தெனைஅங் கழைத்து அம்பலத்தே நடம்புரியும் எம்பெருஞ்சோ தியனே. |
90 |
3150 | புன்றலைஎன் தலையெனநான் அறியாமல் ஒருநாள்
பொருத்தியபோ தினிற்சிவந்து பொருந்தியபொன் னடிகள் இருக்குமிடத் தடைத்துகத வந்திறக்கப் புரிந்து மன்னவநின் பெருங்கருணை வண்மையைஎன் என்பேன் புயங்கநடம் புரிகின்ற வயங்கொளிமா மணியே. |
90 |
3151 | தஞ்சமுறும் உயிர்க்குணர்வாய் இன்பமுமாய் நிறைந்த
தம்பெருமை தாமறியாத் தன்மையவாய் ஒருநாள் வருந்தியசே வடிபின்னும் வருந்தநடந் தருளி தெழிற்கதவந் திறப்பித்தங் கெனைஅழைத்தொன் றளித்தாய் மேலவநின் அருட்பெருமை விளம்பலெவன் வியந்தே. |
92 |
3152 | எழுத்தினொடு பதமாகி மந்திரமாய்ப் புவனம்
எல்லாமாய்த் தத்துவமாய் இயம்புகலை யாகி வழியாகி நடத்துவிக்கும் மன்னிறையு மாகி ஆகியதற் கப்பாலும் ஆனபதம் வருந்த எம்பெருமான் நின்பெருமை என்னுரைப்பேன் வியந்தே. |
93 |
3153 | மாவின்மணப் போர்விடைமேல் நந்திவிடை மேலும்
வயங்கிஅன்பர் குறைதவிர்த்து வாழ்வளிப்ப தன்றிப் போகம்அளித் தருள்கின்ற பொன்னடிகள் வருந்தத் தயவுடன்அங் கெனைஅழைத்துத் தக்கதொன்று கொடுத்தாய் நடம்புரியும் நாயகநின் நற்கருணை இதுவே. |
94 |
3154 | மணப்போது வீற்றிருந்தான் மாலவன்மற் றவரும்
மனஅழுக்கா றுறச்சிறியேன் வருந்தியநாள் அந்தோ கங்குலிலே நடந்தென்னைக் கருதிஒன்று கொடுத்தாய் உளவறிந்தேன் இந்நாள்என் உள்ளமகிழ் வுற்றேன் தனிமன்றில் ஆனந்தத் தாண்டவஞ்செய் அரசே. |
95 |
3155 | நடுங்கமலக் கண்குறுகி நெடுங்கமலக் கண்விளங்கும்(186)
நல்லதிரு வடிவருந்த வல்இரவில் நடந்து துயரமெலாம் விடுகஇது தொடுகஎனக் கொடுத்தாய் கொண்டகுணக் குன்றேநின் குறிப்பினைஎன் புகல்வேன் ஏத்தமணிப் பொதுவில்அருட் கூத்துடைய பொருளே. |
96 |
3156 | வெய்யபவக் கோடையிலே மிகஇளைத்து மெலிந்த
மெய்யடியர் தமக்கெல்லாம் விரும்புகுளிர் சோலைத் துணையடிகள் மிகவருந்தத் துணிந்துநடந் தடியேன் உயர்கதவந் திறப்பித்தங் குவந்தழைத்தொன் றளித்தாய் மாநடஞ்செய் அரசேநின் வண்மைஎவர்க் குளதே. |
97 |
3157 | சிறயவனேன் சிறுமையெலாம் திருவுளங்கொள் ளாதென்
சென்னிமிசை அமர்ந்தருளும் திருவடிகள் வருந்தச் தெருக்கதவந் திறப்பித்துச் சிறப்பின்எனை அழைத்துப் பேசிஒன்று கொடுத்தாய்நின் பெருமையைஎன் என்பேன் பொருளேநின் அருளேமெய்ப் பொருள்எனத்தேர்ந் தனனே. |
98 |
3158 | அடிநாளில் அடியேனை அறிவுகுறிக் கொள்ளா
தாட்கொண்டென் சென்னிமிசை அமர்ந்தபதம் வருந்தப் படர்கதவந் திறப்பித்துப் பரிந்தெனைஅங் கழைத்துப் பேரறஞ்செய் துறுகஎனப் பேசிஒன்று கொடுத்தாய் பொருளேநின் அருளேமெய்ப் பொருள்எனத்தேர்ந் தனனே. |
99 |
3159 | உலகியலோ டருளியலும் ஒருங்கறியச் சிறியேன்
உணர்விலிருந் துணர்த்திஎன துயிர்க்குயிராய் விளங்கித் திருவடிகள் வருந்தநடை செய்தருளி அடியேன் இனிதழைத்தொன் றளித்துமகிழ்ந் தின்னும்நெடுங் காலம் பொருளேநின் அருளேமெய்ப் பொருள்எனத்தேர்ந் தனனே. |
100 |
3160 | திருஉருக்கொண் டெழுந்தருளிச் சிறியேன்முன் அடைந்து
திருநீற்றுப் பைஅவிழ்த்துச் செஞ்சுடர்ப்பூ அளிக்கத் தயாநிதியே திருநீறும் தருகஎனக் கேட்ப மகிழ்ந்தளித்தாம் இவைஎன்று வாய்மலர்ந்து நின்றாய் குருமணியே என்னைமுன்னாட் கொண்டகுணக் குன்றே. |
1 |
3161 | என்வடிவந் தழைப்பஒரு பொன்வடிவந் தரித்தே
என்முன்அடைந் தெனைநோக்கி இளநகைசெய் தருளித் தகுசுடர்ப்பூ அளிக்கவும்நான் தான்வாங்கிக் களித்து வேண்டுமென முன்னரது விரும்பியளித் தனம்நாம் ஒளிநடஞ்செய் அம்பலத்தே வெளிநடஞ்செய் அரசே. |
2 |
3162 | அழகுநிறைந் திலகஒரு திருமேனி தரித்தே
அடியேன்முன் எழுந்தருளி அருள்நகைகொண் டடியார் களித்தருளி என்னளவிற் கருணைமுக மலர்ந்து கொடுத்தருளி நின்றனைநின் குறிப்பறியேன் குருவே மயவடிவோ டின்பநடம் வாய்ந்தியற்றும் பதியே. |
3 |
3163 | விலைகடந்த மணிஎனஓர் திருமேனி தரித்து
வினையேன்முன் எழுந்தருளி மெய்யடியர் விரும்பக் கதிகடந்த பெருங்கருணைக் கடைக்கண்மலர்ந் தருளி அங்கைதனில் அளித்தனைநின் அருட்குறிப்பே தறியேன் மன்றில்நடம் புரிகின்ற வள்ளல்அருட் குருவே. |
4 |
3164 | உலர்ந்தமரந் தழைக்கும்ஒரு திருஉருவந் தாங்கி
உணர்விலியேன் முன்னர்உவந் துறுகருணை துளும்ப மலர்க்கரத்தால் அவிழ்த்தங்கு வதிந்தவர்கட் கெல்லாம் அருள்மணப்பூ அளித்தனைநின் அருட்குறிப்பே தறியேன் கருணைநெடுங் கடலேஎன் கண்அமர்ந்த ஒளியே. |
5 |
3165 | பிழைஅலதொன் றறியாத சிறியேன்முன் புரிந்த
பெருந்தவமோ திருவருளின் பெருமையிதோ அறியேன் வடந்திகழ நடந்துகுரு வடிவதுகொண் டடைந்து விரித்தருளி அருண்மணப்பூ விளக்கம்ஒன்று கொடுத்தாய் கூத்தியற்றி என்னைமுன்னாட் கொண்டசிவக் கொழுந்தே. |
6 |
3166 | முத்தேவர் அழுக்காற்றின் மூழ்கியிடத் தனித்த
முழுமணிபோன் றொருவடிவென் முன்கொடுவந் தருளி என்கரத்தே கொடுத்தனைநின் எண்ணம்இதென் றறியேன் தேறியபின் ஒன்றாகத் தெரிந்துகொள்ளும் பொதுவில் ஆரமுதே என்னுயிருக் கானபெருந் துணையே. |
7 |
3167 | தெள்ளமுதம் அனையஒரு திருஉருவந் தாங்கிச்
சிறியேன்முன் எழுந்தருளிச் செழுமணப்பூ அளித்தாய் உடையவளை உடையவனே உலகுணரா ஒளியே கலந்துநின்ற பெருங்கருணைக் கடலேஎன் கண்ணே கொழுங்கனியே கோற்றேனே பொதுவிளங்குங் குருவே. |
8 |
3168 | கண்விருப்பங் கொளக்கரணங் கனிந்துகனிந் துருகக்
கருணைவடி வெடுத்தருளிக் கடையேன்முன் கலந்து வாழ்கஎன நின்றனைநின் மனக்குறிப்பே தறியேன் பெண்விருப்பம் பெறஇருவர் பெரியர்(187)உளங் களிப்பப் பரமசிதம் பரநடனம் பயின்றபசு பதியே. |
9 |
3169 | உன்னுதற்கும் உணர்வதற்கும் உவட்டாத வடிவம்
ஒன்றெடுத்து மெய்யன்பர் உவக்கஎழுந் தருளி முகநோக்கிச் செழுமணப்பூ முகமலர்ந்து கொடுத்தாய் துணிந்தறியேன் என்னினும்ஓர் துணிவின்உவக் கின்றேன் பூவைஒரு புறங்களிப்பப் பொதுநடஞ்செய் பொருளே. |
10 |
3170 | திருவருடுந் திருவடிப்பொற் சிலம்பசைய நடந்தென்
சிந்தையிலே புகுந்துநின்பாற் சேர்ந்துகலந் திருந்தாள் சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்பப் போற்றமணிப் பொதுவில்நடம் புரிகின்ற துரையே பாடுகின்றேன் பெரியஅருட் பருவமடைந் தனனே. |
1 |
3171 | சண்பைமறைக் கொழுந்துமகிழ் தரஅமுதங் கொடுத்தாள்
தயவுடையாள் எனையுடையாள் சர்வசத்தி யுடையாள் சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்பப் பரம்பரநின் திருவருளைப் பாடுகின்றேன் மகிழ்ந்து எந்துரைஎன் றெண்ணுகின்ற எண்ணமத னாலே. |
2 |
3172 | அருளுடைய நாயகிஎன் அம்மைஅடி யார்மேல்
அன்புடையாள் அமுதனையாள் அற்புதப்பெண் ணரசி சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்ப மாநடஞ்செய் துரையேநின் மன்னருளின் திறத்தை எய்தினன்என் றறிஞரெலாம் எண்ணிமதித் திடவே. |
3 |
3173 | மாசுடையேன் பிழைஅனைத்தும் பொறுத்துவர மளித்தாள்
மங்கையர்கள் நாயகிநான் மறைஅணிந்த பதத்தாள் சிவகாம வல்லிபெருந் தேவேஉளங் களிப்பக் கனநடஞ்செய் துரையேநின் கருணையையே கருதி அன்பர்பெறும் இன்பநிலை அனுபவிக்கின் றேனே. |
4 |
3174 | பொய்யாத வரம்எனக்குப் புரிந்தபரம் பரைவான்
பூதமுதற் கருவியெலாம் பூட்டுவிக்குந் திறத்தாள் சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்பக் களித்தியற்றுந் துரையேநின் கருணையைநான் கருதி நண்ணியபுண் ணியரெல்லாம் நயந்துமகிழ்ந் திடவே. |
5 |
3175 | அறங்கனிந்த அருட்கொடிஎன் அம்மைஅமு தளித்தாள்
அகிலாண்ட வல்லிசிவா னந்திசௌந் தரிசீர்த் சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்ப மாநடஞ்செய் துரையேநின் வண்மைதனை அடியேன் புண்ணியரெல் லாம்இவன்ஓர் புதியன்எனக் கொளவே. |
6 |
3176 | உள்ளமுதம் ஊற்றுவிக்கும் உத்தமிஎன் அம்மை
ஓங்கார பீடமிசைப் பாங்காக இருந்தாள் சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்பக் கால்நிறுத்திக் கால்எடுத்துக் களித்தாடுந் துரையே இப்பாட்டிற் பிழைகுறித்தல் எங்ஙனம்இங் ஙனமே. |
7 |
3177 | பார்பூத்த பசுங்கொடிபொற் பாவையர்கள் அரசி
பரம்பரைசிற் பரைபரா பரைநிமலை யாதி சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்ப என்னருமைத் துரையேநின் இன்னருளை நினைந்து கனிந்துமிகப் பாடுகின்ற களிப்பைஅடைந் தனனே. |
8 |
3178 | பூரணிசிற் போதைசிவ போகிசிவ யோகி
பூவையர்கள் நாயகிஐம் பூதமுந்தா னானாள் சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்ப இன்பநடம் புரிகின்ற எம்முடைய துரையே தன்மையெலாம் நன்மைஎனச் சம்மதித்த வாறே. |
9 |
3179 | தன்னொளியில் உலகமெலாந் தாங்குகின்ற விமலை
தற்பரைஅம் பரைமாசி தம்பரைசிற் சத்தி சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்ப வயங்குகின்ற துரையேநின் மாகருணைத் திறத்தை உடையானே நின்னருளின் அடையாளம் இதுவே. |
10 |
3180 | அருளுடையாய் அடியேன்நான் அருளருமை அறியேன்
அறியாதே மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து மகிழ்ந்தளித்த பெருங்கருணை வண்ணம்என்றன் மனமும் தெரிகின்ற தாயினும்என் சிந்தைஉரு கிலதே இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே. |
1 |
3181 | அன்புடையாய் அடியேன்நான் அருளருமை அறியேன்
அறியாதே மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து வலிந்தளித்த பெருங்கருணை வண்ணம்என்றன் மனமும் விளங்குகின்ற தாயினும்என் வெய்யமனம் உருகா இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே. |
2 |
3182 | ஆளுடையாய் சிறியேன்நான் அருளருமை அறியேன்
அறியாதே மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து வலிந்தளித்த பெருங்கருணை வண்ணம்என்றன் மனமும் நிகழ்கின்ற தாயினும்என் நெஞ்சம்உரு கிலதே இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே. |
3 |
3183 | ஆரமுதே அடியேன்நான் அருளருமை அறியேன்
அறியாதே மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து மகிழ்ந்தளித்த பெருங்கருணை வண்ணம்என்றன் மனமும் தெரிகின்ற தாயினும்என் சிந்தைஉரு கிலதே இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே. |
4 |
3184 | அற்புதநின் அருளருமை அறியேன்நான் சிறிதும்
அறியாதே மறுத்தபிழை ஆயிரமும் பொறுத்து வலிந்தளித்த பெருங்கருணை வண்ணம்என்றன் மனமும் காண்கின்ற தென்னினும்என் கன்மனமோ உருகா இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே. |
5 |
3185 | ஆண்டவநின் அருளருமை அறியாதே திரிந்தேன்
அன்றிரவின் மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து மிகஅளித்த அருள்வண்ணம் வினையுடையேன் மனமும் காண்கின்ற தாயினும்என் கருத்துருகக் காணேன் இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே. |
6 |
3186 | அரசேநின் திருவருளின் அருமைஒன்றும் அறியேன்
அறியாதே மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து வியந்தளித்த பெருங்கருணை விளக்கம்என்றன் மனமும் ஒளிர்கின்ற தாயினும்என் உள்ளம்உரு கிலதே இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே. |
7 |
3187 | ஐயாநின் அருட்பெருமை அருமைஒன்றும் அறியேன்
அறியாதே மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து வியந்தளித்த பெருங்கருணை விளக்கம்என்றன் மனமும் காண்கின்ற தாயினும்என் கருத்துருகக் காணேன் இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே. |
8 |
3188 | அப்பாநின் திருவருட்பேர் அமுதருமை அறியேன்
அன்றிரவின் மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து இனிதளித்த பெருங்கருணை இன்பமென்றன் மனமும் தோன்றுகின்ற தாயினும்இத் துட்டநெஞ்சம் உருகா இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே. |
9 |
3189 | அம்மான்நின் அருட்சத்தி அருமைஒன்றும் அறியேன்
அன்றிரவின் மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து மிகஅளித்த பெருங்கருணை விளக்கம்என்றன் மனமும் வதிகின்ற தாயினும்என் வஞ்சநெஞ்சம் உருகா இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே. |
10 |
3190 | சேலோடும் இணைந்தவிழிச் செல்விபெருந் தேவி
சிவகாம வல்லியொடு சிவபோக வடிவாய் விளங்கியநின் திருஉருவை உளங்கொளும்போ தெல்லாம் பசுநெய்யுங் கூட்டிஉண்ட படிஇருப்ப தென்றால் வண்ணம்இந்த வண்ணம்என எண்ணவும்ஒண் ணாதே. |
1 |
3191 | இன்பருளும் பெருந்தாய்என் இதயேத்தே இருந்தாள்
இறைவியொடும் அம்பலத்தே இலங்கியநின் வடிவை மனங்கரைந்து சுகமயமாய் வயங்கும்எனில் அந்தோ ஆங்கவர்கட் கிருந்தவண்ணம் ஈங்கெவர்கள் புகல்வார் தொழுகின்ற தோறுமகிழ்ந் தெழுகின்ற துரையே. |
2 |
3192 | சிவயோக சந்திதரும் தேவிஉல குடையாள்
சிவகாம வல்லியொடுஞ் செம்பொன்மணிப் பொதுவில் நாய்க்கடையேன் நான்நினைத்த நாள்எனக்கே மனமும் படிஎன்றால் மெய்யறிவிற் பழுத்தபெருங் குணத்துத் தன்னைஇந்த வண்ணம்என என்னை உரைப்பதுவே. |
3 |
3193 | சித்தியெலாம் அளித்தசிவ சத்திஎனை யுடையாள்
சிவகாம வல்லியொடு சிவஞானப் பொதுவில் மூடமனச் சிறியேன்நான் நாடவரும் பொழுது போலும்இருப் பதுஅதற்கு மேலும்இருப் பதுவேல் படிதான்எப் படியோஇப் படிஎன்ப தரிதே. |
4 |
3194 | தெய்வமெலாம் வணங்குகின்ற தேவிஎனை அளித்தாள்
சிவகாம வல்லியொடு திருமலிஅம் பலத்தே தான்நினைத்த போதெனையே நான்நினைத்த திலையேல் அனுபவத்தின் வண்ணமதை யார்புகல வல்லார் உந்திரவில் வந்துணர்வு தந்தசிவ குருவே. |
5 |
3195 | தேன்மொழிப்பெண் ணரசிஅருட் செல்வம்எனக் களித்தாள்
சிவகாம வல்லியொடு செம்பொன்மணிப் பொதுவில் மனங்கொண்ட காலத்தே வாய்த்தஅனு பவத்தை நண்ணியமெய் வண்ணமதை எண்ணிஎவர் புகல்வார் நோக்குடையார் நோக்கினிலே நோக்கியமெய்ப் பொருளே. |
6 |
3196 | சிற்றிடைஎம் பெருமாட்டி தேவர்தொழும் பதத்தாள்
சிவகாம வல்லியொடு சிறந்தமணிப் பொதுவில் உன்னுதொறும் உளம்இளகித் தளதளஎன் றுருகி வழியடியர் விழிகளினால் மகிழ்ந்துகண்ட காலம் பகர்வாரே பகர்வாரேல் பகவன்நிகர் வாரே. |
7 |
3197 | ஆரமுதம் அனையவள்என் அம்மைஅபி ராமி
ஆனந்த வல்லியொடும் அம்பலத்தே விளங்கும் பேசுகின்ற போதுமணம் வீசுகின்ற தொன்றோ சிறிதுமிலாக் கடைப்புலையேன் திறத்துக்கிங் கென்றால் உற்றவண்ணம் இற்றிதென்ன உன்னமுடி யாதே. |
8 |
3198 | பொற்பதத்தாள் என்னளவிற் பொன்னாசை தவிர்த்தாள்
பூரணிஆ னந்தசிவ போகவல்லி யோடு தூய்மையிலேன் நான்எண்ணுந் தோறும்மனம் இளகிச் தெளிவுடையார் காண்கின்ற திறத்தில்அவர்க் கிருக்கும் நாதமுடி தனிற்புரியும் ஞானநடத் தரசே. |
9 |
3199 | என்பிழையா வையும்பொறுத்தாள் என்னைமுன்னே அளித்தாள்
இறைவிசிவ காமவல்லி என்னம்மை யுடனே இற்றெனநான் நினைத்திடுங்கால் எற்றெனவும் மொழிவேன் அப்பழச்சா றாகிஅதன் அருஞ்சுவையும் ஆகி எற்றோமெய் அன்புடையார் இயைந்துகண்ட இடத்தே. |
10 |
3200 | கரும்பனையாள் என்னிரண்டு கண்களிலே இருந்தாள்
கற்பகப்பொன் வல்லிசிவ காமவல்லி யுடனே வினையுடையேன் நினைக்கின்ற வேளையில்என் புகல்வேன் இன்பமய மாகும்எனில் அன்பர்கண்ட காலம் யாரறிவார் நீஅறிவாய் அம்பலத்தெம் அரசே. |
11 |
3201 | காமசத்தி யுடன்களிக்கும் காலையிலே அடியேன்
கனஞான சத்தியையும் கலந்துகொளப் புரிந்தாள் வயங்கியநின் திருவடியை மனங்கொளும்போ தெல்லாம் அதுததும்பிப் பொங்கிவழிந் தாடும்எனில் அந்தோ இன்பஅனு பவப்பெருமை யாவர்புகல் வாரே. |
12 |
3202 | அக்கோஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
அயன்முதலோர் நெடுங்காலம் மயன்முதல்நீத் திருந்து மிகமருண்டு மதியிலியாய் வினைவிரிய விரித்து எனைக்கருதி என்னிடத்தே எழுந்தருளி எனையும் தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே. |
1 |
3203 | அச்சேஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
அரிமுதலோர் நெடுங்காலம் புரிமுதல்நீத் திருந்து நாள்கழித்துக் கோள்கொழிக்கும் நடைநாயிற் கடையேன் எனைக்கருதி யானிருக்கும் இடத்திலெழுந் தருளித் தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே. |
2 |
3204 | அத்தோஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
அந்தணரெல் லாரும்மறை மந்தணமே புகன்று ஒதியனையேன் விதியறியேன்ஒருங்கேன்வன் குரங்கேன் எனைக்கருதி யானிருக்கும் இடந்தேடி நடந்து தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே. |
3 |
3205 | அந்தேஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
அறிவுடையார் ஐம்புலனும் செறிவுடையார் ஆகி மனஞ்சென்ற வழியெல்லாந் தினஞ்சென்ற மதியேன் எனைக்கருதி எளியேன்நான் இருக்குமிடத் தடைந்து தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே. |
4 |
3206 | அப்பாஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
அருந்தவர்கள் விரும்பிமிக வருந்திஉளம் முயன்று இவ்வுலக நடைவிழைந்து வெவ்வினையே புரிந்து எனைக்கருதி யானிருக்கும் இடந்தேடி அடைந்து தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே. |
5 |
3207 | அம்மாஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
அன்பரெலாம் முயன்றுமுயன் றின்படைவான் வருந்தி இதுநன்மை இதுதீமை என்றுநினை யாமே வஞ்சகனேன் தனைக்கருதி வந்துமகிழ்ந் தெனக்கும் தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே. |
6 |
3208 | ஆவாஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
அடியரெலாம் நினைந்துநினைந் தவிழ்ந்தகநெக் குருகி உலகவிட யானந்தம் உவந்துவந்து முயன்று சிவயாநம எனப்புகலும் தெளிவுடையன் ஆக்கிச் தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே. |
7 |
3209 | அண்ணஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
அறங்கரைந்த நாவினர்கள் அகங்கரைந்து கரைந்து கடைநாயிற் கடையேன்மெய்க் கதியைஒரு சிறிதும் எனைக்கருதி வலியவும்நான் இருக்குமிடத் தடைந்து தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே. |
8 |
3210 | ஐயாஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
அருமைஅறிந் தருள்விரும்பி உரிமைபல இயற்றிப் புலைமனத்துச் சிறியேன்ஓர் புல்லுநிகர் இல்லேன் செருக்குடையேன் எனைத்தனது திருவுளத்தில் அடைத்தே தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே. |
9 |
3211 | அன்னோஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
அருளருமை அறிந்தவர்கள் அருளமுதம் விரும்பி யாதுமொரு நன்றியிலேன் தீதுநெறி நடப்பேன் முழுக்கொடியேன் எனைக்கருதி முன்னர்எழுந் தருளித் தனித்தசிவ காமவல்லிக் கினிந்தநடத் தவனே. |
10 |
3212 | ஐயோஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
அருவினைகள் அணுகாமல் அறநெறியே நடந்து வெய்யவினைக் கடல்குளித்து விழற்கிறைத்துக் களித்துப் புரைமனத்தேன் எனைக்கருதிப் புகுந்தருளிக் கருணைச் தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே. |
11 |
3213 | எற்றேஈ ததிசயம்ஈ ததிசயம்என் இசைப்பேன்
இச்சையெலாம் விடுத்துவனத் திடத்தும்மலை யிடத்தும் உலகவிட யங்களையே விலகவிட மாட்டேன் கருணையிலாக் கல்மனத்துக் கள்வன்எனைக் கருதிச் தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே. |
12 |
3214 | என்னேஈ ததிசயம்ஈ ததிசயம்என் இசைப்பேன்
இரவுபகல் அறியாமல் இருந்தஇடத் திருந்து மூடர்களில் தலைநின்ற வேடமனக் கொடியேன் புழுவினும்இங் கிழிந்திழிந்து புகுந்தஎனைக் கருதித் தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே. |
13 |
3215 | ஓகோஈ ததிசயம்ஈ ததிசயம்என் னுரைப்பேன்
உள்ளபடி உள்ளஒன்றை உள்ளமுற விரும்பிப் பத்திசெய்வார் இருக்கவும்ஓர் பத்தியும்இல் லாதே குற்றமன்றிக் குணமறியாப் பெத்தன்எனைக் கருதித் தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே. |
14 |
3216 | செய்வகைநன் கறியாதே திருவருளோ டூடிச்
சிலபுகன்றேன் அறிவறியாச் சிறியரினுஞ் சிறியேன் புண்ணியனே மதியணிந்த புரிசடையாய் விடையாய் மிகவலிந்தாட் கொண்டருளி வினைதவிர்த்த விமலா ஆனந்தத் திருநடஞ்செய் அம்பலத்தெம் அரசே. |
1 |
3217 | நிலைநாடி அறியாதே நின்னருளோ டூடி
நீர்மையல புகன்றேன்நன் னெறிஒழுகாக் கடையேன் பூதகணஞ் சூழநடம் புரிகின்ற புனிதா கருத்தறியாக் காலையிலே கருணைஅளித் தவனே தாளுடையாய் ஆளுடைய சற்குருஎன் அரசே. |
2 |
3218 | கலைக்கடைநன் கறியாதே கனஅருளோ டூடிக்
கரிசுபுகன் றேன்கவலைக் கடற்புணைஎன் றுணரேன் போற்றிசிவ போற்றிசிவ போற்றிசிவ போற்றி தனிப்பொருள்என் கையிலளித்த தயவுடைய பெருமான் கூத்தாடிக் கொண்டுலகைக் காத்தாளுங் குருவே. |
3 |
3219 | நின்புகழ்நன் கறியாதே நின்னருளோ டூடி
நெறியலவே புகன்றேன்நன் னிலைவிரும்பி நில்லேன் பூரணசிற் சிவனேமெய்ப் பொருள்அருளும் புனிதா என்குருவே என்னிருகண் இலங்கியநன் மணியே ஆத்தாளும் அப்பனுமாய்க் கூத்தாடும் பதியே. |
4 |
3220 | துலைக்கொடிநன் கறியோதே துணைஅருளோ டூடித்
துரிசுபுகன் றேன்கருணைப் பரிசுபுகன் றறியேன் பொங்குதிரைக் கங்கைமதி தங்கியசெஞ் சடையாய் வல்லிமறை வல்லிதுதி சொல்லிநின்று காணக் கனகசபை தனில்நடிக்குங் காரணசற் குருவே. |
5 |
3221 | பழுத்தலைநன் குணராதே பதியருளோ டூடிப்
பழுதுபுகன் றேன்கருணைப் பாங்கறியாப் படிறேன் புண்ணியர்தம் உள்ளகத்தே நண்ணியமெய்ப் பொருளே கால்மலர்என் தலைமீது தான்மலர அளித்தாய் மெய்ம்மைஅறி வின்புருவாய் விளங்கியசற் குருவே. |
6 |
3222 | கையடைநன் கறியாதே கனஅருளோ டூடிக்
காசுபுகன் றேன்கருணைத் தேசறியாக் கடையேன் புத்தமுதே சுத்தசுக பூரணசிற் சிவமே அம்பலத்தே அருள்நடஞ்செய் செம்பவள மலையே வேதமுடி மீதிருந்த மேதகுசற் குருவே. |
7 |
3223 | திறப்படநன் குணராதே திருவருளோ டூடித்
தீமைபுகன் றேன்கருணைத் திறஞ்சிறிதுந் தெளியேன் பூதமுதல் நாதவரைப் புணருவித்த புனிதா உண்மையறி வானந்த உருவுடைய குருவே திருத்தொழில்ஐந் தியற்றுவிக்குந் திருநடநா யகனே. |
8 |
3224 | தேர்ந்துணர்ந்து தெளியாதே திருவருளோ டூடிச்
சிலபுகன்றேன் திருக்கருணைத் திறஞ்சிறிதுந் தெரியேன் போதாந்த மிசைவிளங்கு நாதாந்த விளக்கே உயர்பொதுவில் நடிக்கின்ற செயலுடைய பெருமான் தயவுடைய பெருந்தலைமைத் தனிமுதல்எந் தாயே. |
9 |
3225 | ஒல்லும்வகை அறியாதே உன்னருளோ டூடி
ஊறுபுகன் றேன்துயரம் ஆறும்வகை உணரேன் பூதியணிந் தொளிர்கின்ற பொன்மேனிப் பெருமான் துரியவெளிப் பொருளான பெரியநிலைப் பதியே விரியுமறை ஏத்தநடம் புரியும்அருள் இறையே. |
10 |
3226 | உலகியல் உணர்வோர் அணுத்துணை மேலும்
உற்றிலாச் சிறியஓர் பருவத் ஏற்றவுந் தரமிலா மையினான் விடுத்துப்பின் விலகுறா தளித்தாய் தெள்ளமு தாஞ்சிவ குருவே.(189) |
1 |
உலகியல் உணர்வோர் அணுத்துணை யேனும்
உற்றிலாச் சிறியஓர் பருவத் ஏற்றவுந் தரமிலா மையினான் விடுத்துப்பின் விலகுறா வண்ணம் அருட்கடற் பெருமைஎன் புகல்வேன் தெள்ளமு தாஞ்சிவ குருவே. |
3227 | உயிர்அனு பவம்உற் றிடில்அத னிடத்தே
ஓங்கருள் அனுபவம் உறும்அச் சிவஅனு பவம்உறும் என்றாய் பால்மகிழ்ந் துண்டுமெய்ந் நெறியாம் பந்தன்என் றோங்குசற் குருவே. |
2 |
3228 | தத்துவநிலைகள் தனித்தனி ஏறித்
தனிப்பர நாதமாந் தலத்தே உற்றிடல் உயிரனு பவம்என் இருந்தவா றளித்தனை அன்றோ செல்வமே எனதுசற் குருவே. |
3 |
3229 | தனிப்பர நாத வெளியின்மேல் நினது
தன்மயந் தன்மயம் ஆக்கிப் பரம்பரத் துட்புற மாகி இருந்ததே அருளனு பவம்என் என்னும்என் சற்குரு மணியே. |
4 |
3230 | உள்ளதாய் விளங்கும் ஒருபெரு வெளிமேல்
உள்ளதாய் முற்றும்உள் ளதுவாய் நள்ளதாய் எனதாய் நானதாய்த் தளதாய் நவிற்றருந் தானதாய் இன்ன வெறுவெளி சிவஅனு பவம்என் உத்தம சுத்தசற் குருவே. |
5 |
3231 | பொத்திய மூல மலப்பிணி தவிர்க்கும்
பொருள்அரு ளனுபவம் அதற்குப் பற்றறப் பற்றுதி இதுவே தனிப்பெருங் கருணைஎன் புகல்வேன் முதலர சியற்றிய துரையே. |
6 |
3232 | அடியெனல் எதுவோ முடியெனல் எதுவோ
அருட்சிவ மதற்கெனப் பலகால் பார்த்தரு ளால்எழுந் தருளி மிடியற எனைத்தான் கடைக்கணித் துனக்குள் விளங்குவ அடிமுடி என்றாய் வயதினில் அருள்பெற்ற மணியே. |
7 |
3233 | செவ்வகை ஒருகால் படுமதி அளவே
செறிபொறி மனம்அதன் முடிவில் எண்ணிய படிஎலாம் எய்தும் றெனக்கருள் புரிந்தசற் குருவே தீபமே சம்பந்தத் தேவே. |
8 |
3234 | முன்புறு நிலையும் பின்புறு நிலையும்
முன்னிநின் றுளமயக் குறுங்கால் டையநீத் தருளிய அரசே டெழுந்திடப் புரிந்துல கெல்லாம் என்னுயிர்க் குயிர்எனுங் குருவே. |
9 |
3235 | வருபகற் கற்பம் பலமுயன் றாலும்
வரலருந் திறனெலாம் எனக்கே உறுபெருங் கருணைஎன் உரைப்பேன் பெற்றவர் தமையெலாம் ஞான உயர்தனிக் கவுணிய மணியே. |
10 |
பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3236 | சீரார் சண்பைக் கவுணியர்தம் தெய்வ மரபில் திகழ்விளக்கே
தெவிட்டா துளத்தில் தித்திக்கும் தேனே அழியாச் செல்வமே கரும்பே கனியே என்இரண்டு கண்ணே கண்ணிற் கருமணியே இன்பக் குதலைமொழிக்குருந்தே என்ஆ ருயிருக் கொருதுணையே பேசு கின்றோர் மேன்மேலும் பெருஞ்செல் வத்தில் பிறங்குவரே.(190) |
11 |
190. இஃதோர் தனிப்பாடல். இதனை இவ்விடத்தில் சேர்த்துத் தொ.வே. பதிப்பித்துள்ளார்.
திருச்சிற்றம்பலம்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3237 | திருத்தகுசீர் அதிகைஅருள் தலத்தின் ஓங்கும்
சிவக்கொழுந்தின் அருட்பெருமைத் திறத்தால் வாய்மை ஒளிவிளங்க நாவரசென் றொருபேர் பெற்றுப் புண்ணியனே நண்ணியசீர்ப் புனித னேஎன் கடலேநின் கழல்கருதக் கருது வாயே. |
1 |
3238 | வாய்மையிலாச் சமணாதர் பலகாற் செய்த
வஞ்சமெலாம் திருவருட்பேர் வலத்தால் நீந்தித் சோதிமணி விளக்கேஎன் துணையே எம்மைச் செல்வமே எல்லையிலாச் சிறப்பு வாய்ந்துள் அணியேசொல் லரசெனும்பேர் அமைந்த தேவே. |
2 |
3239 | தேவரெலாம் தொழுந்தலைமைத் தேவர் பாதத்
திருமலரை முடிக்கணிந்து திகழ்ந்து நின்ற நாயகனே நல்லவர்க்கு நண்ப னேஎம் பண்புடைய பெருமானே பணிந்து நின்பால் வேண்டினேன் அவ்வகைநீ விதித்தி டாயே. |
3 |
3240 | விதிவிலக்கீ தென்றறியும் விளைவொன் றில்லா
வினையினேன் எனினும்என்னை விரும்பி என்னுள் வாழ்வடையச் செயல்வேண்டும் வள்ள லேநற் பதியேசொல் லரசெனும்பேர் படைத்த தேவே கடலேஎன் கருத்தேஎன் கண்ணு ளானே. |
4 |
3241 | கண்ணுளே விளங்குகின்ற மணியே சைவக்
கனியேநா வரசேசெங் கரும்பே வேதப் பதியோங்கு நிதியேநின் பாதம் அன்றி விரும்பேன்என் றனையாள வேண்டுங் கண்டாய் உத்தமனே(191) சித்தமகிழ்ந் துதவு வோனே. |
5 |
எம்பெருமான் திருவடியே எண்ணினல்லால்
கண்ணிலேன் மற்றோர்க ளைகண்இல்லேன்
கழலடியே கைதொழுது காணின்அல்லால்
ஒண்ணுளே ஒன்பது வாசல்வைத்
தாய்ஒக்க அடைக்கும்போ துணரமாட்டேன்
புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணியனே.
7215 (6-99-1) திருநாவுக்கரசர், திருப்புகலூர்த் திருத்தாண்டகம்.
3242 | ஓங்காரத் தனிமொழியின் பயனைச் சற்றும்
ஓர்கிலேன் சிறியேன்இவ் வுலக வாழ்வில் அகம்பாவ மயனாகி அலைகின் றேன்உன் பரிந்திலேன் அருளடையும் பரிசொன் றுண்டோ செய்வேன்சொல் லரசேஎன் செய்கு வேனே. |
6 |
3243 | செய்வகைஒன் றறியாத சிறியேன் இந்தச்
சிற்றுலக வாழ்க்கையிடைச் சிக்கி அந்தோ பொன்னடியைப் போற்றிலேன் புனித னேநான் உறுதுணைஎன் றிருக்கின்றேன் உணர்வி லேனை வேந்தேஎன் உயிர்த்துணையாய் விளங்குங் கோவே. |
7 |
3244 | விளங்குமணி விளக்கெனநால் வேதத் துச்சி
மேவியமெய்ப் பொருளை உள்ளே விரும்பி வைத்துக் கற்றுணையாற் கடல்கடந்து கரையிற் போந்து துணையேநந் துரையேநற் சுகமே என்றும் வள்ளலே நின்னருளை வழங்கு வாயே. |
8 |
3245 | அருள்வழங்குந் திலகவதி அம்மை யார்பின்
அவதரித்த மணியேசொல் லரசே ஞானத் செழுஞ்சுடர்மா மணிவிளக்கே சிறிய னேனை இன்னருள்தந் தாண்டருள்வாய் இன்றேல் அந்தோ வகைஅறியேன் நின்னருட்கு மரபன் றீதே. |
9 |
3246 | தேர்ந்தஉளத் திடைமிகவும் தித்தித் தூறும்
செழுந்தேனே சொல்லரசாம் தேவே மெய்ம்மை தந்தபெருந் தகையேஎம் தந்தை யேஉள் குலதெய்வ மேசைவக் கொழுந்தே துன்பம் செல்வமே அப்பனெனத் திகழ்கின் றோனே. |
10 |
திருச்சிற்றம்பலம்
கொச்சகக் கலிப்பா
3247 | மதியணிசெஞ் சடைக்கனியை மன்றுள்நடம் புரிமருந்தைத் துதியணிசெஞ் சுவைப்பொருளில் சொன்மாலை தொடுத்தருளி விதியணிமா மறைநெறியும் மெய்ந்நிலைஆ கமநெறியும் வதியணிந்து விளங்கவைத்த வன்தொண்டப் பெருந்தகையே. |
1 |
3248 | நீற்றிலிட்ட நிலையாப்புன் னெறியுடையார் தமைக்கூடிச் சேற்றிலிட்ட கம்பமெனத் தியங்குற்றேன் தனைஆளாய் ஏற்றிலிட்ட திருவடியை எண்ணிஅரும் பொன்னையெலாம் ஆற்றில்இட்டுக் குளத்தெடுத்த அருட்டலைமைப் பெருந்தகையே. |
2 |
3249 | இலைக்குளநீ ரழைத்ததனில் இடங்கர்உற அழைத்ததன்வாய்த் தலைக்குதலை மதலைஉயிர் தழைப்பஅழைத் தருளியநின் கலைக்கும்வட கலையின்முதற் கலைக்கும்உறு கணக்குயர்பொன் மலைக்கும்அணு நிலைக்கும்உறா வன்தொண்டப் பெருந்தகையே. |
3 |
3250 | வேதமுதற் கலைகளெலாம் விரைந்துவிரைந் தனந்தமுறை ஓதஅவைக் கணுத்துணையும் உணர்வரிதாம் எம்பெருமான் பாதமலர் நினதுதிருப் பணிமுடிமேற் படப்புரிந்த மாதவம்யா துரைத்தருளாய் வன்தொண்டப் பெருந்தகையே. |
4 |
3251 | ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய தோழனுமாய் என்றுமுன்நீ சொன்னபெருஞ் சொற்பொருளை192 ஆழநினைத் திடில்அடியேன் அருங்கரணம் கரைந்துகரைந் தூழியல்இன் புறுவதுகாண் உயர்கருணைப் பெருந்தகையே. |
3252 | வான்காண இந்திரனும் மாலையனும் மாதவரும் தான்காண இறைஅருளால் தனித்தவள யானையின்மேல் கோன்காண எழுந்தருளிக் குலவியநின் கோலமதை நான்காணப் பெற்றிலனே நாவலூர்ப் பெருந்தகையே. |
6 |
3253 | தேன்படிக்கும் அமுதாம்உன் திருப்பாட்டைத்(193) தினந்தோறும் நான்படிக்கும் போதென்னை நானறியேன் நாஒன்றோ ஊன்படிக்கும் உளம்படிக்கும் உயிர்படிக்கும் உயிர்க்குயிரும் தான்படிக்கும் அனுபவங்காண் தனிக்கருணைப் பெருந்தனையே. |
7 |
3254 | இன்பாட்டுத் தொழிற்பொதுவில் இயற்றுகின்ற எம்பெருமான் உன்பாட்டுக் குவப்புறல்போல் ஊர்பாட்டுக் குவந்திலர்என் றென்பாட்டுக் கிசைப்பினும்என் இடும்பாட்டுக் கரணமெலாம் அன்பாட்டுக் கிசைவதுகாண் அருட்பாட்டுப் பெருந்தகையே. |
8 |
3255 | பரம்பரமாம் துரியமெனும் பதத்திருந்த பரம்பொருளை உரம்பெறத்தோ ழமைகொண்ட உன்பெருமை தனைமதித்து வரம்பெறநற் றெய்வமெலாம் வந்திக்கும் என்றால்என் தரம்பெறஎன் புகல்வேன்நான் தனித்தலைமைப் பெருந்தகையே. |
9 |
3256 | பேரூரும் பரவைமனப் பிணக்கறஎம் பெருமானை ஊரூரும் பலபுகல ஓரிரவில் தூதன்எனத் தேரூரும் திருவாரூர்த் தெருவுதொறும் நடப்பித்தாய் ஆரூர நின்பெருமை அயன்மாலும் அளப்பரிதே. |
10 |
திருச்சிற்றம்பலம்
தரவு கொச்சகக் கலிப்பா
3257 | தேசகத்தில் இனிக்கின்ற தெள்ளமுதே மாணிக்க வாசகனே ஆனந்த வடிவான மாதவனே மாசகன்ற நீதிருவாய் மலர்ந்ததமிழ் மாமறையின் ஆசகன்ற அனுபவம்நான் அனுபவிக்க அருளுதியே. |
1 |
3258 | கருவெளிக்குட் புறனாகிக் கரணமெலாங் கடந்துநின்ற பெருவெளிக்கு நெடுங்காலம் பித்தாகித் திரிகின்றோர் குருவெளிக்கே நின்றுழலக் கோதறநீ கலந்ததனி உருவெளிக்கே மறைபுகழும் உயர்வாத வூர்மணியே. |
2 |
3259 | மன்புருவ நடுமுதலா மனம்புதைத்து நெடுங்காலம் என்புருவாய்த் தவஞ்செய்வார் எல்லாரும் ஏமாக்க அன்புருவம் பெற்றதன்பின் அருளுருவம் அடைந்துபின்னர் இன்புருவம் ஆயினைநீ எழில்வாத வூர்இறையே. |
3 |
3260 | உருஅண்டப் பெருமறைஎன் றுலகமெலாம் புகழ்கின்ற திருஅண்டப் பகுதிஎனும் திருஅகவல் வாய்மலர்ந்த குருஎன்றெப் பெருந்தவரும் கூறுகின்ற கோவேநீ இருஎன்ற தனிஅகவல்(194) எண்ணம்எனக் கியம்புதியே. |
4 |
3261 | தேடுகின்ற ஆனந்தச் சிற்சபையில் சின்மயமாய் ஆடுகின்ற சேவடிக்கீழ் ஆடுகின்ற ஆரமுதே நாடுகின்ற வாதவூர் நாயகனே நாயடியேன் வாடுகின்ற வாட்டமெலாம் வந்தொருக்கால் மாற்றுதியே. |
5 |
3262 | சேமமிகும் திருவாத வூர்த்தேவென் றுலகுபுகழ் மாமணியே நீஉரைத்த வாசகத்தை எண்ணுதொறும் காமமிகு காதலன்றன் கலவிதனைக் கருதுகின்ற ஏமமுறு கற்புடையாள் இன்பினும்இன் பெய்துவதே. |
6 |
3263 | வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்தென் ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே. |
7 |
3264 | வருமொழிசெய் மாணிக்க வாசகநின் வாசகத்தில் ஒருமொழியே என்னையும்என் உடையனையும் ஒன்றுவித்துத் தருமொழியாம் என்னில்இனிச் சாதகமேன் சஞ்சலமேன் குருமொழியை விரும்பிஅயல் கூடுவதேன் கூறுதியே. |
8 |
3265 | பெண்சுமந்த பாகப் பெருமான் ஒருமாமேல் எண்சுமந்த சேவகன்போல் எய்தியதும் வைகைநதி மண்சுமந்து நின்றதும்ஓர் மாறன் பிரம்படியால் புண்சுமந்து கொண்டதும்நின் பொருட்டன்றோ புண்ணியனே. |
9 |
3266 | வாட்டமிலா மாணிக்க வாசகநின் வாசத்தைக் கேட்டபொழு தங்கிருந்த கீழ்ப்பறவைச் சாதிகளும் வேட்டமுறும் பொல்லா விலங்குகளும் மெய்ஞ்ஞான நாட்டமுறும் என்னில்இங்கு நானடைதல் வியப்பன்றே. |
10 |
திருச்சிற்றம்பலம்