உ கொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் |
காப்பு
கருமுறை விண்டடி யவருயு மாறருள் கவுணியர் குலதீபம்
தருமிறை நாவுக் கரசா ரூரர் தாஞ்சே மித்திடும்அத்
திருமுறை கண்ட புராணம் உரைக்கச் சிந்துர முகநற்றாள்
ஒருமுறை இருமுறை மும்முறை வாழ்த்தி உவந்தன் பொடுபணிவாம்
நூல்
உலகமகிழ் தருசைய மீது தோன்றி ஓவாது வருபொன்னி சூழ்சோ ணாட்டின் தியாகேசர் பதம்மணிந்து செங்கோ லோச்சி அபயகுல சேகரன் பால்எய்தும் அன்பர் றேஇனிதின் உரைசெய்ய அன்பாற் கேட்டு |
1 |
கையிரண்டும் உச்சிமேல் ஏறக் கண்ணீர் கரைந்தோட மெய்ம்முழுதும் புளகம் போர்ப்ப அரியமுறை தேடஎங்கும் இலாமையாலே நாரையூரினில் ஆதிசைவ மறையோன்பால் மாமணிபோல் ஒருசிறுவன் வந்து தோன்றி |
2 |
வளமொடுப நயவிதிச் சடங்கும் பூண்டு மறைமுதஇலாம் கலைபயின்று வருநாள் ஈன்ற கேடில்பிதா உரைத்தமொழிப் படியேஅந்தி ஏத்திஆ ராதிப்பான் இனிதின் ஏகி உரியஎலாஞ் செய்துநிவே தனமுன் வைத்து |
3 |
எம்பெருமான் அமுதுசெய வேண்டும் என்ன இறைஞ்சிடவும் அமுதுசெயா திருப்பக்கண்டு வேழமுகனே அடியேன் நிவேதித் திட்ட பரிந்துதலை தனைமோதப் புகுங்கால் எம்மான் நன்கருந்த உவந்து நம்பி நவில்வதானான் |
4 |
எந்தையே இனியடியேன் பள்ளிக் கேகில் எங்கள் தேசிகன் அடிப்பான் ஆத லாலே தரல்வேண்டும் என வேழ முகத்தோன் தானும் அன்றது போல மற்றை நாளும் மேவியிருந் திடுஞ்செய்தி வேந்தன் கேளா |
5 |
செல்வமிகு திருநாரை யூரில் மேவுஞ் சிவனளித்த மதகரிக்குச் சிந்தைகூர்ந்து நண்பினொடு நிவேதிப்பான் மதுரமிக்க டப்பம் எள்ளுண்டை இவ்வுலகோர் எடுக்கஎன்றே மன்னவனும் அந்நகரில் வந்து சேர்ந்தான் |
6 |
ஆங்கதனுக் கந்நகரில் இடம்போ தாமல் அகல்சூழ பதின்காத அகல எல்லை வந்தனஅவ் வெல்லை யெலாம்மருவ வைத்துப் பலகனிகள் கொணர்ந்த எலாம் பகர்ந்து போற்றி பொழுதே நிவேதிக்க என்று சொன்னான் |
7 |
நம்பிஅர சன்சொன்ன வார்த்தை கேளா நன்றுனதுபணி என்ன அருளால் உன்னித் தொகுத்தனநீ அமுதுசெய வேண்டும் என்னக் கருத்தினுடன் நம்பியுரைக் கிசைந்து காட்ட எலாம் படைக்க அவன் ஏற்றல் செய்தான் |
8 |
புகர்முகக்கை புறப்படவே படைத்தஎல்லாம் புகுந்தஇடம் அறியாமற் போனபின்னை நம்பிகழல் அன்பினால் அரசன் போற்றி வேதியனே கேள் என்று விளம்புவான் செய்தி பூதலத்தில் விளங்க எனப் போற்றி நின்றான் |
9 |
அந்தவுரை கேட்டலும் அங்கரசன் தன்னை நம்பிமகிழ்ந் தருள்புரிவான் அருள்சேர் மூவர் செய்திக்கவ் விநாயகன் தாள்சிந்தித் தெந்தாய் மகிழ்ந்தாளும் அந்நெறியை வழாதெனுக்குத் தந்திமுகன் சந்நிதியில் தாழ்ந்து சென்றான் |
10 |
சென்றுபணிந் திபமுகத்தோன் பாதப் போதை சென்னியில்வைத் தவனருளில் திளைத்து சிந்தை யினால் வந்தித்தங் குவாவோன் தன்னை எல்லையில் சீர்திருத்தொண்டர் இயல்புமூர்த்தி நாகமுகன் நம்பிக்கு நவில லுற்றான் |
11 |
வார்ந்த ருட்கண் நீர்சொரிய நம்பிகேட்ப வண்டமிழ்கள் இருந்த இடம்மன்றுளாடும் கோலமலர்க் கைகள்அடையாளமாகச் சாற்றுதலால் சகதலத்தோர் அருளைச்சார அத்தனையும் நம்பி மனத் தருளிற் கொண்டார் |
12 |
கொண்டு குலசேகரனாங் கோன்பால் வந்து குஞ்சரத்தோன் அருள்செய்த கொள்கை எல்லாம் வண்டமிழின் பெருதைனை வகுத்துச் சொல்வார் கைகாணா மந்திரங் கண்ணுதலோன் கூறல் இம்மொழியின் பெருமையையான் இயமபக்கேள்நீ |
13 |
சேடர்மலி காழிநகர் வேந்தர் தாமும் தேவர்புகழ் திருத்தோணிச் சிவனார்பங்கில் பிஞ்ஞகனைச் சினவிடைமேல் பெருகக்கண்டு தொடைமுடிவாப் பரசமயத் தொகைகள் மாளப் பதினாறாயிரம் உளதாப் பகருமன்றே |
14 |
திருநாவுக் கரையரெனும் செம்மையாளர் தீஅமணர் சிறைநீங்க அதிகை மேவும் கூற்றாயின என்ன எடுத்துக் கோதில் நாற்பத்தொன் பதினாயிர மதாக பிஞ்ஞகனார் அடியிணைகள் பெற்றுளாரே |
15 |
பின்புசில நாளின்கண் ஆரூர்நம்பி பிறங்குதிரு வெண்ணெய்நல்லூர்ப் பித்தா என்னும் ஈறாய்முப்பத் தெண்ணாயிரமதாக சேர்ந்தார் முறைகளெல்லாந் திருத்தில்லை மூதூர் தன்னில் மன்ன ஆராய்ந்து தருக என அருளிச் செய்தார் |
16 |
அருமறையைச் சிச்சிலிபண்டருந்தத் தேடும் அதுபோலன்றிது என்றும் உளதாம் உண்மை பலரில்லை என்றெழுதும் பனுவல் பாரின் என்புக்கும் உயிர் கொடுக்கும் இடுநஞ்சாற்றும் கராமதலை கரையிலுறக் காற்றுங்காணே |
17 |
என்றென்று நம்பிக்கு பரிவால் உண்மை இன்றமிழின் பெருமைதனை இயம்பக்கேட்டுக் குஞ்சரத்தோன் அருளளினை உட்கொண்டு மன்னன் வார்சடையோர் காவலுடை மரபோர்க் கெல்லாம் நன்மையுடன் மன்னவனார் நவிலுங்காலை |
18 |
அத்தகையோர் தமிழ்வைத்த மூவர் வந்தால் அறைதிறக்கும் என உரைக்க அரசன்தானும் எடுத்து விளம்பு தமிழ் மூவர் தம்மை நாயகன்தன் கோயில் வலமாக்கி யுள்ளே சேர்த்தி அவர் சேர்ந்ததென செப்பி நின்றான் |
19 |
ஐயர் நடமாடும் அம்பலத்தின் மேல்பால் அருள்பெற்ற மூவர்தம தருள் சேர் செய்ய கண்டவர்கள் அதிசயப்பக் கடைவாய்நீக்கிப் பொற்பது போல் போமிகு பாடல் தன்னை பளவினிற் சிந்தை நொந்த வேந்தன் |
20 |
பார்த்ததனைப் புறத்துய்ப்ப உரைத்து மேலே படிந்திருந்த மண்மலையைச் சேரத்தள்ளிச் செல்லு நனையச்சொரிந்து திருஏடெல்லாஸம் அலகலாஏடுபழுதாகக் கண்டு சிந்தை தளர்ந் திருகண்ணீர் சோரநின்றான் |
21 |
ஏந்துபுகழ் வளவனிவ்வா றன்பினாலே இடர் கடலின் கரைகாணா தினையுங் காலை சைவநெறித் தலைவரெனும் மூவர் பாடல் வேண்டுவன வைத்தோம் என்றுலகிலளுள்ள வானகத்தில் ஓரோசை எழுந்ததன்றே |
22 |
அந்த மொழி கேட்டலுமே மன்னன் தானும் ஆடினான் பாடினான் அலக்கண் யாவுஞ் தேறினான் நம்பி திருவடியில் தாழ்ந்தான் பண்டாரந் திறந்து விட்டான்பரிவு தானும் எழில் முறையை முன்போல வகுக்க எண்ணி |
23 |
மன்னுதமிழ் விரகரெங்கள் காழிவேந்தர் வகுத்தருளால் அமைத்த திருமுறை ஓர்மூன்றும் ஆரூரர்உரைத்த திருமுறையதொன்றும் தூயமனு எழுகோடி என்பதுன்னி தரணியோர் வீடுபெறுஞ் தன்மை சூழ்ந்தே |
24 |
பண்புற்ற திருஞானசம்பந்தர் பதிக முந்நூற்று |
25 |
ஆகவளர் திருமுறைஏழ் அருட்டிருவா சகமொன்று |
26 |
வைத்தற்பின் நம்பிகழல் மன்னர் பிரான் மகிழ்திறைஞ்சி |
27 |
மந்திரங்கள் எழுகோடி ஆதலினால் மன்னுமவர் |
28 |
ஆக்கியபின் திருத்தொண்டத் தொகையடைவை அருளாலே |
29 |
சீரருள்சேர் அறுபத்துமூவர் தனித் திருக்கூட்டம் |
30 |
சென்னியருள் நம்பிஇவர் அந்நக ரைச்சேர்ந்து சிவன் |
31 |
நல்லிசை யாழ்ப்பாணனார் நன்மரபின் வழிவந்த |
32 |
ஆங்கவளைஅம்பலத்து ஆடுவார்திருமுன்பே |
33 |
மன்னனுக்கும் நம்பிக்கும் மறையவர் முவாயிரவர் |
34 |
சொல்நட்ட பாடைக்குத் தொகை எட்டுக் கட்டளையாம் |
35 |
மேவுக்குறிஞ் சிக்கஞ்சு வியாழக்குறிஞ் சிக்காறு |
36 |
காந்தார மாகிய பியந்தையாங் கட்டளைக்கு |
37 |
கொல்லிக்கு நாலாக்கிக் கவுசிகத்துக் கூறும்வகை |
38 |
அந்தாளிக் கொன்றாக்கி வாகீசர் அருந்தமிழின் |
39 |
தாண்டகமாம் பாவுக்கோர் கட்டளையாத் தாபித்தங்கு |
40 |
கூறரிய நட்டரா கத்திரண்டு கொல்லிக்கு |
41 |
ஒன்றாகுங் காந்தார பஞ்சமத்துக் கோரிரண்டாம் |
42 |
உற்றஇசைக் குறிஞ்சிக்கோர் இரண்டாக வகுத்தமைத்துப் |
43 |
இந்தவகை சிவன்செவிப்பால் எக்கண்ணுந் தழைந்தோங்க |
44 |
சீராருந் திருமுறைகள் கண்டதிறற் பார்த்திபனாம் |
45 |
திருமுறைகண்ட புராணம் முற்றிற்று
· thirumuRai kaNDa purANam in Romanised Format
This webpage was last updated on 9th October 2008
Please send your comments to the webmasters of this website
OR