கடவுள் வணக்கம்.
சீர்கொண்ட வென்னுடைய சிந்தைக் கயிலாயத்
தேர்கொண் டிருந்தாடு மெந்தையே - பேர்கொண்ட
பொன்னம்ப லத்தினிலும் பொற்கொடியோ டெஞ்ஞான்று
மின்னம் பலபதியினும். (1)
எண்கணனைக் குட்டியகுட் டெங்கேனும் பட்டதோ
மங்கையரி மேலடித்த மத்தடிபோ - யெங்கேனும்
பட்டதோ வெங்கள் பசுபதிமேற் பட்டவடி
பட்டதே யெவ்வுயிர்க்கும் பார். 2
தக்ஷிணாமூர்த்தி வணக்கம்.
சீவ பரமிரண்டுந் தேருமிடத் தேகமென்று
மேவியசின் முத்திரைகொள் மென்கரத்தா - லோவில்
வழக்கறுத்தான் பல்சமய வாதிகளே காண்மின்
மழுக்கரத்தி லேந்தியவெம் மான். 3
குருத்துதி.
சனகர் சனற்குமரர் சனந்தரா சனாதர்
முனிவரர்க்கு ஞான மொழிந்த - முனைவனே
யென்போல வந்திங்கே யென்னை யெனக்குமறை
பொன்போலத் தந்தார் பொருள். (4)
சாக்கிரத்துஞ் சொப்பனத்துந் தண்டாச் சுழுத்தியினு
நீக்கமற நின்றாகு மென்றன்னைத் -தூக்கி
மடியாத் துரியநிலை மாமணிமன் றத்திற்
குடியாக வைத்தா னெங் கோ. 5
நூற்பெயர்.
கலியுலகத் துக்கேற்பக் கற்பனையான் மாந்தர்
பலபலகற் பித்ததெல்லாம் பாரா - துலகமெனு
மாலை யரிக்க மருந்தா முபதேச
மாலையினைப் பார்மாண வா. 6
ஆசிரியனைத் தேடிக் காண்டல்.
நாடுநக ராலயங்கள் நாகமுழை யெங்கெங்குந்
தேடியுள னைந்து திகைத்தலறி - மாடிலர்கள்
வைத்துப் புதைத்திருந்த மாநிதியைக் கண்டாற்போ
லுத்தமனே கண்டே னுனை. 7
மாணனைக்கண்டு மகிழ்தல்.
என்று பருவமுனக் கெய்துமோ வென்றுநா
னன்றுமுத லின்றளவு மாசித்தேன் - றுன்றரிய
விப்பிறப்பி னாடிநா யென்னை நீ மாணவக
வெப்பிறப்பு நாடினேன் யான். 8
வேண்டுகோடல்.
செம்புண்ணில் வேநுழைந்த தென்னச் செகமாய
வைப்புலனுக் கஞ்சி யடைந்தேனைச் - செம்பதுமத்
தாளிணைக்கீழ் வைத்திதனைச் சங்கரியா விட்டக்கா
லாளுடையாய் சங்கரிநீ யல். 9
ஞானதீக்கை.
பார்த்தான் பரிசித்தான் பாவியேன் சென்னிமிசைச்
சேர்த்தான் றிருவடியைச் சிந்தித்தா -னோத்துரைத்தா
னஞ்சுகலையு மடைவின றுத்தொழித்தா
னென்செய்கே னென்னுரைக்கே னியான். 10
மூல வுபதேசம்.
அப்பாவுன் பக்குவத்துக் கீடாய் னேகவித
வொப்பா லுனக்குரைத்தே னுண்மையினை - யெப்பாலுஞ்
சங்கையற்ற சத்தியத்தைச் சாற்றிலுனை யன்றியில்லை
சங்கையறப் பார்நீ தனித்து. (11)
பாசத்தை விட்டாற் பசுவோ பதியோ நா
னாசற் றவர்வணங்கு மையனே - யோசித்துச்
சொல்வா யருட்குருவே சுத்தபரி பூரணனே
யெல்லாமா நின்றவனே யின்று. (உபதேச (12)
பாசத்தி னாலுனக்குப் பாசி யெனும் பேர்வந்த
தாசற்ற மாணா வறையக்கே - ணேசித்
தருமறையி னாலு மனுபவத்தி னாலும்
பிரமமென்று மீசனென்றும் பேர். (13)
கள்ள வடிவகற்றக் காசினிமே லென்போலக்
கள்ள வடிவெடுத்த காருணியா - வுள்ளபடி
சொன்னாலு மென்மயக்கந் தூரத்தே போகவிலை
யென்னாலென் செய்கே னியான். (14)
தீக்கையினா லுன்னைச் சிவமாக்கி னோமதன்றி
யாக்கைச் சிவவடிவ மாக்கினோ - நோக்கியே
நானே நீ யென்று நவின்று முபதேசித்தோ
மேனோ மயக்க மெழும். 15
தசகாரிய வுபதேசம்.
தத்துவரூபம்.
பூதமுத னாதமீ றாகப் பொலிகின்ற
வீதெல்லா நாமல்ல வென்றறியும் - போதமே
தத்துவரூ பம்மிதனைச் சங்கையற்ற மாணவக
புத்தியிடை நன்றாய்ப் புதை. 16
தத்துவதரிசனம்.
தத்துவங்க ளெல்லாஞ் சடநம்மைத் தானறியாச்
சித்துருநா மென்று சிறிதத்தைக் - கைத்தழியக்
காண்பதுவே காட்சியிதைக் கைக்குண்மா நெல்லியெனக்
காண்பதுமா ணாநீ கடன். 17
தத்துவசுத்தி.
ஆனா நெடுங்கால மந்தோ நமைமறைத்துத்
தானாகச் செய்ததிந்தத் தத்துவங்கண் - மேனாடி
யின்று கடந் தேறநமக் கீசனருட் கைதந்தா
னென்றுணர்தல் சுத்தியிஃ தெண். 18
ஆத்மரூபம்.
காரிருளோ மைக்குழம்போ காரோ வெனக்கலுழ்ந்து
பேரிருளா மாணவத்தைப் பின்னிட்டே - யோர்வரிய
மன்னுருவேநாமென்று வள்ளலருளாலறிதல்
நின்னுருவ மாணா நினை. 19
ஆத்மதரிசனம்.
என்றுபிறந்தேனா னென்று வளர்ந்தேனா
னென்றுதுய ருற்றிறந்தேன - னென்று
மழியாத சித்துருநா னென்றேமகிழ்தல்
நழுவாத நின்றரிச னம். 20
ஆத்மசுத்தி.
பாசமாய் நின்றதுவும் பல்பிறப்பிற் சென்றதுவு
மாசி றவ்விரத மாற்றியது - மீச
னருளாலே யென்று தனக் காதிக்க மில்லையெனத்
தேருத்தலுயிர்ச் சுத்தியெனத் தேர். 21
சிவரூபம்.
எங்குஞ் சிவமயமா யெங்குஞ் சுகவடிவா
யெங்குஞ் சிவலோகத் தெல்லையா - யெங்குஞ்
சிவனையே கண்டு தெரிசித்தன் மாணா
சிவரூப மென்றே தெளி. 22
சிவதரிசனம்.
ஆக்க லளித்த லழித்தன் மறைத்தலரு
ணோக்க லிவை யெவ்விடத்து நோக்கியே - நீக்கமறப் -
புல்லிய ரானந்தப் பொற்பின் மிசையேற்
னல்லசிவ தரிசனம். (23)
சிவயோகம்.
அன்னியமே யில்லை யெனக் காருயிரா மீசனென
வுன்னியவன் றானாக யோகஞ்செய் -தென்னினைவு
மற்றவனே யானோமென் றானந்தத் தெய்தலரு
ரூற்றவனே யோகமென வோர். 24
சிவபோகம்.
நானே சிவன்சிவனே நானென்று நாடிவெறுந்
தானாகி நின்றநிலை தானன்றோ வானாப்
பவசலதி நீந்திவரும் பண்புடைய மாணா
சிவபோக மென்றே தெளி. 25
இரகசிய வுபதேசம்.
கண்ணோ விருங்கதிரோ காரிருளோ யானாவன்
மண்மிசையி லென்போல வந்தருளி - வண்ணமலர்க்
கைத்தலத்தா லென்னுடைய காய முயிர்பொருளுந்
தத்தமென வாங்கினாய் சாற்று. (26)
மாணவகா மெய்ஞ்ஞான வாழ்வையுனக் கிக்கணமே
பூண வுரைப்பனிது பொய்யல்ல - காணொழியாக்
கண்ணே நீ பாயிருளுங் காய்கதிரு நீயல்ல
வுண்ணினைந்து பாரிதனை யுற்று. (27)
கண்ணே லிருளுண்டே கங்குல் பகலுண்டே
விண்ணவருங் காணாத வேதியனே - மண்ணாத
வுச்சிக் கதிரு மொளியொழியாக் கண்ணும்போ
னிச்சயித்துப் பாரிதனை நீ (28)
காயுங் கதிரைவிடக் கண்ணுக் கொளியுண்டோ
மாயும் பிறப்பகற்ற வந்தவனே - தோயுமிரு
கண்ணல்ல நீயந்தக் காய்கதிரே யாமென்ற
வண்ணவுரைக் குண்டோகைம் மாறு. 29
உன்னை யறிந்தனையோ வுன்னறிவி னீங்காத
வென்னை யறிந்தனையோ வெக்காலு - முன்னை
யருந்துமலந் தன்னை யருந்தினாய் கொல்லோ
விருந்தவனே சொல்லா யினி. (30)
விளக்கில்லை பல்பொருளு மில்லைவிழி யில்லை
துளக்கிருளு மில்லையெனச் சொல்ல - வுளக்கண்ணா
லுள்ள படியறிந்தா லூன்பிறவி யில்லையுனக்
குள்ளபடி யீதென் றுணர். (31)
உன்னை யொருவ னுயர்சாமி யென்றுரைத்தா
லென்ன மகிழ்ச்சியங்கே யெய்தினாய் - பின்னொருவன்
பாவிபசு வென்றாற் பதைபதைப்பா யாகையினாற்
சீவனல்ல நீயே சிவம். 32
நேயவுபதேசம்.
ஆறுகடல் கண்டுவர வாதரித்த தும்மொருவன்
வீறுபுலி கண்டுவந்த வீறுங் - கூறியிடி
லுப்புக் கடலாடி யோடிவந்த தும்மொக்குஞ்
செப்புசிவங் கண்டுதிரும் பல். (33)
தன்னைச் சிவத்திற் பறிகொடுத்த தற்கேடர்
பின்னைத் தமைத்தேடிப் பேதுற்ற - தென்ன
பிழைபளித மால்வரையிற் பேரழலை யிட்டே
யழிவரைபின் றேடியடுக் கல். (34)
பித்தர்க் கெதிரில்லை யானாலும் பேதுற்றுப்
பித்தரெதி ரிட்டறையும் பெற்றி போன் - முத்தி
தனிலெதிரே யில்லையென்றாற் சங்கித்துப் பின்னுக்
தனிலெதிராய்க் காணுதல்பித் தாம். (35)
பஞ்சாக்கரவுபதேசம்.
அஞ்செழுத்தின் றன்மை யறையக்கேண் மாணவக
பிஞ்செழுத்தா மீரிரண்டும் பின்றள்ளித் - துஞ்சாத
வோரெழுத்தே நின்னுருவ மொண்பொருளே நீயாமென்
றோரிடத்தி னில்லையுனக் கூழ். (35)
நகாரக் கருவியெலா நாமலவென் றெண்ணி
மகார மலங்கடந்து மாழ்கி - யகாரமே
தானென் றுணர்ந்தப்பாற் றண்ணருளைக் கண்டுசிவ
மோனமதி லேயொடுங்கன் முத்தி. (37)
தருளா விருளகன்று திரோதைமல நீங்கிக்
குருவாற் றனையறிந்து கொண்டே - யருளாய்ப்
பரைவழியாற் சென்று பரசிவத்தொன் றாதல்
கரையன்பா லஞ்செழுத்திற் காண். (38)
சிவமயமாய் நின்று திருவருளாற் நன்னை
யவமகலக் கண்டு திரை யட்டித் - துவிதமயல்
காட்டுமல் நீங்கிவினைக் கட்டறுத்த னன்மாணா
நீட்டுமர னஞ்செழுத்தி னேர். (39)
சடாந்தவுபதேசம்.
சத்தாந்தம் வேதாந்தஞ் செப்புதத்து வாந்தமிசை
புத்தக லாந்தமொடு போதாந்தஞ் - சுத்தமா
நாதாந்த மென்றிவைக ளாறு நவையென்றே
மீதானந் தேடி விடு. 40
அதீதவுபதேசம்.
நித்திரையைக் காண நினைத்துட் கலைமானுக்
தத்துவசா லங்களெல்லாந் தாண்டியே - சுத்த
வருள்வழியாற் சென்றங் கனுபவத்தைக் கண்டு
தரையவர்க்குச் சாற்றநினை தல். (41)
பூரணவுபதேசம்.
அடுத்துவரும் பாசத் தணுத்தன்மை யாகிக்
குடத்தில்வருந் தீபமெனக் கொண்டாய் - விடுத்துநீ
பொன்றரிய மெய்ஞ்ஞான பூரணமா யேநின்னைக்
குன்றிலிட்ட தீபமெனக் கொள். (42)
சீவசங்கை நிராகரித்தவுபதேசம்.
நீசன்கொ டும்பாவி நெடுநாட் பிறந்திறந்த
பாசன் பெரும்படிறன் பாங்கிலிய - னாசூசன்
சுத்த சிவரூப மாவேனோ சொல்லெனக்கு
மைத்தமணி கண்டா வகுத்து. 43
விழலாம் விலாமிச்சி வேட்டுவனாங் கீட
மழலா மயமப்பா மாலி - தொழிலா
லவமா முலகி லவதரித்த மாணா
சிவமாதற் கையமேன் செப்பு. 44
பழமொழியுபதேசம்.
அத்தைத்தின் றங்கே கிடப்பார்க்கு மாணவக
வெத்தைத்தின் றெங்கே கிடந்தாலென் - சுத்த
வெறுவெளியிற் சென்று விளையாடு கின்றார்க்
கறுதியிட லாகா தறி. (45)
முப்பாழும் பாழென் றறைந்தார் திருமூல
ரப்பாலும் பாழென் றறைந்தார் - சடகோப
ரறிவி லறிவி லறிவி லறிவி
லறிவி லறிவென் றறி.46
சங்காரவுபதேசம்.
ஈசனுக் கெஞ்ஞான்று மிதசத் துருவென்னும்
வாசகத்தைச் சொல்லக்கேண் மாணவக வீசன்றான்
தத்துவத்தி லாக்கித் தவத்தில் வளர்த்துன்னை
முத்தியினிற் சங்கரிப்பான் முன். (47)
மகாவாக்கியவுபதேசம்.
சீவனாய் நின்னைநீ சிந்திக்கின் மாணவக
வோவில் பிறப்பிறப்பு மோவாது - வீவிற்
றுருபதைக்கு மாளாத் துகில்போலுன் போத
மிரிவதிலை யெக்காலு மெண். (48)
சிவமல்ல நாமென்றுஞ் சீவனா மென்றும்
விவகாரம் வந்தவிட மெல்லாந் - துவமகலச்
சாம மறைபுகலுஞ் சத்தியமா வாக்கியத்தைத்
தோமறவுட் கொண்டு துணி.49
உண்மையுபதேசம்.
ஆதிமறை யாகமங்க ளெல்லா மளவிட்டே
யோதியுணர்ந் தெல்லா முரைத்தாலும் - வேதை
யெழுநான்கு கோடி யிழிநிரைய மெல்லாம்
விழுவர்சிவ னாகா விடின். 50
கொல்லாவிரதம்.
கொல்லா விரத குலமே குலமென்று
நல்லார்க ளெல்லா நவின்றிருக்கக் - கொல்வாற்
றெரிசித்தா லும்பாவந் தீயன்முக நோக்கிப்
பரிசித்தா லும்பாவம் பார். (51)
ஆடுபன்றி கோழி யருந்துவோர் கட்கெல்லாம்
வீடில்லை யென்றுரைக்கும் வேதங்க - ணாடுமவர்க்
கிம்மையிலும் துன்ப மறுமையிலு மேழ்நிரைய
நன்மையிலை யோரிடத்து நாடு. (52)
இரக்கமிலா தாரரக்க ரென்றுமறை யாதி
யுரைக்க வுரவோரு மோம்ப - விரக்கமின்றி
கொல்வார்க்குக் குன்றனைய செய்தாலுங் குன்றியாங்
கொல்லார்க்குக் குன்றியுங் குன்று. (53)
புசிக்கின்ற நாரை புலான்மறுத்த னோக்கி
நசிக்கவரு நஞ்சுண்ட நாதன் - வசிக்கவரு
மாவாக்கி யம்புகன்ற வண்மையினைக் கேட்டுமிங்ங
னாவாகொல் வார்க்கெங் கறன். (54)
ஆறிருக்க வட்டைகுளந் தோய்வாரு மாயுமறை
நீறிருக்க மண்ணையிடு நிந்தகருஞ் - சோறிருக்கச்
செத்த பிணமருந்துந் தீயவரு மாணவக
மத்திமர்க ளென்றே மதி. 55
வாயெதிர்போய்ச் சேதா வலியப் புசியென்னத்
தீயபுலி யூனுண்ட றீதென்னத் - தூய -
விரதத்தைக் கண்டு விடையோன்வந் தானவ்
விரதத்தைச் செய்ய விரும்பு. 56
அநித்தியதரிசனம்.
இன்றைக்கோ நாளைக்கோ வின்னமரை நாழிகைக்கோ
வென்றைக்கோ வாவி யிழப்பென்று - சென்றிறைஞ்சி
யாசாரியனுக் கனுகூல சித்தனாய்ப்
பாசாதி யைக்கழற்றப் பார். 57
கோடைதனி லாற்றிற் குடியேறி வாழுநர்கள்
வாடைமழைக் கேங்கியழும் வாறொக்கும் - நீடுபக
லுள்ளபோ தெல்லா முறுதிநெறி காணாது
கள்ளநமற் கண்டுகலங்கல். (58)
மாதாபி தாநாத்தி மற்றோக் கலுநாத்தி
யாதார வைப்பு மரண்மனையுந் - தீதான்
நாத்தியிவை மெய்யென்று நம்பாதே யென்றறைந்த
மாத்திரத்தே வீடுற்றான் மன். (59)
யோனிவழி யேயுதித்தவ் யோனிவழி யேனினைந்தவ்
யோனிவழி யேயொடுங்கு மூமர்காள் - யோனிவழி
வாராவொருவனையே வந்தித்தால் யோனிவழி
வாரா வகையருளு வான். 60
அடங்கத்துறத்தல்.
தாயரையுந் தந்தையையுந் தற்சார்ந்த கேளிரையு
மாயுமயல்காட்டு மனைவியையுஞ் - சீயென்று
சொற்பனம்போர் கண்டெட்டாத் தூரப்போ யோகநிலை
நிற்பவனை ஞானியென நேர் (61)
ஆனை முதலெறும்பீ றாயபிறப் பெல்லாமு
மீன முறக்கடந்திட் டேறியே யூனமிலா
மக்களா வந்துந் துறவா மனிதர்தமைத் (உபதேச
தெக்கணா மூர்த்திசிரிக் கும். (62)
மலைமகளை விட்டுடைய மைந்தர்தமை யும்விட்
டிலகு வெள்ளி மால்வரையும் விட்டே - யுலகறியக்
கல்லாலின் கீழிருத்தல் கண்டுந் துறவாரைக்
கொல்வா னியமன் குறித்து. (63)
அவாவறுத்தல்.
மண்ணாசை பொன்னாசை மாதரா ராசையுயர்
விண்ணாசை யாவும் வெறுத்தப்பா - லெண்ணாம
லுள்ளபடி யானந்த யோகத்தின் மூழ்கியுடல்
விள்ளளவு நின்று விடு. 64
அடக்கமுடைமை.
அடக்கிப் புலனைந்து மாமையைப்போ னாளு
மொடுக்கி யுரவோரைக் கண்டானடுக்குற்றுக்
கண்ணப்பர் போலக் கரையிறந்த பேரன்பால்
விண்ணப்பஞ் செய்ய விரை. 65
கல்வியடக்கம்.
கழுதைக்குங் கற்றவர்க்குங் கட்டுரையொப் பொன்றே
கழுதை பிறர்க்குதவுங் கற்பூர - முழு நூலாய்ந்
தோதுவார் தாம்பிறருக் கோதியுணர்ந் துள்ளபடி
சாதியா ராதலினாற் றான். 66
இத்தன்மையுடையோ ரிவர்களெனல்.
சாந்த முடையோன் றவசி யவாவற்றோன்
வாய்ந்த துறவி மனமாண்டோ னாய்ந்துணர்ந்த
யோகிபரி பூரணத்தை யுற்றுணர்ந்தோ னல்லசிவ
போகியெனச் சொல்லும் போது. (67)
சரிதையைப்பழித்தல்.
முலைமுதிராப் பெண்ணை முயங்கவந்த வின்பு
மெலிகவர வெற்பகழ்ந்த வேல்புங் - கலையிலான்
கற்றவரோ டோடக் காதலித்த வாறுமே
யுற்ற சரிதையினுக் கொப்பு. (68)
கிரியையைப்பழித்தல்.
தன்னைச் சடவடிவிற் றங்கநினைத் தாவாகித்
தன்னியமாய்க் கண்டங் கருச்சிக்கும் - பின்னருக்கு
மின்பமிலை வேலை யிடையொடிய மானமையா
லின்பமெலா ஞானிக்கே யெண். (69)
யோகைப்பழித்தல்.
தத்துவக்கற் றற்றுவெறுந் தானேதா னாய்நின்ற
முத்தருக்கு யோகமேன் மோனமேன் - வெற்றியேன்
சுத்தசுக நித்தியமாய்ச் சும்மா விருப்பதுவே
பற்றற்ற முத்தியெனப் பார். (70)
பால்விரதி பூசையாய்ப் பழவிரதி பைங்கிளியாய்க்
கால்விரதி பாம்பாதல் கட்டுரையே - நோல்விரத
மாண்டவிட முத்தியென்றான் மாணா விரதமெலாங்
கூண்டோடே வெட்டிக் குமை. (71)
சாந்தமுடைமை.
வைதிடினுங் கொய்திடினும் வாழ்த்திடினு மாயமெலாஞ்
செய்திடினு மன்னர் செறுத்திடினுந் - தெய்வநிலைப் -
பூதமயக் கிடினும் புரந்தரன்போர் செய்திடினு
மேதுமயங் கான்ஞானி யெண்.
ஈச்சுரவாக்கியம். (72)
எந்தைசன காதியருக் கீந்தநூன் முற்கால
நந்திக் குரைத்தருளு ஞானநூல் - செந்துவர்வாய்த்
தேவிக் குரைத்தநூல் சீராமற் கோதிய நூ
லாவிக் குரியநூ லாம். 73
அறுமுகனுக் கோதியநூ லம்புயனுக் கோதிய நூன்
மறுவிலரிக் கோதியநூன் மற்று - மிறுகா
லுருத்திரனாய்ச் சொற்றநூ லுண்மைநூ லெல்லாங்
கருத்துருக்கக் கண்ணாரக் காண். 47
அனீச்சுரவாக்கியம்.
வெள்ளி யுரைத்தநூல் வியாழம் புகன்றநூல்
பெள்ளவரி சொன்ன பிடகநூ - லொள்ளிழை
முயக்கநூ லீதெல்லா மூடநூற் சிந்தை
மயக்கநூ லென்றே மதி. 75
சிவயோகமான்மியம்.
எண்ணுஞ் சிவயோக மான்மியத்தை யென்சொல்கேன்
மண்ணுலகும் விண்ணுலகும் வந்திறைஞ்சி - யண்ணாவென்
றோலமிடு நீசிவமா யோரிமைப்பு நிற்பையெனிற்
காலனுங்கை கூப்பிநிற்பன் காண்.76
மகாவாக்கியமான்மியம்.
ஓவா பவக்கடலுக் கோரம்பி யாகலான்
மாவாக்கி யம்புகல்வேன் மைந்தாகேள் - மூவாத
தற்பதநாந் தொம்பதநீ சாற்றசியா னாயென்னு
முப்பொருளுங் கண்டு முடி. 77
அதீதமான்மியம்.
நோக்காம னோக்கி நொடிகொட்டு மந்நேரஞ்
சாக்கிரா தீதநிலை சாதித்தோ - ராக்கைச்
சுமையெடுத்து நாளுந் துயருறார் சொன்னே
னுமைபங்க னாணை யுவந்து. 78
இதோபதேசம்.
சத்தியமு நோன்புந் தவமு மிளஞ்சொல்லு
முத்தமருக் குள்ளகுண மொன்றின்றி - மத்திமராய்
மைதுனமுஞ் சோறுமாய் மாயுமள வும்பசிக்குங்
கைதவர்க்கு முண்டோ கதி. (79)
தியான நிட்டை.
இதையத் தவிசி லிருடிக ளனேகர்
புதைய நெருங்கிப் பொருந்த- நதிமலியுஞ்
செஞ்சடையு முக்கண்ணுஞ் சின்முத் திரையுமுற
நெஞ்சடையக் கண்டு நினை. 80
கல்லா லமர்ந்தாரைக் கண்மூன் றுடையாரைச்
சொல்லாமற் சொல்லவந்த தூயாரைப் - பல்காலுஞ்
சிந்தி சிவோகஞ் சிவோகஞ் சிவோகமென
வந்தி பிறப்பறு மாணா. 81
பூரண நிட்டை.
அண்டங்கா லங்கி யறலவனி யைந்தினையும்
பண்டையவா காயம்போர் பாவித்துக் - கொண்டன்
மறையாக் கதிர்போலுன் வாளொளியை நோக்கி
நிறைவாய்க் குறையாதே நில். 82
எல்லாஞ் சிவமென்னு மெண்ண முனக்குண்டே
லெல்லா நலனுமுனக் கெய்துமே - யெல்லாஞ்
சிவமன் றெனுமுணர்வு சிந்தையிடை யுண்டேற்
பவம்வந் துனைவிழுங்கும் பார். 83
சகசநிட்டை.
பாசங் கழன்றதிலை பதியுங் கலந்ததிலை
காசறுநன் முத்தியையுங் கண்டேனே - பாசமெலா
மித்தைசிவ நீயென்று வேத முறையிடுமேற்
பெத்தமுத்தி யுற்றவரார் பேசு 84
காமாதி யைக்கழற்றி னல்லாற் கதிகூடாக்
காமாதி யெக்காற் கழலுமே - காமாதி
யெல்லா மிருக்க வெனையறிந்தே னின்புற்றே
னெல்லா மிறந்திருந்தா லென். (85)
கிரியா நிட்டையைப்பழித்தல்.
அறிவுநா மென்றறிய மாட்டாதா ரன்றோ
வெறிகாற் புனலருந்தி யென்றுந் - தறிபோலு
நிட்டையுடன் மட்டாய் நெடுங்கால நின்றார்க
ணட்டமலா லுண்டோ நயம். 86
அதீத நிட்டை.
எல்லா மிறந்தவிட மேகாந்த நிட்டையென
வெல்லா மறையு மியம்புமா - லெல்லா
மிறந்த விடத்திருந்த வென்னையா னேகண்
டிறைஞ்சினே னேத்தினே னே. 87
ஆதார நிட்டையினை யங்கங்கே விட்டப்பான்
மீதான நிட்டை விரும்பிப்போம் - போதத்தை
நட்டார்போற் பின்சென்று நாதாந்தத் தேவிழுங்கி
விட்டானே யந்தரியா மி. 88
மலினவாதனை.
சாந்த முடைய சடபரதர் மெய்ஞ்ஞானம்
வாய்ந்திருந்து மான்வளர்த்த வாதனையாற் - சூழ்ந்தடவி
மானா யவதரித்து மற்றொரு சரீரத்தி
லானாத முத்தியடைந் தார். 89
மேலாம் வருணத்தி லுற்பவித்த வேதியற்கோ
னாலா மறைகண்ட நாதனே -யேலாத
சேரியெனும் வாதனையாற் றீப்புலைய னாய்ப்பிறந்து
நேரியஞா னத்தை நிறைந் தான். 90
சுத்தவாதனை.
சுகன்வாம தேவன் றுருவாசன் காதி
மகன்விதுரன் வெண்காடன் மாறன் - சகமாண்ட
பத்ரகிரி வான்மீகி பற்றற்றே முத்தியினை
யுற்றா ருறார்க்கிவரொப் பார். 91
அறிவு திருமேனி யறிவு கரணங்க
ளறிவே யிடம்போக மாமென் - றறிவாளன்
றாட்டா மரைகண்ட தத்துவத்தோர்க் கென்றுமறை
நாட்டு முபநிடத நாடு.
அணைந்தோர் தன்மை.
அண்ண றுவரைக் கரச னலகிறந்த (92)
வண்ணமுலைப் போக மகிழ்ந்துண்டு - மெண்ணின்
முனிக்குழுவின் முன்னே முழுப்பிரமங் காட்டி
மனக்கவலை தீரவகுத் தான். (93)
உண்டு முபவாசி யொண்டொடியோ டின்பநலங்
கண்டும் பிரமசரி யங்காட்டுந் - திண்டிறற்கு
மாளுந் திறனில் வடமீ னருந்ததிக்குக்
காளுந்தி யாறே கரி. (94)
தத்துவக்கூத் தாடி சஞ்சாரி சார்போதன்
சுற்றும் புருடன் சுகிதுக்கி - பெத்த
காயனா யாசி யநாமியவி காரி
மகானுபவி யென்னு மறை. 95
நறவங் குடித்தாலு நாயிறைச்சி தின்றுங்
குறவருடன் கூடிக் குனித்து - மிறைவனே
தானென்னுந் தன்மை சலியா ருலகர்க்கு
நானென்று சொல்லிநடிப் பார். (96)
பாசங்கடந்து பதியான பண்ணவர்க
ளாசங் கடத்தி லலைந்தாலு - மீசன் -
றலையோட்டி லேயிரந்துந் தன்மைகுறைந் தானே
மலைகோட்டி முப்புரமட்டான். (97)
ஓரா யிரம்வருட மோதத் திருந்தாலு
மீரங் கிடச்சைக் கிலாமைபோ - லாராக்
குடும்பத் திருந்தாலுங் கோதற்ற முத்த
னடங்கத் துறந்தவனே யாம். (98)
திசைமுகன்போ லெல்லாந் தெரியுந் தெரிவு
மசகரஞா னம்போ லமைவும் - பசுசாதுந்
தந்தியுண்ட வெள்ளிலைப்போற் றாக்கற்ற தோர்சால்பு
நந்துமணைந் தோர்க்கிதெலா நாடு. (99)
ஆசாரிக்குந் தன்மையினா லாசரிய னென்னும்பே
ராசா ரியனுக் கமருதலா லாசரிய
னெண்ணமுடை யாருக் கிருகுறியுண் டாகுமது
கண்ணீருங் கம்பலையுங் காண். (100)
உபதேசமாலை - முற்றிற்று.
திருச்சிற்றம்பலம்.