நேரிசை - வெண்பா.
சத்தம் பிறவா விடமேச மாதிநிலை
சத்தம் பிறந்திடமே சங்கநிலை - சத்தம்
பிறவா விடமேதோ வத்தைப் பிடியென்றா
ன்றவாண னம்பலவா ணன்.
(எ - து) சூக்குமைநாதந் தோன்றாதவிடமே சமாதிநிலை, சூக்கு
மைநா தந்தோன்றினவிடமே தத்துவக்கூட்டமாகிய பிரபஞ்சநிலை)
நாதந் தோன்றாதவிடத்தையே யெவ்வழியானு மிறுகப்பிடியென்
றான், புண்ணியமூர்த்தியாகிய வம்பலவாண னெமதாசாரியன் 1
இரண்டாம் பதம்.
அத்த னுரைத்த தறியாயோ வென்ற மையா
லத்த னுரைத்த தறையுங்கா - லத்தனார்
நாதங் கடந்தசிவ னானென் றுணர்மினென
வோதுவித்தா னும்பர்க்கன் றுற்று.
(எ - து) அநாதிமுத்தன் ஆதியிலே அதிதிமைந்தர்க்கு நாதாதீ
தப் பரமசிவமாவது நாமேயென்று திருவாய்மலர்ந்ததை மறந்தாயோ
வச்சோ ! என்றமையா லதை நாடிச்சொல்லுமிடத்துச் சிவப்பிரம
கைவத்தமென்னும் புராணத்திற் றிருவுளம்பற்றியது. 2
மூன்றாம்பதம்.
அன்றுரைத்த சத்தமே சத்தமிதி லையமிலை
யொன்றே பரமது நீ யுற்றுணரி -லென்
நானே நீ நீநானே யென்றுனக்கு நாநவின்றோ
மோனமொழிக் குண்டோ மொழி.
(எ - து) முன்னமே தீட்சாக்கிரமத்திலே அக்கினியாகாயஞ்
சாட்சியாகச் சொன்ன மகாவாக்கியமே வாக்கியமிதி லையப்படவேண்
டாம்; சொன்னேன் சொன்னே னென்றமையால் ஏகம்பரம். அப்
பரமே சீவனாகிய நீ. அதை ஆராயின், என்றைக்கும் நித்தியமா
யுள்ள நானே நீயென்றும் நீயே நானென்று முனக்குப் பரிவுடனே
சொல்லாமற் சொல்லினோமே; பின்னரும் பேதுற்றுச் சமுசயாத்
மனே கேட்டால் மௌனமொழிக்குப் பின்னு மிரண்டா மொழியுண்
டோ வில்லை யென்பதாம். 3
நாலாம்பதம்.
சலனமிலாச் சித்தஞ் சாங்குசித்த மன்றோ
மலமாயை கன்மமெலா மாண்ட -நிலையன்றோ
பெத்த மகன்றிடமும் பேரானந்தப் பெருக்கு
முத்தமமா நன்முத்தி யும்.
(எ - து) சஞ்சலங்களில்லாத சுசித்தமேசங்கிலிட்ட சித்தத்தை
யுஞ் சொலின சித்தத்தையுங் கோரசித்தத்தையுங் கடந்த சாங்குசித்த
மாகையால், ஆணவமாயை காமியமிறந்தநிலையாம்; அந்த நிலையே
மறைப்பெல்லா நீங்கினவிடமும் மறைப்புநீங்கவே யீச்சுரன் வே
றல்ல நாமே யீச்சுரனென்னும் பேரானந்தம் அபரிமிதமாய்ப் பெரு
கும் பெருக்கமுஞ் சர்வோத்தமமா யெல்லாம் விடுபட்ட சற்சுகமுத்
தியுமென்றதாம். (4)
ஐஞ்சாம்பதம்.
சித்தமே சுத்தசிவ மென்றதிரு வார்த்தை
முத்திக்கு வித்தா மொழியன்றோ - பெத்தமொழி
சீவனே யெல்லா மிறந்தசிவ மென்னும்
பாவனா தீதமொழி பார்.
(எ - து) சித்தமேசர்வமுங்கழன்ற சிவமென்று திருவாய்மலர்ந்
தது சாதகராயனுட்டிக்கு மெம்போலிகட்கெல்லா மோட்சத்துக்கு
வித்தாகியமொழியல்லவோ; ஆவரணநீங்கிய சீவாத்மனே சர்வமுங்
கழன்ற சிவமேயென்னும் பாவனைக் கதீதமொழியென் றனுபவித்
துப் பார்ப்பாய் மாணாக்கனே. 5
சத்தம் பிறந்திடத்தே சகலகலை யும்பிறக்கு
மத்த னுரைத் தறியாயோ - வன்றுரைத்த
சத்தமே சத்தஞ் சஞ்சலமொன் றில்லா த
சித்தமே சுத்த சிவம்.
(எ - து சூக்குமைச்சத்தம் பிறந்தவிடமே சகல கலைக்கியான
மாதியாகப்பிறக்குமென்று சிவன் சொன்னத்தையுமறிந்து மறியா
மல் மறந்தையோ, அன்று நாம் சொன்ன வாக்கியமே வாக்கியம், சந்
தேகப்படவேண்டாம்; நிர்ச்சஞ்சலமான வாத்மாவே சர்வவுபாதி
சூனியரான பராபரவத்து. 6
கொச்சகக்கலிப்பா.
" நாற்றமிகும் பூமாலை நற்குரங்கின் கைக்கொடுத்தாற்
போற்றிமணங் கொள்ளாவாம் புத்திதனக் கில்லா
வேற்றொருவர் காணாத வேதாந்தத் துட்பொருளைத்
தேற்றமிலி கைக்கொடுத்தேன் றேறுவனோ தேறானோ. "
( எ - து) மணமிகுந்த புட்பமாலையை நல்ல குரங்கின் கையிலே
கொடுத்தால், பாராட்டி யாக்கிராணித்தறியாவாம்; கூர்ந்தபுத்தியின்
மையினாலே தானும் பயனடையாது பிறரும் பயனடையாது எறிந்
தாற்போலச் சரியை கிரியாயோகத்தா ரறியக்கூடாத வேதமுடிவிற்
சிறந்தவுட்பொருளாகிய வுபநிடத மகாவாக்கியத்தை யச்சோ தெளி
வில்லாத மாணாக்கன்கையிலே கொடாது கொடுத்தேன் றேறித்தெளி
வானோ தேறாதொழிவானோ வென்று சந்திரசேகரசுவாமிகள் திரிய
ம்பகருக்கு மத்தியார்ச்சுனத்திற் றிருவுளம் பற்றியதா மறியக்கடவாய். (7)
சத்தம் பிறவாவிடமே, அத்தனுரைத்ததறியாயோ, அன்றுரை
த்த சத்தமே, சலனமில்லாச்சித்தஞ், சித்தமேசுத்தசிவம், சத்தம்பிறந்
திடத்தே, நாற்றமிகும்பூமாலை, இவையின் முதலைந்தும் ஆதி. கடை
யிரண்டும் அநாதி..
திருமுகப்பாசுரம்- முற்றிற்று. (8)